'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' Final 2.2

Advertisement

Priyaasai

Active Member
View attachment 11197

குளியலறையில் இருந்து வெளியேறியவளுக்கு குளிரில் உடல் ஊசியாய் தைத்து கொண்டிருந்தது.. ஈர உடையை கூட மாற்றாமல் தொட்டிலில் அழுது கொண்டிருந்த குழந்தையிடம் சென்றவள் அவனை சமாதன படுத்தியவாறு தூளியை ஆட்ட தொடங்கினாள். ஆனால் அடுத்த சில நிமிடத்திலேயே அவளுக்கு உடல் உதறல் எடுக்க தொடங்க பற்கள் கிடுகிடுவென நடுங்கியது உள்ளங்கைகளை தேய்த்து விட்டவாறே குழந்தையை தூங்க வைத்தவள் உடனே துண்டை எடுத்து தலையை பிரித்து துவட்ட தொடங்கியவள் குளியலறை திறக்கும் சப்தம் கேட்கவும் மாற்று புடவையை எடுத்து கொண்டு உள்ளறைக்குள் அவசரமாக நுழைந்திருந்தாள்.


புடவையை மாற்றி விட்டு தளர்ந்து போய் அமர்ந்தவளுக்கு வீடு வந்து சேர்ந்த்த சில மணி நேரத்திலேயே விஷ்வா சிம்ம சொப்பனமாகி போயிருந்தான்.


வித்யாவின் மகனாக, சௌமி, வர்ஷுவின் அண்ணனாக அவனை பார்த்திருந்தவளுக்கு நிச்சயம் அவனிடம் மனைவிக்கான இடமும் பிரத்தயேகமானதாக இருக்கும் என்று நம்பி கொண்டிருந்தவளை விஷ்வாவின் நடவடிக்கைகள் அச்சுறுத்த கணவனுடனான வாழ்க்கையை கனவுகளோடு எதிர்பார்த்து காத்திருந்த பெண் மனம் வெகுவாக துவண்டு போனது.

பின்னே வந்ததில் இருந்து அவன் சகஜமாக ஒரு வார்த்தை பேசவில்லை, அவள் பேசுவதற்க்கும் இடம் கொடுக்கவில்லை, அவள் விருப்பு வெறுப்பை மதிக்கவில்லை, அனுசரணையாக நடக்கவில்லை, அனைத்திற்கும் மேலாக கட்டாயபடுத்தி தன் விருப்பத்தை முன்னிலை படுத்தும் இவனுடன் எப்படி தன் வாழ்வு இருக்க போகிறது என்று நினைத்த போதே ப்ரீத்தி நெஞ்சில் குளிர் பரவ தொடங்கி விட்டது.

எத்தனை துல்லியமாக கணக்கிட்டு பிரகாசத்தின் சாம்ராஜியத்தை தகர்த்தவளுக்கே அவள் கணிப்புகளை பொய்யாக்கி கணக்குகளை தவிடு பொடியாக்கி கொண்டிருந்தான் விஷ்வதேவ்.

அவன் பார்வையின் தீட்ச்சண்யம், அவன் முகத்தின் இறுக்கம் மீண்டும் மீண்டும் அவள் மனக்கண்ணில் வலம் வர அவன் யார்..?? எது அவன் நிஜமான குணம்..?? என்று புரியாத தடுமாற்றம் பிரீத்தியிடம்.

மொத்தத்தில் அவனது இந்த புது அவதாரத்தில் ப்ரீத்தி விக்கித்து போய் அமர்ந்திருந்தாள்.

ஏன் இப்படி நடந்து கொள்கிறான்..?? என்ன கோபம்..?? எதற்கு இந்த அழுத்தம்..?? ஒருவேளை அவனுக்கு அவளை பிடிக்கவில்லையோ..?? அப்படி என்றால் காதல் என்ற பெயரில் அவளை இங்கு அழைத்து வந்தது எதில் சேர்த்தி..?? என்ற கேள்வி பிறந்தது.

ஒருவேளை தான் சரண் வீட்டில் நடந்து கொண்ட முறையை தன் வாயாலேயே கேட்ட பின்னர் அவனுக்கு தன்னை பிடிக்காமல் போய் விட்டதா..?? மனைவியாக ஏற்று கொள்ள முடியவில்லையா..?? பிறகு ஏன் ..?? என்று பலவாறாக யோசிக்க தொடங்கிய ப்ரீதிக்கு அவனை குறித்த ஒரு முடிவிற்கு வர முடியவில்லை ஒருகட்டத்தில் கடவுளே!! என்று தலையை பிடித்து கொண்டவளை கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்காத நிலையில் நிறுத்தி இருந்தான் விஷ்வதேவ்.

