'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - 31

Advertisement

keerthukutti

Well-Known Member
அருமையான பதிவு... விஷ்வா எதுக்கு தன்னை ப்ரீத்தி கிட்ட தன்னை கெட்டவனா காட்டி அவளோடு வெறுப்பை சம்பாதிக்கிறான்
 

Priyaasai

Active Member
"சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!" - 31.1

View attachment 10952

ப்ரீத்தி குழந்தையை உறங்க வைத்து கொண்டிருக்க அங்கு வந்த வர்ஷினி 'அண்ணி வாங்க' என்று அழைத்தாள்.

'எங்க வர்ஷு..??'

'அண்ணா கிட்ட பேசறதுக்கு'

'உன் அண்ணா கூட பேச நான் எதுக்கு..?? நீ போய் பேசிட்டு வாடா'

'இல்ல அண்ணி அண்ணா உங்களையும் தான் வர சொன்னாராம்'

'என்னையா ..?? நா.. நான் எதுக்கு ..??' என்றவளுக்கு இத்தனை நாட்களாக தன்னிடம் எதை பற்றியும் விளக்காமல் திடீரென காணாமல் போனவன் எங்கே செல்கிறான் என்று ஒரு வார்த்தை சொல்லிக்கொள்ளாமல், முக்கிய தருணத்தில் அவன் உதவியை நாடி அவள் அழைத்த போது எல்லாம் அதை ஏற்காமல் தன்னை தத்தளிக்க விட்டது, என் குழந்தைக்காக எதுவும் செய்வேன் என்றவன் இத்தனை நாட்களில் ஒரு முறை கூட அவளுக்கு அழைத்து குழந்தையை பற்றி விசாரிக்காதது என்று இன்று வரை தொடரும் அவன் புறக்கணிப்பு அவளிடம் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி இருக்க அவனுடன் பேசுவதற்கு தனக்கு ஒன்றும் இல்லை என்பதாக அழைத்த வர்ஷுவிடம் மறுத்தாள்.

'ஏன் அண்ணி உங்களுக்கு அண்ணா கூட பேச ஆசையில்லையா..??' என்று அவர்கள் நிலை புரியாமல் வர்ஷு பட்டென கேட்டுவிட,

"அது .., அது அதான் நான் டெயிலி போன்ல பேசிட்டு இருக்கேனே அப்புறம்.." என்று நிறுத்த,

'அட ஆமால்ல டைம் கிடைக்கிறப்போ எல்லாம் மறக்காம எங்க கூட பேசுற அண்ணா நிச்சயம் உங்ககூட பேசாமலா இருப்பார்' என்று பின்னந்தலையில் தட்டிக்கொண்டவள், 'சாரி அண்ணி அதை மறந்துட்டேன் இருந்தாலும் வாங்க பெரிய ஸ்க்ரீன்ல அண்ணா கூட எல்லாரும் சேர்ந்து பேசுறது செம ஜாலியா இருக்கும், அண்ணா உங்ககிட்டையும் பேசணும் சொன்னாராம்' என்று அழைத்தாள்.

அவன் குடும்பத்தினரோடு அவன் பேசும் இடத்தில் அவளுக்கு என்ன வேலை என்று எண்ணியவள், 'இல்ல இருக்கட்டும் வர்ஷு குழந்தை இப்பதான் தூங்க ஆரம்பிச்சான்'

'அதெல்லாம் பட்டம்மா பார்த்துப்பாங்க நீங்க வாங்க அண்ணி அண்ணா காத்திருப்பாங்க' என்று அவளை இழுக்க வர்ஷுவின் ஆசையை மறுக்க மனமில்லாதவள்,

'ஒரு நிமிஷம்' என்றுவிட்டு உடனிருத்த பட்டம்மாவிடம் குழந்தை எழுந்ததும் தூக்கி வருமாரு சொல்லிக்கொண்டு அவளுடன் கிளம்பினாள்.

இரண்டாம் தளத்தில் இருந்து லிப்ட்டில் முதல் தளத்திற்கு வந்து சேர ப்ரீத்தியோ இத்தனை நாட்களாக தினமும் மெசேஜ் மட்டும் அனுப்புபவன் அவசரத்திற்கு அவள் அழைப்பை கூட ஏற்காதவனை ஒன்றரை மாதம் கழித்து காணபோகும் நிமிடம் எப்படி அமையபோகும் என்ற அனுமானமே இல்லாமல் உடன் சென்று கொண்டிருந்தாள்.

அதுவும் வர்ஷுவை அருகே வைத்து கொண்டு என்ன பேசுவானோ..?? எங்கே தன்னை மீண்டும்.. என்று எண்ணியபோதே ஒருவித நடுக்கம் பிறக்க சிற பதட்டத்துடன் அறையினுள் சென்றாள்.

அது ப்ரேத்யேகமாக விஷ்வாவுடன் பேசுவதற்காகவே வடிவமைக்கபட்டு இருந்த அறை. ப்ரீத்தி சென்ற போது குடும்பமே அங்கு கூடியிருக்க வசுந்தராவிடம் எதையோ கூறி சிரித்த விஷ்வாவின் புன்னகை முகம் தான் அவள் கண்ணில் முதலில் பட்டது.

