சாரல் 4

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
IMG_20200515_215120.jpg

சாரல் 4
போன எபிக்கு பொம்மை அண்ட் கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.
இந்த எபில தனது மகளுக்கும் தனது வாழ்க்கைக்கும் இடையே அல்லாடும் விஷ்வா.

உங்க கமெண்ட்ஸ் தான் எனக்கு ஊக்கமே.



சென்னை மாநகரின் அந்த சிக்னலில்
நின்றுகொண்டு இருந்தது அந்த வெள்ளை நிற ஹியுண்டாய் வெர்னா. அதனுள் அழகாய், கம்பீரமாய் விஷ்வா. அவன் அணிந்திருந்த அந்த வொயிட் கலர் ஷர்ட் அதற்கு பொருத்தமாய் சில்வர் கலர் சூட் பிங்க் கலர் டை அவனுக்கு வெகு பொருத்தமாய் இருந்தது. அலுவலகத்தில் தலைக்கு மேல் வேலைகள் இருக்க, அவன் சீக்கிரம் கிளம்ப தான் நினைத்தான். ஆனால் அவன் பெற்ற அந்த குட்டி வாண்டோ அவனது நேரத்தை சுருட்டிக் கொண்டாள்.

மகளது நினைவில் சில காலமாய் இறுகி கிடக்கும் அவன் இதழ்களில் புன்னகை பூ மலர்ந்தது . வறண்ட அவனது வாழ்வின் வசந்த காலம் அவன் மகள். காலை நிகழ்ந்தது அவனது மனதில் வரிசையாய் கூட்ஸ் வண்டி போல சட சடக்க, நினைவு என்னும் ரயில் மகளிடம் ஆரம்பித்து, மனையாளிடம் முடிந்தது.

மனையாளின் நினைவு வந்தவுடன் அவனது தெளிவான மனதடாகத்தில் கல்லெறிந்தது போல் ஏதோ ஒரு மெல்லிய சலனம். அதுவும் அவளது பார்வை அது சொல்லும் செய்தி தான் என்ன? ஆம் ஏனோ அந்த கண்கள் அவனிடம் எதுவோ சொல்ல விளைவது போன்ற ஒரு மாயத்தோற்றம் அவனுள். அந்த கண்கள் அவனிடம் கூற விழைவது தெரிந்தால் அவனது நிலை?

அவளது நினைவுகளை அவன் மகளின் தாய் ஆக்கிரமிக்க, ஏனோ அந்த விழியின் மொழியினை அலட்சியப்படுத்த முடியவில்லை. அது அவனது மகளின் தாய் என்பதாலா, இல்லை அவன் தாலி கட்டிய மனைவி என்பதாலா? எதுவோ ஒன்று அதற்கு பெயர் எது என்று தான் தெரியவில்லை.

எங்கெங்கோ சென்று கொண்டு இருந்தவன் மனது மறுபடியும் மகளிடம் வந்து நின்றது. மகள், அவனது வாழ்வின் வெளிச்சம் அவள். மகளின் புரிந்துணர்வில் அவளது சாயல் கண்டான் அவன். அவன் கண் முன்னே வரிசையாய் சில பல நிகழ்வுகள். அது அத்தனையின் நடுநாயகமாய் அவள்.

சீராய் சென்ற படகு சுழலில் சிக்கியது போல, அவனது மன படகும் அவளது நினைவுச் சுழலில் சிக்கி, அல்லகளிக்கப்பட்டு , வெளி வரமுடியாமல் போக, அவனது மனம் போலவே அவனது வாழ்வும் சின்னாபின்னம் ஆனது விதியின் சதியா? அல்லது மதியின் சதியா?

எதனாலோ நீரோடும் பாதை நடுவே தென்படும் பாறையில் மோதிய படகு போல் அவனது வாழ்வும் உருக்குலைந்து போனது. மனதின் வெண்மை தாளாமல், உடலும் வியர்வையை பெருக்க, அவன் கை ஏசியை இன்னும் கூட்டி வைத்தது. அந்த குளிர்ந்த காற்றும் அவனது வெம்மையை தணித்த பாடில்லை.