ஒருவழியாக தன்னை தேற்றி கொண்டு ப்ரீத்தி வெளியே வந்த போது அறையில் விஷ்வா இல்லை அதில் ப்ரீத்தியிடம் ஆசுவாச மூச்சு வெளிப்பட்டது.

அவள் கீழே இறங்கி வர குழந்தை ஹாலில் இருந்த தொட்டிலில் உறங்கி கொண்டிருந்தது.

திடீரென 'ப்ரீத்தி' என்ற விஷ்வாவின் குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பினாள்.

விஷ்வா தான் உணவு மேஜை முன் அமர்ந்திருந்தவன் அவளை அழைத்தான்.

பட்டம்மாள் ஹாலில் ஏதோ வேலையாக இருந்தவர் விஷ்வா அழைக்கவும் ப்ரீத்தியை தான் பார்த்திருந்தார். அவர் மட்டுமல்ல வசுந்தராவோடு சேர்த்து இன்னும் சில வேலையாட்களின் பார்வையும் இவர்கள் மீது தான் இருந்தது.

அதை கண்டவள் சிறு பதட்டத்துடன் அவனை நோக்கி சென்றாள்.

இப்போது தான் ப்ரீத்திக்கே ஒரு விஷயம் புரிந்தது.

ஆம் இது நாள் வரை அவளிடம் பேசும் போது அவன் குரலில் அவள் கண்ட மயக்கம், கிறக்கம், குழைவு எதுவும் இல்லை அவளே அறியாத எதிர்பாராத கடுமை அவன் குரலில் கடினம் அவன் முகத்தில் ஆனா ஏன்..?? என்ற கேள்விக்கு தான் அவளிடம் பதிலில்லை.

இதை எல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அவனுடன் அவள் பேச வேண்டும் ஆனா எப்போது அவள் அவனிடம் பேச..?? என்ற சிந்தனையோடு அவனெதிரில் சென்று நிற்கவும்

'சாப்பாடு எடுத்து வை' என்றான் கைபேசியை பார்த்தவாறு.

ப்ரீத்தியும் தட்டை வைத்து அவனுக்கு உணவை பரிமாற விஷ்வா இன்னும் கைபேசியில் மூழ்கி இருந்தான்.

'தேவ்' என்ற அவளது நான்கு அழைப்புகளுக்கு பிறகே என்ன என்பதாக தலையை உயர்த்தி பார்த்தான்.

'சாப்பிடுங்க'

'ஏன்..?? நீ என்ன பண்ற..??'

