'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Prefinal 1

Advertisement

keerthukutti

Well-Known Member
வாவ் ப்ரீத்திக்கு செக்மேட் என்ன முடிவு எடுக்க போறா ?? சீக்கிரம் அடுத்த எபியோட வாங்க சிஸ் ....
 

Vatsalaramamoorthy

Well-Known Member
வித்யாவா கொக்கா…ப்ரீத்தி நீ படிச்ச ஸ்கூலின் ஹெட்மாஸ்டராக்கும் எங்க வித்யா மேம்..சூப்பர் ருத்ரா டியர்..
 

Priyaasai

Active Member
View attachment 11168

சந்தம் - 45

பேசி முடித்து விஷ்வா சமைக்க சென்றுவிட வித்யா தேவியோ இன்னும் பிரமிப்பில் இருந்து அகலாமல் விழி மூடாமல் செல்லும் மகனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.

ஆனால் அவர் மனதினுள் ஆயிரம் சஞ்சலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்து அவரை ஆக்கிரமித்து கொள்ள அதை எப்படி கையாள்வது என்று புரியாமல் தவித்து போனவர் இறுதியில் தலையை பிடித்து கொண்டு விட்டார்.

பின்னே மகன் கூறும் அனைத்து காரணங்களையும் ஏற்று கொண்டாலும் பிடிக்காத ஒருவனின் மனைவியாக தன் வீட்டு மருமகளாக காலத்துக்கும் ப்ரீத்தி எப்படி வாழ முடியும்..?? என்ன தான் அவன் மருமகளாக மட்டுமே அவளை அழைத்து வந்திருந்தாலும் அந்த உறவின் அடிப்படையே அவள் விஷ்வாவின் தாலியை சுமந்து விஷ்வாவின் மனைவியானதால் தானே..?? அவன் தன் காதலையோ அவளுக்கான தியாகங்களையோ தெரியபடுத்த மாட்டான் சரி, ஆனால் கெட்டவனாக தன்னை அவளிடம் சித்தரித்து இருக்கையில் ப்ரீத்தி மட்டும் எத்தனை காலம் தான் குடும்பத்தினருக்காக அவனை சகித்து கொள்வாள்..?? வாழ்க்கை என்ன இன்றோடு அல்லது சில மாதங்களோடு முடிந்துவிட கூடியதா என்ன..?? மற்ற உறவுகளை போலவா கணவன் மனைவி பந்தம் என்பது..?? ஒரே வீட்டில் ஒரே அறையில் எத்தனை காலம் தான் பாரா முகத்தோடு வெறுப்போடு இருக்க முடியும்..??

இதெல்லாம் புரியாமல் காதலியை வாழ வைக்க அவள் வாழ்வில் இருந்து ஒதுங்கி போகிறேன் என்று புதுமை படைக்க நினைக்கும் மகனுக்கு பெண் மனம் அத்தனை சாதாரணமானது அல்ல என்றும் அதன் தேவைகள் எவ்வாறு, எதனை கொண்டு, எவ்விதம் தீர்மானிக்க படும் என்பது மற்றவர்களின் யூகங்களுக்கு அப்பாற்பட்டது என்பதையும் விஷ்வதேவ் உணராமல் போனது ஏனோ..?? தான் அறிந்த வரையில் பல நேரம் ப்ரீத்தி சூழ்நிலை கைதியாக செயல்பட்டு பல தவறான முடிவுகளை எடுத்திருந்தாலும் இப்போது விஷ்வாவின் செயல்பாட்டால் குழம்பி அவனை தவறாக நினைத்திருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல நிச்சயம் அவளது இப்போதைய முடிவும் மகன் குறித்த பார்வையும் மாறக்கூடும் என்பது புரிந்தது.

ஆனால்
ப்ரீத்தி தரப்பு ஏக்கங்களை எதிர்பார்ப்புகளை கூறியவனுக்கு இப்போது இல்லை என்றாலும் காலப்போக்கில் சாதாரண பெண்ணாக மற்றவர்களை போல கணவன் மற்றும் குடும்ப வாழ்வும் அவள் எதிர்பார்ப்பாக மாறக் கூடும் என்பது ஏன் மகனுக்கு புரியாமல் போனது..??

