'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' Final-3 (இறுதி அத்தியாயம்)

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
அழுக வச்சுட்டீயே பரட்ட .....
அருமையான முடிவு
ஆனால் மனம் தான்
அதை ஏற்க மறுக்கிறது.....
காதலே அறியாத ப்ரீத்திக்கு
காதலால் உருகும் விஷ்வா
காதலை சொல்லி தர சொன்னா....
காலம் முழுவதும் பிரிந்திருக்க வழி
காட்டி விட்டு இருக்கிறான்....
காலக் கொடுமை ஆண்டவா.....
காலம் கனியும்
கன்னி மனம் தெளியும்
கள்வன் சிக்குவான்
கணவனாக மாறுவான்
காத்திருப்போம் அதுவரை....
 

Rudraprarthana

Well-Known Member
Hi ma :love:Nice story but I don't like the end that much, thought later may be their love will develop in another sequel, but author's decision is always final I accept that, will there be a epilogue for this story, feeling very sad for Vishwa character, waiting eagerly for your another beautiful story please come soon, love you sis.:love::love:(y)
Epilogue இருக்கு sis :love:
 

Rudraprarthana

Well-Known Member
அழுக வச்சுட்டீயே பரட்ட .....
அருமையான முடிவு
ஆனால் மனம் தான்
அதை ஏற்க மறுக்கிறது.....
காதலே அறியாத ப்ரீத்திக்கு
காதலால் உருகும் விஷ்வா
காதலை சொல்லி தர சொன்னா....
காலம் முழுவதும் பிரிந்திருக்க வழி
காட்டி விட்டு இருக்கிறான்....
காலக் கொடுமை ஆண்டவா.....
காலம் கனியும்
கன்னி மனம் தெளியும்
கள்வன் சிக்குவான்
கணவனாக மாறுவான்
காத்திருப்போம் அதுவரை....
Ungal nambikkai நிஜமாகும் டார்லிங் :love:
 

Priyaasai

Active Member
Ds
View attachment 11202

விஷ்வாவை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தி 'யூ ஸ்கவுண்ட்ரல்' என்றவாறு தன் கரத்தை அவன் கன்னத்தில் இடியென இறக்கி இருந்தாள் ப்ரீத்தி.

விஷ்வா இறுகிய முகத்துடன் அவளை பார்க்க ப்ரீத்தியின் முகத்தில் அத்தனை ரௌத்திரம்..!!

அவன் முன் சுட்டு விரலை நீட்டியவள், 'Limit your tongue Mr. Vishwadev!! நான் பொறுமையா இருக்கனும்ன்னு நினைக்கிறேன் ஆனா இன்னொருமுறை இப்படி அசிங்கமா பாடினாலோ இல்ல இந்த மாதிரி என்னை நெருங்க பார்த்தாலோ ஒரே அரையோட நிறுத்த மாட்டேன் நடக்குறதே வேற' என்று சீறியவளின் கோப அலைகள் அத்தனை சீக்கிரம் மட்டுப்படவில்லை அவனை நெருங்கியவள்,

'ஏய் உனக்கு என்ன ப்ராப்ளம்..?? நீ திருந்தவே மாட்டியா..?? என்னை கூட்டிட்டு வந்தப்போ தான் இப்படி போர்ஸ்ஸா நடந்துகிட்டன்னா இப்போ என்ன வந்தது உனக்கு...?? நான் தான் பேசணும் பேசணும் சொல்றேனே ஏன் என்னை பேச விட மாட்டிங்கிற..??' என்றவள் அவன் சட்டையை பிடித்து,


'யூ இடியட் !! மனசும் மனசும் சேர்ந்தா தான் இங்க சேர முடியும் அது கூடவா உனக்கு புரியலை, அப்படி என்ன வெறி உனக்கு...?? ஒருவேளை உனக்கு என்னை பிடிக்கலையா..?? அப்போ பிடிக்காதவன் எதுக்குடா என்னை இங்க கூட்டிட்டு வந்த..?? ஏன் லவ் லவ்ன்னு சொல்லி டார்ச்சர் பண்ண ..?? இது தானா உன்னோட லவ்..?? உனக்கு என்ன தான் ப்ராப்ளம் , அதையாவது சொல்லு.. ?? லெட்ஸ் சார்ட் இட் அவுட்..!! அதை விட்டுட்டு ஏன் இப்படி பண்ற..?? இப்படி தான் வைப்பை நடத்துவியா..??' என்று கண்களில் வலியோடு அவனை பார்க்க விஷ்வாவோ அவளை பார்த்தவாறே இதழோரம் துளிர்த்த குருதியை துடைத்து கொண்டிருந்தான் ...

