தக்காளி குருமா

Advertisement

Sahi

Well-Known Member
தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை: 1 கொத்து

வெங்காயம்: 1

பச்சை மிளகாய்: 3 நீட்ட வாக்கில் கீறியது

பூண்டு: 3 (விழுது)

இஞ்சி: ½ இன்ச் (விழுது)

தக்காளி அரைத்தது: 3 (250 கி)

மிளகாய் தூள்: 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள்: ¼ டேபிள் ஸ்பூன்

தனியா தூள்: 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்: தேவையான அளவு

உப்பு: தேவையான அளவு



தாளிக்க

பட்டை: 1

கிராம்பு: 2

பிரியாணி இலை: 1

ஏலக்காய்: 1



அரைக்க

தேங்காய் மூடி: 1/2

முந்திரி: 4

பொட்டுக் கடலை: 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு: 1/2 டேபிள் ஸ்பூன்



செய்முறை:

எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை போடவும். அதோடு கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியபின் அரைத்த தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போன பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதித்ததும் இறக்கினால் தக்காளி குருமா தயார்.IMG_20190618_201200.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் ரெசிப்பி, சாஹித்யா டியர்
ரொம்ப ஈஸியா இருக்கும் போலவே
நாளைக்கே பண்ணிடுறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top