சுஜீதா

Advertisement

Jagan P

Member
இரவு மணி பதினொன்று.
சாலையின் ஓரத்தில் ஒரு பெண் தனியாக நிற்கிறாள். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், இந்த பெண்ணை பார்த்ததும் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில் வந்தான்.
இந்த நேரத்தில் இங்கே ஏன் தனியாக நிற்கிறாய் என்றான்.
அப்பெண் அதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை அமைதியாக இருந்தாள்.
இரவு நேரத்தில் நீங்கள் தனியாக இங்கே நிற்பது பாதுகாப்பனதல்ல என்பதை உணர்ந்து தான் எங்கே நீ நிற்கின்றீர்களா? என்றான். அதற்கும் அவளின் செவிகள் கேட்பதாக இல்லை.
அவன் சற்று நேரத்திலையே புரிந்துக் கொண்டு சற்று கோபமாக இது எல்லாம் தவறுயில்லையா??. வாழ எவ்வளவோ வழியிருக்கே அதையெல்லாம் விட்டுட்டு, ஏன் இவ்வேலை செய்ய உங்களுக்கெல்லாம் எப்படி மனம் வருகிறதோ என்று எனக்கு தெரியவில்லை. அவன் சொல்லியதை கேட்டு,
அவள் சிரித்துக் கொண்டே, நான் என் வேலையை செய்கிறேன் இதில் என்ன இருக்கு.?
நீங்கள் அனைவரும் உங்களுக்காகத் தான் வேலை செய்கிறிர்களா…… என்ன..? இல்லைதானே…!
நான் எந்த மாதிரியான வேலையில் இருந்தால் உனக்கென்ன?. எல்லாம் பசினு வந்துவிட்டால் போதும் பிச்சையெடுக்கக் கூட தயங்கமாட்டோம் இல்லையா. அதுபோன்றது தான் இதுவும்.
அவளின் நறுக்கென்ற பேச்சால் அவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.
ஆனாலும் தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு சரி நீங்கள் சொல்லுவதும் சரியாகவே இருந்தாலும் பரிவாயில்லை. நான் சொல்வதை சற்று யோசித்து பாருங்களேன்.
அப்பெண் சிரித்துக் கொண்டே சொன்னாள், நான் என் உடலை விபச்சாரம் செய்கிறேன் அதில் என்ன தவறை கண்டீர்கள் நீங்கள்….?
இரவில் வேட்டையாட வரும் மிருகங்களுக்கு உணவாக நான் இருக்கிறேன் இதில் எந்த தவறும் தெரியவில்லையே..? .
நீங்கள் இப்போது நினைப்பது நான் இதைக் கொண்டுதான் என் வாழ்க்கையை வாழ்கிறேன்
நீங்கள் அப்படி நினைத்தாலும் அதற்கு நான் எதுவும் செய்யமுடியாது. அதுவே உண்மை தானென்று வைத்துக்கொள்ளுங்கள், இப்போது இங்கியிருந்து கேளப்புங்கள் அதுவே எனக்கு போதும்
அவள் சொன்ன வார்த்தைகளால் அவனுக்கு மேலும் கோபத்தையையே வரவைத்தது.
உங்களிடம் இவ்வளவு நேரம் பேசியதே வீண்பேச்சு…!
நீ மனம் மாறி திருந்தினால் என்னால் இயன்ற உதவிகளை உனக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதை நீங்கள் ஏற்க தயாராக இல்லையே?
இப்படி பணத்திற்கு அடிமையாக உடலை தருவது மிக கேவலம் குடும்பநிலை என்று எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை பொறுத்துக் கொண்டு போராட வேண்டுமே தவிற இந்த மாதிரியான வழிக்கு போகக்கூடாது. இப்போதும் ஒன்றுமில்லை நீ இதை கைவிடு உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
அப்பெண்ணின் முகம் வாடியது
சிறிது மெளனத்திற்கு பிறகு சற்று நில்லுங்கள் நான் விபச்சாரிதான். ஆனால் நான் விபச்சாரியாக என் உடலை மட்டுமே விலைக்கு தருகிறனே தவிற என் உணர்வையும் மனதையும் அல்ல.
