சீஸ் கார்லிக் பிரட்

Bhuvana

Well-Known Member
#1
சீஸ் கார்லிக் பிரட்

தேவையானவை :

மைதா - 1/4 கி
பால் - 1/4 கப் (காய்ச்சியது)
சக்கரை - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
பீஸா சீசனிங், மிக்ஸ்ட் ஹர்ப்ஸ், ஒரிகேனா மிக்ஸ், சில்லி ப்ளேக்ஸ், உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
பூண்டு பவுடர் - 2 ஸ்பூன்
கட்டி தயிர் - 4 ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1/4 கப்
மொசரெல்லா சீஸ் - துருவியது

ஒரு பாத்திரத்தில் பால், சக்கரை, பீஸா சீசனிங், மிக்ஸ்ட் ஹர்ப்ஸ், ஒரிகேனா மிக்ஸ், சில்லி ப்ளேக்ஸ், பூண்டு பொடி, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, மைதா, தயிர், எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து மாவை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

மாவை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் கனமாக தேய்த்து உருக்கிய வெண்ணெய் சிறிது தடவி, பாதி அளவுக்கு சீஸ் தூவி விருப்பப்பட்டால் ஸ்வீட் கார்ன், ஆலிவ்ஸ் சேர்த்து மடித்து விடவும்.

ஓரங்களில் பிரிந்து விடாமல் இருக்க தண்ணீர் சேர்த்து ஓட்டிவிடவும்.
கத்தி வைத்து
துண்டுகளாக்குவது போல கீறி
வைக்கவும். மேலே வெண்ணெய் தடவி சிறிதளவு ஒரிகேனா மிக்ஸ்,
சில்லி ப்ளேக்ஸ் தூவி விடவும்.

குக்கரில் உப்பு அல்லது மணல் கொஞ்சம் நிரப்பி ஒரு சிறிய ஸ்டண்ட் வைத்து 15 நிமிடம் ப்ரி ஹீட் பண்ணவும்.

ஒரு தட்டில் கொஞ்சம் எண்ணெய் தடவி தயார் செய்த மாவை அதன் மீது வைத்து குக்கரில் 20ல் இருந்து 25 நிமிடம் வரை வேக வைத்து எடுத்தால் சீஸ் கார்லிக் பிரட் ரெடி
 
Attachments

Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement