சின்னஞ்சிறு இரகசியமே 1 அத்தியாயம் 6

Advertisement

Vanathi

New Member
சினிமாவிற்கு சென்ற நால்வருமே அதை ஒழுங்காகப் பார்க்கவில்லை. தமிழுக்கும் சரவணனுக்கும் அவர்களின் திட்டம் ஊத்திக் கொண்ட வருத்தம். விஜய் நித்யாவிடம் குசுகுசுவென்று பேசிக் கொண்டே இருந்தான். நித்யா மிக முக்கியமாக பாப்கார்னை ஸ்வாகா செய்து கொண்டிருந்தாள். அவள் திரையரங்கிற்கு வருவதே இதற்குத்தான்.

ஒருவழியாக படம் பார்த்து முடித்து வெளியே வந்தார்கள். சரவணனின் தற்போதைய மனைவியாக இருந்த மொபைல் அகால மரணமடைந்ததால் அவனுக்கு மற்றொரு மொபைலை திருமணம் செய்து வைக்க பெண் பார்ப்பதற்கு ஷோ ரூம் சென்றார்கள்.

" மச்சான் பொண்ணு வீட்ல இருந்து என்ன வரதட்சணை எதிர்பார்க்கற? " விஜய்.

" 4G இருக்கனும். மெமரி 64GB கு கம்மியா இருந்தா தாலி கட்ட மாட்டேன். பொண்ணு நல்லா ஃபாஸ்டா வேலை செய்யனும். அப்புறம் " சரவணன்.

" போதும்டா டேய் அடுக்கிட்டே போகாத. " நித்யா.

கடைக்குள் நுழைந்ததும் தமிழ் ஐம்பதாயிரத்திற்குள் மொபைலை காட்டச் சொல்ல, சரவணன் திடுக்கிட்டான்.

" அடியேய் எங்க அம்மா சொன்ன பட்ஜெட் பத்தாயிரம்தான்டி. " சரவணன்.

" பத்தாயிரமா... அதுக்கு ஃபோன் கவர் மட்டும்தான் வரும் பரவால்லயா? நீ இரு மச்சான் உனக்கு ஒன்னும் தெரியாது. " விஜய் சொல்ல மூவரும் வேண்டுமென்றே சற்று விலையுயர்ந்த மொபைலை தேடினார்கள்.

இரண்டு மணிநேரமாக இவன் பயன்பாட்டிற்கு மொபைல் வாங்க மற்ற மூவரும் விழுந்து விழுந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஒன் ப்ளஸ் பிராண்டில் 55000 ரூபாய்க்கு மொபைலை வாங்கி சரவணனின் கார்டை தேய்த்து பில் போட்டு அவனிடம் கொடுத்தார்கள்.

" டேய் எங்க அம்மா சாம்பார்ல முருங்கைக்காய்க்கு பதிலா என்ன வெட்டி போடப்போறாங்கடா " என்று அழுதான் சரவணன்.

" ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. பொத்திட்டு நடைய கட்டு " நித்யா.

வேறுவழி?...

நால்வரும் சரவணனின் வீட்டிற்குச் சென்றார்கள். " ஆன்டி சரவண புது ஃபோன் வாங்கிட்டான். " மூவரும் கோரசாக கத்த, சரவணனுக்கு புரிந்துவிட்டது. நமக்கு பாடை கட்ட ப்ளான் போட்டுவிட்டார்கள் என்று.

வசுமதி ஹாலுக்கு வந்து " எவ்ளோக்குடா வாங்குனீங்க? " என்றார்.

மூவரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள். யார் ஆரம்பிப்பது என்ற கேள்வி. நித்யா தொடங்கினாள்.