எதையும் ஆழ்ந்து யோசித்து சரியான முடிவெடுக்கும் மகனை காதல் என்ன அத்தனை தூரம் கண்ணோடு சேர்த்து கருத்தையும் மறைத்து விட்டதா..?? பழி தீர்த்தல் மற்றும் காதல் என்ற பெயரில் மகன் மருமகள் இருவருமே வெவ்வேறு விதத்தில் வாழ்க்கையை சிக்கல் ஆக்கி வைத்திருக்க இப்போது மகன் அழைத்து வந்து குடும்பத்தோடு ப்ரீத்தியை உறவாட வைத்ததால் மட்டுமே பிரச்சனை தீர்ந்துவிடவில்லையே..!! இதற்கு மேல் தான் புது புது பிரச்சனைகள் கிளம்பும் என்பது வாழ்வின் பல நிலைகளை கடந்து வந்திருக்கும் அவருக்கு புரியாதா என்ன..??

ஆனால் இங்கு மகனோ அது புரியாமல் நான் எதற்கு ப்ரீத்தி வாழ்வில்..?? என்று கேட்பவனுக்கு அவனால் மட்டுமே அவள் வாழ்வு இப்போது பாதாளத்திற்கு செல்லாமல் பிழைத்திருந்தாலும் அது இன்னுமே முழுமை அடையாத நிலையில் இருப்பதும் ஏன் புரியாமல் போனது..??

சுத்தமாக புரிதலும், காதலும் இல்லாத மகன் மருமகளுக்கு இடையில் நிச்சயம் பாதிக்கப்பட போவது என்னவோ பேரன் தான்..!! இப்போது இல்லையென்றாலும் அவன் வளர வளர ஓரளவு தாய் தந்தை இடையேயான விரிசல் புரிபடும். பிடிவாத குணம் கொண்ட இருவருமே கணவன் மனைவியாக இல்லாமல் போனாலும் தாய் தந்தையாக எவ்வாறு செயல்பட போகின்றனர் என்ற கேள்வி அவர் முன் விஷ்வரூபம் எடுத்து நிற்க அவர்கள் உறவின் அடிப்படையே ஆட்டம் கண்டு கொண்டிருப்பது அந்த தாய்க்கு புரியவரவும் ஸ்தம்பித்து போனவர் பல நேரமாக அதற்கான தீர்வை யோசித்தே களைத்து போனார்.

தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவர் முன் 'ம்மா காபி' என்று விஷ்வா கோப்பையை நீட்டவும் நிமிர்ந்து பார்த்தவர் அப்போது அது மிகவும் தேவையாக இருக்க வாங்கி பருக தொடங்கினார்.

காபியை குடித்து முடித்தவர் மகன் சமையலறையில் ஏதோ உருட்டி கொண்டிருக்கும் சத்தம் கேட்டு கோப்பையோடு அங்கே சென்றவர் அவனிடம் 'என்ன பண்ற தேவ்..??' என்றார்.

'நீங்க வரது தெரியாதும்மா தெரிஞ்சிருந்தா இந்தியன் ரெஸ்டாரன்ட்ல ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பேன் இப்போ ஆர்டர் கொடுத்து வர நேரத்துக்கு நாம சமைச்சி சாப்ட்டே முடிச்சிடலாம் அதான் சமைக்கிறேன்' என்றிட,

"நீ ஏன் தனியா பண்ணிட்டு இருக்க என்னை கூப்பிட வேண்டியது தானே..??" என்று அவர் மகன் கையில் இருந்த கத்தியை வாங்க முற்ப்பட,

"ம்மா இதெல்லாம் நான் பார்த்துக்குறேன் உங்களுக்கு ஜெட்லாக் இருக்கும் ஒரு டென் மினிட்ஸ் வைட் பண்ணுங்க அவ்ளோதான் சமையல் முடிஞ்சிடும் சாப்டுட்டு ரெஸ்ட் எடுப்பீங்க" என்று கூற,

அவரோ, 'ரொம்ப வலிக்குதா கண்ணா..??' என்று தான் அறைந்திருந்த அவன் கன்னத்தை வருடிக்கொண்டே கேட்க,

"என்னமா இது..?? செஞ்ச தப்புக்கு என் அம்மா கிட்ட இதை எதிர்பார்க்காம இருப்பேனா..?? என்ன ஒன்னு இன்னைக்கு திடீர்ன்னு உங்களை இங்க எதிர்பார்க்கலை அவ்ளோதான் ஆனா என்னைக்கு இருந்தாலும் இது எனக்கு கிடைக்கும்ன்னு தெரியும்"

செய்யப்போகும் தவறுக்கு தண்டனையை தீர்மானித்து தன் கனவு, லட்சியம், வாழ்வு குறித்து கவலை கொள்ளாமல் ஒரு பெண்ணை காப்பாற்றி அவள் வாழ்வில் இருந்து ஒதுங்கி நியாயமாக நடந்து கொண்டு இருப்பவனை ஒரு பெண்ணாக வியந்து பார்த்தாலும் தாயாக தவித்து தான் போனார்.