அவன் மட்டுமல்ல அங்கிருந்த அனைவர் முகத்திலும் புன்னகை விஷ்வாவை தொடர்ந்து ஆகாஷ் ஏதோ கூற மீண்டும் அங்கே சிரிப்பலை.

'உட்காருங்க அண்ணி' என்று வர்ஷு தன்னருகே அமர்த்த அவளும் இயந்திர கதியில் அமர்ந்தாள். பார்வை அவன் மீது இருந்ததே தவிர அவன் பேச்சு எதுவும் சிந்தையை சென்று சேரவில்லை.

அவளிடமும் பலமுறை புன்னகை முகமாக தான் பேசி இருக்கிறான் ஆனால் இப்போதைய அவன் சிரிப்பிற்கும் தன்னிடம் பேசும் போது சிரித்ததற்கும் ஏதோ வித்யாசம் இருப்பதை ப்ரீத்தி உணர இமை மூடாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

அனைவரும் பேச்சு முடிந்து கிளம்பியிருக்க இப்போது அறையில் ப்ரீத்தியும் வர்ஷுவும் மட்டுமே..!!

'ஹாய் அண்ணா..!! எப்போ வருவீங்க..??' என்று வர்ஷு பேச தொடங்கிய போது தான் தன்னிலை அடைந்தவள் இப்போது திரையை பார்க்க அதில் இருந்தவனோ அவளை கண்டுகொள்ளாமல் அவள் புறம் திரும்பாமல் தங்கையிடம் 'சீக்கிரம் வரேன்' என்று பேச தொடங்க,

திகைத்து போனாள் ப்ரீத்தி.

'என்ன செய்கிறான் இவன்..?? இத்தனை நாட்கள் கழித்து பார்ப்பவளை குறைந்தபட்சமாக நலன் விசாரிக்க தோன்றாமல் இருக்கிறானே' என்று புரியாமல் அவள் அமர்ந்திருக்க..,

மறுபுறம் வர்ஷினியை விஷ்வா குறிப்பிட்ட தலைப்பில் இருந்து கேள்வி கேட்க தொடங்கிட அவளும் அனைத்திற்கும் சரியாக பதில் அளித்து கொண்டு வந்தாள்.

மருத்துவம் குறித்து அவர்கள் பேச்சு திசை திரும்பவும் இப்போது எண்ணங்களை தள்ளி வைத்து அவர்கள் உடையாடலை கவனிக்க தொடங்கினாள்.

விஷ்வாவின் கேள்விகள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து கொண்டிருந்த ப்ரீத்திக்கோ ஆச்சர்யம் தாளவில்லை.

ஆம் ஒரு தலைப்பை எத்தனை கோணத்தில் அணுக முடியுமோ அவ்வாறெல்லாம் அதை அலசி அவள் எந்த விதத்தில் வர்ஷினியை தயார்படுத்தி இருந்தாளோ அதை ஒட்டியே அவன் கேள்விகளும் அமைந்திருந்ததை கண்டு தான் அந்த ஆச்சர்யம்.

எப்படி இது சாத்தியம்..?? அவளை ப்ரீத்தி தயார்படுத்திய போது விஷ்வா இங்கு இல்லை ப்ரீத்தியும் அவனிடம் இதுவரை எதை பற்றியும் பேச முடியவில்லை, வர்ஷினியும் அவளிடம்

"அண்ணி நான் நைட் அண்ட் டே ஸ்பென்ட் பண்ணி படிச்ச் டாப்பிக்கா தான் இருக்கும் ஆனா எப்பவும் அண்ணா கேள்வி கேட்டாங்கன்னா அவர் எங்க இருந்து கேட்டாங்கன்னு கண்டு பிடிக்கவே எனக்கு ஒரு நாள் ஆகும் அந்த அளவுக்கு அவரோட கேள்வியின் டெப்த், அனலைசிங், அப்ரோச் இருக்கும் " என்று கூறி இருந்தால்.

"நிலை இப்படி இருக்க இப்போது அவன் கேள்விகளால் அது எப்படி தங்கள் இருவரின் எண்ண அலைவரிசை ஒன்று போல இருக்க முடியும்..?? இருவேறு துருவங்கள் என்று எண்ணி இருந்து தங்கள் இருவருக்கிடையில் இப்படி ஒரு பொருத்தத்தை அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அவன் கேட்டு கொண்டிருந்த தலைப்பு பிரசவம் குறித்து..!! அதே தலைப்பில் ப்ரீத்தி எவ்வாறான கேள்விகள் பிறக்க சாத்தியகூறுகள் உண்டு என்று கணித்து, ஒருவேளை கேள்விகள் அப்படி அமைந்தால் அதற்க்கான தீர்வு என்ன..?? கடின சூழலில் சமயோஜிதமாக செயல்படுவது எப்படி..?? என்று அவள் வர்ஷினியை தயார்படுத்தி இருந்தாலோ அவனும் அது போலவே கேள்விகள் கேட்டு கொண்டிருப்பதை ஒருவித பிரம்மிப்புடனே கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவன் கேள்வியை தொடுக்கும் விதத்தை வைத்தே அவன் எத்தனை கைதேர்ந்த மருத்துவன் என்பதையும் மருத்துவத்தை எந்த அளவு நேசிக்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. ஓரிரு இடத்தில் மட்டும் வர்ஷினி சிறிது திக்கி திணற விஷ்வாவோ,

'உன்னோட செஷன் முடிஞ்சது இப்போ உன்னோட டீச்சரை இன்டர்வியூ பண்ணனும்' என்றான்.

