ஜுவநதி-2

Aishwarya Nachiar

Writers Team
Tamil Novel Writer
ஜீவநதி -2

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து தெற்கே 570கி.மீ. தொலைவில் இராஜபாளையம் அமைந்துள்ளது . இது மேற்கு தொடர்ச்சி மலைக்கும் , கேரளா பார்டருக்கும் அருகில் உள்ளது . இராஜபாளையத்தின் பொருளாதாரம் ஜவுளி உற்பத்தி, நூற்பாலை , நெசவாலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது . இங்கு பஞ்சுகளுக்கான சந்தை (cotton market) உள்ளது .

சென்னை லயோலா கல்லூரி மிகவும் கொண்டாட்டமாக காணப்பட்டது . இன்று முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விருந்து (welcome party ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இரண்டாமாண்டு மாணவர்கள் தத்தம் துறையைச் சேர்ந்த மூத்த மாணாக்கர்கள் (senior) மற்றும் முதுகலை மாணவர்களுடன் (super senior) இணைந்து விருந்திற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் . முதலாமாண்டு மாணவர்களின் பதற்றத்தையும் பயத்தையும் போக்கவே இவ்விருந்து .

கலந்தாய்வு அறையில்(conference hall) விருந்திற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்க இருமாணவிகள் சீனியரின் அறிவுரையை கேட்டு காதில் இரத்தம் வழிய நின்றிருந்ததை பார்த்த அமிழ்தன் மற்றும் அவன் சகாக்கள் சிரித்து கொண்டிருந்தனர் . அவ்விருமாணவிகளும் அமைதியாக பார்த்தனர் . அம்மாணவிகளின் தோழனான நவினோ இது புயலுக்கு முன் வரும் அமைதி என அந்த சீனியர் மாணவனை நினைத்து பரிதாபப்பட்டான் . சீனியர் மாணவன் (விஜய்) அறிவுரையை முடித்து சென்ற அடுத்த நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் அமிழ்தனின் குழூவை நோக்கி வேகமாக சென்றனர் தோழிகள் இருவரும் ‌.

தோழிகளில் ஒருத்தி அமிழ்தனின் குழுவை பிடிபிடியென பிடித்து விட்டனர் . சகாக்களில் ஒருத்தன் அமிழ்தன மட்டும் ஏன் திட்டல என்றதற்கு அவனை உக்கிர பார்வையுடன் டேய் எருமைகளா அவன எப்போனாலும் கவனிச்சுகலாம் உங்கள இப்போ விட்டா ஓடிருவேங்க என்றாள். குழூவே திட்டு வாங்கியவனை பார்த்து இந்த அவமானம் உனக்கு தேவையா என்று லுக் விட்டனர் .
அம்மூவேந்தர் கூட்டம் நகரவும் அமிழ்தனை அவன் குழூக்கள் சூழ்ந்து கொண்டனர் . டேய் அமிழ்தா மாயா ஏன்டா இப்படி பேசுறா என்றான் ஒருத்தன் . அந்த மூனும் மரியாதைனா கிலோ என்ற விலை னு கேட்கும் என்றான் மற்றொருத்தன் . அதில நவின் பரவாயில்லை டா மச்சான் கொஞ்சம் மரியாதை யா பேசுவான் என்றான் மற்றோருவன் . அதற்கு அமிழ்தனோ சிரிப்புடன் தங்கச்சி கூட பிறந்திட்டு இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படிடா இன்னும் எவ்வளவோ இருக்கு . தோழன் ஒருவன் நீ திட்டு வாங்குற சரி நாங்க ஏன்டா திட்டு வாங்கனும் . என்னோட தங்கச்சி டா உங்களுக்கும் தங்கை தான்டா என்றான் அமிழ்தன் . ஒருவழியாக எல்லாரும் அரங்கை வந்தடைந்தனர் .

கலந்தாய்வு அரங்கில் உமையாள் (இனி மாயா என்றே அழைப்போம்) இரண்டாமாண்டு வகுப்பு பிரதிநிதியாக வரவேற்புரை ஆற்றிவிட்டு செல்லும் நேரம் முதுகலை இரண்டாமாண்டு வகுப்பு பிரதிநிதியான அமிழ்தன் மாயா-வை பாடிவிட்டு செல்லுமாறு கூறினான் . இயற்கையிலேயே நல்ல குரல்வளம் கொண்டதால் அமிழை முறைத்து விட்டு பாட ஆரம்பித்தாள் .


நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி , சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி சிவசக்தி ! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?

விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்,
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவம்எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன், இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
-எனும் பாரதியார் பாடலை தன் தேனினும் இனிய குரலால் பாட அக்குழுவில் அனைவரும் மெய்மறந்து நின்றனர் .

பாடல் முடிந்ததும் அரங்கமே கரகோஷ ஒலியால் நிறைந்திருந்தது . ஆட்டமும் , பாட்டமுமாக சென்ற விழாவின் முடிவில் அமிழ்தனின் முடிவுரைக்கு பின் புதிய மாணவர்கள் தங்கள் சீனியருடன் சங்கடத்தை விடுத்து பேசிக் கொண்டிருந்தனர் . இன்று வரவேற்பு விருந்து ஆதலால் விருந்து முடிந்ததும் வீட்டிற்கு செல்லலாம் . அரங்கத்தை விட்டு வெளியேறிய மூவேந்தர்கள் வாகன தரிப்பிடத்திற்கு ( car parking) விரைந்தனர் . நவின் வீட்டிற்கு சென்றவுடன் மாயா மற்றும் வருணா-வை நெருங்கிய அமிழ்தன் "பட்டு" ரொம்ப நேரமா காத்திருக்கிய வீட்டிற்கு போலாமா என்க , மாயா-வோ டி வரு யாரும் என்கிட்ட பேசாம வேணாம் என்றாள் . உங்க பாசமலர் இடையில் நான் வரல மா .. பாத்து போய்ட்டு வாங்க பை என்றாள் வரு . இருவரும் கிளம்பியவுடன் வருவதும் தனது விடுதியை நோக்கி பயணமானாள் . மாயாவும் அமிழ்தனும் செல்வதை பார்த்த விஜய் கோபத்துடன் முனுமுனுத்துக் கொண்டான் .

நதி இணையும்
 




banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஐஸ்வர்யா நாச்சியார் டியர்
 




Last edited:


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top