'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue - 3

Advertisement

n.palaniappan

Well-Known Member
'என்னடா..?? ஏன் சாப்பிடமா ஏதோ யோசனையில் இருக்க..??' என்று விஷ்வா கேட்க,

அவளோ மனதினுள் இது நாள் வரை கேட்ட பாடல்களை ஒட்டி பார்த்து கொண்டிருந்தாள்.

'ப்ரீத்தி'

'ஹான்'

"என்ன யோசனை..??"

'ஒண்ணுமில்ல'

'அப்புறம் என்ன சாப்பிடு'

ஹ்ம்ம் என்றவளுக்கு ஒரு கவளம் உள்ளே செல்வதே பெரும் பாடாகி போக மனதினுள் பாடல்களின் ஊர்வலம்

"ப்ரீத்தி ஒன்னு நீ யோசனையை விட்டுட்டு சாப்பிடு இல்ல நீ யோசி நான் ஊட்டி விடறேன்"

இல்லலல நானே சாப்பிடுறேன் என்றவள் யோசனையை கைவிட்டு கடகடவென சாப்பிட்டு முடித்து கை கழுவ செல்ல அவள் மனதில் சட்டென உதித்தது அந்த பாடல்.., விஷ்வா பாத்திரங்களை எடுத்து வைத்து கொண்டிருக்க தானும் அவனுக்கு உதவிவாறே வெகு ஜாக்கிரதையாக பாத்திரத்தில் பார்வையை பதித்தவண்ணம்,"உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது ...

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது ...

மண்ணில் ஏன் ?? ஏன் ?? ஏன் ?? நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூ பூத்ததே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும் போ.."

என்று அவள் பாடிகொண்டிருக்க விஷ்வாவோ இமைக்கவும் மறந்து அவளை தான் பார்த்திருந்தான். அவன் பார்வை தன்னை துளைப்பதை கண்டவளுக்கு வார்த்தை மறந்து சண்டித்தனம் செய்தது,

'போ... து...' என்றவளுக்கு அதற்க்கு மேல் காற்று தான் வந்தது அதுவும் அவன் பார்வையில் மிக வேகமாக..!!

விஷ்வாவோ இன்னும் கூர்மையாக அவளை பார்க்க அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாது அவள் தவித்து, தவிர்த்து தலை குனிந்தாள்.

அப்போது தான் ஒருவேளை அவன் தன்னை கண்டுகொண்டானா..?? அதனால் தான் இந்த பார்வையா என்று அவள் எதிர்பார்ப்புடன் பார்க்க,

விஷ்வாவோ இருகரங்களையும் சேர்த்து கை தட்டியவாறே அவளருகே வந்தவன் குனிந்து,

"வாவ் நீ இவ்ளோ அழகா பாடுவியா..?? முறையா கத்துகிட்டியா..?? சுருதி சுத்தமாக இருக்கு ஆனா சங்கதி மட்டும் சில இடத்துல சரியா விழலை " என்று ஏதோ சூப்பர் சிங்கர் ஷோவிற்கு தலைமை தாங்குபவன் போல அவள் பாட்டை மதிப்பிட்டு கொண்டிருந்தான்.

அதை கேட்ட ப்ரீத்தியின் முகம் உணர்வுகுவியலாகி போனது.

ஆனால் விஷ்வா அத்தோடு நிறுத்தாமல் மேலும் அப்பாடல் குறித்து பேச தொடங்கி அவளுக்கு இசை குறிப்புக்கள் அளித்து அவளை மீண்டும் பாடலை பாட வைத்து, அதில் திருத்தம் செய்து என்று அடுத்த அரைமணி நேரத்திற்கு அவளை அசையவிடாமல் வகுப்பே எடுத்துவிட்டான்.

இறுதியில் ப்ரீத்தி தான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் மறையும் வரை கட்டுபடுத்தி கொண்டு இருந்தவனுக்கு அதற்கு மேலும் முடியாமல் போக அட்டகாசமாக சிரிக்க தொடங்கிவிட்டான்.

அடுத்த நாள் காலை இருவருக்குமே விடுமுறை என்பதால் காலை உணவை முடித்த விஷ்வா வெளியே தோட்டத்திற்கு செல்ல இங்கே ப்ரீத்திக்கு தான் நிலை கொள்ளவில்லை. எப்படி காதலை சொல்வது ஒருவேளை நேற்று நாம் தான் பாடலை தவறாக தேர்வு செய்துவிட்டோமோ..?? என்று எண்ணியவள் வேறு என்ன பாடல் என்று யோசிக்க தொடங்கி பின் இணையத்தில் தேடி என்று இருபது நிமிஷத்திற்கு பின் வெளியே தோட்டத்தில் நீ ஊற்றி கொண்டிருந்தவனிடம் சென்றாள்.

அவளை கண்டதும் விஷ்வாவின் அதரங்கள் என்றும் போல அவளுக்கான ப்ரேத்யேக புன்னகையை சிந்த,

ப்ரீத்தியோ குழப்பத்துடனே புன்னகைத்திருந்தாள். நிச்சயம் இந்த வரிகளாவது அவனுக்கு தன்னை உணர்த்துமா..?? என்று தவித்தவள் சில நொடிகளுக்கு பின் மூச்சை நன்கு எடுத்து விட்டு,

"முடியும் ப்ரீத்தி யு கேன்" என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள்.

