சித்திரையில் பிறந்த சித்திரமே-21

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"உதயா சென்றவுடன் உள்ளே வந்த வேணி மருமகள் உறங்குவதை பார்த்துவிட்டு அவரும் சென்று விட்டார்"

"சிறிது நேரம் கழித்து கண்விழித்தவள் ,மீண்டும் அரட்டையில் இறங்கி விட்டால்"

"வேணியும்,மகேஸ்வரனும் எவ்வளவு சொல்லியும் உதயா வருவதற்க்கு முன் சாப்பிட மறுத்து விட்டாள்"

"இவர்கள் இருவரை மட்டும் சாப்பிட வைத்துவிட்டாள்"

"இரவு எட்டு மணி போல் உதயா வந்தான்"

"வந்தவன் பெற்றோர்களை பார்த்து சாப்பிட்டீர்களா எனக் கேட்டவன்,அடுத்ததாக மனைவிடம் "

"சாப்பிட்டியா டிமாத்திரை போட்டியா" எனக் கேட்க

"இன்னும் சாப்பிடலை " என பதில் சொல்ல

"அவன் முறைத்த முறைப்பில் தலை தானாக குனிந்து கொண்டாள்"

"அம்மா உங்ககிட்ட சொல்லிட்டு தான போனேன்,அவள சாப்பிட சொல்லி மாத்திரை போட சொல்லி,மாமியாரும்,மருமளும் சொல்லுற பேச்சைய கேட்க கூடாதுனு இருப்பீங்களா,உங்ககிட்ட போயி பேசுறேன் பாருங்க என்ன சொல்லனும் " என கூறி கோவமாக அறைக்கு சென்றான்.


" ஃப்ரஷ் ஆகி வந்தவன் முன்னிலையில் காபியுடன் அவன் மனைவி நின்று கொண்டிருந்தாள்"

"அவளை முறைத்தவன் "

"ஏன் டி சாப்பிட்டு மாத்திரை போட சொன்னா காபி போட்டு வந்திருக்க"

"இப்ப எதுக்கு இப்படி கத்துறீங்க,பொண்டாட்டி புருசன் சாப்பிட்ட அப்பறம் தான் சாப்பிடனும் தெரியுமா"

"ஹம் பொண்டாட்டி காய்ச்சல்ல புருசனும் பாதி வாங்கிக்க முடியாது தெரியுமா"

"சாரி மாமா வாங்க போய் சாப்பிடாலாம்"

அப்போதும் முறைத்து கொண்டே

"வா போலாம் " என்றவன்

"இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை"

"அனைவரும் தூங்க செல்ல.அத்தை மாமாவுக்கு "குட்நைட் " சொல்லி விடை பெற்றவள்,அவர்களின் அறைக்கு சென்றாள்"

"அங்கே கேஸ் பைலை உதயா படித்து கொண்டிருந்தான்ம்,இவள் வந்துவுடன் போட வேண்டிய மாத்திரைகளை எடுத்து கொடுத்தவனிடம் அதை வாங்காமல் நின்றவள்"

"நீங்க என் கூட பேசாம நான் மாத்திரை போட மாட்டேன் மாமா" என கூற

"இப்போ ஒழுங்கா மாத்திரையை போடுடி ,இல்ல அடி வாங்குவ"

"ஸாரி மாமா"

"அப்ப இனிமே இப்படி லூசு தனமா பண்ண மாட்டேனு சொல்லு"

"ஹம் சத்தியமா பண்ண மாட்டேன் மாமா"

"அவளை இழுத்து மடியில் அமர்த்தி மாத்திரை கொடுத்தான்.அவளும் போட்டு விட்டு அமைதியாக அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்"

"என்னடி ரொம்ப டயர்டா இருக்கா"

"ஹம் இல்ல ,நல்லா தான் இருக்கேன்"

"ஆமா நீ பச்சகுத்தினத நான் பார்க்கவேயில்ல எப்படி என் பேர பச்சகுத்திருக்க காட்டுடி"

"அது வந்து மாமா அது அது"