என்னை பயன்படுத்துவரின் மனமும் அவர்களது உணர்வையும் சற்றேன்று புரிந்துக் கொள்வேன். எங்களிடம் வருபவர்கள் எல்லாம் காமவெறி பிடித்த மிருகங்கள் எங்களை அவர்கள் ஒர் கருவியாக பயன்படுத்துகிறார்ளே தவிற உணர்ப்புரமாக அல்ல.
எதோ காலை கடன்களை கழிப்பதை போன்றே, அவர்களின் காம உணர்வுகளை என் மீது திணித்துவிட்டு செல்கிறார்கள். அதற்கு கிடைப்பது சன்மானம் தான் பணம்.
பணத்தால் பெண்ணின் உடலை மட்டுமே விலைக்கு வாங்க முடியும். ஆனால் அவளின் பெண்மையின் உணர்வையும், அவளில் ஆழ்மனதையும் விலைக்கு வாங்க முடியாதே?
"பெண்ணின் கர்ப்பு என்பது அவளின் உடலும்பில் இல்லை அவளின் மனமும் உணர்வையும் அன்போடு உடலையும் சேர்துக் கொடுப்பது தான் கர்ப்பு. அதில் வேறும் உடலை மட்டும் கொடுப்பதில் கர்ப்பல்ல
பெண் என்றாளே அவள் ஆண் சமூ கத்திற்கு அடிமை அதிலும் அந்தரங்க விசயத்தில் பெண்ணின் விருப்பத்தை கேட்பதே கிடையாது காமத்தை அவள்மேல் கொட்டிவிட வேண்டும் தானே நினைக்கிறது.
அவள் சொல்வதை அவன் கேட்டுக் கொண்டிருந்தான் அதான் பதில் எதுவும் சொல்ல முடியாமல் நின்றான்.
அவளின் மனத்தில் இருப்பதை வெளிப்படையாக இப்போது தான் பேச தொடாங்கியுள்ளாள் என்று நினைதுக்கொண்டே பேச்சை தொடருங்கள் என்றான்.
அவளும் மீண்டும் தனது பேச்சை தொடங்கினாள் நான் அந்த வேலையின் போது வெட்டப்பட்ட ஓர் மரத்தின் துண்டுகளைப் போன்று தான் இருப்னே தவிற எனது உணர்வுகளுடன் தழுதல்கள் இருப்பத்தில்லை.
மர கரியை மீண்டும் நெருப்பாக்கி அதில் குளிர்காய்யவே நினைக்கும் கூட்டத்திடம் சிக்கியவள்.
அந்த நெருப்பு சாம்பளாகும் வரையிலும் நின்று குளிர்காய்ய எண்ணுவார்கள்.
பகலில் நல்வன் வேஷம் இரவில் காம பைத்தியம் பிடித்து வெறிக் கொண்டு அலைகிறது சில நாய்கள்.
இந்த சமூகத்தில் என்னை போன்ற பெண்களின் மன வெறுத்து ஏன்தான் இந்த உயிர் நம் உடலில் உள்ளதோ என்று நினைத்து வேதனை படாத நாட்களே இல்லை நாங்கள் இறந்தாலும் எங்கள் சவத்துடனும் உடலுறவு வைக்கும் கூட்டம் உள்ளது இது தெரியுமா உனக்கு?
பெண் என்பவள் உடலுறவுக்கென்றே நினைத்த இந்த சமூகத்தில் எங்கே நல்லதையும் நல்லவர்களை காணமுடிகிறது?