அது மேலும் அவனது வெம்மையை பெருக்க தான் செய்ய, மூச்சிற்கு திணறுவது போல இருக்க, காரின் கண்ணாடியை இறக்கி விட்டு வெளி காற்றை கண் மூடி ஆழ்ந்து சுவாசிக்க, அவன் மனம் சமன் பட்டது போன்று இருக்க, அப்படியா உன்னை விட்டு விடுவேன் என விதி கை கொட்டி ஏக்காளமிட்டது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஏசியை ஆஃப் செய்ய திரும்பியவனின் கை பட்டு அங்கிருந்த பிளேயர் ஆன் ஆக, “ஹாய்! ஹலோ! நீங்க கேட்டுகிட்டு இருக்குறது ……… இன்னைக்கு நம்ம ஷோல காதல் பாடல்கள் கேட்கப்போறோம் சோ ஸ்டே டுன் வித் மீ” என ஏதோ ஒரு சேனலில் பாடல் ஒலிக்க, அதை ஆப் செய்ய போனவனின் கை அப்படியே நின்றது.

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
என் அருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

இது வரை எங்கிருந்தோம்
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்…..

அவள் நினைவாக அவன் கேட்கும் பாடல் இது. அந்த பாடல் ஓடிக்கொண்டு இருக்கும் போது தன் மனம் போகும் போக்கை அறிந்து, திடுக்கிட்டு அவன் “மப்ச்” என சலிப்போடு, திரும்பும் போது, அவனது கார் அருகே ஒரு டூவீலர் வந்து நின்றது.

அவர்கள் காதல் ஜோடி போலும், அவர்கள் உலகத்தில் அவர்கள் லயித்து இருந்தனர். ஏதோ பேசி சிரித்துக்கொண்டு, அந்த பெண் அவனுக்கு தனது துப்பட்டாவினால் குடை பிடிக்க, அவன் அவளை நோக்கி அழகான புன்னகையை சிந்த, அந்த காட்சி ஒரு நொடியில் அவனும் அவளுமாக தோன்ற காணும் யாவிலும் அவள் முகமே, அது அவனது ரணத்தை மேலும் ரணப்படுத்துவதாய்.

தன் எண்ணத்தின் பாதை அறிந்து அவன் தனக்குள்ளே வெட்க, எல்லாம் ஒரு நொடி தான் அவன் வேகமாக கார் கண்ணாடியை ஏற்றி, அந்த பிளேயரையும் ஆஃப் செய்து விட்டு, வழக்கம் போல் அவனது முகம் இறுக, அவனது கையும் ஸ்டியரிங் வீலை இறுக பற்றியது. தன் நினைவில் உழன்று கொண்டு , தன்னை தானே நிந்தித்து கொண்டு இருந்தவனின் கவனத்தை பின்னால் நின்றுக்கொண்டு இருந்த வாகனங்களின் சரமாரியான ஹாரன் ஒலி அவனை கலைக்க, அதில் சுய உணர்வு பெற்றான்.

அதற்குள் சிக்னலும் திறக்க பட, விருட்டென்று காரை கிளப்பி கொண்டு சென்றான். அங்கே வேகமடுத்த அவனது கார் சென்னைக்கு வெளியே சற்று தள்ளி உள்ள அவனது தொழிற்சாலையில் போய் தான் நின்றது.

பார்க்கிங்ல் காரை நிறுத்திவிட்டு, தனது தளத்திற்கு செல்ல, லிப்ட் நோக்கி சென்றான். தனக்குரிய தளம் வந்ததும், அவனுக்கே உரிய வேக நடையுடன் தனது அறை நோக்கி சென்றுக கொண்டு இருந்தவனை அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைக்க, அவனும் மிதமான தலையசைப்புடன் அவர்களை அலட்சியப்படுத்தாமல் கடந்து சென்றான். அது தான் விஷ்வா. நான் முதலாளி என்ற அகங்காரம் அவனிடம் சிறிதும் இருக்காது.
அவனது முகத்தில் இருந்து என்ன நினைக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியாது. அது அவன் தொழில் செய்வதாலோ? அல்லது வாழ்க்கை கற்று தந்த பாடமா? அவன் உணர்வில்லா முகமூடி கொண்டு தன்னை அதனுள் மறைத்து வைத்து கொண்டான்.
தனது அறைக்கு வந்தபின் தனது மேஜைக்கு சென்று அமர்ந்தவுடன் உடனே இண்டர்காம் எடுத்து “மேனேஜர் சாரை என் கேபின்கு வர சொல்லுங்க” என சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

