தட்பவெட்பம் : அத்தியாயம் 9

Advertisement

அத்தியாயம் 9

இவர்களின் சம்பாஷணையை பார்த்தவர்கள் அவனுடைய அண்ணன் இடத்தில்

"வினோத் உன்னோட தம்பி எங்கையோ போய்ட்டாண்டா , ராகிங்னு தெரியும் அவனுக்கு அந்த பொண்ணு கிட்ட போயிட்டு இந்தமாதிரி ராகிங் பண்றங்க சும்மா லவ் அக்ஸ்ப்ட் பண்ற மாதிரி நடிச்சா போதும் வரியானு கேட்பான் பார்த்தா, இவன் என்னடானா காதல் அரங்கேற்றமே நடத்திட்டான்.
இதுதான் சாக்குன்னு என்னமா உருகி உருகி அந்த பொண்ணுகிட்ட காதல் சொல்றான் பாரு .

மச்சி உன்னுடைய தம்பிய கொஞ்சம் நல்லா நோட்டமிடுடா . இந்த பொண்ணு கடைசி வருடம் படிப்பை முடிக்கும்நேரம் கையில பிள்ளைய குடுத்துட போறான் .

அந்த பொண்ணு பாரேன் இவன் என்ன பேச ஆர்மபித்தனோ அவன் பிடித்த கையை உதறிவிடாமல் அவன் கண்ணையே பார்த்து பேசுறா.

டேய் எங்களுக்கு இதெல்லாம் சரியாய் வரும்னு தோணலை "

என்று ஆளுக்கு ஒன்றாக வினோத் இடம் சொல்லிக்கொண்டு இருந்தனர் .

வினு மற்றும் யுவராணி உரையாடல்கள் எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. அவர்களுடைய செயல்களில் அவனுக்கும் சிறு சந்தேகமும் ஆத்திரமும் இருக்கத்தான் செய்தது.

--------------------------------------------

அவள் கண்ணையே பார்த்து கொண்டிருந்தவன், அவளிடம்

"பேபி மா கால் வலிக்குது நான் எழுந்துகட்டுமா " என்று கூறிக்கொண்டே எழுந்துக்க பார்த்தான் .

"பிச்சிடுவேன் ஒழுங்கா அப்படியே இரு , நான் எவளோ நேரம் காத்துட்டு இருந்தேன் தெரியுமா ?"

"பேபி மா இது காலேஜ் டா , எனக்கு பனிஷ் பண்ணவேண்டும் நினச்சா நம்ப ஈடன் கார்டன் போய்டலாம் அங்க நீ எவளோ பனிஷ் பன்றியோ அத்தனையும் ஏத்துக்குவேன் இங்க வேண்டாம் டீ செல்லம் ப்ளீஸ் "

அவனை முறைத்துக்கொண்டே

"சரி எழுந்துக்கோ "

என்று அவனுக்கு உதவினாள்

"சரி வா நம்ப சீனியர்ஸ் கிட்ட போகலாம் "

அவள் கையை பிடித்த வண்ணமாகவே தன் சீனியர்ஸ் நோக்கி நடந்து வந்தான் .

"வினு இன்னொரு முக்கியமான விஷயம் டா "

"சொல்லு ராணி மா "

"அது நம்ப லவ் பண்ற விஷயம் காலேஜ் தெரிய வேண்டாம் டா ப்ளீஸ் "

"ஏன் ராணி மா "

" ஹ்ம்ம் ... நா இங்க படிக்க வரத்துக்கே அப்பாகிட்ட ரொம்ப சண்டை போட்டேன். அவரு இப்போ நம்ப லவ் மேட்டர் தெரிஞ்சுது என்கிட்ட பேசிட்டேலாம் இருக்க மாட்டார் ஏர் டிக்கெட் புக் பண்ணி என்ன லண்டன் கூட்டிட்டு போய் விட்டுவிட்டுத் தான் மறுவேலை பாபர். அதான் சொல்லுறேன் நம்ப ப்ரண்ட்ஸ் மாதிரியே எல்லோர் முன்னாலும் இருந்துபோம். அப்பாகும் தெரியவர வாய்ப்பு இருக்காது . "

" ஹ்ம்ம் சரி , எனக்கும் எங்க அண்ணா நெனச்சா தான் பயமா இருக்கு டீ "

"ஏண்டா நான் எங்க அப்பா நினைத்து பயப்படுகிறேன் அதுல ஒரு நியாயம் இருக்கு , நீ எதுக்கு உங்க அண்ணா நினைத்து பயப்பற்ற "

"அதற்கும் காரணம் இருக்கு ராணி மா , எங்க அம்மாகு நாங்கள் காதல் பண்ண கூடாது அதான், சரி அதெல்லாம் விடு நான் பார்த்துக்கறேன்."