" ஆன்டி என்ன புள்ள வளர்த்து வச்சிருக்கீங்க? "

" ஏன்டி? ஆம்பளபுள்ளதான். " அவர் சொல்லவும் சரவணன் வாயைப் பொத்தி சிரித்தான். மூவரும் அவனை ஒரு லுக்கு விட்டார்கள். ' சிரிக்கற?... இருடி மவனே... '

" கொஞ்சம்கூட அவனுக்கு கையடக்கமே தெரியல ஆன்டி. இருவதாயிரத்துக்குள்ள முடிச்சிடுடான்னா கேக்கலயே... " தமிழ்.

" ஸ்ட்ரெயிட்டா ஒன் லேக் மொபைல் பார்க்க போயிட்டான். " விஜய்.

" அப்புறம் நாங்கதான் புடிச்சு இழுத்துட்டு வந்தோம். அப்பவும் காஸ்ட்லியாதான் வாங்குவேன்னு ஐஃபோன் வாங்க போனான் ஆன்டி. " நித்யா.

" உனக்கெல்லாம் வெண்கல கிண்ணமே அதிகம்டான்னு சொல்லி சிம்பிளா வாங்க பார்த்தா... " தமிழ்.

" முடியவே முடியாதுன்னு ஐம்பதாயிரத்துக்கு ஒன் ப்ளஸ் வாங்கியிருக்கான் ஆன்டி. " விஜய்.

ஆளாளுக்கு அளந்து விட்டு அந்த மொபைலை காட்ட, சரவணன் பீதியுடன் அன்னையைப் பார்த்தான்.

வசுமதி பெரிதாக முகத்தில் கோபத்தை காட்டாமல் மொபைலை வாங்கிப் பார்த்தார். " நல்லா ஸ்டையிலா இருக்குடா சரவணா... " என்க, சரவணனைத் தவிர மற்ற மூவரும் அதிர்ந்தார்கள்.

" என்னடா இப்படி நோ பால் ஆயிடுச்சு? " நித்யா.

" இப்ப இவன் வேற ஓவரா ஆடுவானே " விஜய். மூவரும் சரவணனைப் பார்க்க, அவன் கால் மேல் கால் போட்டு சாய்ந்து கெத்தாக அமர்ந்திருந்தான். ஆனால் வசுமதி அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவாரா என்ன?

" ராஜா... இந்த ஃபோன நான் எடுத்துக்கறேன்... நீ அம்மா ஃபோன் எடுத்துக்கடி செல்லம்... " என்றார்.

மூவரும் விழுந்து விழுந்து சிரிக்க, சரவணன் " மம்மி... "என்று கண்ணைக் கசக்கினான்.

" ஐம்பதாயிரத்துக்கா செலவு வைக்கற?... மவனே இத்தோட இந்த ஃபோன மறந்துடு "எனறுவிட்டு புது மொபைலை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

" தொப்பி தொப்பி " விஜய் உருண்டு புரண்டு சிரித்தான்.

" விஜி... புது பொண்டாட்டி ஒரே நாள்ல ஓடி போயிட்டாடா " தமிழ்.

" பாவம் நம்ம ஆளு இன்னும் ஃபர்ஸ்ட் நைட்ட கூட முடிக்கல " நித்யா.

இப்படியாக சரவணனை கடுப்பேற்றிவிட்டு மாலை மூவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்கள்.

விஜய்க்கு இந்த நாள் ஆமோகமாக அமைந்துவிட்டதில் பரம சந்தோஷம். நாளையும் நித்யாவை நண்பர்களின்றி தனியே சந்திக்க முடிவு செய்தான்.

மறுநாள் நித்யாவிற்கு அழைத்து " நித் போரடிக்குது வெளிய போலாமா... சரவணனுக்கும் தமிழுக்கும் வேல இருக்காம்... வரலைன்னு சொல்லிடுச்சிங்க " என்க, அவளும் கிளம்பி வருவதாக ஒப்புக் கொண்டாள்.