ஒரு 5 நிமிடம் கழித்து, மெல்லிய கதவுதட்டலுடன் “மே ஐ கம் இன் சார்?”
என ஒரு குரல் கேட்க, “கம் இன்!” என இவன் மொழிய, இவன் வயது மதிக்க தக்க ஒரு ஆள் உள்நுழைந்தான். “வாங்க அசோக் இன்னைக்கு வர இருந்த லோட் எல்லாம் வந்து எறங்கிடுச்சா?” என விஷ்வா கேட்க, “எல்லாம் இன்னைக்கு காலையிலே வந்துடுச்சு சார்!” என அசோக் பதில் சொல்ல, “ஓகே இன்னைக்கு என்ன என்ன அப்பாண்ட்மெண்ட்ஸ் எல்லாம் இருக்கு?” என்றவனுக்கு அவன் பதில் அளித்துக்கொண்டே வர, “இன்னைக்கு மதியம் அந்த கிளையண்ட் மீட்டிங்க்கு தேவையான எல்லா ஏற்பாடும் பண்ணிடுங்க!” என்றவன், உடனே தனது மகளிடம் கொடுத்த வாக்கு ஞாபகம் வரப்பெற்றவனாய், “இல்ல! இன்னைக்கு மதியம் மேல் எந்த அப்பாய்ண்ட்மெண்ட்சும் வேண்டாம் எல்லாத்தையும் போஸ்ட்போன் பண்ணிடுங்க!” என விஷ்வா கூற,

இவனது பதில் கேட்டு அசோக்கிற்கு தலை கிறுகிறுத்து தான் போனது. பின்னே இந்த ஆர்டர் கிடைக்க அவன் அவன் நீ நான் என்ன போட்டி போட்டுக்கொண்டு இருக்க, இவனும் அந்த ஆர்டர் கிடைக்க எவ்வளவோ முயற்சி செய்து அதற்க்கான பலன் கிடைக்க இருக்கும் நேரத்தில், இவன் என்னடா வென்றால் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்த கதையாக இவர் அதை போஸ்ட்போன் பண்ண சொல்றார் என்று தான் அவன் மனதில் ஓடியது.

“இல்ல சார் அது வந்து…. வந்து…. !” என இவன் இழுக்க, “என்னனு சொல்லுங்க!” என விஷ்வா அவனை ஊக்குவிக்க, “ரொம்ப முக்கியமான கிளைண்ட் மீட்டிங் சார்! அவங்க ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் நம்மக்கு டேட் பிக்ஸ் பண்ணி இருக்காங்க. இதை நம்ம மிஸ் பண்ணினால் நம்ம கம்பனிக்கு ஒரு பெரிய ஆர்டர் மிஸ் ஆய்டும் சார்!” என அசோக் நிலைமையின் தீவிரம் எடுத்து கூற, இவனின் முகத்திலோ சிந்தனை ரேகை ஓடியது. மகளா? தொழிலா? என அவன் மனம் விவாதம் நடத்த, பெரும் குழப்பத்திற்கு ஆளானான் விஷ்வா.

இவனது புருவ மத்தியில் குழப்ப முடிச்சுகள் சுருண்டு இருக்க, மகளது ஆசையா? அல்லது தனது தொழிலா? என ஒரு மனதாக முடிவெடுக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக அவன் மகளுக்கும் தொழிலுக்கும் இடையே கிடந்து தவிக்கலானான், அவன்.

மகளது எதிர்பார்ப்புடன் கூடிய முகமே நினைவில் ஊஞ்சலாட, ஒரு தொழில் செய்பவனாக அவனுள் இருக்கும் விஷ்வப்ரகாஷ் தடுமாறினான். எப்போதும் ஆளுமையுடன் எளிதில் அனைத்திற்கும் நொடியில் தீர்வு கண்டுபிடிக்கும் தனது முதலாளி இன்று இப்படி தவிப்பதை கண்டு அசோக் “என்னாச்சு இவருக்கு?” என குழம்பி போனான் அவனும்.