அவன் சட்டையை விடுவித்து நாற்காலில் சென்று அமர்ந்தவளுக்கு மனம் இன்னும் மருகி போனது. அவளறிந்த அவனை கொண்டு அவள் வளர்த்திருந்த கற்பனை என்ன..?? இப்போது நடந்தேறிய நிஜம் என்ன..??

உடனே அவன் முன் சென்று நின்றவள், "யாருடா நீ ..?? உன்னை பார்த்த நாளில் இருந்து என்கிட்டே பொறுக்கியா நடந்துகிட்ட ஆனா இங்க வந்த பிறகு உன் வீட்ல உன்னை பத்தி வேற மாதிரி சொல்றாங்க.., சரி ரெண்டுல ஏதோ ஒன்னு தான் நீ அதை நேர்ல தெரிஞ்சிக்கலாம்ன்னு காத்திருந்தா இப்போ உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி நடந்துக்குற..??
எந்த நீ நிஜம்..?? சொல்லு என்று தலையை பிடித்து கொண்டாள்.

சில நிமிடங்களுக்கு பின் அவனை நெருங்கி, 'உனக்கு என் மேல என்ன கோபம் ..??' என்று கேட்க விஷ்வாவிடம் கனத்த மௌனம்..!!

'வாயை திற தேவ்'

அவனோ சுவரில் சாய்ந்து அமைதியாக அவளை பார்த்திருந்தான்.

அப்போது தான் தன் கடந்த காலம் நினைவில் எழ, "ஒருவேளை அன்னைக்கு மாதிரி இப்பவும் என்னை நீ மோசமானவளா நினைக்கிறியா..??" என்ற போதே அவள் முகம் கசங்கி போனது.

அப்போதும் விஷ்வாவிடம் அழுத்தம்..!!

"நான் தான் உன்கிட்ட என்னை பத்தி எதையும் மறைக்காம சொல்லிட்டேனே அப்புறம் என்ன பிரச்சனை..?? அப்படி உனக்கு பிரச்சனைன்னு
நினைக்கிறவன் எதுக்கு எனக்கு உன் குழந்தையை கொடுத்த..??" என்று கேட்டவள்,

"சரி அதுக்கு நான் தான் காரணம் இல்லைன்னு சொல்லல ஆனா என்னை அப்படியே விட்டிருந்தா நானும் என் குழந்தையும் நிம்மதியா இருந்திருப்போமே அதுக்கும் நீ என்னை விடல என்று மூச்சை இழுத்துவிட்டவள்,

"ஏன்..?? ஏன் டா எனக்கு தாலி கட்டின..? எதனால கட்டாயபடுத்தி இங்க கூட்டிட்டு வந்த..?? இத்தனை பேர் கூட.." என்று ஆரம்பித்தவளுக்கு தலை விண் விண்ணென்று வலிக்க தொடங்கிட அதை பிடித்து கொண்டே, 'அப்போவே என்னை பிடிக்கலைன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே..??' என்று அவன் முகம் பார்க்க,

அவனிடம் ஆழ்ந்த அமைதி..!!

'பேசு தேவ் பேசினா தானே பிரச்சனையை தீர்க்க முடியும்'

அவன் பதிலுக்காக ப்ரீத்தி காத்திருக்க அவனோ
அவளின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காது மௌனமாக நின்று அவளை வெகுவாக சோதிக்க தொடங்கி விட்டான் அதில் கண்களை இறுக மூடி திறந்தவள்,

"நான் தெரியாம தான் கேட்கிறேன் உன்னோட அப்பா அம்மாவை பார்த்து தானே நீ வளர்ந்திருப்ப..?? ஒரு வைப் எப்படி நடத்தனும்ன்னு உனக்கு தெரியாதா..?? இல்ல உனக்கு ஏதாவது ப்ராப்ளம் லைக் *** டிஸ்சாடர் இருக்கா..?? அதான் இப்படி.." என்று மருத்துவராக அவன் குறையை தீர்க்க முயல அதை கேட்க விஷ்வா உடலில் சிறு அதிர்வு.