மற்ற இருவருக்கும் இதைப்பற்றி விஜய் சொல்லவில்லை. அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு செல்லாமல் வேறு ஒரு ரெஸ்டாரன்டிற்கு அழைத்துச் சென்றான். ஒரு டேபிளை தேர்வு செய்து இருவரும் அருகருகே அமர்ந்தார்கள்.

" ஏன்டா இங்க கூட்டிட்டு வந்த? " நித்யா.

" சும்மா... ட்ரை பண்ணி பார்க்கலாமேன்னு... " விஜய்.

இருவரும் மெனுவை ஆராய்ந்தார்கள்.

இவர்களுக்குப் பின்னே புர்கா அணிந்த இரு நபர்கள் இவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். வேறு யாருமில்லை. அது தமிழும் சரவணனும்தான்.

விஜய் இதுபோல ஏதாவது திருட்டுத்தனம் செய்வான் என்று கணித்துத்தான் சரவணன் அவன் மொபைலை ஹேக் செய்திருந்தான். அவனுக்கு ஹேக்கிங்கும் அத்துப்படி.

விஜய் நித்யாவை இரசித்து " இந்த ட்ரெஸ் உனக்கு அழகா இருக்குடி " என்றான்.

தமிழ் உடனே " பார்த்தியாடா... நான் எத்தன முற புது ட்ரெஸ் போட்டு எப்படி இருக்குன்னு கேட்டிருப்பேன்? ஒரு தடவயாவது நல்லா இருக்குன்னு ஒரு வார்த்த சொல்லியிருப்பானா? " என்று பொங்கினாள்.

" நல்லா இருந்தா சொல்லியிருப்பான். " சரவணன் முணுமுணுக்க,

" சார் என்ன சொன்னீங்க? " என்று அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள்.

சரவணன் " அம்மா... " என்று அலற அருகிலிருந்த சிலர் திரும்பிப் பார்த்தார்கள். விஜய் நித்யா உட்பட.

உடனே குரலை மாற்றி மீண்டும் " அம்மா... " என்று இம்முறை பெண் குரலில் கத்தினான். ( சரவணனுக்கு பெண் குரலை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். எனக்கு விஜய் டிவி புகழின் பெண் குரல் பிடிக்கும் )

தமிழ் தன் தலையில் அடித்துக் கொண்டு " சனியனே நீயே மாட்டி உட்ராத. " என்றாள்.

" நீ ஏன்டி கிள்ளுன? "

அவள் பதில் சொல்வதற்குள் வெயிட்டர் ஆர்டரை எடுத்துக்கொள்ள இவர்களிடம் வந்தார். அவசர அவசரமாக மெனுவை அலசினார்கள்.

" எனக்கு ஒரு வனில்லா ஐஸ்கிரீம். " தமிழ்.

" எனக்கு சாக்லேட் ஃப்லேவர் " சரவணன் சொல்லவும் அந்த வெயிட்டர் " என்ன உள்ள இருந்து ஆம்பள வாய்ஸ் வருது " என்று முணுமுணுத்தான்.

" ஆ... நானே ஆம்பளதான் பார்க்கறியா? " என்று முகத்திரையை விலக்கிக் காட்ட, பார்த்தவன் திடுக்கிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான்.

தமிழ் அவன் தலையிலேயே அடித்து " சும்மா இரேன்டா. இதுங்க வேற எப்ப கெளம்புமோ தெரியல. "

" வேற எங்கையாவது போயிருந்தா பரவால்ல... திங்கறதுக்குல்ல கூட்டிட்டு வந்திருக்கான்... விஜி சொத்த அழிக்காம நித்யா ஓய மாட்டா. " சரவணன் பெண் குரலில் சொல்ல, தமிழுக்கே சிரிப்பு தாங்கவில்லை.

" நித்யா யாரயாவது லவ் பண்ணியிருக்க? " விஜய் நைசாகப் போட்டு வாங்கினான்.

" ஏன் இவன் செட் பண்ணி குடுக்கப் போறானாமா? " தமிழ் பல்லைக் கடித்தாள்.

