சொர்ணதீபம்-அறிமுகம்

Advertisement

LavanyaShivaram

Writers Team
Tamil Novel Writer
'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தக்குடி தமிழ்க்குடி'

என்ற முதுமொழி தமிழகத்தின் தொன்மையை விளக்கும்.அத்தொன்மையான தமிழகத்தை ஆண்ட அரசர்கள் வீரத்திலும் அறத்திலும் பக்தியிலும் சிறப்புற்று விளங்கினர்.அவர்கள் பெருமை உள்நாட்டில் அல்லாது கடல் கடந்த தேசங்களிலும் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

கடாரம் காம்போஜம் சாவகம் சீனம் போன்ற நாடுகளுடன் நம் கடல் வர்த்தகம் செழிப்புற்று விளங்கியது.நெடுங்கடலில் கப்பல்செலுத்துவதில் வல்லமை பெற்றிருந்த தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழர்களின் நாகரிகத்தையும், கலையையும், அரசியல், சமுதாயம், மதம் பற்றிய சிந்தனைகளையும், பழக்கவழக்கங்களையும், மொழியையும் பரப்பி வந்தனர். ஆனால் அதே நாடுகளோடு நம் மன்னர் பலர் போர் புரிந்தற்கான சான்றுகளும் உள்ளன.அத்தகைய ஒரு போரைப் பற்றிய கதைதான் சொர்ணதீபம்.

கடைச்சங்க பாண்டிய மன்னனான செல்வக்கடுங்கோவின் ஆட்சியை எதிர்த்து இன்று சுமத்திரா தீவு என நாம் அழைக்கும் தீவு முற்காலத்தில் ஸ்ரீவிசயம் என அழைக்கப்பட்ட நாட்டின் மக்கள் தம் சுதந்திரத்தைக்காக அவனோடு போரிட்டனர்.

அதில் முக்கியமாக போரிட்டவள் நம் கதையின் நாயகி கயற்கண்ணி. ஸ்ரீவிசயத்தின் மன்னன் குணவர்மனின் சேனாதிபதி சிவபாதனின் மகள்.

ஆனால் செல்வக்கடுங்கோவின் வீரமும் அழகும் அவள் மனதைக் கொள்ளைக் கொண்டது.

உயிரோடு கலந்துவிட்ட காதலா?அல்லது தாய்திருநாட்டின் சுதந்திரமா? அவளின் இந்த போராட்டமே சொர்ணதீபம்.

இந்த கதையில் இடம்பெறும் ஊர்கள் வாழ்க்கை முறை தவிர சம்பவங்கள் யாவும் கற்பனையே.

சரித்திரம் என்ற மாகடலில் முழுகி முத்தெடுத்த சரித்திர பேராசிரியர்களுக்கும் சரித்திர கதாசிரியர்களுக்கும் இந்த கதை சமர்ப்பணம்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய புதிய
"சொர்ணதீபம்"-ங்கிற
அழகான அருமையான
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
லாவண்யாஷிவராம் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top