என்றோ சிறு வயதில் ஒருமுறை வித்யாதேவி விஷ்வாவை அடித்தது தான் அதன் பின் இப்போது தான் அடித்திருக்கிறார், சிவந்திருந்த கன்னத்தை கண்டு வருத்தம் மேலோங்க 'வலிக்குதா கண்ணா..??' என்றார் மீண்டும்.

ஆற்றாமையுடன் கேட்டவரின் மனம் கொண்டிருக்கும் வேதனையை உணர்ந்த விஷ்வாவோ 'இல்லமா' என்று மறுக்கும் முன்னமே ஓடி சென்று பிரிட்ஜில் இருந்து ஐஸ் பேக் கொண்டு வந்தவர்,

'என்ன இல்ல எனக்கு தெரியும் கண்டிப்பா வலிச்சிருக்கும் ரத்தம் வேற வந்திருக்கு பாரு.., அதை கூட துடைக்காம என்னடா பண்ற' என்று கடிந்தவாறே தன் முந்தானையால் அவன் குருதியை துடைத்தவர் ஐஸ் பேக் கொண்டு சிவந்து போயிருந்த அவன் கன்னத்தில் ஒத்தடம் கொடுக்க தொடங்கினார்.

ஜில்லென்ற பேக் கன்னத்தில் படவும் சில நொடிகள் கழித்து 'போதும்மா இப்போ வலி இல்ல' என்று அவன் மறுக்க மறுக்க இரு கன்னத்திலும் ஒத்தடம் கொடுத்தவர் 'தேவ் ப்ரீத்தியை முதல் முறை காலேஜ்ல பார்த்தேன் சொன்னியே அப்போ உனக்கு தோணின பாட்டு என்ன..?? என்றார்.

'இப்போ எதுக்குமா இந்த கேள்வி...??'

"சொல்லுடா எத்தனை முறை உன்கிட்ட கேட்டு இருப்பேன் உனக்கான பெண்ணை பார்க்கும் போது அவளுக்கு என்ன பாட்டு பாடுவன்னு ஆனா அப்போ எல்லாம் பார்த்தா தானேமா தோணும்ன்னு சொல்லி தட்டி கழிச்சிட்டே இருந்த இப்போ சொல்லு ப்ரீத்தியை முதல் முறை பார்த்ததும் என்ன பாட்டு தோனுச்சு..??"

'விடமாட்டீங்க..??' என்று சிறு புன்னகையுடன் தலையை திருப்பி தாயை பார்க்க,

'கண்டிப்பா எனக்கு தெரியனும் பாடு' என்றவர் சமைத்து வைத்திருந்த உணவை எடுத்து வந்து மேஜையில் அடுக்கி அதை இருவருக்கும் பரிமாரியவாறே கேட்டார்.

அன்னை கேட்கவும் கண்களை மூடிய விஷ்வாவின் இமைகளை ஊடுருவி நின்றாள் அன்று கல்லூரியில் சந்தித்த ப்ரீத்தி..!! அன்றைய நாளில் சுகமாக அமிழ்ந்தவன் ப்ரீத்தியை கண்ட நொடி மனதில் அவளுக்காகவே எழுதப்பட்டதாக அன்று அவனுக்கு தோன்றிய பாடலை தன் வசீகர குரலில் பாட தொடங்கினான்.


"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..!!


இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ..!!

ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

அதை என்னென்று அறியேனடி....


கண்ணே உன்னை காட்டியதால்

என் கண்ணே சிறந்ததடி

உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்

கண்முன் பிறந்ததடி

என் மனம் என்னும் கோப்பையில்

இன்று உன் உயிா் நிறைகின்றது"


என்று கண்கள் மூடி பாடலில் லயித்து போனவனின் முகம் இறுதியில் புன்னகையில் நிறைந்திருந்தது.

சாப்பாட்டை அளந்து கொண்டிருந்த வித்யா "ஒ அப்போ ப்ரீத்தியை உனக்கு காட்டினதால உன்னோட கண் தான் சிறந்தது வாவ் ..!! சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாட்டு தான்"என்றவர் தன் செய்கையை நிறுத்தி விஷ்வாவை தீர்க்கமாக பார்த்து,

"அப்போ அம்மாவை விட அப்பாவை விட உனக்கு ப்ரீத்தி முக்கியம் அப்படி தானே..??" என்று கோப குரலில் கேட்டு திடிரென வித்யா தேவி உரிமை கொடி உயர்த்தி இருந்தார்.