" அதான் அவனே செட் ஆயிட்டானே... " சரவணன்.

" டேய் நீ யார் பக்கம்? " தமிழ்.

" சத்தியமா உன் பக்கம்தான்டி. " சரவணன்.

" இத இப்படியே மெயின்டெயின் பண்ணு. "

இங்கே நித்யா பதில் சொன்னாள். " உங்க மூனு பேருக்குத் தெரியாம நானாவது லவ் பண்றதாவது... "

" அதான... " சரவணனும் தமிழும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

ஐஸ்க்ரீம் வந்தது. தமிழ் முகத்திரையை மேலே எடுத்துவிட்டு சாப்பிட சரவணன் ஸ்பூனை உள்ளே கொண்டு சென்று சாப்பிட்டான்.

" ஏன்டா நீ லவ் பண்றியா? " நித்யா சாதாரணமாகக் கேட்க, " இல்லல்ல " என்றான் விஜய்.

" பொய்யி பொய்யி " சரவணனும் தமிழும் வாயிலேயே அடித்துக் கொண்டார்கள்.

இருவரும் சாப்பிட்டு முடித்து பில்லும் வந்துவிட்டது. பின்னால் சாப்பிட்டுக் கொண்டிருந்த விஜய்யின் சட்டையில் உணவு சிந்திவிட, அதை சுத்தம் செய்யலாம் என்று வாஷ்ரூம் செல்ல எழுந்தான்.

சரவணனை கடந்து செல்கையில் தெரியாமல் அவன்மேல் இடித்துவிட, " சாரி சாரி சிஸ்டர் " என்றான்.

சரவணன் இதுதான் சாக்கு என ' உன்னால தானடா இவ என்ன லேடி கெட்டப் போட வச்சா... இருடி இன்னைக்கு உன்ன நசுக்கிடுறேன் ' என்று சண்டையிட எழுந்தான்.

பெண்குரலில் " இடியட் அறிவில்ல... இடிக்கறதும் இடிச்சிட்டு என்ன மேன் சிஸ்டர்? ஒதுங்கி போகத் தெரியாதா? கண்ணு நொள்ளையா? " என்று எகிற தமிழுக்கு வயிற்றைக் கலக்கியது.

' இவன் எதுக்கு தேவையில்லாம வம்புக்கு போறான் இப்போ? ' என எதுவும் சொல்ல முடியாமல் கலவரத்துடன் எழுந்து நின்றாள்.

" ஏங்க தெரியாம இடிச்சிட்டேங்க. " விஜய்.

" ஏன் இப்ப தெரிஞ்சு இடியேன்... இடிச்சிப் பாருடா டேய்... எரிமலையோட மோதிட்டடா. இன்னிக்கு உன்ன பஸ்பமாக்க நான் ஓய மாட்டேன்டா... "

" ஏய் எதுக்கு இப்ப ஓவரா எகிறுர? " விஜய்யும் கடுப்பாகிவிட்டான். நித்யா சங்கடமாகச் சுற்றி முற்றி பார்த்தாள். அனைவரின் பார்வையும் இந்த நால்வரின் மீதுதான் இருந்தது.

" பொம்பளபுள்ளய இடிச்சிட்டு போறியே வெக்கமா இல்ல? இதுக்குன்னே வருவியா? நீயெல்லாம் அக்கா தங்கச்சகயோட பொறக்கல? " சரவணன்.

" இல்ல.. என்ன இப்போ? " விஜய்.

" என்னடா இடிச்சிட்டு ஓவரா பேசுற? பொறுக்கி... இரு போலீஸ கூப்புட்றேன். " சரவணன் சொல்லவும் மூன்று வேலையாட்கள் அருகில் வந்து என்ன ஏதென்று விசாரித்தார்கள்.