"அண்ணா அப்போ நான் சரியா ஆன்சர் பண்ணலையா..??" என்று சிறு தயக்கத்தோடு அவனை பார்க்க,

"விர்ஷு உன்னோட டீச்சர் பொட்டேன்ஷியல் தெரியாம எப்படி என்னால அலோவ் பண்ண முடியும்..?? அவங்களோட சப்ஜெக்ட் நாலேட்ஜ், டெப்த், அனலைசிங், ஸ்போண்டேநிட்டி, பேஷன்ஸ் எனக்கு தெரியனும் என்று விஷ்வா முடிக்கும் முன்னமே வர்ஷு இடையிட்டு,

'அண்ணா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுக்க மாட்டேன்களே..??' என்றாள்.

' இல்லடா சொல்லு '

"அது அண்ணா... அண்ணி என்று ப்ரீத்தியை பார்த்தவள், அதுவந்துண்ணா அண்ணியை தான் உங்களுக்கு ரொம்ப வருஷம் தெரியுமே அப்புறம் ஏன் இப்போ இன்டர்வியூ பண்ணனும் சொல்றீங்க..??" என்று தயக்கத்துடனே கேட்க,

அதை கேட்டு புன்னகைத்தவன், 'வர்ஷு சின்ஸ் ஐ வான்ட் டு கிவ் யு தி பெஸ்ட் நான் என்னைக்கும் உன்னோட விஷயத்துல நான் காம்ப்ரமைஸ் பண்ணிகிட்டதே கிடையாது. இது வரை உன்னோட டீச்சர்ஸ் எல்லாரயும் இன்டர்வியூ பண்ணி தான் அப்பாயின்ட் பண்ணேன் அண்ணியா இருக்கிறதால லிபரலா இருக்க முடியாது தி செம் ப்ராசஸ் ஹியர் குழப்பம் தீர்ந்ததா..??" என்றிட,

தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அண்ணனை சங்கடபடுத்தி விட்டோமோ என்று எண்ணியவள், "சாரிண்ணா ஒரு கியூரியாசிட்டில கேட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க" என்றாள்.

அவனோ தண்ணீர் குடித்தவாறே அதை சிறு தலையசைப்புடன் ஏற்று
'ஷால் ஐ ப்ரீத்தி' என்ற கம்பீர குரலுடன் அவளை பார்க்க,

திடிரென ஒலித்த அவனது கட்டளையான குரலில் அன்னிச்சியாக அவள் தலை 'ஆம்' என்று அசைந்தது.,

" நீங்க வேணும்ன்னா பாருங்க அண்ணி கண்டிப்பா செலெக்ட் ஆகிடுவாங்கண்ணா" என்றவள் ப்ரீத்தி புறம் திரும்பி 'ஆல் தி பெஸ்ட் அண்ணி எப்படியாவது எல்லாத்துக்கும் சரியா பதில் சொல்லிடுங்க இல்ல அண்ணா ஒத்துக்க மாட்டாங்க அண்ணா நோ சொல்லிட்ட அப்பா அம்மாவும் ஏத்துக்க மாட்டாங்க" என்றவளின் குரலில் வருத்தம் எட்டி பார்க்க,

"டோன்ட் வொரி வர்ஷு" என்று அவள் கரங்களை அழுத்தி கொடுத்த ப்ரீத்தி திரையில் இருந்த விஷ்வாபுறம் திரும்பி அமர,

அவனோ எதிரே இருந்த கோப்பை எடுத்தவாறே "ஷால் வீ ..!!" என்றான்
அவன் கேட்டது என்னவோ அவளது அறிவை சோதிக்கும் பொருட்டு தான் ஆனால் அவளுக்கோ அன்றைய இரவு அவன் கூறிய 'ஷால் வீ' அந்நேரத்தில் நியாபகத்திற்கு வந்து தொலைக்க மனம் கடினமுற
அசைவற்று போனாள்.

பல நிமிடங்களுக்கு பின் "அண்ணி அண்ணா உங்கள தான் கேட்கிறாரு பதில் சொல்லுங்க" என்று வர்ஷு அவளை உலுக்க,

தன்னை மீட்டு கொண்டவள் பார்வையில் என்ன முயன்றும் வலி பரவ தான் செய்தது..., பற்களை கடித்து கொண்டு அழுத்தமாக அவனை பார்க்க,

அவனோ வெகு எதார்த்தமாக "ஆரம்பிக்கலாமா ப்ரீத்தி" என்றான் இப்போது அவள் பதில் சொல்லும் முன்னமே ,

"கேளுங்கண்ணா" என்று வர்ஷினி பதிலளிக்க ஒரு முறை அவளை பார்த்தவன் பின் ப்ரீத்தியிடம் தன் கேள்விகளை தொடங்கினான் அடுத்த நாற்பது நிமிடம் எப்படி போனது என்று தெரியாத வகையில் இருந்தது அவர்கள் இருவருக்கிடையிலான உரையாடல் கிட்டத்தட்ட அனல் பறக்கும் விவாதம் என்று தான் கூட வேண்டும்.