அப்போதும் அவன் அழுத்தம் சாதிப்பதை உணர்ந்தவள், 'சோ நீ வாயை திறக்க மாட்ட அப்படி தானே..??' என்று கடுமையாக அவனை பார்த்தவள்,

"ஏன்டா ஏன்..?? எனக்கு மட்டும் இப்படி நடக்குது..?? நானும் முடிஞ்ச வரை நடந்த எல்லாமே ஒதுக்கி வச்சிட்டு புது லைப் ஸ்டார்ட் பண்ண என்னால முடிஞ்ச அளவு ஐ ட்ரை பண்றேன், ஐ ஆம் ட்ரையிங் மை லெவல் பெஸ்ட் ஆனா நீ வந்ததுல இருந்து என்னை ஒரு வார்த்தை எப்படி இருக்கன்னு கேட்கலை..??" என்ற போதே அவள் குரல் உடைந்தது,

"தப்பு பண்ணின என்னை நீ மிஸ்யூஸ் பண்ண நினைக்கிறது சரி கிடையாதே ..?? எனக்குன்னு மனசில்லையா அதுக்கு உன் கிட்ட மதிப்பு இல்லையா தேவ்..?? பெருசா உன்னோட வைப்ன்னு சொல்ற..?? இது தான் நீ வைப்பை நடத்துற லட்சணமா..?? உனக்கு தெரியுமா நானும் உன் வைப்பா இருக்க தான் ஆசைபடறேன்..!! ஆனா நமக்குள்ள இருக்க பிரச்னையை தீர்த்து ஒருத்தருக்கு ஒருத்தர் மனம் விட்டு பேசி பிடிச்சதுக்கு அப்புறம் நம்ம லைப் ஸ்டார்ட் பண்ண நெனச்சேன் தேவ்..!! நீ என்னை பேசவே விடமாட்டேங்கிற, இன்னும் உனக்கு என்னை பிடிக்குமான்னு கூட எனக்கு தெரியலை நானும் என்ன செய்ய..??


ஒருவேளை என்னோட கடந்த காலம் நான் ஒரு சராசரி சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு தகுதி இல்லைன்னு நினைக்கிறியா..?? என்று கேட்க

'We are just bedmates then whatelse could you expect from me..??' என்ற விஷ்வா முதல் முறையாக வாய் திறந்து கேட்ட ஒற்றை கேள்வி மூலமாக திரண்டு வந்திருந்த வெண்ணை தாழியை குறி பார்த்து அடித்து அவளை உயிரோடு சிதைத்திருந்தான்.

அவனிடம் இதை எதிர்பாராத ப்ரீத்தி முழுதாக உருக்குலைந்து போனாள். இது அவள் கூறிய வார்த்தைகள் தான் மறுப்பதற்கில்லை ஆனால் அப்போது அவன் அந்நியன் அவளுக்கும் அவனுக்கும் எந்த அறிமுகமும் இல்லாமல் அவளை கட்டாயபடுத்தி கொண்டு இருந்தான் அதனால் அந்த வார்த்தையை அவள் கூறி இருந்தாள். ஆனால் அவனால் எப்படி அவளிடம் அதையே கூற முடிந்தது.

சரண் கீர்த்திக்காக அவள் எடுத்த முடிவு அது..!! ஆனால் அவர்களை ப்ரீத்தி மறந்து பல நாட்கள் ஆகிவிட்டதே, என்று வித்யாதேவி அவர்கள் காதலே அவர்களை சேர்த்து வாழவைக்கும் என்று கூறினாரோ அதில் இருந்து அவர்களை பற்றிய கவலை ப்ரீத்திக்கு இல்லை. இப்போது மனம் முழுக்க விஷ்வா மட்டுமே, அவன் மீது காதல் இல்லை ஆனால் நிச்சயம் பிறக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கிறதே அதனால் தானே அவன் கேட்ட போது ஒப்புக்கொண்டாள்.