தழிம் மனதில் ' ஒரு பொண்ணு கூட இவ்ளோ ஃபீல் பண்ண மாட்டா... இவன் ஏன் லேடி கெட்டப் போட்டுட்டு இவ்ளோ குதிக்கறான் ' என நினைக்க, அவள் மனசாட்சி ' பார்... முழுசா சந்திரமுகியா மாறியிருக்க உன் நண்பன் சரவணனைப் பார்... ' என்றது.

அதுவரை அமைதியாக இருந்த நித்யாவை யாரோ ஒரு பெண் விஜய்யை பொறுக்கி என்றுவிட்ட வார்த்தை சீண்டிவிட்டது. சரவணன் மேல் பாய்ந்தாள்.

விஜய்யை தள்ளிவிட்டு சரவணன் முன்பு நின்றவள் " அடிங்க உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வக்க... ன்னா ஓவரா சௌன்டு உட்ற? தட்னா தாராந்துரு மவளே... பார்க்க பழம் மாறி இருக்கான் கத்துனா திருப்பி பதில் பேச மாட்டான்னு நெனச்சிட்டியா... அவன் சட்டைய மடிச்சிட்டு எறங்கி வந்தான்... மூஞ்ச ஒடச்சிருவான் பார்த்துக்க... " என்று கத்த, அனைவரும் வாயைப் பிளந்து நின்றார்கள்.

" ஏய் என்ன படிச்ச பொண்ணு மாதிரியா பேசுற நீ? " சரவணன் நித்யாவின் வாய் தெரிந்து உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியே வீராப்பாக சண்டையிட்டான்.

நித்யா தன் உள்ளங்கையில் லேசாக துப்பி அந்த கையை சரவணனின் நெற்றில் அடித்துத் தள்ள, அதில் தடுமாறியவனை தமிழ் பிடித்து நிறுத்தினாள்.

" அப்படித்தான்டி பேசுவேன். ன்னாடி பண்ணுவ? என்ன போலீஸ கூப்புடுவியா? கூப்புட்றி... கூப்புட்றி பார்க்கலாம்... நீதான் தைரியமான ஆளாச்சே கூப்புட்றி... எவன் வந்து என்ன பண்றான்னு நானும் பார்க்கறேன். ஆளப்பாரு. சோத்த திங்கறியா இல்ல லத்திய திங்கறியா? " நித்யா.

" ஏய்ய் வாடி போடின்னு பேசாதடி... அப்பறம் நாரிடும் நாரி... " சரவணன்.

" நாரட்டும்... நீ என்னத்த நாரடிக்கறன்னு நானும் பார்க்கறேன்டி... "

விஜய் நித்யாவை மகிழ்ச்சியுடன் பார்த்தான். தனக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிடுகிறாளே என்று நினைக்க பெருமையாக இருந்தது.

விஷயம் தெரிந்து ரெஸ்டாரன்டின் மேலாளர் வேறு வந்துவிட்டார். அவர் இருவரையும் பிரிக்க முயன்றும் முடியவில்லை.

" வேண்டான்டி... தேவையில்லாம என்கிட்ட வச்சிக்காத... " சரவணன்.

" நான் ஏன்டி உன்ன வச்சிக்கனும்? எனக்கென்ன தலையெழுத்தா? என்னைப் பார்த்தா அப்படித் தெரியுதா? இல்ல என் நண்பன பார்த்தாதான் இப்படித் தெரியுதா? எரும மாடு சைஸுல இருக்க... உனக்கு தீணி வாங்கிக் கொடுத்தே உன் புருஷன் பிச்சைக்காரனாயிடுவான். மனுசன் கட்டுவானா உன்ன... " நித்யா.

" ரொம்ப பேசாதடி குள்ள கத்திரிக்கா... " சரவணன்.

" அடிங்க... யாரப்பார்த்து என்னடி சொன்ன? " நித்யா அவன் கையைப் பிடித்து முறுக்கினாள். சரவணன் வலியில் ஆண்குரலும் பெண்குரலும் கலந்து அலறினான்.