“சரி மீட்டிங் எப்போ?” என அவன் மறுபடியும் கேட்க, இவனோ, “இன்னைக்கு இவருக்கு காத்து கருப்பு எதுவும் அடிச்சுடுச்சா?” என அவன் யோசித்து கொண்டு இருந்தான். “என்ன அசோக்! நான் கேட்குறது காதில் விழுதா?” என விஷ்வா கேட்க, இவனோ கனவில் இருந்து விழித்தவன் போல திருத்திருத்தான்.

“அவங்க மீட்டிங் மதியம் லஞ்சுக்கு அப்புறம் தான் சார்! ஆனா அது முடிஞ்சதும் ஈவினிங் 4o கிளாக் இன்னொரு மீட்டிங் நீங்க பிக்ஸ் பண்ணி இருக்கீங்க சார்!” என அவன் பதிலிருக்க, இவன் ஒரு நொடி கண் மூடி யோசிக்களானான். ஏதோ ஒரு தீர்வு தோன்றவே, பட்டென கண்ணை திறந்து, “ஓகே! பைன் அந்த மெயின் டீலர்ஸ் மீட்டிங் லஞ்சுக்கு முன்னாடி இல்ல லஞ்சு டைம் வசதி படுமானு கேளு?”என மடமடவென அவனுக்கு உத்தரவிட்டான்.

அவனையே பேவென பார்த்துக்கொண்டு இருந்தவனை
“அசோக்! அசோக்!” அப்படியும் அவன் கவனம் இங்கில்லாமல் போக “டேய்! அசோக்!”என அவனை மரியாதையாய் அழைத்து இந்த உலகிற்கு கொண்டு வந்தான்.

“இல்ல சார்! அ…து….” என இழுத்தவனிடம், “என்னடா நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ கனவு கண்டுட்டு இருக்க!” என தனது நண்பனை அதட்ட, “இல்ல சார்… மச்சான்… அது வந்து இன்னைக்கு என்னடா ஆச்சு உனக்கு எப்போவும் இப்படி போஸ்ட்போன் பண்ண மாட்ட இன்னைக்கு என்ன?” என்ற அவன் விஷ்வாவிடம் வினவ,

“இன்னைக்கு பிரகதிய வெளிய கூட்டிட்டு போறேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் டா!” என சொல்ல, இதுவரை புரியாமல் குழம்பியவன், “இதை முன்னாடியே சொல்ல வேண்டியது தானே இரு மச்சான் நான் இப்போவே போய் அவங்களுக்கு போன் பண்ணி போஸ்ட்போன் பண்ண சொல்றேன்!” என அவன் வேகமாக திரும்ப, “மேனஜர் சார் நான் சொன்னதை செய்ங்க போங்க” என அவன் சிறுபுன்னகையுடன் அதட்ட “ஏண்டா?” என அவன் இவனை பாவமாய் நோக்க, “போங்க சார்!” எனவும் பலியாடு போல தலையை ஆட்டியபடி வெளியேறினான் அசோக். செல்லும் அவனையே கண்டு சிறு புன்னகை உதிர்த்தான் விஷ்வா.

வெளியே வந்த அசோக் என் நண்பன் வாழ்க்கையை சீக்கிரமே சரி பண்ணிக் கொடு ஆண்டவா என கடவுளிடம் அவசர கோரிக்கை வைத்தான். இங்கே உள்ளே விஷ்வா ஏதோ தான் திட்டமிட்டது நடந்தே விட்டது போல மிகவும் மகிழ்ச்சியாய் உணர்ந்தான். தான் திட்டமிட்ட படி நடந்தால் மகளின் முகத்தில் புன்னகையை காணலாம் அல்லவா என அவன் தந்தை மனம் யோசித்தது.

நீங்கள் நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் நான் எதற்கு இருக்கிறேன் என்று விதியும் இவர்களை கண்டு சிரித்ததை இருவரும் அறியவில்லை.


சாரல் அடிக்கும்……
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top