ஆனால் அவன் அதை இப்போது கூறிகிறான் என்றால் இன்னும் அவன் மாறவே இல்லை, தன்னை குறித்த அவன் பார்வையும் மாறவில்லை என்று தானே பொருள்..!! அவள் தான் மனதார அவனை வாழ்க்கை துணையாக ஏற்று அவன் குறித்த கற்பனைகளை எதிர்பார்ப்புகளை வளர்த்து கொண்டிருந்திருக்கிறாள்.

ஆனால் அவன் அப்படி இல்லை..!!

கட்டிய மனைவியிடம் நம் உறவு கட்டிலோடு முடிந்தது அதற்கு மேல் உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லை என்ற விஷ்வாவின் வார்த்தைகள் கணவனிடம் காதலை எதிர்பார்த்திருந்த அவளை உயிரோடு கொன்று புதைத்தது.

மனமெங்கும் வெறுமை சூழ இருந்தவளுக்கு அன்னிச்சியாக அவள் கடந்த காலம் நினைவில் எழுந்து ப்ரீத்தியை துவள செய்திருந்தது...!!

தடுமாறி அமர்ந்தவளின் விழிகள் நிலை குத்தி போக அவள் இதழ்களோ தன் போக்கில் "ஐ டிசெர்வ் திஸ்..!! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு இப்படி தான் விதிச்சிருக்கு எல்லாம் நான் செய்த பாவம் தான் வேற என்ன..?? நல்லது செய்தா தானே நமக்கு நல்லது நடக்கும் மத்தவங்களை கெடுக்க நினைக்கிற எனக்கு நல்ல வாழ்க்கை எல்லாம் கானல் நீர் தான்..!! கூட பிறந்தவளோட காதலை அழிக்க நெனச்ச எனக்கு நிச்சயம் இந்த ஜென்மத்துல ஒரு காதல் இருக்க போறது இல்ல.., கண்டிப்பா கிடைக்காது" என்று இதழ்களை அழுந்த பற்றி தனக்கு தானே சொல்லி கொண்டவளின் நெஞ்சில் ஆறா வடுவை ஏற்படுத்திய அவன் வார்த்தைகளை தாள முடியாமல் வெடித்து சிதற அவள் கண்களில் இருந்து கண்ணீர் கங்கையாய் பெருக்கெடுத்தது.

இறுக்கத்துடன் தன்னை கட்டுபடுத்தி கொண்டு நின்றிருந்த விஷ்வதேவை அவள் கண்ணீர் வேரோடு வெட்டி வீழ்த்த அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வெளியேறி பால்கனிக்கு சென்ற விஷ்வாவின் கண்களிலும் கண்ணீர் வரையறை இன்றி வழிந்து கொண்டிருந்தது.

*

'முடிந்தது இத்தோடு எல்லாம் முடிந்தது..!!'

நினைத்ததை நடத்தியே முடித்து வைத்து விட்டான் விஷ்வதேவ்..!! அதோடு மீண்டும் அவள் கண்ணீருக்கு அவன் காரணமாகி இருக்கிறான். அவன் செய்த காரியத்தில் காதல் நெஞ்சம் பற்றி எரிந்து அவனையே சுட்டு பொசுக்கி கொண்டு இருந்தது.

நாசி விடைக்க கண்களில் நீரோடு அமர்ந்திருந்தவள் சில நொடிகளில் தன்னை தேற்றி கொண்டு முகத்தை அழுத்தமாக துடைத்து அவனிடம் வந்து, 'What did you say..?? come again' என்று கேட்க,

அவள் அரவம் கேட்ட நொடியே தன் முகத்தை அழுந்த துடைத்து தன்னை நிதானபடுத்தி இருந்த விஷ்வாவோ அவள் புறம் திரும்பி அலட்டிக்கொள்ளாமல் 'வீ ஆர் பெட்மேட்ஸ்' என்றான்.

