சாரல் 3

Advertisement

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
போன ud க்கு பொம்மை like போடவங்களுக்கு ரொம்ப நன்றி.

கமெண்ட் செய்தவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

Free time சோ முன்னாடியே வந்துட்டேன்.

சாரல் 3

அருகில் வந்தவன் அவள் என்ன! ஏது? என உணரும் முன்னரே, அவனது கை அவளது கன்னத்தில் , “பளார்” என, அழுத்தமாக பதம் பார்த்து இருந்தது. அவன் அடித்ததில், முதலில் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாக விரிய, காதிற்குள் “நொய்ங்” என்ற சத்தமும், அதனை தொடர்ந்து கன்னத்தில் தோன்றிய எரிச்சல் “ ஜிவ்” என்று மூளை நரம்பு வரை பாய, சித்தம் கலங்கி, சிந்தை தடுமாறி நின்றாள் பிருந்தா.

அடியின் வேகத்தில் கால்கள் தடுமாற, அருகில் இருந்த மேஜை மேல் விழ போனவள் அதனை பிடித்து கொண்டு தன்னை சுதாரித்து நின்றாள்.

அவன் மறுமுறை கையை ஓங்கி கொண்டு வரும்போது, அவள் கண்ணை மூடி தலையை திருப்பி நிற்க அடுத்த அடியை எதிர்பார்த்தவள் கண நேரம் சென்றும் எந்த அரவமும் இல்லாமல் போக, மெதுவாக கண்ணை திறந்து பார்க்க, அங்கே அவள் கண்டது ஓங்கிய கை ஓங்கியவாறு நின்றிருந்த கணவனை தான்.

அவன் பார்வை சென்ற திசையை அவளும் நோக்க, தமக்கையை பின்தொடர்ந்து சென்ற அன்னையை தேடி வந்த மகன் கண்டது அங்கே தந்தை தன் தாயை அடித்தது தான். அதில் பயந்து முகம் வெளிற, அங்கிருந்த சுவர் ஓரமாக பயந்து போய் ஒன்றி நின்று கொண்டு இருந்தான்.

நிமிடத்துள் சுய உணர்வு அடைந்த முரளி, “ச்சே” என கையை மடக்கி உதறிக்கொண்டு வேகமாக அங்கிருந்து சென்று பால்கனியில் நின்றுக் கொண்டான்.
கணவன் அங்கிருந்து அகன்றதும், முகத்தை அழுத்தி துடைத்து, வெளிவர துடித்த கண்ணீரை இமை சிமிட்டி உள் இழுத்து வேகமாக மகனை நோக்கி ஒன்றுமே நடக்காதது போல, “என்ன டா
செல்லம் ஸ்கூலுக்கு போகணும்! இன்னும்
கிளம்பாமா இருக்க?” என முயன்று வருவித்த குரலில் சாதாரணமாக கேட்க,
மகன் முகமும் கண்ணும் கலங்கி, உதடு பிதுக்கி அழ தயாரானான்.

“அச்ச்சோ! என் செல்லக்குட்டிக்கு என்ன ஆச்சு? என் பட்டுத் தங்கம் ஏன் அழுவுது?” என மகனின் கண்ணை துடைத்தவாறு கேட்க! மகனோ “வொம்ப வயிக்குதாமா?” என இன்னும் தனது மழலை மாறா மொழியில் சற்று முன் அவள் அடி வாங்கிய
கன்னத்தை தடவிய படி கேட்க, அதில் மனம் நெகிழ, பாய்ந்து அவனை கட்டிக் கொண்டு, மௌனமாக கண்ணீர் வடித்தாள் பிருந்தா.

அதுவரை இருந்த அதிர்ச்சி மாறி தாய்க்கே
ஆறுதல் தந்த மகனில், அவனது சாயல்.
அதில் இன்னும் அழுகை வெடித்துக்
கிளம்ப, மகனை கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள் அப்பேதை பெண்ணும்.

கண்ணில் வழிந்த கண்ணீர் தடம் மாறாமலே சிறுவன் முகம் காண, மறுபடியும் “வொம்ப வயிக்குதா? அவுவாத! என தாயின் கண்ணீரை தன் மென் கரம் கொண்டு துடைத்து விட்டு,
“இப்போ வயி போய்ச்சா?” என தாயிடம்
மறுபடி வினவ, அவள் அந்த தாயுமானவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க , “ இன்னும் சயி ஆவவையா? என கேட்டு , “இப்போ சயி ஆயிடும்!” என தாயின் கன்னத்தில் தன் செப்பு இதழ் கொண்டு மென் முத்தம் வைக்க, தன் பிஞ்சின் மென் ஸ்பரிசத்தில் தேகம் சிலிர்த்தவளாய் விழி மலர்கள் மேலும் ஆனந்த பூ சொரிய, தன்னை மறந்து மெய் உறைந்து நின்றாள், அந்த தாய்.

மகன் இன்னும் தன் பதில் எதிர்பார்த்து நிற்பது புரிய, தன் வேதனை மறந்தவளாய், மகனை வாரி அணைத்துக் கொண்டாள், பிருந்தா. “நீ அவுவாத மா நாம தாத்தா கிட்ட முள்ளிய மாட்டி விட்டுடுவோம்!” நொடி நேரத்தில் தனது தாயின் வேதனை காண பொறுக்காமல், அவள் வலி தீர்க்க சுலபமாக வழி கண்டுபிடித்து இருந்தான் பிருந்தாவின் செல்வன்.

மகனின் மொழியில் புலங்காகிதம் அடைந்த தாயோ முதலில் தனக்கு ஆறுதல் அளிக்கும் மகனை கண்டு மகிழ்ந்தாள் என்றால், அவன் சொன்ன செய்தியை கேட்டு முதலில் குழம்பியவள், பின்னர் மகனிடம் அதற்கு விளக்கமும் கேட்க அவனது மறுமொழியில் அவளது கண்கள் சாசர் போல் விரிந்தது.

இங்கே பால்கனியில் நின்று கொண்டு இருந்த முரளியோ அலுவலகத்திற்கு நேரம் ஆவது உணர்ந்து, அறைக்குள் செல்ல திரும்பியவனின் காதில் விழுந்தது, மகனின் சமாதானமே. மகனின் பிஞ்சு மொழியில் புருவம் சுருக்கியவனை கலைத்தது மனைவியின் குரலே, “என்னடா செல்லம் சொன்னீங்க?” என கேட்க “அதான்மா இந்த அப்பாவ நம்ம தாத்தா கிட்ட மாட்டி விட்டுடுவோம்!” என்றது தான்
மகனின் சாமர்த்தியத்தில் அவன் முகம் புன்னகையை பூசிக்கொண்டது என்றால், அவன் மனையாட்டிக்கோ “பகீர்” என திகிலை பரப்பியது.

பாவையவளுக்கோ உள்ளம் “திடும்” என அதிர, இதை யாராவது கேட்டால் குறிப்பாக
கணவனோ மாமியாரோ அல்லது அவள் பெற்ற அந்த குட்டி ராட்சசி கேட்டால் அவ்ளோதான் என்ற எண்ணம் தோன்ற, சுத்தி முற்றி பார்த்து விட்டு, “செல்லம்! இனிமே இப்டி எல்லாம் அப்பாவ அப்படி சொல்ல கூடாது!” என்க,
தாய் சொல்லை தட்டாத அந்த அழகு மயிலோ, உடனே “சரிமா!” என தலையாட்டி கேட்டுக் கொள்ள, சின்ன சிட்டின் தலையாட்டளில் அவள் உள்ளம் கொள்ளை போக மகனை வாரி அணைத்து உச்சி முகர்ந்தாள் பெண்.

மனைவி சுற்றும் முற்றும் பார்த்த போதே, அவன் வேகமாக தன்னை அருகே இருந்த சுவரோரம் மறைத்து கொள்ள, அவள் என்ன சொல்கிறாள் என காதை தீட்டி வைத்து காத்திருந்தவனின் விழுந்த மொழியில், அவனின் உதட்டோரம் சிறு கசந்த முறுவல் தோன்றி மறைந்தது.

மகனை அழைத்துக் கொண்டு நிமிர்ந்தவளின் கண்ணும், உள்ளே வந்து கொண்டு இருந்தவனின் கண்ணும் நேர் கோட்டில் சந்திக்க, விழிகள் நான்கும் மௌன பரிமாற்றம் மேற்கொள்ள, அவன் விழிமொழி இவள் படிக்க தெரியாமல் திணற, அவனோ அவள் விழியின் மொழியை புரிந்தும் அதை அலட்சியம் செய்த படி சென்றான்.

மகள் அவளது பாட்டியிடம் சென்று விட,
மகனை இவள் குளிப்பாட்டி, தயார் செய்து
கீழே அழைத்து வந்து, பூஜை அறையில் மகனை கடவுளை வழிபட வைத்து, உணவு மேஜைக்கு அழைத்து வந்தாள்.
இவள் அங்கு வரும்போது ஏற்கனவே
இவளது மகள் அங்கே கிளம்பி அமர்ந்து
இருக்க , “தன்யா என்னடா கிளம்பிட்டீங்களா?” என கேட்டுக் கொண்டே மகனை கையில் பிடித்தபடி வர, அவளோ அம்மாவை பார்த்ததும் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டால்.

அதில் முகம் சுருங்கினாலும், மகனை தூக்கி அவனை டைனிங் டேபிள் மீது அமர வைத்து, இவள் காலை உணவு தயாராகி விட்டதா என பார்க்க கிச்சன் பக்கம் நகர, ராகுல் தனது தமக்கையை பார்த்து, “ஏன் தனு இப்பி பண்ண?” என அவளிடம் வினவ, அவளோ புருவம் சுருக்கி அவனை கேள்வியாய் நோக்க,
“அம்மா உன்ன ஸ்கூலுக்கு தானே எப்பி விட்டாங்க! நீ ஏன் அப்பாகிட்ட பொய்யி சொன்ன?” என தனது சகோதரன் கேட்டதில், தனது குட்டு வெளிப்பட்டு விதத்தில் அவளுக்கு சினம் பொங்க கோபத்தில் அவனை பிடித்து தள்ளி விட,
குழந்தையோ சமாளிக்க முடியாமல், தடுமாறி விழுந்து விட்டான்.

அவன் பாவம் குழந்தை தன்னை விட மூன்று வயது பெரிய குழந்தை தள்ளிவிட்டதில் மேஜை மேல் உட்கார்ந்து
இருந்தவன் கீழே விழுந்து விட, வலியில்
அழுக தொடங்கி விட்டான். அனைவரும் காலை உணவு ஒன்றாக சேர்ந்து அமர்ந்து உண்ணுவதால், எல்லாரும் வரும் நேரமாகி விட, சமைத்த உணவுகளை டைனிங் டேபிளுக்கு எடுத்து வந்து கொண்டு இருந்த பிருந்தா கண்ணில் பட்டது கீழே விழுந்து அழுது கொண்டு இருந்த மகனும்,
அவன் முன் அலட்சியமாக நின்று கொண்டு இருந்த மகளையும் தான்.

அவள் வேகமாக விரைந்து வந்து, மகனை தூக்கி கை கால்களை தட்டி விட்டு கொண்டு இருக்க, தாயை கண்டதும் அவனுக்கு அழுகை பொங்கி கொண்டு வர, மேலும் வலியும் பெருகியதால், “ஓ”வென்று அழுக, “என்னமா என்ன ஆச்சு?யென் இப்டி அழுறீங்க?” என சிறுவனின் முகம் பார்த்து கேட்க, “அக்கா தான் மா என்ன இப்பி கிழே தள்ளி விட்டுட்டா!” என அவன் அழுகையுடனே சொல்ல, மகளிடம் திரும்பிய பிருந்தா,” ஏன் தனு அவனை தள்ளிவிட்ட? அவன் உன் தம்பி தானே!” என கூற மகளோ வெகு அலட்சியமாக தலையை சிலுப்பிவிட்டு கொண்டு நின்றாள். அவளது செய்கையில் அன்னையிடம் கோவம் வர ஆரம்பிக்க, அவள் தோள் பிடித்து “ஏன் இப்படி பண்ண!”என கேட்கும் போதே, அவ உன்ன அப்பாகிட்ட மாத்தி விட்டால மா, அதான் ஏன் இப்பி பண்ண கேட்டேன்! என்ன இங்க இருந்து தள்ளி விட்டா மா அக்கா!” என மகனது குரல் இடையிட, மகனது கூற்றில் மனம் நெகிழ்ந்து என்றால், மகளது செய்கையில் கோவம் துளிர்த்து.


“உனக்கு என்ன அவ்ளோ பிடிவாதம் இப்போவே!” என அவள் தன்யாவை கண்டித்துக் கொண்டு இருக்க, மகளோ முதலை விட இன்னும் தெனாவெட்டாக தாயை பார்த்து வைக்க, “உன்ன தான் கேட்குறேன்!” என அவள் மறுபடியும் கேட்க, அப்போவும் அவளது அலட்சிய பாவம் மாற வில்லை.

அங்கே அப்போது தான் அவளது பாட்டி சாரதா படி இறங்கி வந்து கொண்டு இருக்க, அவரது கண்ணில் அழுது கொண்டு இருந்த ராகுல் படவில்லை, மாறாக பேத்தியை அதட்டிக் கொண்டு இருக்கும் மருமகள் தான் பட்டாள்.

என்னவோ தனது அருமை பேத்தியை அவள் ஏதோ செய்து விடுவது போல வேகமாக அருகில் வந்தவர், கண்ணில் அலட்சியமாக நின்று கொண்டு இருந்த தன்யா பட வில்லை, அழுது கொண்டு இருந்த ராகுலும் படவில்லை.

கொக்கொன்றே மதி என்பது போல், அவரது கண்ணில் பிருந்தா தான் விழ,
“ஏய்! அவளை என்ன பண்ணிட்டு இருக்க?” என கேட்டபடி வர, மாமியாரை கண்டதும் அவளது கை தானாக மகள் மேல் இருந்து விலக, அதுவரை அமைதியாக அலட்சியமாக நின்று கொண்டு இருந்த தன்யாவோ மறு நொடி தனது செல்ல பாட்டியை கண்டதும், “ஓ”வென்று கத்தி அழுக ஆரம்பித்து விட்டாள்.

சாரல் அடிக்கும்…














InShot_20200502_195523095.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top