"அப்போ நான் எங்க அப்பா பாத்து பயமா இருக்கு சொல்லுகிறேன் நீ அதுக்கு ஒன்னும் சொல்லல , இதுதான் சாக்கென்று உங்க அம்மா நினைத்து நீயும் வேண்டாம் சொல்ற "

"ராணி மா ப்ளீஸ் விடு "

"சரி சரி உங்க அம்மாவை ஒன்னும் சொல்லல "

" இப்போ சீனியர் கிட்ட வந்தாச்சு அப்பறம் பேசிக்கலாம்"

என்று சீனியர்ஸ் அருகில் வந்து நின்றார்கள் , அவர்களை ஆராட்சி பார்வையுடன் நோக்கினார் .

"என்னடா நடக்குது , உண்மையாலுமே லவ் சொல்லிட்டியா ?"

"அண்ணா , இவன் என்கிட்டே கெஞ்சினான் போனாப்போகுது நானும் "

"நீயும் "

"சரி சொல்லிட்டேன் "

"என்னமா சொல்லுற லவ் பண்றியா "

"அப்படித்தான நீங்க இவங்க கிட்ட சொல்லி அனுப்பினிங்க "

"அதுக்கு நீயும் ஓகே சொல்லிட்டியா "

"அதானே சீனியர் இவ இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கா , ஆனா சீனியர் பாருங்க நான் இப்போவே இவளை கழட்டிவிட முடிவு பண்ணிட்டேன் "

சொன்ன அவனுக்கும் மன வலி கேட்ட அவளுக்கும் மன வலி . அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவர்களிடம்

"இது பெரிய இடது விவகாரம் நமக்கு ஒத்துவராது அண்ட் நாங்க ரெண்டு பேரும் ப்ரிண்ட்ஸ் இப்போ போதுமா "

தோழனாக அவளின் தோளை அணைத்து அவள் முகம் பார்த்து "ப்ரிண்ட்ஸ்" என்று கூறினான் .

கூறும் அவனையே பார்த்து அவளும் புன்னகைத்தாள் .

இதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்

"அப்போ இவளோ நேரம் என்ன டா பண்ணீங்க , "

"இந்த விஷயத்தைத்தான் நாங்க பேசிகிட்டு இருந்தோம் "

"இது எதுமே சரி இல்லையே ஹ்ம்ம் , அப்போ நாங்க சொன்ன விஷயத்தை நீ பண்ணல"

பக்கத்திலிருந்த வினோத்

"சரி விடு டா அவங்கள நம்பித்தான் ஆகவேண்டும் அவன்தான் பெரிய வீடு விவகாரம் சொல்றான்ல " என்றுகூறி அவர்களுக்கு முற்றுபுள்ளி வைத்தான் .

"சரிங்க சீனியர் நாங்க எங்க டிபார்ட்மென்ட் போறோம் , வினோத் காலேஜ் முடிஞ்சதும் நானே வரேன் நீ வீட்டுக்கு போ "

என்று அவர்களிடத்தில் விடை பெற்று தன் தமையனிடத்திலும் கூறிவிட்டு அவன் அவளை கூட்டிச்சென்றான்.

இவன் அவளிடத்தில் காதல் சொல்லிவிடுவானோ என்ற கோவத்தில் அவனை முறைத்த இரு கோடி கண்களில் இரண்டாவது ஜோடி கண்ணுக்குச் சொந்தமானவன் .

இப்பொழுது வினு இவளை தோழியாக தான் நினைக்கிறேன் என்று கூறியதும் அமைதி ஆனது. அது வேறு யாரும் இல்லை வினுவின் அண்ணன் வினோத்தான் .

இப்பொழுது வினோத் வினையை முழுதாக நம்பினான் . தாயின் ஆணையையும் ஆசையையும் இவன் மீறமாட்டான் என்று .