'யூ' என்று விடைத்த நாசியுடன்
அவனை நெருங்கியவளின் கரம் மீண்டும் விஷ்வாவின் கன்னத்தில் படிந்து மீள ப்ரீத்தியின் விழிகளிலோ இன்னுமே குறையாத தகிப்பு,

"ஹவ் சீப் யூ ஆர்..!! என்று அவன் மீது வெறுப்பை உமிழ்ந்தவள், இவ்வளவு நாளா (I am not deserving ..!!) உனக்கு நான் தகுதி இல்லன்னு நெனச்சேன் ஆனா இப்போதான் புரியுது நீ எனக்கு தகுதியானவனே இல்ல (You don't deserve me..!!")

'what do you mean..??'

"I mean it , you rascal !! என்று வெறுப்போடு அவனை பார்த்தவள்,
இத்தனை நடந்த பிறகு உன்னை மாதிரி ஒரு ரோக், பெர்வெர்ட் கூட வாழுவேன்னு கனவு கூட காணாத..!! எப்படி எப்படி நீயெல்லாம்.. ச்சை எப்படி என் அத்தைக்கு இப்படி ஒரு மோசமானவன் பிள்ளையா இருக்க முடியும்ன்னு என்னால இப்பவும் நம்ப முடியலை" என்று தலையை குலுக்கி அவனை பார்த்தவள் இப்போது அவன் விழிகள் எங்கோ நிலைத்திருப்பதை கண்டு,

'And you listen carefully' என்று சொடக்கிட்டு அவனை அழைத்தவள் "இட்ஸ் ஓவர் மிஸ்டர் விஷ்வதேவ் !! ஒரு மகனா, பேரனா, அண்ணனா, டாக்டரா இன்னும் என்னவா வேணும்னாலும் நீ நல்லவனா தி பெஸ்ட்டா இருக்கலாம் ஆனா எனக்கு புருஷனா இருக்க தகுதி உனக்கு இல்ல...'

"என்னோட எதிர்பார்ப்பு நீ இல்ல, உனக்கு எனக்கு விருப்பு வெறுப்பு ஒண்ணா இருக்கலாம் ஆனா நீயும் நானும் எப்பவும் ஒண்ணாகவே முடியாது" என்றவளின் விழிகளில் நீர் திரண்டுவிட அதை துடைத்தவாறே குரலை செருமிக்கொண்டு,

'அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் You can never be my man..!!' என்று உறுதியாக கூறிட விஷ்வாவிடம் இதழ்களை எட்டாத புன்னகை.

'You really mean nothing to me ..!! அன்ட் எனக்கு நீ தேவையே இல்ல' என்றவள் அவன் புருவங்கள் முடிச்சிடுவதை கண்டு,

"அதுக்காக உன்னை டிவோர்ஸ் பண்ணுவேன்னு மட்டும் கனவு காணாத..!! ஒருவேளை நான் அப்படி பண்ணினா இன்னொரு பெண்ணையும் கல்யாணம் என்ற பேரில் இப்படி நீ *** டார்ச்சர் பண்ண நானே வழி ஏற்படுத்தி கொடுத்த மாதிரி ஆகிடும் .. சோ கண்டிப்பா அப்படி ஒரு வாய்ப்பு உனக்கு கொடுக்கவே மாட்டேன்'

'அப்போ கடைசி வரை நான் பிரம்மச்சாரியா தான் இருக்கனும்ன்னு சொல்றியா டார்லிங்...??'

'ச்சை' என்று முகம் திருப்பியவள் பின் 'யார் நீயா..??' என்பது போல ஒரு பார்வையை அவன் மீது வீசி இருந்தாள்.

'இப்போ கூட என்னால உன்கூட ஒரே ரூம்ல சகிச்சிட்டு இருக்க முடியும்ன்னு தோணலை ஆனா அத்தை, மாமா, பாட்டி மனசு கஷ்டப்படும் என்னால எதுக்கு அவங்க தேவையே இல்லாமல் வருத்த படனும்ன்னு உன்னை விட்டுவைக்கிறேன்"

"இந்த ரூம்க்கு வெளியே தான் நான் உனக்கு வைப் நீ எனக்கு ஹஸ்பன்ட்..!! பட் இந்த ரூம்குள்ள நமக்கிடையில எந்த சம்பந்தமும் இல்ல மீறி என்னை தொந்தரவு செய்ய நெனச்ச விளைவு ரொம்ப மோசமா இருக்கும்"

'எப்படி..??' என்றவனின் குரலில் அத்தனை நக்கல்.