முதல் பத்து நிமிடம் விஷ்வாவிடம் இருந்து புறப்பட்ட கேள்விகளை அவன் முடிக்கும் முன்னமே அதற்கான பதில்களை ப்ரீத்தி வேகமாக அளிக்க விஷ்வாவோ நெரித்த புருவங்களுடன் அவளை பார்த்தவன் பின் தன் கேள்வி முறைகளை மாற்ற அப்போதும் ப்ரீத்தியின் பதில்களில் எவ்வித தடுமாற்றமோ இரண்டாம் சிந்தனையோ இல்லாமல் தெளிவான விளக்கங்களுடன் அத்தனை துரிதமாக வந்திருந்தன.

அவள் அறிவாற்றலை வியந்தவன் மேலும் அதற்கு தீனி அளிப்பது போல சிக்கலான ஒரு தலைப்பை அவளிடம் கொடுத்து அதை விவரிக்க கூறியவன் அவள் தொடங்கவும் சில நிமிடம் ஆழ்ந்து கவனித்து கொண்டிருந்தவன் அவள் விளக்கத்தில் இருந்தே பல கிளை கேள்விகளை கேட்டு விவாதிக்க தொடங்க ப்ரீத்தியும் சளைக்காமல் பலவித மேற்கோள்களையும், எடுத்துக்காட்டுக்களையும், விளக்கங்களையும் எடுத்து கூறி தன் வாதத்தை நிறைவு செய்ய விஷ்வாவிடம் பிரமிப்பு.!!

ஆம் அவன் அவளுக்கு கொடுத்தது அவள் படித்த பாடத்திற்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத தலைப்பு ஆனால் அதையும் எத்தனை அசாதாரணமாக கையாண்டிருக்கிறாளே..!! அத்துறையில் தேர்ந்த தலைவரை போல பதிலளித்து கொண்டிருப்பவளை கண்டு வியந்து தன்னையும் அறியாமல் கை தட்டி இருந்தான்.


அதேசமயம் இங்கு வர்ஷினியோ 'கலக்கிட்டீங்க அண்ணி' என்று கூறி அவளை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டிருந்தாள்.

என்ன தான் பிரகாசத்தை பழி வாங்க வேண்டி அவள் மருத்துவத்தை வெறி கொண்டு படித்திருந்தாலும் சிறுவயதில் இருந்தே பார்வதியை முன்னுதாரனமாக கொண்டு வளர்ந்தவளுக்கு மருத்துவம் அவள் சுவாசிக்கும் சுவாசக்காற்று போல்..!! கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பார்வதியிடம் மருத்துவம் தொடர்பான புத்தகங்கள், விவாதங்கள்,கேள்விகள் என்றே வளர்ந்தவளுக்கு அத்துறையின் மீது இருந்த ஈடுபாடும் ஆர்வமுமே இப்போது விஷ்வாவின் கேள்விகளை எளிதாக எதிர்கொள்ள வைத்திருந்தது.

விஷ்வாவிற்கு ப்ரீத்தியை பற்றி தெரியும் என்றாலும் இப்போது தான் அவள் அறிவாற்றலை கண்கூட பார்ப்பவனுக்குள் ஒரு வித பிரமிப்பு எழுந்ததென்றால் அது மிகையல்ல..!! நிஜத்திற்கு சொல்லபோனால் விஷ்வாவே விவாதத்தின் போது சில இடங்களில் நேரமெடுத்து யோசித்து நிதானித்து கேள்வியையும் சில நேரம் பதிலையும் அளித்து இருக்க ப்ரீத்திக்கு அப்படி எந்த அவகாசமும் தேவை படவே இல்லை அத்தனை நுணுக்கங்களையும் விளக்கங்களியும் விரல் நுனியில் வைத்திருந்தாள்.

இவள் மட்டும் சிறந்த முறையில் மருத்துவத்தில் தொடர்ந்திருந்தால் எத்தனையோ உயரங்களை எட்டி இருப்பாளே ஆனால் பெற்றவனாலும் சமூகத்தாலும் அலைகழிக்கப்பட்டு இப்படி அவள் வழி தவறி போனதே என்று எண்ணியவனின் மனம் வெதும்ப தன் வேதனை முகத்தில் படரும் முன் 'ஒன் செக்' என்று அவர்களிடம் கூறி திரையை விட்டு அகன்றிருந்தான்.

தன்னை மீட்டுக்கொண்டு பல நிமிடங்களுக்கு பின் மீண்டும் இயல்பாக வந்து அமர்ந்தவன் 'வெரி குட்' என்றவன் எதையோ எழுத தொடங்க ப்ரீத்தியின் விழிகள் ஆவலுடன் அவன் மீது படிந்தது.