"என்னடி வந்து போயின்னு,ஒழுங்கா காட்டுடி எந்த கையில குத்திருக்க"என கையை பார்க்க

"கையில்ல இல்ல மாமா"

"அப்பறம் எங்கடி"

"அவள் வார்த்தைகள் அற்று தன் நெஞ்சை காட்ட"

அவன் பார்வையின் உஷ்ணம் கூடியது

"இல்ல மாமா லேடீஸ்கிட்ட தான் குத்திக்கிட்டேன்,ரூம்குள்ள"

"நான் பார்க்கனும் டி இப்ப"

"மாமா"

"ஒரே உறுவலில் சேலை அவன் கையில் இருந்தது"

"வெட்கத்துடன் அவள் விலகி செல்ல,இவன் விட்டால் தானே"

"இழுத்து வைத்து பார்த்துவிட்டான் ,உதயா என்ற தன் பெயரை தன் இதழ்களால் பச்சை குத்தியதற்க்கு ஒத்தடம் கொடுக்க,பெண்ணவள் நிலை தான் மோசமானது"

"அவளது முகத்தை நிமிர்த்தியவன்,அவள் நெற்றியில் முத்தமிட்டு"

"நீ இப்படியெல்லாம் பண்ணா தான் உன் காதலை நான் புரிஞ்சிப்பேன்னு இல்ல,உன் இந்த மீன் குட்டி கண்ணே எனக்கு காட்டிகொடுத்திடும் சரியா,அதுக்காக இப்படியெல்லாம் லூசு மாதிரி பண்ணாதடி,என்னால முடியலை"

"ஸாரி மாமா,இனிமே இப்படி பண்ணமாட்டேன் சாரி"

"ஹம் சரி,அது என்னடி என் பேர நெஞ்சுல பச்சகுத்திருக்க"

"என் மனசுக்குள்ளயும் ,வெளியையும் நீங்க தான் இருக்கனும் அதான்"

"கொல்றடி கருவா டார்லிங்" என அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் அவளை களவாட ஆரம்பித்தான்.

"இவளும் தாராளமாக தன்னை கொடுத்தாள் தன்னவனிடம்"

"காலையில் கண் விழித்தவள் தன்னவனை விட்டு விலகி சென்று குளித்து கீழே சென்றாள்"

"அனைவருக்கும் காபி கலந்து கொடுத்து தன்னவனுக்கும் கலந்து கொண்டு மேலே சென்றாள்"

"கண்விழித்தவன் காபியை வாங்கிகொண்டு,வெளியே செல்ல போனவனின் கைபிடித்து நிப்பாட்டியவன்,அவளை தள்ளி கொண்டு பால்கனி சென்றவன்,பால்கனி கதவருகே சென்று அவளை பின்னிருந்து அணைத்து தாடையை அவள் தோளில் பதித்து ஒரு கையை அவள் இடையில் தவழ விட்டு காபியை ரசித்து குடித்து கொண்டிருந்தான்"


"மாமா விடுங்க ,பிளிஸ்"

"இருடி காபி குடிக்க விடுடி"

"காக்கி சட்டை காபி சும்மா குடிச்சா பரவாயில்லை,கை வைச்சு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க மாமா"

"ஹம் ரசிக்கிறேன்"

"எதை"

"எல்லாத்தையும் தான்"

"போங்க மாமா,போலீஸா நீங்கயெல்லாம் இப்படி பேசுறீங்க"


"ஏய் காவல் துறை கடமை தவற கூடாதுடி எல்லாத்திலையும்"

"காக்கிசட்டை நீங்க கடமை தவறாதவரு தான் என்ன இப்போ விடுங்க"

"அதென்னடி காக்கிசட்டை"

"ஐயோ உளறிட்டோமே,காக்கிசட்டை கருப்பசாமியா மாறிருவாரே" என மனதிற்க்குள் நினைத்தவள்

"அது ஒன்னும் இல்ல மாமா ,சும்மா தான்" என கூறி கொண்டே தப்பித்து ஓடிவிட்டாள்"

"சிரித்து கொண்டே அவள் செல்வதை பார்த்துகொண்டிருந்தான்"