'தேவ் ஐ வார்ன் யூ, டோன்ட் டெஸ்ட் மை பேஷென்ஸ்..!! இனி யாருக்காகவும் பார்க்க மாட்டேன்... நீ என்கிட்ட இருந்து எவ்ளோ தள்ளி இருக்கியோ அது உனக்கு நல்லது இல்ல மீறின நீ பழைய ப்ரீத்தியை பார்ப்ப..!!' என்றவளின் குரலில் அடுத்த அடி நிச்சயம் உனக்கு கன்னத்தில் விழாது என்ற செய்தி.

'ரியலி பேபி'

"Mind your tongue..!! இன்னொரு முறை இப்படி பேபி, டார்லிங்ன்னு கூப்பிட்டு பாட்டு பாடி சீண்டின.." என்று புருவம் உயர்த்தி வார்த்தையை கட்டுபடுத்த முயன்றவள்,

"உனக்கே தெரியும் நான் ஏன் மெடிசன் பண்ணேன்னு எவனையோ அழிக்க படிச்சதை உனக்கு
implement பண்ண வச்சிடாத என்று அவனை ஏற இறங்க பார்த்தவள் அவனை நெருங்கி , 'இந்த ரூம்ல என் கூட தான இருக்க போற' என்று அவன் விழிகளை ஊடுருவி பார்த்தவள்,

'அனேஸ்தீஷியா இல்லாம உனக்கு சர்ஜரி முடிச்சிடுவேன்' என்று கூற விஷ்வா விழிகளில் திகைப்பு..!! ஆனால் அதையும் மீறிய குறுநகை தவழ்ந்தது அவன் இதழ்களில்.

"So better stay in your limit" என்று கடுமையான குரலில் அவனை எச்சரித்தவளுக்கு தன் வாழ்வு மீண்டும் தோற்று போனதை ஏற்கமுடியாமல் போக ஆற்றாமை பெருகினாலும் அதையும் மீறிய ஆத்திரம் விஷ்வா மீது..!!

"என்னோட கனவு, எதிர்பார்ப்பு, எல்லாம் எப்பவும் கானல் நீர் தான் கைகூடாது எனக்கு இப்போ புரிஞ்சிடுச்சு..!!" என்றவளின் குரல் தழுதழுத்து இனி கணவன் என்ற உறவு தனக்கு இல்லை என்ற நிதர்சனத்தை ஏற்க முடியாமல் பெண் மனம் சுக்குநூறாக உடைந்து போனது.

அவள் குரலில் விஷ்வா தலை திருப்பி பார்க்கவும்,

"உன்னை சொல்லி தப்பில்லை ஏன்னா தப்பு என்னோடது தான்..!! பண்ணின பாவத்துக்கு நல்ல புருஷன், குழந்தைங்க, சந்தோஷமான வாழ்க்கைன்னு எதிர்பார்த்த நான் தானே இங்க முட்டாள்..??" என்று அவனை கேட்க அதில் விஷ்வா முகத்தில் உச்சபட்ச திகைப்பு..!!

'இது எப்போதிருந்து..??' என்று அவன் மனம் துடிக்க அவனையும் மீறி,

'என்ன சொல்ற ப்ரீத்தி' என்றான்.

அவளோ அவன் கேள்விக்கு பதிலளிக்காமல், "இதுக்கு மேல என்னால எங்கயும் ஓட முடியும்ன்னு தோணலை எனக்குன்னு அழகான குடும்பம் கிடைச்சிருக்கு தேவ் என்னோட இந்த வாழ்க்கைக்கு அவங்க மட்டுமே போதும் நீ வேண்டாம் எனக்கு எப்பவுமே வேண்டாம்..!! தயவு செய்து என்னை வாழ விடு ப்ளீஸ் stay away from me" என்றவளின் குரலில் வெறுமை படர மனமெங்கும் ரணம்..!! சொல்லில் வடிக்க முடியா ரணம்..!!

ப்ரீத்தி அறையினுள் செல்ல விஷ்வா அவள் அளித்த அதிர்ச்சியில் ரத்தபசை இழந்து நின்றிருந்தான்.