"நீ என்ன டிபார்ட்மென்ட் ராணி மா "

"டெஸ்ட்டைல் இன்ஜினியரிங் தான் எடுத்திருக்கிறேன் , அப்போதுதான் அப்பா சரி சொன்னார் , நீயும் என்னோட டிபார்ட்மென்ட் மாதிக்கோ "

"வேண்டவே வேண்டாம் நான் IT டிபார்ட்மென்டலே இருக்கிறேன், நீயும் எங்க அம்மாவும் சொன்னதால் மட்டும் தான் இன்ஜினியரிங் படிக்கிறேன், இதுக்குமேல என்ன வற்புறுத்தாதே "

"சரி ஏதோ பண்ணு, அப்போ நான் என்னுடைய கிளாஸ் போகிறேன் ,ஹா சொல்ல மறந்துட்டேன் எனக்கு டிரைவர் வருவார் என்ன கூட்டிட்டு போக .

நம்போ ஈவினிங் ஈடன் கார்டன்ல மீட் பண்ணலாம் வந்துடு வினு "

"சரி , அண்ட் சாரி ராணி மா , நான் சும்மா அவங்கள நம்பவைக்கத்தான் அப்படி சொன்னேன் என்ன தப்பா எடுத்துக்க டீ "

"கண்டிப்பா எடுத்துப்பேன்"

என்று முகம் சுருங்கி இவனிடத்தில் பாய்ந்தாள் .

இவளை பற்றி முழுதாக புரிந்து கொண்டவன் இவனே.

எடுத்தெறிந்து பேசும் குணமும் , தனக்கு சமமாக உள்ளவர்களிடத்தில் சகஜமாக பேசும் தன்மை இவளுடன் பயலும் மற்ற மாணவர்களிடத்தில் மாறிவிடும் .

தன் பொருள் தன்னுடைய ஆசை அதை அடைய எதுவாக இருப்பின் அதை வென்றே தீரும் வெறி. ராணி என்ற பெயருக்கு இவள் ராணி போலவேய் வாழ ஆசை படுவாள்.

ஏனோ இவனை மட்டும் இவளுக்கு பிடித்து விட்டது. இவன் பணம் படைத்தவன் இல்லை, ஆனாலும் இவன் ஒரு ஆணுக்குரிய சர்வ லட்சணம் பொருந்தியன் போல் இருப்பவன், இவனைவிட யாரிடமும் இல்லை என்று இருந்தாள். இவளை ராணி மா ராணி மா என்று தந்தையை போலவே கையில் தங்குவான்.

இவனின் குணமும் இவளுடைய குணமும் எல்லாவற்றிலும் ஈடாகும் என்று கூறிவிட முடியாது . இவர்களிடத்தில் பிணக்கம் அதிகம் வரும் நாட்களில் அவள் சிறு துளி கண்ணீரை சிந்திவிட்டாலோ அல்லது சிறு முகம் சுருங்கிவிட்டாலோ இவனுக்கு இருதய வலி எடுத்து விடும்.

இப்பொழுதும் அந்த வலியைத்தான் அவன் உணர்ந்தான்.

பிரிதல் என்பது அவர்கள் பேசியதோ சிந்தித்ததோ இதுவரை இல்லை .

சுற்றி முற்றிலும் பார்த்தான் அந்த வராண்டாவில் மாணவர்கள் அங்கும் இங்கும் நடந்த வண்ணம் இருந்தார்கள், அவளை கைபிடித்து மாடி ஏறும் வழியில் ஒரு இடத்தில் சுவரோடு அவளை நிறுத்தியன் மீண்டும் சுற்றி முற்றிப் பார்த்தான்

இவனின் நோக்கம் புரிந்தவள்

"டேய் வினு வேண்டாம் டா இப்போதுதான் ஒரு கூட்டத்தை சமாளித்தோம் , அதுக்குள்ள இப்படி வேண்டாம் நம்ப ஈடன்..

என்று முடிக்கும் முன் அவளின் இதழில் தேன் உரிய ஆரம்பித்தான்

நிமிடம் மட்டுமே தீண்டிய தீண்டல் ஆயினும் அதின் ருசியும் அனுபவமும் அவர்களை அவர்களின் உலகத்திற்கு கொண்டு சென்றது.

அவளை நொடியில் விட்டவன் அவளை பார்த்து கண் அடித்தான்.

அவளுடைய கன்னங்களை பற்றி

"இதுவே கடைசி முறை ராணி மா, இனி என் நினைவிலும் அதைப்பற்றிய சிந்தனை இருக்காது" என்று அவளுடைய நெற்றி முட்டி கண் அடித்தான்.

அவர்களுடைய கல்லூரி வாழ்க்கை இனிதே துவங்கியது காதலுடன்.

தொடரும் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top