தக்காளி குருமா

Sahi

Well-Known Member
#1
தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை: 1 கொத்து

வெங்காயம்: 1

பச்சை மிளகாய்: 3 நீட்ட வாக்கில் கீறியது

பூண்டு: 3 (விழுது)

இஞ்சி: ½ இன்ச் (விழுது)

தக்காளி அரைத்தது: 3 (250 கி)

மிளகாய் தூள்: 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள்: ¼ டேபிள் ஸ்பூன்

தனியா தூள்: 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்: தேவையான அளவு

உப்பு: தேவையான அளவுதாளிக்க

பட்டை: 1

கிராம்பு: 2

பிரியாணி இலை: 1

ஏலக்காய்: 1அரைக்க

தேங்காய் மூடி: 1/2

முந்திரி: 4

பொட்டுக் கடலை: 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு: 1/2 டேபிள் ஸ்பூன்செய்முறை:

எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை போடவும். அதோடு கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியபின் அரைத்த தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போன பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதித்ததும் இறக்கினால் தக்காளி குருமா தயார். IMG_20190618_201200.jpg
 
#4
சூப்பர் ரெசிப்பி, சாஹித்யா டியர்
ரொம்ப ஈஸியா இருக்கும் போலவே
நாளைக்கே பண்ணிடுறேன்
 
Advertisement

Sponsored