ஆம் அதிர்ச்சி தான் !! அவள் மனதை அறிந்த அதிர்ச்சி கணவன், குழந்தைகள் என்ற அவள் ஏக்கம் புரிந்த அதிர்ச்சி.., ப்ரீத்தியை நன்கு புரிந்து கொண்டிருப்பதாக நினைத்திருந்தவன் அவளிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை. தனக்கென ஒரு வாழ்க்கையை அவள் அமைக்க மாட்டாள் என்று அவன் நம்பிக்கொண்டு இருக்கையில் ப்ரீத்தி மீண்டும் அவனுக்கு மற்றொரு அதிர்ச்சி அளித்து விட்டாள்.

அவன் மீது அவளுக்கு நல்ல அபிப்பராயம் இல்லாத போது ஏன் இந்த முடிவு..?? ப்ரீத்தியின் பிடிவாத குணம், எடுக்கும் முடிவுகளில் இருக்கும் உறுதி, பல நேரம் சூழல் கைதியாக அதற்கேற்ப அவள் முடிவெடுத்ததில் இப்போதும் சூழல்நிலை கைதியாக மற்றவர்களுக்காக அவள் மாறி இருக்கிறாள் தன்னை ஏற்று கொள்ள முடிவெடுத்து இருக்கிறாள் என்று அவன் நினைத்து கொண்டிருக்க அதில் முற்றிலும் மாறுபட்டு இருந்தாள் ப்ரீத்தி.


பெண் மனதின் ஆழம் அவன் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் என்று அவன் என்ன கனவா கண்டான்..?? இத்தனை நடந்த பிறகு அவளும் ஒரு சராசரி வாழ்க்கைக்கு ஏங்குவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை கூட உணர முடியாத அளவு அவள் மீதான காதல் அவனை ஆட்டி படைத்து கொண்டிருந்தது.

அதிலும் ப்ரீத்தியை யாரும் எதையும் கட்டாயபடுத்தி செய்ய வைக்க முடியாது அவளாக மனமுவந்து செய்தால் மட்டுமே உண்டு என்ற உண்மையை அன்னையிடம் கூரியவனே இன்று அதை மறந்து போனான். எல்லாம் காதல் செய்யும் மாயம் வேறு என்ன சொல்ல..??

இதை தானே அவன் வந்ததில் இருந்தே ப்ரீத்தி பேச வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தாள் ஆனால் அவளுக்கு வாய்ப்பே அளிக்காமல் அவள் வாழ்வை விட்டு அவனை அகற்றும் முயற்சியில் தீவிரமாகி போனான் விஷ்வா.

அந்தோ பரிதாபம் !! காதல் மீண்டும் அவன் கண்ணோடு கருத்தையும் சேர்த்து மறைத்து விட்டது.


அறைக்குள் சென்ற ப்ரீத்தி சில நிமிடங்களில் குழந்தையுடன் மீண்டும் அவனிடம் வந்து நின்றவள் அவன் விழிகளை பார்த்தவாறு, "For your kind information கீர்த்தி இஸ் பிரேக்னேன்ட் நவ்..!!" என்று கூற அது அவனுக்கு புது செய்தி..,

ஆம் இத்தனை நாட்களில் வேலைகளை முடிக்கும் மும்முரத்தில் யாரிடமும் அவனுக்கு பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை.., அதனால் இங்கு என்ன நடக்கிறது என்று பெரிதாக அவன் தெரிந்து வைத்திருக்கவில்லை.

தொடர்ந்த ப்ரீத்தி, "மாமாக்கு கால் பண்ணி ஒரே ஒரு முறை சரண் கீர்த்தியை வீடியோல அவங்களுக்கு தெரியாம காட்ட சொன்னேன் ... யு க்நொவ் அத்தை ஒரு தீர்க்கதரிசி..!! நானே என் கண்ணால பார்த்தேன் அவங்க சொன்ன மாதிரி அவங்களோட காதலே அவங்களை காப்பாத்தி ரெண்டு பேரும் அவ்ளோ அன்னியோனியமா சந்தோஷமா பழைய மாதிரி இருக்காங்க.." என்று கனிந்த குரலில் கூறியவளின் முகத்தில் இப்போதும் தங்கை வாழ்விற்கான மலர்ச்சி மணம் வீசியது.

