சித்திரையில் பிறந்த சித்திரமே-24

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"அன்று நிவேதாவின் வளைக்காப்பு முடிந்து கீர்த்தியும்-அர்ஜூனும் அமெரிக்கா கிளம்புவதாக இருந்தது."

"அதில் அக்கா தங்கை மூவருக்கும் சிறு வருத்தம்"

"எல்லோரையும் நிவேதாவின் வளைக்காப்பிற்க்கு அனுப்பிவிட்டு உதயா கமிஷனர் அலுவலகம் சென்று இருந்தான்"

"அங்கே அவனுக்கு திருமங்கலத்துக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் கிடைத்த செய்தி காத்துகொண்டிருந்தது"

"அவனுக்கு அதை கேட்டதும் ஐயோ என்றானது"

"ஏனேனில் வேணி,மகேஸ்வரன் ,லெட்சுமி மூவரும் இப்பொழுது இன்னும் அதிகமாய் ஒருவர் மேல் ஒருவர் பாசம் வைத்திருந்தனர்"

"அதில் உதயா மட்டும் அவர்களின் எதிர்கட்சி,காண்பவர்கள் யாரும் அவர்களை மாமியார்,மருமகள்,மாமனார் என்றே சொல்ல முடியாத அளவிற்க்கு அதீத அன்பு,பலர் கேட்டும் விட்டனர்,நீங்கள் மூவரும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளா என"

"இந்நிலையில் லெட்சுமியை வெளியூர் அழைத்து செல்ல வாய்ப்புகள் கம்மி,அதிலும் அவள் காலின் நிலையை கருத்தில் கொள்ளும் போது வாய்ப்பில்லை ராஜா எனும் நிலைதான்"

"டிரான்ஸ்பர் ஆர்டரை கையில் வாங்கி கொண்டு நிவியின் வளைகாப்பிற்க்கு சென்றான்"

"அங்கு அவனுடைய கருவா டார்லிங் சொந்தங்கள் புடை சூழ பேசி சிரித்து கொண்டிருந்தாள்"

"அருகில் அவளின் அம்மா மற்றும் தம்பியும் இணைந்து பேசி கொண்டிருந்தனர்"

"இவன் வருவதை கண்டவுடன் இருவரும் எழுந்து கொள்ள முற்பட,அவர்களை அமரும் படி கூறி விட்டு அவனும் தன் மனைவி அருகில் வந்து அமர்ந்தான்."

"இயல்பான நல விசாரிப்புகளுக்கு பிறகு எல்லாரும் வளையல் போட போக,தனிமையில் கணவனிடம் "

"என்னாச்சு மாமா உங்க முகமே சரியில்லை ஏதாவது பிரச்சனையா" என்றாள் லெட்சுமி.

"ஒன்னும் இல்லடி ,வா போகலாம்"

"இல்ல ஏதோ இருக்கு"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல ,உனக்கு எப்போ இப்படி வளைகாப்பு பண்ணுறதுனு யோசிக்கிறேன்" என்றான்.

"வெட்கி சிவந்த முகத்துடன் "போங்க மாமா" என்றாள்.

"வளைகாப்பில் கல்யாண புடவையில் அழகாய் ஜொலித்து கொண்டிருந்தாள் நிவேதா,நிரஞ்சனுக்கு தான் பார்வை மனைவின் புறம் இருந்து திருப்புவது சிரமாக இருந்தது."

"ஒவ்வொருவராக வளையல் போட்டு முடிக்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு பேசி கொண்டிருந்தனர்."

"கீர்த்தி ஏர்போர்ட் செல்ல ரெடியாகி வர,லெட்சுமிக்கும் ,நிவேதாவிற்கும் கண்கள் கலங்குவதை கட்டுபடுத்த முடியவில்லை."

"என்ன தான் வளர்ந்து விட்ட போதும் பாசம் கண்கள் பனித்துதான் விடுகின்றன பல நேரத்தில்."

"எல்லோரிடமும் விடை பெற்று கீர்த்தியும்-அர்ஜூனும் அமெரிக்கா பறந்தனர்"

"எல்லோரும் வீட்டிற்க்கு கிளம்ப தயாராக ,மெல்ல உதயாவின் பெற்றொரிடம் வந்த லெட்சுமியின் அம்மா பத்ரா"

"அண்ணி ஒரு வாரம் லெட்சுமி எங்க வீட்டுல வந்து இருக்கட்டுமா அண்ணி "என கேட்க

"வேணியும் ,மகேஸ்வரனும் மறுத்து விட்டனர்."

"மாறாக அங்கு வந்து மகளுடன் தங்கும் படி அழைத்தனர்.அது முறையல்ல என்று மறுத்து விட்டார் பத்ரா"

"ஆனாலும் அவர் மனதில் நிறைவு தான் பெற்ற பிள்ளையை போல் பார்த்து கொள்ளும் மாமனார்,மாமியார் எத்தனை பேருக்கு கிடைக்கும்."


"எல்லோரிடமும் விடை பெற்று வீடு திரும்பினர்."

