சிரிக்க முடிந்தால் சிரிக்கலாம்... அடிக்க வரக் கூடாது...

Advertisement

joe

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool::unsure::unsure::unsure:
ஹா ஹா ஹா
இனி சபீனா எடுக்கும் பொழுதெல்லாம் உங்க ஞாபகம்தான் வரும், Joe டியர்
உங்க முழுப் பெயர் என்னப்பா?
ஜோசபின்?
ஜோஷ்வா?
@joe
Joe is my Nick name, my name is Mahalakshmi
 

Hema Guru

Well-Known Member
மதிய நேரம் கடையில் கரண்ட் இல்லை, உண்ட மயக்கம் வேறு, தூக்கம் கண்களை இழுத்துக் கொண்டிருந்தது, கணவர் ஏற்கனவே நித்திரைக்குச் செல்ல, வாடிக்கையாளர் ஒருவர் ஜெராக்ஸ் எடுக்கனும் என்றார்.

நான், "சார் கரண்ட் இல்லை" என்றேன்.

"அவசரம்மா கொஞ்சம் டிரை பண்ணிப் பாருமா" என்றார்.

"சார் நான் என்ன டிரை பண்ணாலும் எடுக்க முடியாது கரண்ட் இல்லை"

"ஏன்மா அவசரம்னு சொல்றேன் புரிஞ்சிக்காம, திரும்ப திரும்ப அதையே சொல்ற, எப்படியாவது ஜெராக்ஸ் எடுத்துக் கொடும்மா"

"சார் கரண்ட் இல்லாம எப்படி எடுக்க முடியும், கரண்ட் வந்தாதான் எடுக்க முடியும், இப்ப எதுவும் செய்ய முடியாது"

அவர் என்னிடம் கோபத்தில், "நான் இதை ஊருக்கு அனுப்பியே ஆகனும், கொஞ்சம் கூட டிரை பண்ணாம உட்கார்ந்த இடத்துலையே உட்கார்ந்துட்டு இருக்க"

எனக்கு கோபம் வர, அதுக்குள்ள என் கணவர் நித்திரையிலிருந்து எழுந்தவர், "யோவ் விளக்கெண்ண அதான் கரண்ட் இல்லைன்னு சொல்றா திரும்ப திரும்ப டிரை பண்ணா வந்திருமா" என்றார்.

"கரண்ட் இல்லையா ஏன்மா இதை முதல்லயே சொல்லி இருக்கலாமில்ல" சொல்லிட்டு அவர் பாட்டுக்கு போயிட்டார்.

நான், ":oops::eek::rolleyes::rolleyes::rolleyes:",

என் கணவர், ":LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:" வந்த தூக்கம் எங்க போச்சுன்னு தெரியலை.

*****

காரிலிருந்து ஒருவன் வேகமாக இறங்கி கடைக்கு வந்தான், "மேடம் என் மொபைல சார்ஜ் இல்லை ஆஃப் ஆயிட்டு, என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்தேன், அட்ரெஸ் கேட்கனும் கொஞ்சம் உங்க மொபைல் தர முடியுமா" என்றான்.

நான், "என்னிடம் மொபைலே இல்லை சார்" என்றேன்.

அவன் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, "ரொம்ப தாங்க்ஸ் மேடம்" என்று சொல்லிட்டு போய்ட்டான்.

நான் என் மகளிடம், "ஏப்ள மொபைல் இல்லைனுதான சொன்னேன், அதுக்கு ஏன் இந்த பார்வை பார்த்துட்டு போறான்"

"நீங்க ஏன்ம்மா மொபைல் இல்லைன்னு சொன்னீங்க"

"அவன் யார்னே தெரியாது, யார்க்கு கால் பண்ணுவான்னும் தெரியாது, எப்படின்னாலும் நம்ம நம்பர் அவனுங்க கிட்ட போனா சேஃப் இல்லப்ள" என்றேன்.

"ம்ம்ம்..." என்று அவளும் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, "அதுக்கு மொபைலை இப்படி கையில வச்சுகிட்டு, என்கிட்ட மொபைல் இல்லைன்னு கையை ஆட்டினா, அவன் உங்களை எப்படி பார்ப்பான்"

"ஐயோ மொபைல் என் கைலயா இருக்கு... :eek::rolleyes::rolleyes::rolleyes:ஹி ஹி ஹி"

*****

ஜெராக்ஸ்க்கு 4 & 5 பேர் நின்னுட்டு இருந்தாங்க, ஒருத்தர் மட்டும், "மேடம் எனக்கு ஒண்ணே ஒண்ணுதான்" என்றார்.

நானும் மற்றவங்கெல்லாம் நிறைய வச்சிருக்காங்களே, இவருக்கு ஒண்ணுதானேன்னு அவசரமா அவர்கிட்ட வாங்கி ஜெராக்ஸ் எடுத்து கையில் கொடுத்துட்டு, "1.50 காசு" என்றேன்.

அவர் வாங்கிட்டு முழிச்சிகிட்டே, "மேடம் இது என்ன" என்றார்.

நானும் 'ஐயோ அவசரத்துல மாத்தி எடுத்துட்டோமா' என்று "என்ன சார், என்ன ஆச்சு" என்றேன்.

"எதுக்கு ஜெராக்ஸ் எடுத்தீங்க" என்றார்.

"சார் ஜெராக்ஸ் கேட்கலையா, வேற என்ன கேட்டீங்க"

"ஜெராக்ஸ் இல்லை டப்லெட் (மாத்திரை) வேணும்"

நான், "டப்லெட்டா... :rolleyes::rolleyes:, ஒண்ணுனு சொன்னீங்க"

"ஒரு வேளைக்கு போதும்னு கேட்டேன்"

நான் திரும்ப என் கடையை சுத்திப் பார்த்தேன், நான் கடை மாத்தி வந்துட்டேனானு, நான் பார்த்ததைப் பார்த்து, கடையில் நின்னவர்கள் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க, அவங்களே, "மெடிக்கல் பக்கத்து கடைப்பா", இப்ப அவர் கடையை சுத்திப் பார்த்துவிட்டு சிரிக்க ஆரம்பிச்சிட்டார்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஜோக் படிச்சு சிரிச்சது போதாதுன்னு cmnt படிச்சு வேற சிரிச்சுக்கிட்டு இருக்கேன். tnx கரோலின்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top