எதற்கு இந்த விளக்கம் என்று விஷ்வா புரியாமல் அவளை பார்க்க,

"நீ சொன்ன மாதிரி பெட்மேட்ஸ்ன்னு வச்சிகிட்டாலும் அது கீர்த்தி சரண் வாழ்க்கை நல்லபடியா மாறும் வரை தான் அப்படி பார்த்தா நம்ம டீல் எப்பவோ நீர்த்து போச்சு..!! அதாவது கிட்டத்தட்ட ஒரு மாசம் முன்னமே" என்றாள்.

'அப்போ நான் உன்கிட்ட கேட்டப்போ நீ எஸ் சொன்னது..??' என்று அவன் நெற்றியை அழுத்தமாக நீவ,

விழிகளில் கனன்ற அனலோடு அவனை பார்த்தவள் 'உனக்காக இடியட்..!! உனக்காக ..!! நமக்காக...!! உன்னை என் லைப் பார்ட்னரா மனசார ஏத்துக்கிட்டு சொன்னது ஆனா அது தப்புன்னு நீ எனக்கு வலிக்க வலிக்க புரிய வச்சிட்ட' என்றவளின் விழிகளில் இப்போது கோபமும் கண்ணீரும் போட்டி போட்டது.

அத்தை அப்பவே கேட்டாங்க எப்படி ஒருத்தனை பத்தி எதுவும் தெரியாம எந்த நம்பிக்கையில கூட வந்தன்னு..??

"இப்போ புரியுது நான் இங்க உன் கூட வந்தது தப்பு இல்ல உன்கூட வாழ முடிவு எடுத்தது தான் தப்பு...!! அதுவும் வீடியோல என்னை அந்த அளவு அசிங்க படுத்தின உன்கூட வாழ முடிவெடுத்த என்னை செருப்பாலே அடிச்சிக்கனும். என்ன கூட்டிட்டு வரதுக்கு தான் அதை யூஸ் பண்ற நிச்சயம் சோஷியல் மீடியால போட மாட்டன்னு அப்பவே உன்னை நம்பினேன் பாரு அதுவும் என் தப்பு "

"உனக்காவே உன்னை பார்த்த நாளில் இருந்து நீ நடந்துக்கிட்ட விதத்துக்கு ஏதாவது காரணம் இருக்கும்ன்னு உன் பக்கத்தை யோசிச்சி காரணத்தை தேடி தேடி நியாயபடுத்த பார்த்தேன் பாரு அதுவும் தப்பு..!! மொத்ததுல எல்லார் மாதிரி நானும் உன்கூட ஒரு சராசரி வாழ்க்கை எதிர்பார்த்தேன் பாரு அது பெரிய தப்பு..!!

ஆனா ஒன்னு எனக்கு நான் எதிர்பார்த்த அப்பா, அத்தை , மாமான்னு எல்லாமே கிடைச்சது ஆனா முக்கியமான ஒன்னை தவிர என்றதும் விஷ்வா அவளை பார்க்க,

'ஆமா உன்னை தவிர..', என்றவளின் கண்களில் அதுநேரம் வரை கட்டுபடுத்தி கொண்டு இருந்த கண்ணீர் வழிய தொடங்கி இருந்தது.

'அவள் கண்ணீரை இப்போதாவது துடை' என்று அவன் கரங்கள் பரபரக்க அப்போதும் அந்த அழுத்தக்காரன் அசைந்தான் இல்லை. முன்பு போலவே வலியை தனக்குள் விழுங்கி அதே மாறாத பார்வை அவள் மீது.

அவன் முன் அழவே கூடாது என்று திடமாக இருந்தவள் இப்போது பல முறை உடைந்து அழுத போதும் கணவனாக அவன் கரங்கள் நீண்டு அதை துடைக்காததில் அவள் மனம் நைந்து போனது.

'போடா நீ எனக்கு எப்பவும் தேவையே இல்லை' என்ற உறுதியுடன் இப்போது கண்ணீரை துடைத்தவள்,

'you crook !! இனி என் முன்னாடி வந்துடாத' என்று ஒட்டுமொத்த வெறுப்பையும் அவனிடம் உமிழ்ந்துவிட்டு அறையினுள் சென்று மறைந்தாள்.

****
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top