'என்ன பண்ணனும்' என்று அவனை பார்த்தவள், 'இல்ல ஒண்ணுமில்ல' என்று அவர்களை தொடரும் பார்வையை கவனித்தவாறே மெல்லிய குரலில், 'வேற எதுவும் வேணுமா..??' என்று புரியாமல் கேட்டாள்.'ஊட்டி விடு' என்றான்.'வாட்..??'விஷ்வா புருவம் உயர்த்தி அவளை பார்த்தான்.'இங்க எல்லாரும் இருக்காங்க இங்க எப்படி..??'"காலைல நான் உனக்கு ஊட்டும் போது இதை விட அதிகமான ஆட்கள் இங்க இருந்ததா நியாபகம்" என்று அவன் கூற,'தேவ்''ஜஸ்ட் டூ இட்' என்றவன் தன் கைபேசியை பார்வை இட,மூச்சை இழுத்துவிட்ட ப்ரீத்தி அவனருகே அமர்ந்து உணவு கவளத்தை அவனிடம் நீட்டினாள்.அவன் வாங்கி கொள்ளவும், 'தேவ் ஐ வான்ட் டூ டாக் டூ யூ' என்றாள் மனதினுள் எடுத்த முடிவோடு.அவனோ அதை காதில் வாங்காமல் உண்டு கொண்டிருந்தான்.ப்ரீத்தியின் பொறுமை லேசாக ஆட்டம் காண தொடங்கியது இருப்பினும் இழுத்து பிடித்து, 'தேவ் ஐ ஆம் டாக்கிங் டூ யூ.. ஆர் யு லிசனிங்' என்று அவள் முடிக்கும் முன்னமே,'என்னடி உன் பிரச்சனை..??' என்று அவன் சத்தமாக கேட்டிட அவன் குரலில் 'என்ன வேணும் தம்பி..??' என்று கேட்டுக்கொண்டு பட்டமாவே அங்கு வந்துவிட்டார்.'ஒண்ணுமில்ல நீங்க போங்க' என்றவன் அவளிடம், 'நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டியா..??' என்று அடிக்குரலில் கேட்டவன் நாற்காலியில் இருந்து எழுந்துவிட்டான்.அதை கண்ட ப்ரீத்தி தானும் அன்னிச்சையாக எழுந்து நின்று விட்டாள். ஆனால் கண்கள் கலங்கி போயிருந்தது.அவனோ அதை கண்டு கொள்ளாமல், 'கம் வித் மீ' என்று உரத்த குரலில் கட்டளையிட்டு விட்டு மாடி ஏறினான்.ப்ரீத்தி கலங்கிய கண்களை துடைத்தவள் பட்டம்மாளிடம் குழந்தையை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு சென்றாள்.செல்லும் வழியிலேயே ஒரு முடிவை எடுத்து விட்டவள் அறையை திறந்து உள்ளே செல்ல விஷ்வா கணினியில் அமர்ந்திருந்தான்."தேவ் ஏன் இப்படி பண்றீங்க..?? என்ன ஆச்சு..?? வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்..?? யார் மேல என்ன கோபம்..?? you are humilating me dev but why..??' என்று அவனை கேள்வி கேட்க,விஷ்வாவோ முகத்தை நிமிர்த்தி அவளை பார்த்தவன் 'ஏன் ரூம் இன்னும் டெக்கரேட் பண்ணலை' என்றான்.'வாட்..??' என்றவளுக்கு அப்போது தான் அவள் சரி என்று கூறியது நினைவு வர தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டவள், 'தேவ் நான் என்ன கேட்கிறேன் நீங்க என்ன பேசுறீங்க..??''ஏன் பண்ணலை..??' விஷ்வாவின் குரலில் அத்தனை உறுதி'நான் பேசணும்' இப்போது அவனுக்கு நிகரான உறுதி அவள் குரலில்,'நீ தானே ரெடின்னு சொல்லி வர சொன்ன..??' அவன் தன்னிலையிலேயே நிற்க,'பட் எனக்கு... என்று ஒரு நொடி தயங்கியவள் "ஐ ஆம் யுவர் வைப் தேவ் ஆனா நீங்க..."கணினியை மூடி வைத்து விட்டு அவள் முன் வந்து நின்று 'அப்படியா..??' என்றான் இளக்கமற்ற குரலில்'தேவ் என்ன இது...?? இங்க நீ...' என்றவள் முடிக்கும் முன்னமே'Is it so..?? answer me ' என்றவனின் குரலில் இப்போது கடுமை அதிகரித்தது.ஆற்றாமையுடன் அவனை பார்த்தவள் 'எஸ்' என்று பதிலளிக்கவும்பின்னங்கழுத்தை வருடிக்கொண்டே 'Then do what I say ''தேவ்' என்று அவள் திகைத்து பார்க்க,'you said yes , right...??' என்று அவன் வார்த்தைகளை துப்ப,ப்ரீத்திக்கு தலை வெடித்து விடும் போல் இருந்தது. அவன் குரலிலேயே விஷ்வா அவள் மீது எதனாலோ கோபமாக இருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது ஆனால் அதை எப்படி கையாள்வது என்று தான் புரியவில்லை.இங்கிருந்து சென்ற போதும் சரி அதன் பின் அவளோடு கைபேசியில் பேசும் போதும் சரி இந்த கடினம் அவனிடம் இல்லை ஆனால் இப்போது ஏன்..??

