சாந்தி கவிதா's மேகவதி

Advertisement

Hi sagos,
மறுபடியும் ஒரு கவிதை.
இது நான் எழுதிய கவிதையில் எனக்கு பிடித்த ஒரு கவிதை கூட.
Hope you like it too.
படிச்சு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க friends.:love::love:

மேகவதி!

துளித்துளியென திரண்ட
துளிர்நுரை திரவியமே!

வெண்மை போத்திய
வெம்மை போக்கியே!


நிலநீர் முற்றும்
நிரைத்திடும் முத்தே!


கருநீல கன்னியாய்
கரைந்திடும் காரிகையே!


காற்றில் நகரும்
கார்கால நறுமுகையே!


வேற்றுமை காணாத
வள்ளல் கார்முகிலே!


வலிமை மிகுந்த
வாழ்வு மிக்கவளே!


அலையாய் பொங்கும்
ஆழியை பெற்றவளே!


மேன்மை பொருந்திய
மேகவதி பெண்ணவளே!!!!


-சாந்தி கவிதா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top