அவரிடம் இதை எதிர்பாராதவன் 'அம்மா' என்று திகைப்புடன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவரை பார்க்க,

"ப்ரீத்திக்காக எவ்ளோ யோசிச்சி இருக்க ஆனா எங்களை பத்தி யோசிக்கவே இல்லல நீ..?? காதல் தப்பில்லை காதலிக்காக இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்குறதும் தப்பில்லை ஆனா இப்படி ஒரு முடிவு ப்ரீத்திக்கு சரியா இருக்கும்ன்னு யோசிச்ச நீ அது உனக்கு சரியா இருக்குமான்னு யோசிச்சியா..?? அப்போ இத்தனை பெரிய முடிவு எடுக்கும் முன்ன ஒருமுறை கூட எங்களை பத்தி நினைக்கவே இல்லை அப்படி தானே தேவ்..!!"

'அம்.. மா..' என்று திணறிட

"ப்ரீத்தி லைப் மட்டும் இல்ல இதுல உன்னோட லைப்பும் அடங்கி இருக்கு கண்ணா..!! உன்னோட லைப்ல எங்களுக்கு எந்த உரிமையும் இல்லைன்னு சொல்லாம சொல்லிட்டல" என்று கரகரத்த குரலில் கேட்க,

'அம்மா ப்ளீஸ்' என்று நாற்காலில் இருந்து எழுந்தவன் அவர் முன் மண்டியிட்டு அவரை பார்த்தவனின் கண்களில் அவரின் நியாயமான கேள்வியால் எழுந்த பரிதவிப்பு ..!!

"கண்ணா நீ எங்களுக்கு ஒரே பையன்டா" என்று மகனின் நாடியை பிடித்தவர்

"என் பையன் பெண்களை மதிக்க தெரிஞ்சவன், அவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுக்க தெரிஞ்சவன், செய்யும் தொழிலில் நியாயமா இருக்கவன், எங்களை எங்கயும் தலை குனிய விடமாட்டான் இந்த பெருமை மட்டும் அப்பா அம்மாக்கு போதும்ன்னு நினைக்கிறியா தேவ்..??" என்று மகனை கேட்க,

அவனோ என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவரை கலக்கத்தோடு பார்த்திருந்தான்.

'ப்ச் இல்லை' என்று தலையசைத்த வித்யா " இது எல்லாத்துக்கும் மேல உன் சந்தோஷம் எங்களுக்கு ரொம்ப முக்கியம் கண்ணா அது உனக்கு புரியலையா..?? என்னதான் நீ உன் வாழ்க்கையை பணயம் வச்சி ஒரு பெண்ணோட உயிரையும் வாழ்க்கையையும் காப்பாத்தினதை நெனச்சி பெருமையா இருந்தாலும் இன்னொரு பக்கம் ப்ரீத்தி லைப்ல நீ இன்டெர்பியர் ஆகாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமே என் பையனும் மத்தவங்களை போல மனைவி, குடும்பம், குழந்தைங்கன்னு சந்தோஷமா இருந்திருப்பானேன்னு தோணுது தேவ்" என்று என்ன முயன்றும் துளிர்த்த கண்ணீரோடு மகனை பார்த்தார்.

தாயின் கண்ணீரை கண்டவனுக்கு குற்ற உணர்வு எழ இடக்கரத்தால் அவர் கண்ணீரை துடைத்தவன், "அம்மா ப்ளீஸ் அழாதீங்க.., நீங்க அழுது என்னையும் அழ வைக்காதீங்க" என்று கூற அவர் கண்ணீர் இன்னும் அதிகரித்தது.