பொதுவாகவே ப்ரீத்தியை மற்றவர்கள் சமாதானம் செய்ததாக தான் வரலாறே தவிர ப்ரீத்தி யாரையும் சமாதானம் செய்ததாக வரலாறே கிடையாது. இப்போது மனைவியாக அவன் கோபத்தை எப்படி தீர்த்து சமாதானம் செய்வது என்று புரியாமல் அல்லாடியவளுக்கு அவன் கோபத்தின் காரணமே எதுவென்று தெரியாத நிலையில் அவளும் அவனை எப்படி சமாதானம் செய்ய..??அப்போது தான் வித்யா கூறியது நினைவு வர அவசரமாக எழுந்தவள் வெளியே செல்ல முற்ப்பட அவள் கரத்தை பிடித்து நிறுத்திய தேவ்,'we are not done !!' (நாம இன்னும் பேசி முடிக்கலை )'தேவ் அத்தை பூஜைக்கு ரெடி பண்ண சொன்ன...''அந்த பூஜையை விட இந்த பூஜை முக்கியம், Stay' என்றவனின் குரலில் அத்தனை சீற்றம்.வேறு வழி இல்லாமல் அமர்ந்தவள் மெல்லிய குரலில் அவனிடம் 'தேவ் எனக்கு.. நான்.. உங்கள பத்தி' என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் ப்ரீத்தி தவித்து கொண்டிருக்க,தன் கபோர்டில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து அவள் முன் போட்டவன், 'திஸ் இஸ் பார் யூ , கெட் ரெடி' என்று கூறிய விஷ்வாவோ அறை கதவை திறந்து ' I'll be back in 2 hours room should get decorated ' என்றவனின் குரலில் அப்பட்டமாக கடுமை தெரித்தது.தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்த ப்ரீத்தி அவனை நிமிர்ந்து பார்க்க 'I mean it !! 'என்றவன் அதற்கு மேல் நொடி நேரமும் அங்கு நிற்காமல் கதவடைத்து சென்று விட்டான்.அவன் செல்லவும் ப்ரீத்தி மனம் நிலை கொள்ளாமல் தவிக்க தொடங்கி விட்டது. அவனை பிடிக்கும் என்ற பதிலையே சொல்ல முடியாமல் போனவளுக்கு இப்போது எப்படி அவனை ஏற்க..?? என்ற கேள்வியே அச்சுறுத்த உடல் உதற தொடங்கி விட்டது.நடுங்கும் கரங்களால் அவன் அளித்த பெட்டியை ப்ரீத்தி திறந்து பார்க்க அதில் அன்று அவன் முகத்தில் ப்ரீத்தி விட்டெறிந்த புடவை அழகாய் வீற்று அவளை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தது.***ப்ரீத்தியை கண்ட நாள் முதலே அவள் சிந்தையை சிறைபடுத்தி செயல்படவிடாமல் செய்பவன் இன்றும் அவ்வாறே செய்திருக்க ப்ரீத்திக்கு அடுத்து என்ன என்று யோசிக்கவே முடியவில்லை.அவன் திரும்பி வரவும் அனைவருக்கும் இரவு உணவை ப்ரீத்தி பரிமாறி இருக்க விஷ்வா சாப்பிட்டு முடித்து குழந்தையை தூக்கி கொண்டவன்,'சீக்கிரம் வா' என்று அவளிடம் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டே சென்றிருந்தான்.விஷ்வா கட்டளையிட்டு சென்ற போதும் ப்ரீத்தி மனமெங்கும் வாழ்க்கை குறித்த பயம் முதல் முறையாக எழ, அவளால் எத்தனை நேரத்தை கடத்த முடியுமோ அத்தனை தூரம் கடத்தி மேலே செல்லாமல் கீழேயே இருந்தாள்.பொறுமை இழந்த விஷ்வா அழைத்து விட்டான்.


ஆனால் ப்ரீத்திக்கு அல்ல வசுந்தராவிற்கு..!!

"ப்ரீத்தி இன்னும் இங்க என்ன பண்ற..?" என்று வர்ஷுவுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த ப்ரீத்தியை தேடி வந்தவர் பேத்தியிடம்,

'வர்ஷு இதென்ன புது பழக்கம்..??' என்று கடிய,

'பாட்டி'

'அதுதான் பகல்ல எல்லாம் சொல்லி கொடுக்குறாலே அது போதாதா..?? எதுக்கு இப்படி ராத்திரில உங்க அண்ணியை பிடிச்சி வச்சி இருக்க..'