யார் எவ்வளவு விலை கொடுத்தாலும் ஒரு பெண்ணின் மனதையும் அவளின் உணர்வையும் விலைக்கு வாங்க முடியாது. என்பதை எப்போது தான் இந்த சமூதாயம் புரிந்துக்கொள்ளுமோ அது எப்போது தான் நடக்குமோ என்று தெரியவில்லை.
ஒரு பெண்ணை ஆண் புரிந்துக் கொண்டால் மட்டும் போதாது. அவளின் ஆசைகள் என்ன அவளின் லட்சியம் என்ன என்பதை தெரிந்துக் கொண்டு அவளுக்கான மனத்தில் அவளை சுதந்திரமாக வாழ விட்டு பாருங்கள்.
அப்போது தான் பெண்களின் திறமை என்ன அவர்களின் ஆளுமை என்ன என்பதை இந்த சமூகமும் ஆண்களும் புரிந்துக் கொள்வார்கள்
நீங்கள் நினைக்கலாம் பெண்களின் மனப் போக்கில் சுதந்திரமாக விட்டால் ஆண்களை மதிக்கமமாட்டிர் என்று!.
ஆனால் பெண் என்பவள் அப்படி அல்ல. மனைவி தாய் தங்கை என்று எல்லா சூழல்களில் ஆண்களோடு சேர்ந்தே இருக்கிறாள். தனக்கான முடிவை அவளையே சுதந்திரமாக எடுக்கவிட்டு பாருங்கள். அவளுக்ன்றகென்று ஒர் எல்லையை தீர்மானித்துக்கொண்டு அதில் தன்னை நம்பியவர்களுக்கு துரோகம் சந்தேகம் எந்த சுழ்நிலையிலும் நாம் மீது வந்து விடக்கூடாது என்ற எண்ணத்திளே வாழ்வாள்.
ஏதேனும் அவள் தவறு செய்தால் தன்னை சவப்பெட்டியினுல் அடக்கிக் கொள்வாளே தவிர தன்னை புரிந்துக்கொண்ட ஆண்ணை எக்காரணத்தைக்கொண்டும் எதிர்த்து நடக்கமாட்டாள் துரோகமும் செய்யமாட்டாள்
அவளின் இந்த பேச்சைக்கேட்டதும் செய்வதறியாது வாய்யடித்து நின்றான்.
பிறகு அவள் சொன்னாள் ஒரு மனிதனின் குணத்தை மற்றொரு மனிதன் எப்பொழுதும் புரிந்துக்கொள்ளவே முடியாது.
நமது கோபம் அழுகை வெறுப்பு பகை ஆகியற்றை காலம் நம் மனதை மாற்றுவதால் தான் ஒருவரை புரிந்துக்கொண்டதாக நமது மூலை நம் மனதை நம்ப வைத்து அதில் சுகம் துக்கம் ஆசை போன்ற வழிகளின் பின்னே மனிதர்களை பயணிக்க வைக்கிறது இதை தான் நாமும் ஒருவரை மற்றவர் புரிந்துக்கொள்கிறோம் என்கிறோம்.
அதில் இருக்கும் வேறுபாடுகளை யாரும் உணர்வதில்லையே என்றதும்.
அவனது முகம் இன்னும் வாடியது அவளின் திறமையான பேச்சை பார்த்து அவனது கண்கள் கலங்கிபோனது.
பின் அவன் சொன்னான் நீங்கள் மட்டும் நான் மனம் மாறுகிறேன் என்று சொல்லுங்கள் என் நிறுவனத்திலே உங்களுக்கு ஒரு வேலை தருகிறேன் நீங்கள் எந்த வேதனையும் இல்லாமல் நன்றாக வாழலாம் உங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று வாக்குறுதி தருகிறேன்.
அவளும் உங்கள் உதவிக்கு நன்றி.. ஆனால் இந்த உதவி எனக்கு வேண்டாம் என்றாள்.
