சாரல் 5

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
#1
Sorry பா டைமே கிடைக்கல. தூங்கியே பல நாள் ஆச்சு. என் பையன் நயிட் எல்லாம் சரியா தூங்குறது இல்ல. பகலிலும் தூங்க விட மாட்டேங்குறான். அவனுக்கு வயிறு வலி காது வலினு அழுதுகிட்டே இருக்கான் பாதி நேரம். அதான் late ஆயிடுச்சு. Please adjust கரோ.

சாரல் 5

தனது பாட்டியை கண்டதும் அது வரை அலட்சியமாக நின்று கொண்டு இருந்த தன்யா, “ஓ”வென அழுக ஆரம்பிக்க, தனது பேத்தியின் அழுகையை கண்டதும் சகலமும் மறந்து போனது சாரதாவிற்கு. ஏதோ தனது செல்ல சீமாட்டியை மருமகள் ஏதோ செய்தது போல வேகமாக வந்தவர், என்ன நடந்தது என்று கேட்டு அறிய முற்படவில்லை. மாறாக “ஏய்! என்ன பண்ண அவள? தன்யா கண்ணு என்னமா ஆச்சு? ஏன் இப்படி அழுகுற?” என அதிகாரமான குரலில் மருமகளிடம் ஆரம்பித்து ஆதுரமாக பேத்தியிடம் முடித்தார்.

தன்யாவோ மேலும் அழுதவாறு தனது பாட்டியை பார்க்க, அவரோ அவளது கண்ணீரை காண பொறுக்காமல் அவளை தனது வயிற்றோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, மருமகளிடம் பார்வையை செலுத்த, “இல்லை! அவ…. ராகுல் அஹ் தள்ளி விட்டுட்டா! அதான்…. அவள…. !” என்று பிருந்தா முடிக்கக்கூட இல்லை. இவளது அழுகை சத்தம் அதிகமானது.

உடனே அவரது கவனம் இவளிடம் திரும்ப, “என் கண்ணுல அழக்கூடாது! ஏம்மா இப்படி அழுகுறீங்க ? பாட்டி நான் இருக்கேன்ல நீ அழாத டா ராஜாத்தி!” என விதம் விதமாக பேத்தியை செல்லம் கொஞ்ச, அவளது அழுகையின் ஸ்வரம் சிறிது கூட, “சரிடா என் செல்லம் அழாதீங்க!” என பேத்தியை சமாதானம் செய்ய முயல அவளது அழுகை சிறிது குறைந்தார் போல இருந்தது.

அவளது அழுகை சற்று மட்டு பட்டவுடன் இவர் மறுபடியும் தனது விசாரணையை மருமகளிடம் துவங்க, அவளது பார்வை முழுவதும் மகளிடமே. “சொல்லு! இவள என்ன பண்ணுன யென் அவ அழுகுறா? அவளை எதுவும் சொன்னியா? இல்ல அடிச்சியா?” அவராகவே ஏதோ யூகிக்க, “இல்ல அத்தை! நான் அவளை அடிக்கலாம் இல்லை அவ தான் ராகுல் அஹ் கீழ தள்ளி விட்டுட்டா!” என அவள் தனது மாமியாரிடம் விளக்கம் அளித்து கொண்டு இருக்கும் போதே அதுவரை தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்தவள் முகத்தில் இப்போது லேசாக கலவரம்.

“அப்படியா! சரி சொல்லு அவ எதுக்கு இவனை தள்ளி விட போறா என குதறக்கமாக அவர் மறுபடியும் வினவ பிருந்தா வாயை திறக்கும் போது இவள் எங்கே தனது குட்டு வெளி பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மறுபடியும் தனது ஸ்பீக்கரை அலற விட, அதில் சாரதாவின் கவனம் மறுபடியும் பேத்தியின் இடத்தில்.

தனது மகள் செய்யும் அட்டகாசத்தை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தாள் பிருந்தா. அவளால் வேறு என்ன செய்ய முடியும். ஒரு தாயாய் அவள் தனது மகளை கூட கண்டிக்க முடிவதில்லை.

“என் கண்ணுல அழாதமா பாட்டி நான் இருக்கேன்ல நான் இருக்க வரை நீ எதுக்கும் கண் கலங்க கூடாது!” என சாரதா என்ன நடந்தது என்று கூட அறியாமல் பேத்தியை சமாதானம் செய்துக்கொண்டு இருந்தார். தெரிந்து இருந்தால்!!!!(ஒன்னும் நடந்து இருக்காது)