எழுந்து அவரை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டவன், "ம்மா இப்போ என்ன நடந்துடுச்சின்னு இந்த அழுகை..?? உங்க மகன் வாழ்க்கைக்கு என்ன குறை..?? நான் உங்களை எல்லாம் யோசிக்காம இருப்பேனா யோசிச்சதால தான் என் அம்மா மாதிரியே அழகான, அறிவான, கம்பீரமான, பாசமான பொண்டாட்டியும் பிள்ளையையும் உங்களுக்காக கூட்டிட்டு வந்திருக்கேன்மா அதுவும் ப்ரீத்தி உங்க எல்லாரையும் நல்லா பார்த்தக்குரா, நம்ம வீட்டுக்கு ஏத்த மருமகளா இருக்கான்னு நீங்களே சொல்லிடீங்க இதை விட வேற என்ன வேணும் எனக்கு சொல்லுங்க..?? என்று அவரையே திருப்பி கேட்டவன் அவரிடம் தொடர்ந்து,

"அம்மா ப்ரீத்தி யார் என்னன்னு தெரியாம பல வருஷம் ஒரு போட்டோவை வச்சிட்டு வாழ்ந்தவன்மா இப்போ அவ என் பொண்டாட்டியா என் கூட என் வீட்ல இருக்க போறா அது போதும்மா இந்த ஜென்மம் முழுக்க அவளை பார்த்துட்டே சந்தோஷமா வாழ்வேன்" என்று காதல் மிகுதியில் அவன் கூறினாலும் அதை ஏற்று தாய் மனம் அத்தனை எளிதில் சமாதானம் ஆகுமா என்ன..??

'போடா' என்று அவன் கரங்களை விலக்கியவர், 'தேவ் எனக்கு இப்போ ப்ரீத்தி மேல கோபமா வருது' என்றவருக்கு அவளே வாழ்க்கை என்று இருக்கும் தன் மகனை எப்போது அவள் புரிந்து கொள்வாள் என்று ஒரு தாயாக எதிர்பார்க்க தொடங்கி விட்டார்.

"அம்மா ஒன்னு புரிஞ்சிக்கோங்க இப்பவும் நான் ப்ரீத்தி புருஷன் தான்..!! ஆதிரையனோட அப்பா..!!" என்று சட்டை காலரை தூக்கி விட்டவன் கண்டிப்பா என்ன நடந்தாலும் உங்களுக்காக, குழந்தைக்காக , வர்ஷுக்காக, பாட்டிக்காக ப்ரீத்தி டைவர்ஸ் முடிவு எடுக்க மாட்டா அது போதாதா..??

'ப்ரீத்தி கண்டிப்பா நம்ம வீட்லயே இருப்பாளா..??'

'ஏன்மா உங்களுக்கு இந்த சந்தேகம்..??'

"இல்ல நீ இவ்ளோ உறுதியா சொல்ற ஆனா ஒருவேளை நீ சொன்னியே ஒருமுறை எதிர்பார்க்காம ப்ரீத்தி உனக்கு ஷாக் கொடுத்தான்னு அப்படி திரும்ப ஏதாவது ஷாக் கொடுத்துட கூடாதே அதுக்கு தான்" என்று கேட்க விஷ்வாவிர்க்கும் அப்போது தான் ப்ரீத்தி கேட்ட அவகாசமும் சரண் கீர்த்தி வாழ்க்கை சரியான பின் அவனால் அவளை கட்டுபடுத்த முடியாது என்று அவள் கூறியது நினைவு வர அவனுக்குமே தாய்க்கு உத்திரவாதம் கொடுக்க முடியாத நிலையில் தலையை கோதியவாறே பால்கனிக்கு சென்றவன் அமைதியாக அங்கிருந்த கவுச்சில் அமர்ந்துவிட்டான்.

சில நொடிகள் மகனை அழுத்தமாக பார்த்து இருந்தவர் தானும் எழுந்து தீவிர யோசனையுடன் நடக்க தொடங்கிவிட்டார். சில நிமிட நடைக்கு பின் படுக்க சென்றவர் காலை எழுந்த போது விஷ்வா ஆராய்ச்சி கூடத்திற்கு கிளம்பி கொண்டிருந்தான் வித்யாவிடம்,

"சாரிம்மா இன்னைக்கு கொஞ்சம் அர்ஜென்ட் வொர்க் இருக்கு அதான் இயர்லியரா கிளம்புறேன் நான் திரும்ப வர நாளை மதியம் ஆகிடும் உங்களுக்கு எப்போ பிளைட்..?? நீங்க இருந்துப்பீங்க தானே..??" என்று கேட்க

'ரெண்டு நாள் கழிச்சி தான் நீ பத்திரமா போயிட்டு வா' என்று கதவடைத்து விட்டு வந்தவர் மனம் முழுக்க எவ்வாறு பிரச்னையை தீர்ப்பது என்ற கேள்விதான்.

அவர் கிளம்பும் நாளும் வர அவரை ஏர்போர்ட் அழைத்து வந்தவன் வித்யாவின் முகம் ஏதோ சிந்தனை வயப்பட்டு இருப்பதை கண்டு,

என்னம்மா ஒருமாதிரி இருக்கீங்க என்ன யோசனை..??