சட்டென்று, ஏன்…? எதற்கு…? ஏன் உதவி வேண்டாம் என்கிறாய் என்று கேட்டான்.
அந்த பெண்ணோ இந்த உதவி எனக்கானதல்ல வேற்றொரு பெண்ணுக்கான உதவி?
அவனுக்கு இவள் சொல்வது புரியாமல் நின்றான்!
என்னை மன்னியுங்கள்
நீங்கள் நினைக்கும் விபச்சாரி பெண் நான் அல்ல. இதோ இங்கு நிற்கிறோமே இந்த சாலையின் ஒரத்தில் அதோ தெரிகிறதே ஒரு மரம். அந்த மரத்தடியில் தான் நானும் எனது கணவன் குழந்தையும் தங்குகிறோம்.
பிழைப்பதை தேடி சொந்த ஊரை விட்டு இங்கு அனாதையாக இந்தச் சாலையே எங்களின் வாழ்க்கையை வேதனையில் ஒவ்வொரு நாட்களாக தள்ளுகிறோம்.
பகலில் கூலித் தொழிலாளியாக கிடைத்த வேலையை இருவரும் ஒன்றாக செய்துவிட்டு வருவோம். இன்று என் கணவர் ஒரு பக்கமும் என்னை ஒரு பக்கமும் வேலைக்கு போகவேண்டிய நிலை. அதனால் தான் நான் இங்கே வந்து நின்று பார்த்தேன் என் கணவர் வருகிறரா இல்லையா என்று.
இங்கே இரண்டு மாதங்களாகவே ஒரு பெண் இரவில் காரில் வருவாள் போவாள் நானும் பெரிய பணக்காரிபோலும் என்று நினைத்தேன்…
ஆனால் நேற்று அவள் நடந்தே வந்தாள் அப்போது நான் கேட்டேன் ஏன்மா நடந்து வரிங்க கார்யில்லையா….? என்றேன் அப்போது அவள் இல்லை அக்கா…
ம்ம்ம்ம்… ஆமாம் உங்களுக்கு எப்படி என்னை தெரியும் நான் காரில் தான் போவேன் வருவேன் என்று என்னை கேட்டாள்.
அதற்கு நான் சொன்னேன் அதோ ஒரு மரம் இருக்கிறதில்லையா அந்த மரத்தடியில் தான் நாங்கள் தங்குகிறோம்.
நீ தினமும் இரவில் காரில் போவதும் வருவதுமாக இருப்பாய் அதை நாங்கள் அப்போது பார்த்திருக்கிறோம். ஆனால் நாங்கள் இருப்பதை நீ பார்க்கமாட்டாய் நீ சோர்வா எந்த பக்கமும் பார்க்காமல் சென்றுவிடுவாய் …. என்றதும் சற்று யோசித்துவிட்டு.
ஒ அப்படியா அக்கா சரி
நீ எந்த ஊர்மா ஆமாம் சாப்டியாமா
இல்லகா நீங்களாவது கேட்கிறீங்களே என்று கண்கள் கலங்கி அழுதுவிட்டாள். நான் விபச்சாரி அக்கா
என்னமா இப்படி சொல்லிட்ட?
இல்லைகா நான் சொல்வது உண்மை தான். உங்க கிட்ட மறைக்க மனமில்லை அதான் சொல்லிட்டேன்
அவள் சொன்னதும் எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது
அவளிடம் கேட்டேன் ஏன்மா என்னாச்சி எதற்கு நீ இப்படி அழுர கொஞ்சம் பொறுமையாக இரு அழதே என்று மனத்திற்கு ஆறுதல்களை சொன்னேன்.
பிறகு கண்கள் கலங்கியபடியே என்னிடம் அவளின் மனதில் உள்ளதை என்னோடு பகிர்ந்து கொண்டாள்.
