'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue 2

Advertisement

Priyaasai

Active Member
அவனை அருகே இருந்து பார்த்து கொண்டிருக்கும் ப்ரீத்திக்கு இந்த ஒரு வருட காலத்தில் அவன் மீதான அவள் பிம்பங்கள் அத்தனையும் சுக்கு நூறாக உடைந்து போனது.

அவள் எதிர்பார்த்த ஆண் அவனையன்றி வேறு யாராக இருந்துவிட முடியும்..?? என்று அவள் மனமே அவனுக்காக அவளிடம் வாதிட தொடங்கி விட்டது.

பின்னே எது அவன் நிஜமான குணம் என்று புரியாமல் அல்லாடிக்கொண்டு இருந்தவளுக்கு இங்கு அயல்நாட்டில் அதன் கலாச்சாரத்திலும் தன்னிலை வழுவாது கெடுவதற்கு எத்தனை வாய்ப்புகள் இருந்தும் சுயஒழுக்கத்தை மூச்சாக சுவாசிப்பவனின் பேச்சு, செய்கை, பார்வை, பாடல் என்றுமே வரம்பு மீறியதில்லை.

ஒரு வருடமாக அருகே இருந்து பார்க்கிறாளே நடிப்பிற்கும் நிஜத்திற்கும் வித்யாசத்தை ப்ரீத்தியை விட வேறு யார் சரியாக அடையாளம் காண முடியும்...??

இருபத்து நான்கு மணி நேரமும் கல்லூரியிலும் சரி அவளோடு தங்கி இருக்கும் இடத்திலும் சரி அவனை அருகே இருந்து பார்ப்பவளுக்கு நிஜத்திற்கும் பொய்க்குமான வித்யாசம் தெரியாதா என்ன..??

அவனது ஒவ்வொரு அசைவிலும் வித்யாவின் வளர்ப்பு மிளிர்ந்து கொண்டிருப்பதை கண்டு கொண்டவளுக்கு உயிர் மீண்டிருந்தது.

அவன் மனைவி புத்திசாலி அதனால் எங்குமே இது நான் , என் குணம் இது, என் மேல் நம்பிக்கை இல்லையா..? என்னை நம்பு என்று அவன் தரப்பை ஆதாரம் கொண்டு எங்குமே நிருபிக்க முயலாமல் அவள் முன்னே அவனை முழுதாக சமர்பித்து விட்டான்.

ஆம் அவனை கண்டுக்கொள்ள அவன் சுயம் அறிய மனைவியின் முன் அவனை சமர்ப்பித்து விட்டான்.

நீயே என்னை ஆராய்ந்து மதிப்பிட்டு கொள்..!! என் விளக்கங்கள் கொடுக்காத நம்பிக்கையை விட உன் உள்ளுணர்வு கொடுக்கும் என்று அவனை அவள் கண்டுகொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி விட்டு தன் வேலையை பார்த்து கொண்டிருந்தான் விஷ்வா.

குளிர் அதிகரிக்க தொடங்கிட குறிப்பிட்ட இடைவெளியில் நடந்து கொண்டிருந்தவர்களின் விரல்கள் உரச தொடங்கி மெல்ல இருவரின் நெருக்கம் குறைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் ப்ரீத்தி அவன் வலக்கரத்தை சுற்றி தன் கரத்தை எடுத்து சென்று அவனை இறுக்கமாக பிடித்து கொண்டு நடந்தாள்.

ஆம் நண்பர்கள் என்று ஆன பிறகே சிறு சிறு தொடுகை அவர்களுக்குள் தவிர்க்க முடியாததாகி போயிருந்தது. வெளியே செல்லும் போது இப்படி அவன் கரம் கோர்த்து செல்வது அவளுக்கு மிகவும் பிடித்தம்..,

பொதுவாகவே ஆண்களின் பார்வையில் கண்ணியம் வேண்டும் என்று நினைக்கும் ப்ரீத்திக்கு அவனை வட்டமிடும் பெண்களை தூர நிறுத்து விஷ்வாவின் பார்வையும் செயல்களுமே அவன் ஒழுக்கத்தின் அளவை எடுத்து காட்டி இருந்தது.

ஆனால் இங்கு பிரச்னையே ப்ரீத்தி காதலிக்க தொடங்கிய பின்னரும் மற்ற பெண்களிடம் கடைபிடிக்கும் எல்லையை அவன் மனைவியிடமும் தொடர்வதை கண்டு கொண்ட பின்பு தான்..!!

இதோ இப்போது அவள் அவன் கரம் கோர்த்த பின்பும் அவளை அணைக்காமல் உடன் வருவது போல...!!