தமிழுக்கும் விஜய்க்கும் பின்னனியில் சாவு மேளம் அடிக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

" வேணான்டி... மரியாதையா கைய உட்றி. நான் வெளியத்தான் பொம்பள... உள்ளுக்குள்ள ஆம்பளடி... புர்காவ கழுட்டுன... தாங்க மாட்ட... மவளே தலைய கிள்ளி எடுத்துருவேன்... " சரவணன்.

" ஹே தைரியம் இருந்தா தொடுடி... தொட்டுப் பாருடி... மேல கைய வச்சுப்பாருடி... சரியான பொம்பளயா இருந்தா தொட்றி பார்க்கலாம். " நித்யா

" அடியே சோத்துக்கு செத்தவளே... எனக்கு இன்னொரு முகம் இருக்குடி... பார்த்த... ஆடிப்போயிருவ ஆடி... " சரவணன்.

" இந்த மூஞ்சியே பார்க்க முடியாமதானடி மூடி வச்சிருக்க... " நித்யா.

" இந்தா பாருடி... லாரி டயர்ல மாட்டுன எலிக்குஞ்சு மாதிரி இருந்துகிட்டு என் மூஞ்சிய பத்தி நீ பேசாத... "

" ஏய் பீட்சாவுக்கு சாஸ தொட்டுத் திங்கற உனக்கே இவ்ளோ இதுப்புன்னா... சாஸுக்காக பீட்சாவ வச்சு திங்கற எனக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்டி என் டொமாட்டோ " என்று சொல்லியவாறே இரு கைகளையும் சுழற்றி மீண்டும் சரவணனின் நெற்றியில் தட்டினான் நித்யா.

" ஏய்... " சரவணன்.

" ஏய்ய்... " நித்யா.

" ஏய்ய்ய்... " சரவணன்.

" ஏய்ய்ய்ய்... " நித்யா.

" ஏ.....ய் " சரவணனுக்கு பயத்தில் குரல் நடுங்கியது.

" இப்படியே பேசிட்டு இருந்தா என்னய்யா அர்த்தம்? எது பெருசுன்னு அடிச்சுக் காட்டி " என்று அங்கிருந்த எவனோ ஒருவனின் குரல் தெளிவாகக் கேட்டது.

" எந்த நாதாரி நாய்டா அது? " நித்யா மற்றவர்களைப் பார்த்துக் கத்தினாள். " தைரியம் இருந்தா மூஞ்சிக்கு முன்னாடி வந்து சொல்லுடா நாரப்பயலே " என்று டாப்ஸின் கைகளை நன்றாக மேலே இழுத்துக் கொண்டாள்.

மேலாளர் சமாதானப்படுத்த முயன்றார். " மேம் ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க. பேசி சாவ்ல் பண்ணிக்கலாம். "

" யோவ்... நீ என்ன பேசி நான் என்ன கேக்கறது? மரியாதையா தள்ளி நின்னுக்கோ... பக்கத்துல வந்த, இவளுக்கு விழ வேண்டியதெல்லாம் உனக்கு விழும் " என்ற நித்யா சரவணனின் தலையை இரண்டு கைகளாலும் பிடித்து ஆட்டினாள்.

தமிழ் இதற்கு மேல் இங்கிருந்தால் ஆபத்து என புரிந்து " ஐய்யோ நான் இல்ல " என்று அங்கிருந்து ஓடினாள்.

ஓடுபவளைப் பார்த்து " அடியே நில்லுடி " என்ற சரவணன் " போ...டி " என்று நித்யாவை தள்ளிவிட்டு அவள் பின்னே ஓடினான்.

புர்காவை போட்டுக்கொண்டு அவன் உயரத்திற்கு ஓட முடியவில்லை. அதை இரண்டு கைகளாலும் நன்றாக மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு காஞ்சனா பட லாரன்ஸ் போல வேகமாக ஓடினான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top