தனது பாட்டி துணைக்கு இருக்கும் தைரியத்திலும், அவரை மீறி தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற குருட்டு நம்பிக்கையிலும் அவள் தனது தாயை கண்டு யாரும் அறியா வண்ணம் ஒரு கேலி புன்னகையை சிந்த, பிருந்தாவோ அவளை அழுத்தமாக பார்க்க, அவள் தனது பாட்டியின் வயிற்றில் முகம் புதைத்து கொண்டே, “அம்மா என்ன முறைக்குறாங்க பாட்டி !” என மறுபடியும் அழுவது போல் விசும்ப, படக்கென்று தனது மருமகளை நிமிர்ந்து பார்த்தவர், “நான் இருக்கும் போதே நீ இவளை இப்படி முறைக்குற! யாரும் இல்லாத நேரம் நீ என்ன செஞ்சியோ?” என எதிர் இருப்பவளின் வார்த்தைகளை செவி மடுக்காமல் தன் பாட்டுக்கு தீர்ப்பெழுத்தினார்.

ராகுலின் அழுகையோ தேம்பலாக மாறி இருக்க, அவனும் தனது தமக்கையின் அட்டகாசங்களை தான் கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான். அதில் அவனது வலி கூட பின்னே போய் விட்டது. “இன்னும் என்ன மசமச னு இங்கேயே நின்னுகிட்டு இருக்க! எல்லாரும் வர நேரம் ஆச்சு!” என அவளை விரட்ட, நேரம் ஆவது உணர்ந்தும், சூழ்நிலை கருதியும் மௌனமாக அவள் மகனை நாற்காலியில் அமர வைத்து உள்ளே செல்ல, இங்கு தன்யாவோ ராகுலை மிதப்பாக பார்த்து வைத்தாள்.

உணவுகளை கொண்டு வந்து அடுக்கி விட்டு மகனுக்கு தட்டு வைத்து விட்டு மகள் கேட்ட பூரி தயாராகி விட்டதா என பார்க்க அவள் உள்ளே செல்ல, இங்கு தன்யா தனது சகோதரனை பார்த்து நக்கலாக சிரித்து அவனை சீண்டி வம்பிலுக்க, அவன் மறுபடி உதடு பிதுக்கி அழ, “டேய்! ஏண்டா அழுற?” என சாரதா அவனிடம் , அவன் அவரை கண்டு அழுகை அடக்கி பொறும, ஏன் அழுத என சின்ன பிஞ்சிடம் கூட கடுமையாக கேட்க, அதற்குள் மகனது சத்தமும் மாமியாரின் அதட்டலும் கேட்டு விரைந்து வந்தாள், பிருந்தா.

மகன் இம்முறையும் அழுதுக்கொண்டு இருக்க, “மறுபடியுமா! இம்முறை என்ன பஞ்சாயத்தோ ?” என உள்ளம் சோர்ந்து போனால் அந்த தாய். வேகமாக வந்து மகனை வாரி மடியோடு அணைத்துக்கொள்ள, கண்கள் கலங்கி மூக்கு சிவந்து அழுகையில் துடித்து கொண்டு இருந்தது, அந்த சின்ன உதடு.

என்ன? என்று கேள்வியாக ஒரு வரியில் மகளையோ அல்லது மாமியாரையோ கேட்க முடியாது, மகனையே மறுபடியும் கேட்க, “அதை என்கிட்ட கேளு! நல்லா பிள்ளையை வளர்த்து வச்சு இருக்க! எதுக்கு எடுத்தாலும் வீடான வீட்டுல காலைல இருந்து “ஓ”னெ ஒப்பாரி வச்சுக்கிட்டு!” என இடை புகுந்தார் சாரதா.

மகனது கண்ணை துடைத்து, அவன் முகம் காண, தேம்பியவாறே, “அக்கா என்னை பார்த்து இப்டி செய்தா மா!” என அவள் அழகு காண்பித்ததை அதை பெரிதாக நினைத்து வருந்தி சொல்ல,
“நான் ஒன்னும் பண்ணல பாட்டி!” என எங்கே அடித்தால் தனது தாய் அடங்குவாள் என்னும் வித்தை தெரிந்தவளாய் தனது தாயின் பலவீனம் அறிந்து தனது பாட்டியை துணைக்கு அழைத்தாள் தன்யா.

“ மம்க்கும்! என் பேத்தியை சொல்லனா உனக்கும் அம்மாக்கும் தூக்கம் வராதா? இல்ல திங்குற சாப்பாடு செமிக்காதா?” என சிறு பிள்ளை என்றும் பாராமல் அவர் அவனை ஏச,

“ஏன் அத்தை! அவனை இப்டி பேசுறீங்க? அவனும் சின்ன குழந்தை தானே?” என்றது தான் தாமதம், அவள் எப்போது வாயை திறப்பாள் காத்துக்கொண்டு இருப்பவர்க்கு, “ஆமாண்டி! அம்மா! உன்னையும் இவனையும் குறை சொல்லாம எனக்கு சோறு தண்ணி இறங்க மாட்டேன்னுது பாரு!” என தனது புலம்பலை துவக்க, அவர் மேலும் விடாமல் தொடர்ந்தார்.