அவரோ நடந்துகொண்டே இருந்தவர் மகன் புறம் திரும்பி,

"கண்ணா ப்ளஸ் இண்ட்டு ப்ளஸ் மட்டும் ப்ளஸ் இல்ல (+*+=+)மைனஸ் இண்ட்டு மைனஸ்சும் ப்ளஸ் தானே..?? (- * - = +) என்று ஒற்றை புருவம் ஏற்றி அவனை அர்த்தத்துடன் பார்த்தார்.

விஷ்வாவோ அவர் வார்த்தைகளில் அதிர்ந்து நின்றுவிட்டான்.

வித்யாதேவியோ அவன் கன்னம் தட்டி, "நீங்க ரெண்டு பேரும் மைனஸா இருக்கலாம் ஆனா உங்க வாழ்க்கை மைனஸாக நாங்க விட மாட்டோம் அதை எப்படி ப்ளஸ் ஆக்கணும்ன்னு அம்மாக்கு தெரியும்" தலை சாய்த்து ஒற்றை புருவத்தை உயர்த்தி இறக்கிட,

இது அவன் முற்றிலும் எதிர்பாராத கோணம் அதே நேரம் அவர் கூறிய நாங்க என்றதில், 'ம்மா நீ... நீங்கன்னா..???'

'நானும் உன் அப்பாவும் தான்டா' என்று

'அப்பா அப்போ உங்களுக்கு..??'

கண்ணா உங்க அப்பாவோட இத்தனை வருஷம் குடித்தனம் நடத்தற எனக்கு அவரை தெரியாதா..?? கண் அசைவுக்கு கூட எனக்கு அர்த்தம் புரியும்டா கொஞ்ச நாள் என் கூட பேசுற போது அவர் கிட்ட இருக்க மாற்றம், தடுமாற்றம் மட்டும் புரியாதா என்ன..?? என்று மகனை பார்த்தவர், 'அவர் ஏதோ மறைக்கிறார்ன்னு புரிஞ்சது எழில் வந்து சொல்லவும் இதுதான் விஷயமான்னு நான் நேரிடையா கேட்கவும் உடனே ஒத்துக்கிட்டார்'.

தாய் தந்தைக்கு இடையே தான் நுழைந்ததில் ஒரு நொடி வருந்தியவன் பின் இறங்கிய குரலில், 'அப்பா நான் சொல்லி தான்மா உங்ககிட்ட..' என்று ஆரம்பித்தவன் ப்ளீஸ்ம்மா' என்று நிறுத்தி அவனை பார்க்க,

"அப்போ உன் அப்பா மட்டும் மத்தவங்க ஒபினியன் வச்சி ப்ரீத்தியை ஜட்ஜ் பண்ணா ஓகேவா தேவ்..??" என்று கேட்க,

"ம்மா அப்படி இல்லம்மா..நான் அத்தை சொல்..." என்று அவன் தவிக்க,

'கஷ்டபடாத ரிலாக்ஸ் எனக்கு புரியுது' என்றவர் அவனிடம் ஆற்றாமையுடன்

"உனக்கு எந்த கவலையும் வேண்டாம் நல்லபடியா எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வா அதுக்குள்ள மைனஸா இருக்க உங்க வாழ்க்கையை ப்ளஸ்ஸா மாத்த வேண்டியது எங்க கடமை" என்று கூற,

'ம்மா ப்ளீஸ் நோ ப்ரீத்தி கிட்ட நீங்க எதுவும் சொல்ல கூடாது..',

மகன் பதட்டத்தை கண்டவர், "பயப்படாத தேவ் சொல்ல மாட்டேன்..!! என் பையனுக்கு காதல் பிச்சையா கிடைக்குறதை நானும் விரும்ப மாட்டேன், யூ டிசெர்வ் தி பெஸ்ட்..!! மார்க் மை வோர்ட்ஸ் யாரும் சொல்லாம எந்த விளக்கமும் கொடுக்காம நீ எதிர்பார்த்த உண்மையான காதல் ப்ரீத்தி கிட்ட இருந்து உனக்கு கிடைக்கும், உன் லவ் ட்ரு அது கண்டிப்பா ஜெயிக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு " என்று இறுமாப்புடன் கூற,

'ம்மா'