ஆம் பல வருடங்களுக்கு பிறகு ப்ரீத்திக்குமே விஷ்வாவுடனான மருத்துவ உரையாடல் அத்தனை புத்துணர்ச்சி அளிக்க விஷ்வா எழுதி முடித்து நிமிரவும் 'தென்..' என்றாள் ப்ரீத்தி அடுத்து அவனிடம் இருந்து என்ன கேள்வி பிறக்கும் என்ற ஆவலுடன்.

ஆனால் அவனோ, 'தி என்ட், வீ ஆர் டன்..!!' என்றான்,

'வாட்'

"எஸ் உன்னோட இன்டர்வியூ முடிஞ்சது ஐ ஆம் சேட்டிஸ்பைட் வித் யுவர் பெர்பார்மன்ஸ் இனிமேல் வர்ஷு உன்னோட பொறுப்பு " என்று கூற அது நேரம் வரை ஒருவித தவிப்போடு அமர்ந்திருந்த ப்ரீத்தியின் முகத்தில் புன்னகை உதயமானது.

பின்னே இத்தனை நாட்களாக எந்த உரிமையும் இன்றி அவன் வீட்டில் அமர்ந்து கொண்டு சுகமாக தூங்கி எழுந்து வேளாவேளைக்கு உண்டு விட்டு சும்மா இருப்பது அவளுக்கே பிடிக்காமல் போக எப்படியேனும் அதை எல்லாம் தன்னால் இயன்ற வரை திரும்ப செய்துவிடும் முனைப்போடு இருப்பவளிடம் இப்போது வர்ஷினியின் படிப்பும் முழுதாக அவள் பொறுப்பில் சேர்ந்து கொள்ள அவள் மகிழ்ச்சியின் அளவை விவரிக்கவும் வேண்டுமா என்ன..??

முதலில் இவன் யார் தனக்கான அனுமதி அளிக்க என்ற வெறுப்புடனே இருந்தவள் அவனளித்த ஆக்கபூர்வமான நிமிடங்களினால் மனதில் இதம் பரவ அவளையும் அறியாமல் அவனை பார்த்து 'தேங்க்ஸ்' என்றாள்.

அதற்குள் "அப்போ உங்களுக்கு என் மேல நம்பிக்கை வந்துடுச்சாண்ணா" என்று உற்சாக குரலில் வர்ஷினி விஷ்வாவை கேட்க

குளிரூட்டப்பட்ட அறையில் அவனிடம் பேசுவதற்காகவே பிரத்யேகமாக அமைக்க பட்டிருந்த பெரிய திரையில் தங்கையின் கேள்விக்கு அதரங்களை அளவாக விரித்த விஷ்வா, "உன் மேல இல்ல உன்னோட டீச்சர் மேல இருக்க நம்பிக்கையால உன்னை பர்மிட் பண்றேன்" என்றவனின் பார்வை கணப்பொழுதில் ப்ரீத்தி மீது பதித்து மீள வர்ஷினியிடம் தன் சம்மதத்தை அளித்தான்.

எங்கே தமையன் சம்மதிக்காமல் போய் விடுவானோ என்று இத்தனை நேரம் ஒரு வித பதட்டத்துடன் அமர்ந்திருந்தவளோ இப்போது துள்ளி குதிக்காத குறையாக நாற்காலியில் இருந்து எழுந்தவள் திரையின் முன்னே சென்று, "தேங்க்ஸ்ண்ணா..!! தேங்க்ஸ்..!! தேங்க் யூ வெரி மச்..!!" என்று குதுகலத்துடன் கூறியவள் இதை மற்றவர்களிடம் பகிர வேண்டி அறையில் இருந்து வேகமாக சென்றாள்.
Nice
 

Priyaasai

Active Member
"சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!" - 31.2

தன்னை மட்டும் தனியே விட்டுவிட்டு செல்லும் வர்ஷுவையே பார்த்து கொண்டிருந்த ப்ரீத்தி தானும் எழுந்து அவள் பின்னே செல்ல முனைய அதற்குள் அவளை திசை திருப்பியது விஷ்வாவின் பாடல்,


"
ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா


காதலில் நீ எந்த வகை கூறு..

காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு


ரெண்டில் நீ எந்த வகை கூறு.."

என்று இப்போது அமர்ந்திருந்த நாற்காலியின் கைபிடியில் ஒரு கரம் பதித்து அதில் முகத்தை தாங்கி அவளை பார்த்து ரசனையுடன் பாடிக்கொண்டிருந்தான் விஷ்வதேவ்.

வெளியே செல்ல போனவளுக்கு அவன் பாடலில் சட்டென அகமெல்லாம் தீப்பற்றி எரிந்தாலும் அவனை கண்டுகொள்ளாமல் ப்ரீத்தி வெளியேற முயல அதற்குள்,

"நீ சைவமா..?? அசைவமா..?? டார்லிங்" என்று கேட்டு அவள் நடையை விஷ்வா தடை செய்திருந்தான்.

கண்களை மூடி இருகரங்களையும் அழுத்தமாக சேர்த்து உடல் இறுக ப்ரீத்தி நின்றிருந்த கோலமே அவள் கோபத்தை கட்டுபடுத்த போராடுகிறாள் என்பது புரிபட அதில் விஷ்வாவின் அதரங்கள் மேலும் அழகாய் விரிந்தது..