“உன்னை சொல்ல கூடாது ! எல்லாம் அவனை சொல்லணும் தராதரம் பார்த்து எல்லாம் பண்ணனும்!” என அவர் தனது வசை மாரியை பொலியத்துவங்க, பிள்ளைகள் முன் இப்படியா என்று கலங்கி போனது பெண் மனம். யாரும் இருக்கிறார்களா என அவள் அவமானத்தில் குறுகி கண் கலங்கி தலை குனிந்து நின்று இருந்த வேளை, “சாரதா!” என அவரை இடையிட்டது அவர் மாமியாரின் கம்பீர குரல். அவர் குரல் கேட்டதும் அவர் வாய் தன்னை போல மூட, “என்ன பேச்சு பேசிக்கிட்டு இருக்க, வீட்டு மருமகளை இப்படி தான் பேசுவியா?” என்றவரை மறித்து, “இ..ல்..லை அ..த்..தை!” என்று இவ்ளோ நேரம் தனது மருமகளை வெளுத்து வாங்கிய வாய் இப்போது தனது மாமியாரின் முன் பம்மியது.

“இல்ல அத்தை…. அது … வந்து…. எப்போ பாரு தன்யாவை குறை சொல்லிகிட்டே இருந்தா? அவளும் பாவம் சின்ன குழந்தை னு கூட பார்க்காம அவளை சதா நேரமும் ஏதாவது சொல்லிகிட்டே இருந்தா?” என்றவரின் ராகம் மாமியாரின் அழுத்தமான பார்வையில் நின்று போனது.

“பிருந்தா தான் இவங்க ரெண்டு பேரோட அம்மா பெத்தவளுக்கு தன்னோட பிள்ளைகளை எப்படி வளர்க்கனும் னு தெரியும்! அம்மா குழந்தைகளை கண்டிக்கும் போது மத்தவங்க தலையிடாம இருந்தா போதும் தேவையிருக்கும் போது நம்ம தலையிடலாம். நம்ம செல்லம் கொடுக்கலாம் தப்பில்லை. ஆனா நம்ம கொடுக்குற செல்லம் அவர்களை சீர் படுத்தணுமே தவிர சீரழிக்க கூடாது! பெத்தவளுக்கு தான் தன்னோட குழந்தைங்க மேல முதல் உரிமை, முழு உரிமையும் கூட! பிருந்தாவும் எல்லாத்துக்கும் கண்டிக்குற ஆள் இல்ல!” என்று அமிர்தம் பாட்டி பிருந்தாவை தாங்கி பேச, அவரது அனுசரணையில் பிருந்தா கண்ணில் கண்ணீருடன் அவரை நன்றியுடன் ஏறிட்டாள் என்றால், அவளது மாமியாரின் முகமோ கடுகடுப்பை காட்டியது.

அமிர்தம் பாட்டியின் கண்கள் கூர்மையுடன் தன்யாவை அளவிட, அவரது பார்வையில் அவள் பதறி, பயந்து தான் போனாள். இவர்களது சம்பாஷனைகளை கேட்டபடியே பிருந்தாவின் மாமனார் வைத்தியாலிங்கம் வர, கணவரை கண்டதும் தனது பாவனையை மாற்றிக்கொண்டனர், அனைவரும்.

என்ன இங்க சத்தம் என அவர் வினவ ஒன்னுமில்ல தம்பி நீ சாப்பிடு சாரதா நீ பரிமாறு பிருந்தா பசங்களை கவனிக்கட்டும் என தன் மருமகளை ஏவ அவர் உடனே பவ்யமாக சரிங்கத்தை என சிரித்தவாறு முகத்தை மாற்றிக் கொண்டார்.

மனத்திலோ “நேரம் காலம் தெரியாம இவங்க வேற!, இவங்க தயவுல தானே நீ இந்த ஆட்டம் போடுற! உன்னை எப்படி அடக்கனும்னு எனக்கு தெரியும். எனக்குன்னு நேரம் வராமலா போய்டும். அப்போ உங்க ரெண்டு பேரையும் கவனிச்சுக்குறேன்!” என மனதில் கருவியபடி தனது கணவருக்கு தட்டு வைத்து பரிமாற ஆரம்பித்தார்.

பாவம் அவர் அறியாதது, இங்கே நடந்த அனைத்தையுமே வைத்யநாதனும், அமிர்தம் பாட்டியும் அறிவர் என தெரியாமலே அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர். சாரதா மனதில் தனக்கான நேரம் வரை காத்திருக்க நினைத்தார். அவர் மனதில் நினைப்பது போல நடந்தால்? அந்த பேதை பெண்ணின் நிலையும் என்ன ஆகுமோ?

சாரல் அடிக்கும்….
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement