சாபத்தின் வரம் நானோ ?

Advertisement

உதித்த முதல் நாளே- நான்
உந்தன் பாரமென தூக்கியெறிந்தாய்

உன்னில் சுகங்காண-வேறொருவன்
உன்னை சுமந்து வளர்க்க-நானோ
என்னில் தனிமையை உணர்ந்தேன்-

அத்தனிமைக் கொடுமையை
காதலெனும் கள்ளன்-
கள்ளச்சாவி போட்டு திறந்திட-
மூடிய அறையின் இருளுக்குள்-
முத்தமாகவும்-என்னை
மொத்தமாகவும் கொடுத்து
இன்பம் கண்டேன் நான்!

எத்தனை நாள் இப்படியே
இணைந்து கிடக்க? உடல்
பிணைந்து கிடக்க?
கசக்கித்தொங்கிய முலைகளை
பற்றியிழுக்கவேணும்
பிஞ்சொன்று வேண்டாமோ?
ஆதலால்


திருமணம் என்னும் பந்தத்தில்
இணையலாம் வாவென்றேன்-
நீயோ-
இருமனம் இணைந்த பின்-
திருமணம் எதற்கென்றாய்?
நம்பிக்கொடுத்தேன் மீண்டும்!
தாலி யொன்று
தாவென்று கேட்கையில்-
மனைவி குழந்தையெனும்
மந்திர பாரத்தை-
என்னால் சுமக்கயியலாது-
மடியில் மட்டும்
இடம்கொடு-மணவறை
எதற்கென்றாய்??!!
கட்டிலில் வசதிக்கும்-
கழிந்தபின் வசதிக்குமென-
என்னுடல்-
உந்தன் பஞ்சு மெத்தை! - உந்தன்
ஆணுறு உயர்கையில் எல்லாம்- அதை
அடக்கி வைத்திட்ட நான்-வெறும்
பாவப்பட்ட தத்தை!!

திருமணம் ஆகாமலே
உன்னுடன் இணைந்தேன்-நீ
திருந்தி வருவாயென-ஒவ்வொரு
முறையும் பிணைந்தேன்!

உன்மனம் மாறுமென-எந்தன்
உள்மனம் நினைத்திருக்க-நீயோ
உந்தன் முடிவிலே-
குறியானாய்-
தாலி எனுங்கயிறை-
தாங்கும் தகுதி
உனக்கில்லை-என்று
உரைத்துவிட்டு-என்னையும்
உதறிவிட்டு-
சென்றாயென் காதலனே..!!

இல்வாழ்க்கை வாழாது-
இவ்வாழ்க்கை வாழத்தான்-எனை
ஈன்றாயோ அன்னையே!???

உடல் சுகத்திற்கு-எனை
உருவாக்கி-எவனோ
ஒருவனுக்கெனை
கருவாக்கி-
சாபத்தின் வாழ்க்கையை
எனக்களித்த நீ-
தாயினத்தின் சாபமென்றால்
உன் மூலம் வந்த நான்
சாபத்திற்கே
சாபக்கேடானேனோ???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top