" நீ லைன்ஸ் மறக்காம பாடினா போதும், நேத்து சொன்ன கரெக்ஷன்ஸ் நியாபகம் வச்சிக்கோ இல்ல இன்னைக்கும் கிளாஸ் கன்பார்ம், அண்ட் முக்கியமா பாடும் போது தேவ் பார்க்காத நேத்தே அதனால தான் சொதப்பிடுச்சி " என்று மீண்டும் வரிகளை தனக்குள் ஒத்திகை பார்த்தவள் இதழ்களை ஈரபடுத்தி குரலை செருமிக்கொண்டு,

'மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கிது புரியாதா..?? இலக்கணம் தெரியாதா..??'

என்று படபடத்த நெஞ்சை ஒரு கையால் பிடித்து கொண்டு எதிரே இருந்த புல்வெளியை பார்த்தவாறு பாட மாறு புறம் இருந்தவன் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி விட்டு அவளை அழுத்தமாக பார்த்திருந்தான். ப்ரீத்தி பாடலை நிறுத்த விஷ்வா அடுத்த வரியை தொடர்ந்தான்....

'சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்'

அவன் பாடவும் அதை எதிர்பாராத ப்ரீதிக்கு மனதெங்கும் மத்தாப்பு சிதறல் ஒருவேளை அவன் தன்னை புரிந்து கொண்டானா..?? என்ற ஆவல் அதிகரித்தது அவளுள்..!! அதை தெரிந்து கொள்ள பாடலின் அடுத்த வரியை தொடர்ந்தாள்.

'வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும்'

என்று கையில் சிக்கிய செடியில் இருந்து இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து போட்டுக்கொண்டே அவள் எதிர்பாட்டு பாட,

'மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே...'

என்று இருவருக்கும் இடையில் பாடல் தொடர இறுதியாக ப்ரீத்தி

"உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சி"

என்று பாடலிலேயே தன் மனதை வெளிப்படுத்தி தவிப்புடன் அவன் பதிலுக்காக காத்திருக்க விஷ்வாவோ,

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

என்றவாறே அவள் அருகே வந்து நெருங்கி நின்றிருந்தான்.

நூலளவு இடைவெளியில் நின்றிருந்தவனின் மூச்சு காற்று அவள் முகத்தில் படிய அவன் நெருக்கத்தை எதிர்பாராத ப்ரீத்தியின் தேகத்தில் அன்னிச்சியாக மெல்லிய நடுக்கம் பரவ தொடங்கியது.

நெஞ்சம் படபடக்க அவனை பார்க்க முடியாமல் விழிகள் அலைபாய நின்றவளின் விழிகள் அதற்கு மேலும் முடியாது என்பது போல நிலம் நோக்கி செல்ல அதை கண்டவனின் அதரங்கள் விரிய விஷ்வாவின் விழிகளில் ரசனை பொங்கியது.

'ப்ரீத்தி' என்றவனின் மெல்லிய குரலே அவளை மயக்கிட,

ப்ரீத்தியின் நெஞ்சுக்குழி ஏறி இறங்க சட்டென வியர்வை முத்துக்கள் உண்டாகி அவள் நெற்றியில் இருந்து இடது புறமாக வழிந்து கொண்டிருந்தது அதை தன் விரலால் சுண்டி விட்டவன், அவள் முகத்தை நிமிர்த்த இமைகள் இரண்டும் தழுவாது அவன் மீது நிலைக்கவிட்டவளின் இதழ்கள் துடித்து கொண்டிருந்தது.

அவள் சுவாசத்தின் வேகம் அதிகரிக்க அது விஷ்வாவின் நெஞ்சில் முட்டி மோதியது.

'ஈசி ஈசி.'. என்று இரு விரல்களால் அவள் இதழ்கள் இரண்டையும் அழுத்தமாக சேர்த்து பிடித்தான்.

ப்ரீத்தியோ அதை கூட உணர முடித்த அளவு அவன் வசத்தில் ஸ்தம்பித்து போயிருந்தாள்.

'என்ன இப்படி நடுங்குற வெதர் ப்ளசன்ட்டா தானே இருக்கு ஏன் உனக்கு குளிருதா...??' என்றவன் கரம் அவளை இடையோடு சுற்றி வளைத்து தன்னோடு சேர்த்தணைக்க இப்போது அவள் மொத்தமாக அவன் மீது.

'ப்ரீத்தி' என்று அவனழைக்க

எங்கே அவளுக்கு கேட்டது..?? பாந்தமாக அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டவளின் ஐம்புலன்களும் அவன் கட்டுபாட்டில்.

'உள்ள போலாமா..??'

அவன் அணிந்திருந்த டிஷர்ட்டை மீறிய அவன் மார்பு சூட்டின் கதகதப்பில் மேலும் அவனோடு ஒன்றியவளின் கரங்களும் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டது.
So sweet
 
Priyaasai

Active Member
Sem

semma super
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top