"என்ன பேபி அமைதியா இருக்க நான் கேட்ட கேள்வி புரியலையா..?? இல்ல உனக்கே கேள்விக்கான பதில் தெரியலையா..??" என்று இன்னுமே அவள் பொறுமையை அவன் சோதிக்க,


இதழ்களை அழுந்த மூடி அவன் புறம் திரும்பியவள், 'உனக்கு என்ன ப்ராப்ளம் தேவ் இவ்ளோ நேரம் நல்லா தானே பேசிட்டு இருந்த..!! ஏன் திடீர்ன்னு இப்படி பண்ற' என்று நிதானமாக கேட்க


"
பெண் கூந்தல் மீது பூவாகட்டா?

பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா
?"

என்று அவன் தன் பாடலை தொடர எதிரே இருந்த நாற்காலில் இருகரங்களையும் பதித்து அழுத்தமாக கால்களை ஊன்றி நின்றவள், "இத்தனை நாளில் ஒரு முறை கூட அவளுக்கு அழைத்து பேசாதவனின் இன்றைய பேச்சு அவளை அதிர செய்ய "இப்போ என்ன வேணும் உனக்கு" என்றாள்.

"அதான் பேபி நீ...?? என்று ஆரம்பித்தவன் சரி இரு.. இரு உனக்கு புரியற மாதிரி சொல்றேன் "அதாவது நான் பியூர்.." என்று அவன் தொடங்கவும் அதற்குள் அவன் பேச்சை கரம் நீட்டி தடை செய்திருந்தாள் ப்ரீத்தி.

'தேவ் ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்..!! இதுவரை நல்லா தானே இருந்த திடீர்ன்னு உனக்கு என்னாச்சு எதுக்கு இப்படி ப்ளீஸ் ஐ ஐ..' என்று கண்களை மூடி திறந்தவள் உனக்கும் எனக்கும்.. என்னால.. எனக்கு..' என்று அவள் தன் எண்ணத்தை எப்படி அவன் மனம் காயப்படா வகையில் வார்த்தையாய் கோர்ப்பது என்ற குழப்பத்துடனே அவள் தொடங்க,

'ப்ச் வாட் இஸ் திஸ் டார்லிங் என்னோட சென்சுவல் டாக்கை எப்படி நான்சென்ஸ் சொல்லுவ..??' என்று ஊடல் கொண்டவன் தொடர்ந்து,

"Listen baby I know..., I know I am not your soulmate but as a bedmate I have the privelege to know your..." என்று நிறுத்தி அவளை பார்க்க அவள் கண்களில் வலி பரவி முகம் வெகுவாக கசங்கி போயிருப்பதை கண்டவன் குத்தீட்டியாய் கிழிக்கும் அவள் பார்வையில் இளக துடித்த மனதை இழுத்து பிடித்து மூச்சை ஆழமாக இழுத்து விட்டு, "and you know well this is relevent to..." என்று நிறுத்தி அவளை கூர்மையாக பார்த்தவனின் பார்வையின் பொருள் புரிய இருகரங்களையும் இறுக்கமாக கோர்த்து கொண்டு இதழ் துடிக்க அமைதியாக நின்றாள்.

"இன்னும் பிப்டீன் டேஸ் இருக்கு ஆனா நான் இங்க நீ அங்க...!! பேபி வி ஆர் கோயிங் டு கன்ஸ்ஸுமேட் அண்ட் புல்பில் அவர் மேரேஜ் சூன்..!! இப்போ பேசவும் பாடவும் தடை போட்டா எப்படி..?? யு க்நொவ் டார்லிங் ஐ ஆம் சோ மச் எக்சைட்டேட் பட் ஜஸ்ட் பிப்டீன் டேஸ் ஸ்வீட்டி, கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள முடிஞ்சிடும் திரும்ப பேச எனக்கும் எப்போ டைம் கிடைக்கும்ன்னு தெரியாது சோ அதுக்குள்ள உனக்கு என்ன பிடிக்கும்ன்னு தெரிஞ்சிகிட்டா.. நம்மோட பர்ஸ்ட் நைட்..." என்றவாறே இருக்கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தவன்,

"பேபி அல்ரெடி ஐ ஆம் எக்ஸாஸ்ட்டட் இன்னும் பேச வச்சி டையார்ட் ஆக்காத" என்று தலைக்கு பின் கரங்களை கோர்த்து சாய்ந்தமர்ந்தவன்,

கம் ஆன் ஆன்சர் மீ குவிக் , "நீ சைவமா..?? அசைவமா..?? " என்றான் இளக்கமற்ற குரலில்

என்னதான் அன்று ஒரு வேகத்தில் உணர்வின் பிடியில் தண்டனை அனுபவிக்க வேண்டி காதலின்றி அவனோடு வாழ ஒப்புக்கொண்டாலும் நிச்சயம் அதை செயல்படுத்தும் திடத்தை இப்போது அவள் கொண்டிருக்கிறாளா..?? என்று கேட்டாள் சத்தியமாக இல்லை.