"இப்படியே ஒரு மாதம் சென்று விட்டிருந்தது"

"இப்பொழுது லெட்சுமி தங்கள் தோப்பை மிக சிறப்பாக நிர்வாகம் பண்ண கற்றிருந்தாள்,அது மட்டுமல்ல இவள் பொறுப்பேற்ற பின் சில மாற்றங்கள் கொண்டு வந்து லாபத்தையும் பெருக்கியிருந்தாள்"

"வேணிக்கும் ,மகேஸ்வரனுக்கும் தங்கக் மருமகளை நினைத்து எப்போதும் பெருமை தான்"

"அவள் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு இவர்களின் தோப்பையும் பார்த்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்"

"அதுமட்டுமில்லை ,தங்களுக்கு மகளாய் அவள் இருப்பதாலும் தான் அந்த மகிழ்ச்சி"

"அன்று விடியல் அழகாய் விடிய நடக்க போவது ஏதும் அறியாமல்,அனைவரும் சந்தோசமாகவே இருந்தனர்"

"உதயா ஸ்டேசனுக்கு கிளம்பி கொண்டிருந்தவன்,மேலே இருந்து கத்தி கொண்டிருந்தான்"

"லெட்சு நேத்து கொண்டு வந்த கேஸ் பைலை எங்க வைச்ச"

"அந்த டேரஸிங் டேபிள் மேல தாங்க இருக்கு,பாருங்க"

"இங்க காணோம், நீயே வந்து தேடி கொடுடி,சீக்கிரம் லேட்டாகுது"

"ஹம் இதோ வரேன்"

"உள்ளே வந்தவளை கதவை தாளிட்டு பின்னிருந்து அணைத்தவன் அவள் சூடி இருந்த மல்லிகை பூவை வாசம் பிடித்தவன் அவளை தன் உயரத்திற்க்கு தூக்கினான்"

"செம வாசமா இருக்கடி ,கருவா டார்லிங்"

"இதுக்கு தான் மேல கூப்பிட்டீங்களா"

"பொண்டாட்டி கொஞ்சிறது தப்பாடி"

"மிஸ்டர் காக்கிசட்டைக்கு லேட்டாகலையா"

"இந்த காக்கிசட்டைய நீ சொல்லும் போது கிக்கா இருக்குடி"என கூறி இதழை சிறை செய்தான்.

"மூச்சுக்கு அவள் தவிக்கவும் அவளை விட்டவன்,தன் மேலே சாய்த்து கொண்டு முதுகை தடவி கொடுத்து கொண்டே"

"டிரைவர் கூட தோப்பிக்கு போயிட்டு எனக்கு கால் பண்ணு ,சரியா"

"ஹம் சரி மாமா"

"இவன் சாப்பிட்டு ஸ்டேசன் செல்ல,இவளும் டிரைவருடன் தோப்பிற்க்கு கிளம்பினாள்"

"தோப்பில் சென்று இறங்கியவள் அங்கு யாரும் வேலைக்கு வரவில்லையே என யோசித்து கொண்டேயிருக்க"

"அந்நேரம் பார்த்து எங்கிருந்தோ வந்த சிலர்,அவளை பார்த்து ,

"உன் புருசன் எங்க தம்பிக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டு அவன் மேல ஒரு பொண்ணை விட்டே ஆசிட் அடிக்க வைச்சிட்டு உன் கூட சந்தோசமா வாழ்வானா,அது எப்படினு நாங்களும் பார்க்கிறோம் டி" என அவளை அடிக்க வர

இவளும் ஓட தொடங்கினால்,அவர்களும் விரட்ட இவள் தோப்பை விட்டு ஒத்தையடி பாதையினில் ஓட தொடங்கினால்,
மனம் முழுதும் தன் மாமா வந்து விட மாட்டானா என்பதே"


சித்திரம் சிந்தும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே உதயாவின்
எதிரிகள் லெட்சுமியை
கார்னர் பண்ணிட்டாங்களே
லெட்சுமி தப்பிச்சுடுவாளா?
காப்பாற்ற உதயா வந்துடுவான்னு
நினைக்கிறேன், லட்சுமி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top