பல நேரம் விஷ்வாவிடம், "டேய் நான் உன் பொண்டாட்டிடா !!" என்று உரத்த குரலில் கத்த வேண்டும் போல இருக்கும் ப்ரீத்திக்கு.


****

கைபேசியில் பேசிக்கொண்டு இருந்தவன் அவள் இறுக்கத்தை உணர்ந்து, 'என்னடா..??' என்றான்.

என்ன தான் அவன் வாய் திறந்து காதல் மொழி பேசாது போனாலும் பல நேரம் எழிலிடம் நாதனிடம் அவள் கண்ட பேரன்பும் பாதுகாப்பும் அவனது 'என்னடா' என்ற இந்த ஒற்றை வார்த்தை அவளுக்கு கொடுத்து விடும்.

தந்தையின் அன்பையே அறியாதவள் இங்கு வந்த பின்னர் விஷ்வாவிடம் முதன் முதலில் உணர்ந்தது அதை தான்..!!

தந்தையின் அன்பு, பாதுகாப்பு மட்டுமல்ல அன்னையாக, தோழனாக, ஆசானாக அவளின் அனைத்துமாக அவன் இருப்பதை வார்த்தைகள் இன்றி செய்கைகளால் அவளுக்கு அவனை உணர்த்தி கொண்டிருந்தான்.

காதல் எனும் உளி கொண்டு பெண் மனதை சிறுக சிறுக செம்மைபடுத்தி அதில் முழுதுமாக தன்னை விதைத்திருந்தான். அது செழித்து வளர தேவையான அனைத்தையும் அவளறியாமலே பக்குவமாக தூவி அறுவடைக்காக காத்திருக்கிறான்.

அவளோ சுற்றுபுறத்தை பார்த்தவாறே, 'தேவ் இன்னைக்கு குளிர் அதிகமா இருக்கு போல' என்றவாறே அவனோடு இன்னும் ஒன்றி நடக்க,

கைபேசியை அணைத்த விஷ்வாவோ 'இவ்ளோ கிட்ட வந்து கொல்லாதடி' என்று மனதினுள் நொந்து கொண்டவன் அவள் தோள் சேர துடித்த கரங்களை கட்டுபடுத்தி கொண்டு,

'அப்படியா எனக்கு தெரியலையே..??' என்றான் அவள் நெருக்கத்தில் பற்றி கொண்ட காதல் தீ குளிரை ஈர்த்து அவன் தேகத்தில் அனல் கூட்டி இருப்பதில்.

"நீங்க இங்க இருந்து பழக்கம் ஆனா எனக்கு தான் கிளைமேட் சேஞ் ஒத்துக்கல போல" என்றவள் இங்கு வந்த புதிதில் அதை அவன் கூறியபோது காதில் வாங்காமல் இதை விட அதிக குளிரையும் தனியாகவே சமாளித்தவள் தான்..!!

ஆனால் இப்போது ..??

ப்ரீத்தி அவன் கரம் கோர்த்து நடந்தாலும் விஷ்வா பொதுவெளியில் மனைவியிடம் கண்ணியம் காப்பான்.

அவர்கள் எதிரே சூசன் வந்து கொண்டிருப்பதை கண்ட விஷ்வா சட்டென அவளை இடையோடு சேர்த்து அணைத்து நடையை தொடர திடீரென்ற அவன் தொடுகையை எதிர்பாராத ப்ரீத்தியின் முகம் அந்தி வானமாக சிவந்து போனது. மெல்ல அவனை தலை உயர்த்தி பார்க்க இப்போது இன்னுமே அழுத்தம் கூட்டி அவளை தன்னோடு சேர்க்க எதிரே வந்து கொண்டிருந்த சூசனின் பார்வை வேறு புறம் திரும்பியது.

புகழ் பெற்ற பாடகனான இருந்தாலும் விஷ்வா ஒரு பெண்ணோடு கரம் கோர்த்தது போல ஒரு புகைப்படத்தை கூடஇணையத்தில் பார்க்க முடியாது. செல்பி என்று வந்து நிர்ப்பவர்களிடம் கூட அவன் கடை பிடிக்கும் இடைவெளியும் அவன் இதழ்கள் அவன் ஏற்படுத்தி இருக்கும் வரையறையை தாண்டி ஒரு சென்டிமீட்டர் கூட அதிகமாக விரியாது.

இப்போது அவன் ப்ரீத்தியை அணைத்த விதத்திலேயே சூசனுக்கு அவர்கள் நிலை புரிய வைத்திருந்தான்.