முன்பின் அறிந்திறாதவன், அவள் சம்மதமின்றி குழந்தையை சுமக்க செய்து அதிரடியாக அவள் வாழ்வில் நுழைந்தவன், கட்டாயபடுத்தி அவளை அழைத்து வந்திருப்பவன், அவள் விருப்பம் இன்றி அவளை வதைத்து கொண்டிருப்பவன், ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அவளுக்கு ஆறாத ரணத்தை கொடுத்து கொண்டிருப்பவன் அப்படிபட்ட ஒருவனுடன் தண்டனையாக கூட வாழ்வது ஒரு பெண்ணாக நிச்சயம் அவளால் முடியாதது.

நிச்சயம் ப்ரீத்தியால் மட்டுமில்லை எந்த ஒரு பெண்ணாலுமே முடியாத காரியம். இத்தனை நாட்களாக தன்னை பெண்ணாக அவள் உணர்ந்தாளா..?? என்று கேட்டால் அவள் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து ப்ரீத்தியே இல்லை என்று தான் கூறுவாள்.

ஆம் என்றுமே போராளிகளிடையே ஆண் பெண் என்ற பேதம் இருப்பது இல்லையே..!! இலக்கை மட்டுமே மனதில் நிறுத்தி அதை நோக்கி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் போராளிகள் எத்தகைய கடினமான போர் முறையையும் கையாண்டு வெற்றி அடைவதை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருப்பார்.

அதுபோல இதுநாள் வரை பிரகாசத்தை அழிக்கும் அஸ்த்திரமாக தன்னை தானே உருமாற்றி இருந்தவளுக்கு சரணுடன் இருந்த போதும் இலக்கு மட்டுமே குறிக்கோளாக இருந்ததே தவிர தான் பெண் என்ற எண்ணமோ அவன் மீதான காதலோ என்றுமே மேலோங்கியது இல்லை.

ஒருவேளை பெற்றவனால் உரிய அங்கீகாரத்தோடும் அரவணைப்போடும் சமூகத்தால் மதிக்கப்படும் சூழலில் ப்ரீத்தி வளர்ந்திருந்தால் முதல் முறை அவளுக்கு உதவிய சரண் அவளை பெரிதாக ஈர்த்திருக்க மாட்டானோ என்னவோ..!! அவனையும் அவன் உதவியையும் இயல்பாக கடந்து போயிருப்பாள் ஆனால் பிரகாசத்தின் சதியால் சமூகத்தில் அவள் கொண்டிருந்த அதீத புறக்கணிப்பில் முதல் முறையாக அவளை அரவணைத்து மதிப்பளித்தவனின் மீதான ஈர்ப்பை நன்மதிப்பை நாளடைவில் பிடிவாதமாக காதலாக மாற்றியிருந்தாள்.

பிரகாசத்திற்கு எதிரான தன் போரில் அதிகபட்சம் ஒவ்வொருமுறை சரணை காயபடுத்தும் போதும் தவறே இழைக்காத ஒருவரை தன் இலட்சியத்திற்காக வதைக்கிறோமே என்ற குற்றஉணர்வும், அவன் காயத்தை கண்டு வலியுமே ப்ரீதிக்கு மிஞ்சும்.

அதேசமயம் பெண்மைக்கே உரித்தான இரக்கம், கருணை, பாசம், அன்பு, நாணம், இளக்கம் போன்ற பல குணங்கள் அவளை அண்டாமல் பார்த்துக்கொண்டவள் முன்பிருந்ததற்க்கும் அதிகமாகவே கடுமை கொண்டு மனதளவில் பாறையாய் இறுகி போனாள்.

அவளது மட்டுமின்றி மற்றவர்களின் சிரிப்பு, அழுகை, வலி, வேதனை எதுவும் தன்னை பலவீனமாக்கி விடகூடாது என்ற திடத்துடன் இருந்தவளுக்கு ஒரு நொடி தன்னை குறித்த கழிவிரக்கம் கொண்டாலோ சரணில் தொடங்கி நாதன் வரை மற்றவர்களுக்காக பின்வாங்க நினைத்தாலோ அசுரனை வதம் செய்வது எப்படி..?? பிரகாசத்தின் நிம்மதி, மகிழ்ச்சி, பணம், புகழ், பேர், செல்வாக்கு அனைத்தையும் சிறுக சிறுக சிதறடித்து அவன் உயிரை சத்தமே இல்லாமல் பருகி தாகம் தீர்க்க வேண்டி அகோரபசியில் திரியும் அரக்கியாக அவனுக்கெதிரான போரில் ஈடுபட்டிருந்த ப்ரீத்தியுமே அதுநாள் வரை சுயம் தொலைத்து தான் போயிருந்தாள்.

ஆனால் இப்போது நிலை அப்படி இல்லையே..!!

தாய்மை அவளை வெகுவாக மாற்றி இருக்கிறது குழந்தையின் ஒவ்வொரு படிநிலையையும் அதன் தந்தையாக அவனிடம் பகிர வேண்டும் என்று பல முறை அவளையும் அறியாமல் தோன்றி இருக்கிறது. குழந்தைக்கு என்ன பெயர் யோசித்து இருக்கிறாய் என்று வசுந்தர கேட்கும் போதெல்லாம் மனம் அவளையும் அறியாமல் விஷ்வாவிற்கு முன்னுரிமை கொடுத்து அவருக்கு பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறாள்.

