சித்திரையில் பிறந்த சித்திரமே 4

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சித்திரையில் பிறந்த சித்திரமே 4
அவளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘பெண்மையை போற்றுவோம்”
அவள் பேச தொடங்கினால்
“அன்னை தமிழே
என் அழகிய தமிழே
ஆக்கம் தரும் தமிழே
இனிமையான தமிழே
இன்பம் தரும் தமிழே
ஈகை குணம் கொண்ட தமிழே
உண்மை தமிழே
உரக்கச் சொல்லும் தமிழே
ஊக்கம் தரும் தமிழே
எங்கும் நிறைந்த தமிழே
எதிலும் நிறைந்த தமிழே
ஏற்றம் தரும் தமிழே
ஐயம் இன்றி நான் இங்கு பேச
ஒலி படைத்த சொற்களை அள்ளி தந்து
ஓவியம் அழகாய் என் உரை மாற உதவிய
என் தாய் மொழியே தங்க தமிழே
உன் மலர் தாழ் பணிந்து என் உரைக்குள் செல்கிறேன்
அவையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் இந்த அடையவளின்
அன்பான வணக்கங்கள்
என கூறிய மறு நொடி பலத்த கரவொலிகள்’,
தொடர்ந்தால்
எனக்கு இங்கு பேச கொடுக்கப்பட்டுள்ள தலைப்போ
“பெண்மையை போற்றுவோம்”
“மங்கையாராய் பிறப்பதற்க்கே நல் மாதவம் செய்திடல்
வேண்டும்மம்மா என்றார் கவிமணி’”
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதனினும் அரிது நெல் கள்ளி கோழிக்குழம்பு இவை வாய் தவிர்த்து
பெண் பிறவி அடைதல் அரிது “
என்றார் மற்றோர் கவிஞர்.
“ஆவதும் பெண்ணாளே,ஆக்குவதும் பெண்ணவளே,காப்பதும் பெண்ணவளே,
கரை சேர்ப்பதும் பெண்ணவளே “
அத்தகு பெண்மையை போற்றி புகழ்வதற்க்கு கிடைத்த பொன்னான
வாய்ப்பல்லவா இது.
“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்க்கு என்று கூரிய கயவர்களை எல்லாம் எதிர்த்து போராடி இன்று பெண்கள் கல்வி கற்று பல்வேறு
துறைகளில் சாதித்து இருக்கிறார்கள் என்றால் அத்தகு பெண்மையை போற்றி புகழ்வதில் நான் பெரு மகிழ்வு அடைகிறேன்”
கல்பனா சாவ்லாவில் தொடங்கி பாக்கிஸ்தான் சிறுமி மலாலா வரை
பெண்மையை போற்றி புகழ்வதற்க்கு ஒரு எல்லை தான் உண்டோ ?
“தாயிற் சிறந்த கோவிலுமில்லை”
ஆம் இது உண்மை தானே அதனால் தானே இன்று கரை புரண்டு ஓடும்
காவிரி நதியை கூட காவிரி தாயே உன் மலர் பணிகிறோம் என தமிழகமே தலை வணங்கி நிற்கிறது.
இதை விட பெண்மையை போற்றுவதற்க்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு தான் வேண்டுமா ?
சரி இவை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்
முதலில் இந்த சமுதாயம் பெண்களை இழிவு படுத்தாமல் இருக்கிறதா என்று பார்ப்போம்.
“ இன்றைய செய்தி தாளின் முதல் பக்கத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதித்து விட்ட செய்தி வருவது முக்கியம் அல்ல,
என்று அதே செய்தி தாளின் இறுதி பக்கத்தில் பெண்கள் இழிவு படுத்த பட்டார்கள் என்ற செய்தி வராமல் இருக்கிறதோ ,அன்று தான் இந்த சமுதயாம் பெண்களுக்கு உண்டான முழு உரிமையை கொடுத்திருக்கிறது என்று அர்த்தம்.
அன்று தான் இந்த சமுதாயம் பெண்மையை போற்றுகிறது என்று அர்த்தம்.
இப்பாரததில் பிறந்துள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் இதை நான் கூறுகிறேன்.
“ பெண்ணே பெண்ணாய் பிறந்த பின் மண்னாய் இருப்பதில் மகிமை என்ன
உன்ன்னல் முடிந்த வரை உலகத்தை திருத்து
கற்பு வழியில் நின்று காரியத்தை நடத்து
இரும்பு கவசம் அணிந்து கொள்வதால்
இதயத்து மெண்மை இல்லாமல் போய் விடுவதில்லை
பாரதியை படி
புதுமையை சாதிக்க புறப்பட்டு வா
குட்ட குட்ட குனிந்தது போதும்
நீ குனிந்தனாலே குட்டும் உண்டு
எட்டு எட்டு எட்டும் வரை எட்டு
பெண்ணே
துணிவு வில்லில் நாணேற்று
கேள்வி கணைகளை சரமாரியாக செலுத்து
சந்தேகச் சுமைகளை சிதரடி
அவற்றின் விழிகளை ஊடுருவி பார்
அவை மெல்ல சரிந்து விழுவது தெரியும்
பின் தொடரும் உன் வாழ்வில் புதிய தீர்வு “
பெண்களே நம் ஐயன் பாரதி சொன்ன வழியில்\
“ நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையுடன் இருங்கள் ‘
அப்போது தான் இந்த சமுதாயம் பெண்களை கீழே போட்டு மிதிப்பதை
நிறுத்தி போற்றி புகழும்.
தன் கணவன் கள்வன் அல்ல என்பதை நிருபித்து தன் கனல் கண்களால் மதுரையையெ சுட்டெரித்த கண்ணகியும் பெண் தான்,
காலனிடம் போராடி தன் கணவனை உயிருடன் மீட்டு வந்த சாவித்திரியும்
பெண் தான் .அவர்களின் வழி வந்தவர்கள் நாம் எனவே பெண்மையை போற்றி புகழ்வோம்.
இறுதியாக ஒன்றை மட்டும் கூறுகிறேன்