ப்ரீத்தியின் முகத்தில் படர்ந்த சிவப்பு விஷ்வாவை வெகுவாக சோதிக்க தொடங்கி மூச்சை இழுத்து விட்டவனுக்கு அவனை கட்டுபடுத்துவது அரும்பாடாகி போனது.
ப்ரீத்தி மட்டுமல்ல விஷ்வாவுமே காதலின் சுக அவஸ்த்தைகளை துளி துளியாக அனுபவித்து கொண்டிருந்தான்.

ப்ரீத்தி நாற்காலில் அமர விஷ்வா "கிளைமேட் ஒத்துக்கலையா அதான் உனக்கு அடிக்கடி தலைவலி வருது போல..?? ஜுரம் இருக்கா..?? " என்று கேட்டவன் தன் கையை அவள் கழுத்தில், நெற்றியில் வைத்து பார்க்க கண்களை இறுக மூடிய ப்ரீத்தியின் தேகம் சிலிர்த்து அடங்கியது.

'டெம்பரேச்சர் இருக்கே ..!! என்றவனுக்கு அவன் தொடுகை மனைவியை பாதிப்பது புரிய இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

'ஆர் யூ ஓகே..!!' என்று கேட்க ப்ரீத்தியோ அவனது முதல் ஸ்பரிசத்தை எதிர்பாராது மோன நிலை கலையாது உதட்டில் உறைந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

'ப்ரீத்தி' என்று அவளை உலுக்க,

அப்போது தான் கனவில் இருந்து விழித்தவள், 'ஹான் என்ன தேவ்..??' என்றவளின் முகத்தில்

"டெம்பரேச்சர் இருக்கு ப்ரீத்தி மே பீ ஃப்ளு இருக்க சான்சஸ் இருக்கு ..!! சரி வா முதல்ல டெஸ்ட் பண்ணிடலாம்" என்று அவளை அழைக்க,

வாட்..?? ஃப்ளு வா யாருக்கு..??

'உனக்கு தான்' என்று அவன் கரம் மீண்டும் அவள் கழுத்தில் பதிய இன்னுமே வெம்மை அதிகரித்தது அவளிடம்.

அவளோ ' அதெல்லாம் இல்ல தேவ் ' என்று மறுக்க,

'நோ நோ உனக்கு வேற அடிக்கடி தலைவலி வருது கண்டிப்பா ஃப்ளு சிம்ப்டம்ஸ் தான்' என்று இதழோரம் துடிக்க அவளை பார்த்தான்.

'அச்சோ அப்படி எதுவும் இல்ல'

'என்னது தலைவலியா..??'

'ஆமா..'

'தலைவலி இல்லையா..?? போய்டுச்சா..??'

தன்னிலையில் அவள் தவிக்க அவனோ அதை ரசித்து கொண்டிருந்தான்..,

'ப்ளீஸ் தேவ் இப்போ காபி மட்டும் வாங்கிட்டு வாங்களேன்',

' அப்போ தலைவலி '

மூச்சை இழுத்து விட்டு 'அது இருக்கு' என்று தலையை பிடித்து கொண்டு 'ப்ளீஸ் தேவ்' என்று அவனை பார்க்க,

வாய்விட்டு சிரித்தவன் 'சரி இரு நான் வாங்கிட்டு வரேன்' என்று அவன் உள்ளே சென்றான்.


இருவருக்குமான காபியை வாங்கி கொண்டு விஷ்வா வரும் வரை ப்ரீத்தி அதே நிலை தொடர்ந்து கொண்டிருந்தது.

'ப்ரீத்தி' என்று அவள் முன் கோப்பையை நீட்ட,

'தேங்க்ஸ்' என்று வாங்கியவள் அதை ஒரு சிப் பருக விஷ்வா கண்களை எட்டாத புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான்.

"மனைவியின் மாற்றம் உணராதவனா என்ன..?? ஒரே வருடத்தில் சிறுக சிறுக அவள் மனம் அவன் பால் சாய்ந்து கொண்டிருப்பதையும்.. அவன் பெண்களுடன் இருக்கும் போது எல்லாம் இப்படி அவளுக்கு அடிக்கடி தலை வலி வருவதும் வழக்கமாகி இருப்பதை அறியாமலா இருப்பான்.

ஆனால் அவளே அவள் மனதை திறக்கும் வரை அவனும் இறங்க போவதில்லை.

இருவருக்கிடையிலான காதல் கண்ணாமூச்சி ஆட்டத்தை முடித்து வைக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.


என் காதலை

உன் காதலை
நம் காதலை

உணர்ந்து வா பெண்ணே !!

என்று அவன் காத்திருக்க அவளோ நாணத்தில் தயங்கி தடுமாறி கொண்டு இருக்கிறாள்.
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top