ஒருவேளை அவள் பயந்தது போல குழந்தையின் நிலையை சமூகத்தில் மோசமாக்காமல் விஷ்வா அவனை காத்திருப்பதால் இப்படி தோன்றுகிறதா..?? என்று புரியாத குழப்ப நிலை அவளிடம். எப்போதும் தெளிவாக செயல்படுபவளை குழப்பி தடுமாற வைத்து கொண்டிருந்தான் விஷ்வ்தேவ்.

இவையெல்லாம் ஒருபுறம் என்றால் இன்று வரை தினமும் அவள் கேட்டிருந்த இரண்டு மாத கெடுவில் இத்தனை நாட்கள் மீதம் என்று அவன் அனுப்பும் குறுஞ்செய்தியில் அவள் மனம் கடுமையாக காயப்பட்டு போகிறது என்பது தான் நிஜம்..!!

அது தன் மீதே ஏற்ப்பட்ட கழிவிரக்கமா அல்லது அடுத்தவர் வாழ்வை சீர்குலைக்க நினைத்த தனக்கு காலம் இதை தான் விதித்துள்ளதா..?? அல்லது தாய், தங்கைகளை மதிக்கும் அவனிடம் ஒரு பெண்ணாக அவளுக்கான குறைந்தபட்ச மரியாதை கிடைத்துவிடாதா..?? என்று ஏதோ ஒன்றால் அனுதினமும் உள்ளுக்குள் மருக தொடங்கி இருந்தாள்.

"டார்லிங் ஐ ஆம் வைட்டிங் பார் யுவர் ஆன்சர்.., டெல் மீ சூன் நீ சைவமா..?? என்று அவன் தொடங்கியபோதே இருக்கர முஷ்டியையும் அழுத்தமாக மூடிக்கொண்டு தலையை தழைத்து இதழ் கடித்து அழுகையை அடக்க முயன்றவளின் முயற்சி வெற்றிகரமாக தோல்வியை தழுவியது.

அவனிடம் தன் அழுகையை வெளிபடுத்தி பலகீனமாக கூடாது என்று நினைத்தவளின் எண்ணம் அனைத்தும் இன்று தகர்ந்து விஷ்வாவின் முன் கண்ணீரோடு தலை குனிந்து நின்றிருந்தாள்.

அவள் தலை குனிந்து நின்றிருப்பதையும் அவள் கண்ணீரையும் கண்டுகொண்டவன், "என்ன பேபி வெட்கமா..??" என்று தலைசாய்த்து கேட்டிட..., கேட்ட அவனுக்கே தெரியும் இதுவே பழைய பிரீத்தியாக இருந்திருந்தால் அவன் வார்த்தைகளில் கொதித்தெழுந்து ஒன்று ஸ்க்ரீனை கிழித்திருப்பாள் அல்லது அவனை தேடி வந்து கன்னம் கன்னமாக அறைந்திருப்பாள் ஆனால் இப்போதைய அவள் மாற்றம் அவனது சிகிச்சை முறை சரியாக பயனளிப்பதில் விஷ்வாவிற்கு பெரும் மகிழ்ச்சி..!!

'எனக்கு உன்கிட்ட பிடிச்சதே உன்னோட வெட்கம் தான் ஸ்வீட்டி..!! சரி விடு நீ பதில் சொல்லவேண்டாம் நானே தெரிஞ்சிக்கிறேன் அதுல தானே த்ரில் ஜாஸ்தி..!! பட் ஜஸ்ட் வைட் பார் பிப்ட்டீன் டேஸ் டார்லிங் அப்புறம் நானே நீ எந்த வகைன்...' என்றவனின் பேச்சை தடை செய்திருந்தது அறையினுள் கேட்ட குழந்தையின் அழுகுரல்.


தூங்கி கொண்டிருந்த குழந்தை எழுந்துவிட்டிருக்க வர்ஷினி அவனை தூக்கி கொண்டு மீண்டும் அங்கே நுழைந்திருந்தாள். விஷ்வா பேச்சை நிறுத்த அதுநேரம் அவரை அவன் பேச்சை கேட்கமுடியாமல் கண்ணீரை கட்டுபடுத்தி கொண்டு தலை குனிந்து நின்றிருந்த ப்ரீத்தியும் அதை வர்ஷுவிர்க்கு தெரியாமல் துடைத்துவிட்டு திரும்பி பார்த்தவள் உடனே குழந்தையை வாங்கி கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள்.

அவன் பேச்சையே ஏற்க முடியாதவளுக்கு நிச்சயம் அவனை ஏற்க முடியும் என்று தோன்றவில்லை. தடதடக்கும் மனதை இறுக்கி பிடித்து கொண்டு அவனறைக்கு செல்லும் வரையிலுமே கண்ணீர் நிற்காமல் போக துடைத்து கொண்டு குழந்தைக்கு பால் கொடுக்க தொடங்கியவள் மனதில் அவனுடனான உரையாடலில் ஏற்ப்பட்டு இருந்த இதம் மறைந்து விஷ்வா மீதான வெறுப்பு இன்னுமே கூடி போனது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top