அவள் நம்பிய ஒருவனால் ஏமாற்றப்பட்டு அவனது நண்பர்கள் என்று பலரை அறிமுகப்படுத்தி அவளை பற்றி முழு விவரங்களையும் பகிர்ந்து கட்டாயமாக அவள் மீது இவ்பட்டத்தை திணித்துயுள்ளார்கள்.
அப்போது இருந்த உயிர் பயம் அவள் குடும்பத்தின் நிலை என்று அவளின் மனம் இப்படிப் பட்ட நிலைக்கு தள்ளிவிட்டது போலும். சட்டத்திற்கு முன் இவர்களை நிற்க வைத்தாலும் மூன்றே மாதத்தில் வெளிய வந்துவிடுவார்கள் என்றம் வேறு அதிலும் அவள் முழுமையாக நம்பியவனே வெறும் காமத்திற்காக தன்னோடு பழகியதை நினைத்தும் அவளின் மனம் வெறுத்து பேசினாள்.

அவள் என்னிடம் சொன்னதைதான் இப்பொழுது நான் உங்களிடம் சொன்னேன் தம்பி.
அவள் அதிலிருந்து விடுபடவே நினைக்கிறாள். ஆனால் இந்த சமூகமும் அவளை சுற்றிள்ளர்களும்
அவளை விடுவதாக இல்லை. ஆனால் இப்போது அவளுக்கான மாற்றமும் ஆதரவும் உங்கள் மூலமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நீ பேசும் வார்த்தையில் நான் தெரிந்துக்கொண்டேன்.
இனி அவளின் மனம்போல் வாழ்க்கை கிடைத்தாலே எனக்கு போதுமானது.

அவன் சற்றும் எதிர்பார்க்காத பேச்சாக இருந்தது.
அவளின் எதிர் பாராத வார்த்தைகளால் அப்படியே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்
அந்த பெண்ணின் முகவரியை தருகிறேன் நீங்களே அவளை சந்தித்து பேசுங்கள்

அவன் இல்லை இல்லை வேண்டாம்..
அவர்களை நீங்களே அழைத்து வாருங்கள் அப்பெண்ணின் வாழ்க்கைக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இனி நான் பார்த்துக்கொள்கிறேன்.
அதற்கு அப்பெண்ணும் சரி என்று சொன்னாள்.
பின் நாம் பேசிக்கொண்டே இருந்துவிட்டோம் உங்கள் பெயர் என்ன தம்பி..
என் பெயர் ராஜேஷ் ஒர் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.. அக்கா உங்களின் பெயர்..
என் பெயர் மீனா தம்பி…
சரி நீங்கள் சொன்ன பெண்ணின் பெயரை சொல்லவே இல்லையே அக்கா.
ம்ம்ம்.ம்ம்ம்…. அவள் பெயரா…
“சுஜீதா”
சரி தம்பி என் குழந்தை தனியாக இருப்பான் என் கணவரும் வந்துவிடுவார் நான் போகிறேன். இரவில் ஒரு பெண்ணை தனியாக பார்த்ததும் அவளை பற்றி எதுவும் தெரியாமல் நீங்களாகவே ஒர் முடிவை எடுத்துவிடாதீர்கள்?.

நீங்கள் எனக்கு சற்று நேரத்தில் கொடுத்த விபச்சாரி பட்டத்தை போன்று தான் இந்த சமூகமும் பெண்களை புரிந்துக் கொள்ளாமல் அடிமையாக வைத்துக்கொள்ள வழி செய்துவிடுகிறது .
பின் ராஜேஷ் நினனத்தான் நம் எண்ணங்களையும் பெண்ணின் மீதான பார்வையுமே மாற்ற வேண்டுமே தவிர பெண் அல்ல என்பதை உணர்ந்தான்.
இனி நாம் மற்றவர்களை பற்றி தெரியாமல் நாமகவே ஒர் முடிவை எடுத்துவிடக்கூடாது என்பதை மனதில் தீர்மானித்தான் ராஜேஷ்.
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top