“ பெண்களை போதை பொருட்களாக மட்டுமே பார்க்கும் சில
ஆண்களே, பெண்களை போதை பொருட்களாக பார்க்கும் உங்கள்
எண்ணத்தை அடியோடு பிடுங்கி எறியுங்கள்,இல்லையேல் விஷமருந்தி செத்து மடியுங்கள் “
“ தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவமேய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போல
பெண்ணாகிய நானும் இந்த சமுதாயத்தில் வீழ்வேன் என்று நினைத்தாயோ”
என அவள் பேசி முடித்த அடுத்த நொடி அரங்கமே அதிர்ந்து
ஒலித்து கரவொலிகள்’
லெட்சுமி நன்றி கூறி விடை பெற “இவளை
பெற்றவர்கள் செய்த புண்ணியத்தை எண்ணி மற்றவர் வியந்து நின்றனர்”
அவள் பேசி முடித்து மேடை விட்டு இறங்கி செல்ல அவளையே பார்த்து
கொண்டிருந்தவர்கள் எத்தனை பேர்
அவளின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அவளின் பேச்சின் தாக்கத்திலிருந்து
வெளிவராதோர் எத்தனை பேர் என எண்ணினால் இன்றைய எபி தாங்காது
மக்களே
அவளுக்கே முதல் பரிசும் அறிவிக்கபட
“ தகவல் கிடைத்த தந்தை சேகருக்குத் தான் எத்தனை சந்தோசம்
செல்ல மகள் அவள் வெற்றி கண்ட சந்தோசத்தை காண்பவர் அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தார்”
தந்தையின் சந்தோசத்திற்க்காவே இன்னும் ஆயிரம் வெற்றிகள் கூட அடையலாம் என நினைத்தது அன்பு மகளின் அப்ப பாசம் “
பாவம் யாருக்கு தெரியும் விதி இவர்கள் வாழ்வில் செய்யபோகும் சதியை ?
 
Last edited:

Kalai saran

Well-Known Member
செய்தி தாளின் இறுதி பக்கத்தில் பெண்கள் இழிவு படுத்த பட்டார்கள்
என்ற செய்தி வராமல் இருக்கிறதோ...... அன்று தான் இந்த சமுதாயம் பெண்களுக்கான முழு உரிமையை கொடுக்கிறது என்று அர்த்தம்.......
Well said.... :):):)
(y)(y)(y)(y)
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
செய்தி தாளின் இறுதி பக்கத்தில் பெண்கள் இழிவு படுத்த பட்டார்கள்
என்ற செய்தி வராமல் இருக்கிறதோ...... அன்று தான் இந்த சமுதாயம் பெண்களுக்கான முழு உரிமையை கொடுக்கிறது என்று அர்த்தம்.......
Well said.... :):):)
(y)(y)(y)(y)
:love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top