நான் எப்பவும் உன்கிட்ட 'Be the best' சொல்லுவேன் ஆனா இப்போ சொல்றேன் 'You are always the best Dev..!! I am really proud of my son..!!' என்று கூறியவர் அவனை நெருங்கி அவன் நெற்றியில் முத்தமிட்டு, " your love is more precious than preethi's..!!" அது ப்ரீத்திக்கும் கிடைக்கிறது தானே நியாயமாகும்..?? என்று மகனை கேட்டவர் அவன் மீளா திகைப்புடன் பார்ப்பதை கண்டவர் புன்னகையுடன்,

"நான் ப்ரீத்தி கிட்ட நேரிடையா எதுவும் பேச மாட்டேன்.. எந்த விளக்கமும் கொடுக்க மாட்டேன், உன்னை ஏத்துக்க சொல்லி கேட்க மாட்டேன் ஆனா உங்க வாழ்க்கை, என் பேரனோட எதிர்காலம் நல்லபடியா அமையறதுக்கான எல்லா நடவடிக்கையும் எடுப்பேன்" என்று உறுதியான குரலில் கூறி விமானம் ஏறி சென்ற அன்னையை சிறு அதிர்வுடன் பார்த்து நின்றான்.

*

வித்யா மகனுடனான அன்றைய நினைவில் மூழ்கி இருக்க அவரையே பார்த்தவாறு நின்றிருந்த ப்ரீத்தியின் முகத்தில் வித்யா மீதான பிரமிப்பு இன்னுமே அகலவில்லை.

எப்படி முடிந்தது..?? தன்னை குறித்த அனைத்து உண்மைகளும் தெரிந்த பின்னரும் எப்படி இவரால் இத்தனை சாதாரணமாக அனைத்தையும் கடந்து இன்று இத்தனை பேரை கூட்டி மீடியா முன்னிலையில் தன்னை மருமகளாக அறிவிக்க முடிந்தது..?? அதுமட்டுமா அவர்கள் பரம்பரை நகை முதற்கொண்டு மருத்துவமனை நிர்வாகம் வரை அனைத்தையும் எந்த நம்பிக்கையில் அவளிடம் தூக்கி கொடுக்க முடிந்தது. நிச்சயம் தன்னை பற்றிய உண்மை தெரியவரும் வேளை மற்றொருமுறை அவமானத்தை சந்திக்க வேண்டி இருக்குமே என்று இத்தனை நாட்கள் அவள் பதைபதைத்து போயிருக்க இங்கு அதற்கு நேர்மாறாக அவளை கவுரபடுத்தியதோடு அவள் குழந்தையை சமூகத்தில் அவர்கள் வாரிசாக அடையாளபடுத்தி உரிய அங்கீகாரத்தை வழங்க முடிந்தது..?? என்று நெகிழ்ச்சியுடன் அவரை பார்த்தவளுக்கு கண்களில் நீர் நிறைந்து போனது.

அன்று அலர் ப்ரீத்தியை சிறைக்கு அனுப்புவேன் என்று கூறியபோது தன் குழந்தையின் எதிர்காலத்தை தானே இருண்டு போக செய்ததை எண்ணி எத்தனை தவித்து போனாள் ஆனால் இன்று அதே குழந்தை என்று எண்ணி பார்க்க தொடங்கியவளின் மனமோ அதன் ஆரம்பபுள்ளியான விஷ்வாவிடம் வந்து நிலைத்தது.

விஷ்வா என்றதுமே இன்று அவனுக்கு கொடுத்த வாக்கும் சேர்ந்தே நினைவில் எழ அவளிதய துடிப்பு ஏகத்திற்கும் அதிகரிக்க அதை தாள முடியாமல் கண்களை இறுக மூடி எதில் இருந்தோ இருந்து தப்பிப்பது போல கைகளால் முகத்தையும் பொத்தி அமர்ந்துவிட்டாள்.

'ப்ரீத்தி'

'ப்ரீத்தி' என்று வித்யா அவள் தோளை தொட,

திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவரை கண்டதும் கொண்டிருந்த அலைப்புருதலில் சட்டென அவர் வயிற்றோடு கட்டிக்கொண்டு கண்ணீர் விட தொடங்கி விட்டாள்.

'என்னாச்சு ப்ரீத்தி எதுக்கு அழற, கண்ட்ரோல் யுவர்செல்ப்'

மெல்ல தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள் நிமிர்ந்து அவரை பார்க்க வித்யாவோ துளையிடும் பார்வையோடு அவளை பார்த்து கொண்டிருந்தவர், 'எதுக்கு இந்த அழுகை' என்றார்.