'நான் இல்ல பாட்டி அது அண்ணி தான்''எதுவா இருந்தாலும் இனி அவ கிட்ட பகல்ல மட்டும் பாடம் படி இப்போ கிளம்பு 'என்று அதட்டல் போட்டவர் ப்ரீத்தி புறம் திரும்பி,'மணி பத்தாக போகுது விஷ்வா உன்னை அப்பவே வர சொல்லிட்டு தானே போனான் இன்னும் நீ இங்க என்ன பண்ற..?''பாட்டி வர்ஷுக்கு எக்ஸாம்''அவளுக்கு சொன்னது தான் உனக்கும் கிளம்பு' என்றார் அதிகாரமாக அவள் கையில் பால் செம்பை திணித்து.இதற்கு மேலும் தாமதிப்பதோ தப்பிப்பதோ முடியாது என்பது புரிபட, இதோ அவள் எதிர்பார்த்த அத்தருணம் வந்துவிட ப்ரீத்தியை அச்சம் முழுதாக கவ்வி பிடித்திருக்க எண்ணிலடங்கா சஞ்சலங்களுடன் நகர மறுத்த கால்களை கடினப்பட்டு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவளுக்கு மனமெங்கும் பாரமேரி போனது.இரண்டாம் தளத்தை அடைந்து விட்டவளின் மனதில் என்றும் இல்லாத பயம், பதட்டம், இதயத்துடிப்பு அதிகரித்ததில் நெஞ்சுக்குழி ஏறி இறங்க அவர்கள் அறையை பார்த்தாள். அவள் இத்தனை நாட்களாக பயன்படுத்திய அறை தான் ஆனால் உள்ளே செல்ல முடியாத நிலையில் அவள்..!! அறையின் கதவு சாற்றபட்டிருக்க தூரத்தே நின்றிருந்தவளின் கால்கள் இதற்க்கு மேல் நகர்வேனா என்று சண்டித்தனம் செய்தது.கையில் இருந்த பால் செம்பை பார்த்தவளுக்கு ஏனோ திருமணம் முடித்த பின் முதல் முறையாக கணவனை சந்திக்கும் போது பெண்களிடம் ஏற்ப்படும் அதே படபடப்பு, பரிதவிப்பு பெண்ணிடத்தில்..!!இதே இரு மாதங்களுக்கு முன்பிருந்த ப்ரீத்தியாக இருந்திருந்தால் எந்த தயக்கமும் கலக்கமும் இருந்திருக்காது இவள் முற்றிலும் வேறானவள் அல்லவா...?? விஷ்வாவிடம் ஏற்கனவே அவளை பற்றி எல்லாம் கூறி விட்டதில் இப்போது எந்த கலக்கமும் இல்லாமல் சாதாரண ஒரு பெண்ணாக கணவனுடனான வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்பு மட்டுமே அவளிடம்.

அதிலும் விஷ்வாவுடன் தான் அவள் வாழ்வு என்று முடிவு எடுத்த பின் இந்த ஒன்றரை மாத காலத்தில் அவனை கணவனாக மனதில் பதிய வைக்க முயன்று வெற்றியும் கண்டிருப்பவளுக்கு எப்படி விஷ்வாவின் மனதை காயபடுத்தாமல் அவனிடம் பேசி இருவருக்கும் இடையிலான பிரச்சனையை தீர்த்து வாழ்வை தொடங்குவது என்ற சிந்தனை தான்.

சிந்தனை வயப்பட்ட ப்ரீத்தி ஹாலில் நின்றிருக்க திடீரென விளக்குகள் அணைந்தது.

அவள் என்னவென்று உணரும் முன்னமே அவள் முதுகில் விஷ்வாவின் கரம் ஊர்ந்து உஷ்ணம் அதிகரித்திட அதை உணர்ந்து ப்ரீத்தி சட்டென திரும்பவும் தன் அச்சாரத்தை அவளில் பதித்தன விஷ்வாவின் உதடுகள்..,

'
செல்லமே இது இரவா பகலா

தெரிந்து கொள்வேன் உடனே தொடவா
'


என்று பாட்டுடனே தன் ஊர்வலத்தை தொடங்கி அவள் முகமெங்கும் முத்தமிட்டு சென்றவன் இதழ்கள் இறுதியாக அவள் காதில் அசைந்தாடிய ஜிமிக்கியில் தஞ்சமடைய.. உடல் இறுக நின்றிருந்த ப்ரீத்திக்கு ஏதோ புலியின் குகையில் அதனிடம் தனியாக சிக்கிகொண்ட நிலை தான்.

பந்தைய குதிரையின் வேகத்தில் ஓடும் மனதை இறுக்கி பிடிக்க முடியாமல் கையில் இருந்த பால் செம்பை இறுக்கி பிடித்தவாறு ப்ரீத்தி நிற்க,,

'
உயிரை தின்னும் காதல் தீயே


இனிய கொடுமை ….. நீயே நீயே...'


என்றவாறே அவளை விஷ்வா தன் கைகளில் ஏந்திட ப்ரீத்தியின் முகம் அவன் வெற்று மார்பில் அழுத்தமாக உரசியது.