"வீட்டிற்க்கு வந்து எல்லோரும் ஹாலில் உள்ள சோபாவில் அமர அதற்காகவே காத்திருந்தவன் போல் பேச தொடங்கினான் உதயா"

'லேசகா தொண்டையை செருமி கொண்டு "எனக்கு டிரான்ஸ்பர் ஆகிடுச்சு திருமங்கலந்துக்கு "எனக் கூற

"ஹம் சரி நீ போயிட்டு வா உதயா" என வேணி கூற

"பல்லை கடித்தவன் "அம்மா" எனக் கத்தி கொண்டே

"நான் என் பொண்டாட்டியையும் தான் கூட்டிட்டு போகபோறேன் ,அங்க குவார்ட்டஸ் கொடுத்திருக்காங்க" எனக் கூற

"யாரை கேட்டு நீ லெட்சுமியை கூட்டிட்டு போக போறே,அவ காலே இன்னும் சரியாகலை அவ படிக்க வேற செய்யனும் இதுல அங்க வந்து அவ எப்படி தனியா வீட்டை பார்த்துப்பா" என மகேஸ்வரன் கேட்க


"இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த லெட்சுமி மறந்தும் வாய் திறக்கவில்லை கணவனுக்காக பேசுவதா,இல்லை மாமனார் ,மாமியாருக்காகவா என குழம்பி தவித்திருந்தாள்"

"இவளின் அமைதியை கண்ட உதயா கொஞ்சமாவது வாயை திறந்து நான் என் புருசனோட தான் இருப்பேன்னு சொல்லுறாளா பாரு கேடி என மனதிற்குள் அவளுக்கு வசைபாடிக்கொண்டிருந்தான்."

"அப்போ எல்லாரும் அங்கேயே போயிடுவோம்" என உதயா கூற

"தோப்பு எல்லாத்தையும் யாருடா பார்த்துப்பாங்க,நீ மட்டும் போ எங்க மருமக எங்கேயும் வர மாட்டா.நீ வேனும்னா வார வாரம் இங்க வா"என வேணி கோபமாக கூறி விட்டு நிற்காமல் சென்றுவிட்டார்,மகேஸ்வருனும் அவருடன் சென்று விட்டார்.


"அவர்கள் இருவரும் சென்று விட உதயாவும் அவனுடய மாடிறைக்கு சென்றுவிட்டான்."

"எல்லோரும் சென்று விட ஹாலில் இருந்த லெட்சுமி வலிக்கும் கால்களோடு சோபாவில் இருந்து எழ முற்பட,காலை ஊன்றியதால் ஏற்பட்ட வலியில் முகம் சுழிக்க அடுத்த அடி எடுத்து வைக்கும் முன் அவளை கைகளில் அள்ளி இருந்தான் அவள் கண்வன்"

"தூக்கி சென்று மாடியறை கட்டிலில் விட்டவன் அவளிடம் ஒன்றுமே பேசவில்லை."


"அவளின் கால்களுக்கு மருந்து தடவியவன்,எதுவுமே பேசாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்."

"வெளியே வந்தவன் எதுவும் பேசாமல் கட்டிலின் மறுசென்று படுக்க அவனை பின்னிருந்து அணைத்து கொண்டாள் அவன் மனைவி"


"காக்கிசட்டை ஏன் கடுப்பாயிருக்காரு" என லெட்சுமி கேட்க

"காரணம் தெரிஞ்சிக்கிட்டே தெரியாதமாதிரி கேட்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியாதுடி" என உதயா பதில் சொல்ல

"அத்தை மாமா பாவம்ல ,அவங்க எப்படி மாமா தனியா இருப்பாங்க"

"அப்ப புருஷன் பாவம் இல்ல"

"மாமா பிளிஸ்"


"என்ன பிளிஸ் ஏன் டி என்னடி பண்ண அவங்கள உன்னை விட்டு பிரியனும்னா இவ்ளோ வருத்தபடுறாங்க"

"ஹம் உண்மையான பாசம் ஒரு போதும் தோற்காது மாமா"


"அப்ப என் பாசம் உண்மையில்ல அப்படித்தான"


"மாமா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க,என்னால மட்டும் உங்கள விட்டு தனியா இருக்க முடியுமா என்ன""அப்ப எங்கூட வந்திரு"

".........................."

"முடியாது இல்ல,நீ உங்க அத்தை மாமாகூடவே இரு"எனக் கூறி கண்களை மூடிக்கொண்டான்.

"இனி எப்படி பேசினாலும் அவன் சமாதானம் ஆகப்போவதில்லை என்பதை அறிந்தவளும் எதுவும் பேசாமல் படுத்து கொண்டாள்."


சித்திரம் சிந்தும்
 
Last edited:
#4
அச்சோ போலீஸ்காருக்கு டிரான்ஸ்பரா?
உதயா கூட லெட்சுமி போகலையா?
So சேடு So சேடு, உதயா தம்பிரி
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Sponsored

New Episodes