அவர் கேட்கவும் ஒரு நொடி விழித்தவளுக்கு அவர்கள் இருவருக்கும் இடையேயான விஷயத்தை அவரிடம் பகிர்ந்து விஷ்வா குறித்த அவர்களின் பிம்பத்தை உடைக்க மனமில்லாததால் கண்களை துடைத்தவாறு அவரிடம் "ஆன்டி வெளியே ப்ரெஸ்" என்று ப்ரீத்தி தயங்கி அவரை பார்க்க ..

'நோ ப்ராப்ளம் எல்லாரும் சாப்ட்டுட்டு கிளம்பிடுவாங்க'

'சா.. சாரி ஆன்டி என்னால உங்களுக்கு சங்கடம்... நா.. நானு எது.. ப்ராமிஸா நான் எதுவும் வேணும்ன்னு என்று வறண்டு போயிருந்த இதழ்களை ஈரப்படுத்தியவள் அவரிடம், உன்..உங்களை அவமானபடுத்த நான் இப்படி செய்யலை ப்ளீஸ் ஆன்டி நம்புங்க என்று எப்படியேனும் தன்னை நிருபித்து விடும் வேகத்தோடு ப்ரீத்தி பேச,

அவள் நிலையை உணர்ந்த வித்யா முகத்தில் சிறு புன்னகை கீற்று, "ப்ரீத்தி நீ மயங்காம இருந்த்திருந்தா தான் நான் ஆச்சர்யபட்டிருப்பேன் இன்பாக்ட் உன்கிட்ட நான் வேற ரியாக்ஷன் எதிர்பார்த்தேன் ஆனா பரவால்ல நல்ல இம்ப்ரூவ்மென்ட்" என்று சொல்ல,

ப்ரீத்தியோ அவர் சொல்ல வருவது புரியாமல் சில நொடிகள் தயங்கியவள் பின், 'ஆ.. ஆனா அவங்க எல்லாம் ... இன்னைக்கு பட் என்னால உங்களுக்கு' எங்கே அனைவர் முன்னிலையில் வித்யாவிற்கு ஒரு அசாதாரண சூழலை உருவாக்கிவிட்டோமோ என்ற தவிப்புடன் ப்ரீத்தி திக்கி திணறி கொண்டிருந்தாள்.

"நான் தான் சொன்னேனேமா எல்லாரும் சாப்பிட்டு கிளம்பிடுவாங்க.. ப்ரெஸ் மீட் இன்னொரு நாள் பார்த்துக்கலாம் ஆனா அதைவிட முக்கியமான விஷயம் உங்கிட்ட பேசணும்" என்றார் தீவிரக்குரலில்.

***

ப்ரீத்தி முன் முன் இரண்டு பத்திரத்தை நீட்டிய வித்யாதேவி ஒன்றை சுட்டி காட்டி இது என் பையனை விவாகரத்து பண்றதுக்கான பத்திரம் இது அவன் பண்ணின தப்புக்காக அவன் மேல கொடுக்க போற கம்ப்ளையின்ட் இதுல நீ எதை தேர்ந்தெடுத்து சைன் பண்ணாலும் எனக்கு சந்தோசம் என்று நிறுத்தி ப்ரீத்தியை பார்த்தவர் அவள் உச்சகட்ட திகைப்போடு அவரை பார்ப்பதை உணர்ந்தவர் தொடர்ந்து,

"நவ் சாய்ஸ் இஸ் யுவர்ஸ் ப்ரீத்தி..!!" ஒரு கட்டாய வாழ்க்கை உனக்கு வேண்டாம் யாருக்கும் பயப்படாம யாரை பத்தியும் யோசிக்காம உன்னை மட்டும் உன்னோட எதிர்காலத்தை மட்டும் யோசிச்சி முடிவு எடு, குழந்தை, சொசைட்டி, குடும்பம், ப்ளாப்ளா எது பத்தியும் கவலை படாத..!! ஒரு பெண்ணோட வாழ்க்கை அவளோட விருப்பபடி தான் அமையனும் எனக்கு தெரியும் நீ ஆதிரையனை நல்லாவே வளர்ப்ப சோ அவனை பத்தின கவலையும் உனக்கு வேண்டாம் என் பையனை டைவர்ஸ் பண்ணினாலும் நான் உன் கூட இருப்பேன் அவனை ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சாலும் நான் உன் கூட இருப்பேன் யாருக்கும் பயப்பாடாம முடிவு எடு" என்றவர் இருகரங்களையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவள் பதிலுக்காக காத்திருக்க தொடங்கினார்.
Semma super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top