வெப்பத்தின் மறுவடிவமாய் அவன் !!

அவன் உஷ்ணம் தாங்காது தகித்த பெண்ணவள் இதயத்துடிப்பு தாளம் தப்பி போக ப்ரீத்தியின் கண்கள் அன்னிச்சையாக மூடிக்கொள்ள இதழ்கள் 'தே..வ்..' என்று முனுமுனுத்தது குனிந்து அவளிதழை பட்டும் படாமல் தீண்டியவன்,

'
அழகுக்கு நீயோர் அகராதி போல


அதன் அர்த்தம் யாவும்

நான் அறிந்துக்கொள்ள வேண்டும்'

என்று பாடலை தொடர அவன் கரமோ அவள் மேனியில் அழுத்தம் கூட்டி இருந்தது... லீ..வ்.. மீ.. என்றவாறு அவன் கையில் இருந்தவள் இறங்க முற்ப்பட ப்ரீத்தி கையில் இருந்த பால் தழும்பியது.

பாடலை நிறுத்திய விஷ்வதேவ்வின் பார்வை மனைவயின் மீது கூர்மையாக படிந்திட அச்சத்தில் மூடியிருந்த ப்ரீத்தியின் கண்கள் அப்போதும் திறக்காமல் இறுக்கமாக இருந்தது ஆனால் அவனிடம் இருந்து விடுபடும் முயற்சியை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

'பால் சிந்துது மொத்தமா கொட்டிட போற அப்புறம்' என்ற விஷ்வாவின் அடுத்த வார்த்தைகள் அவள் செவியோடு சென்று சேர அதை கேட்ட பெண்ணவளின் முகம் வெளிறி போனது.

சட்டென கண்களை திறந்த ப்ரீத்தி "தேவ் ப்ளீஸ் நான் பேச.." என்று அவசரமாக அவனை பார்க்க 'அப்புறம் பேசலாம்' என்ற விஷ்வாவின் பார்வை அவள் மேனியில் நிலைகுத்தி இருப்பதை கண்டு அதன் பின் அவனிடம் இருந்து விலகும் முயற்சியை கைவிட்டாள்.

அறையினுள் நுழைந்தவன் அவளை படுக்கையில் விடவும் சற்று ஆசுவாசமாக உணர்ந்தவள் 'தேவ் ஒரு நிமிஷம் நான்..' என்ற போதே அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து இரவு விளக்கை மிளர செய்தவன் ப்ரீத்தியை நோக்கி செல்ல சில நொடிகளுக்கு பின்பே மெல்லிய ஒளியில் அவன் வரிவடிவம் ப்ரீத்தியின் கண்களுக்கு பழக அவனது ஒவ்வொரு அடிக்கும் அவளது இதயம் அதிவேகமாக துடிக்க தொடங்கியது.

அவள் மனமெங்கும் அச்சமும் தவிப்புமே போட்டி போட்டு விரவியது ..!!

விஷ்வாவோ அவளருகே அமர்ந்து அவள் கரத்தில் இருந்த செம்பை வாங்கி மேஜையில் வைத்தவன் இதுநேரம் வரை அதை தாங்கி பிடித்து கொண்டிருந்த அவளது கரத்தை ஏந்தி அவள் உள்ளங்கையில் தன் அதரங்களை அழுத்தமாக பதித்து மீண்டவன் மெல்ல அவள் கரங்களை அலங்கரித்து கொண்டிருந்த வளையல்களை ஒவ்வொன்றாக கழற்ற 'தேவ் நா.. நான்' என்று கைகளை இழுத்து கொள்ள பார்க்க முடியவில்லை.

அவள் கையை விடாமல் 'என்னடி உன் ப்ராப்ளம்..??' என்றான் தகிக்கும் விழிகளோடு.

அவன் விழிகளை சந்தித்தவளுக்கு ஒரு நொடி பேச்சு மறந்து போக எச்சிலை கூட்டி விழுங்கியவள், 'நா.. எனக்கு பேசணும்'

'அப்புறம் பேசலாம் ' என்றவனின் இதழ்கள் அவள் தோளில் அழுத்தமாக முத்தமிட்டு முன்னேறி கொண்டிருந்தது.
Nice
 

monies

Well-Known Member
Nee nebachada tan nadakum pola ye
Dev nalla ila jolliten
Telivanx pullaya villi akama vida maata pila
Unga amma sevula onnu vitta sariya pogum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top