கொலுசொலி மயக்குதடி - 31

Advertisement

தன் கைப்பற்றி கலக்கத்துடன் அமர்ந்திருக்கும் தன் கண்ணம்மாவை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு.

இவள் என்னவள் எனக்கானவள் என்ற எண்ணமே அவனுள் சந்தோச பூக்களை உதிர்த்தது போல இருந்ததது.

சில நிமிடங்கள் கழித்தே அவளின் கலக்கமான முகம் அவனிற்கு உரைத்தது. நிலா... வாசு அழைத்தும் அவளின் கவனத்தை எட்டவே இல்லை...

நிலாலாலா... அவன் சற்று குரலை உயர்த்தவும் என்ன வாசு... என்ன சொன்னீங்க என தூக்கத்தில் இருந்து விழித்தது போல கேட்டாள்.

ஆர் யூ ஓ.கே... நான் எதுவும் சொல்லவே இல்லை. நிலானு கூப்பிட்டேன் அவ்வளவு தான். பீ கூல்....

யா யா... ஐம் ஓ.கே. வாங்க போலாம் இன்னும் எதுக்கு இங்கே உட்கார்ந்துட்டு இருக்கீங்க. அந்த மேக்னா சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கா. நீங்களும் அவளையே ஆ... னு பார்க்கறீங்க.

அவள் சொன்னதுதான் தாமதம்.. அட நீ வேற ஏன் நிலா கடுப்பை கிளப்பற. பொண்ணா அவ பிசாசு. வாயை திறந்தால் மூடவே இல்லை. நான் எங்கே அவ பேசுனதை கேட்டேன். நீ வந்து என்னை காப்பாத்த மாட்டியானு கடவுள் கிட்ட புலம்பிட்டு இருந்தேன்.

வாசு சொன்னதைக் கேட்டதும் சற்று இறுக்கம் தளர இலகுவாக புன்னகைத்தாள் நிலா.

அப்பாடி சிரிச்சுட்டியா... போலாம்னு ஏன் அவசரப்படற. உட்காரு முதல்ல. என் கூட பேசு செல்லம். லவ்வர்ஸ்னு தான் பேரு. என் கூட பேசறியா நீ. ச்சே பொறுப்பு இருக்கா உனக்கு.

செல்லமாக அவனின் தோளில் அடித்தவள் ரொம்ப தான் பண்றீங்க ஆசையை பாருங்க. இது ஆபிஸ் நீங்க பாஸ்... கொஞ்சம் ஆச்சும் நியாபகம் இருக்கா.

எனக்கு எல்லாம் நியாபகம் இருக்கு சரி வா போலாம் வேலையை பார்க்கலாம் என எழுந்து நடக்கத் தொடங்கினான்.

தன் தலையில் அடித்துக் கொண்டவள் ஒரு பேச்சுக்கு சொன்னால் இவரும் கிளம்பிட்டாரு. அவ்வளவு நல்லா புள்ளயா நீ. இது தெரியாம போயிருச்சே வாசுதேவா என அலுத்துக் கொண்டாள்.

நிலா நீயாச்சும் கொஞ்சம் அமைதியாக இருந்து இருக்கலாம். உன் வாய் இருக்கே வாய் வாய்...

வாசு... இருங்க வரேன் என எழுந்து வேகமாக நடந்தவள் அவனுடன் இணைந்து கொண்டாள்.

சக்திக்கு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தான். என்ன ஆனாலும் சரி வாசு கிட்ட சொல்லி இதைப்பத்தி பேசியே ஆகனும். அதுவும் நிலாவுக்கு தெரியாமல் என முடிவெடுத்தவன் மற்ற வேலைகளை பார்க்கத் தொடங்கினான்.

வேலை மூவரையும் விழுங்கிக் கொள்ள வேறு எதுவும் சிந்தனையின்றி வேலையில் மூழ்கினார்கள்.

வீட்டில் எல்லா வேலையையும் செய்தும் போர் அடிக்க சிவகாமி என்ன செய்வது என யோசிக்கத் தொடங்கினார்.

வீட்டை ஆச்சும் க்ளீன் பண்ணலாம் என தனக்குத்தானே பேசிக் கொண்டவர் நிலா மற்றும் வாசுவின் ரூமைத் தவிர மற்ற ரூம்களை சுத்தம் செய்யத் தொடங்கினார்.

ஏற்கனவே நிலா குப்பை என ஏதுமின்றி பளிச்சென வைத்திருந்தாள். அதனால் சீக்கிரமே வேலை முடிய வாசுவின் பெற்றோர் அறைக்குள் நுழைந்தார்.
இதுதான் அக்கா மாமா ரூம் போலயே.

தேவகியும் கிருஷ்ணனும் எடுத்துக் கொண்ட படங்களை பார்த்ததும் குழப்பமாய் போனது.

இது இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என நெற்றியை சுருக்கி யோசித்தார். அட இவரு கிருஷ்ணன் ஆச்சே. அவரோட வீட்ல இருந்த கணேசன் மாமா பையன் தானே இவரு.

அக்கா எப்படி இவரை விரும்புனாங்க. எப்போ பார்த்தாங்கனு தெரியலயே என நினைத்து குழம்பினார்.

அக்கா உங்களுக்கு அவர் மட்டும் போதும்னு நினைச்சு தானே வந்துட்டீங்க.

உங்களை வீட்டை விட்டு போகும் போது பார்த்தது. கடைசி வரைக்கும் எங்களை எல்லாம் பார்க்காமயே போயிட்டல்ல கா என தேவகியின் புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டார்.

மற்ற போட்டோக்களையும் பார்த்ததும் ஒன்று அவரிற்கு புரிந்தது. மாமா அக்காவை நல்லா பார்த்துக்கிட்டாங்க. அதனால தான் இப்படியே இருந்துட்டு போய்ட்டாங்க.

போனவர்களை நினைத்து வருத்தப்படவே முடிந்தது. அந்த ரூமினை சுற்றி வந்தவர் அக்காவின் நினைவுகளை தனது மனப் பெட்டகத்தில் சேமிக்க தொடங்கினார்.

சில மணி நேரங்கள் கழித்து வெளியே வந்தவர் வீட்டிற்குள்ளே இருப்பது கடினமாக இருந்தது.

கீழே ஆச்சும் நடந்துட்டு வரலாம் என நினைத்தபடியே வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்தார்.

லிப்டை விடுத்து படிகளில் இறங்கத் தொடங்கினார். பொறுமையாக வரவும் அபார்ட்மெண்டை ஒட்டியே ஒரு பார்க் இருந்தது.

மாலை நேரம் ஆகியிருந்ததால் வெயில் சற்று குறைவாகவே இருந்தது. எனவே பார்க்கை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

ஏதோ சத்தம் கேட்டு திரும்ப யாரோ ஒரு பெண் ஏகவசனத்தில் யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள்.

யாருடா இது தமிழ் போலயே. இப்படி திட்டிட்டு இருக்கு இந்த பொண்ணு என நினைத்தபடியே அங்கே போனார்.

அந்த பெண்ணின் முதுகுப்புறமே தெரிய இன்னும் அருகில் நெருங்கி போனார்.

அறிவே இல்லையா... ச்சே இப்படி தான் மேலே வந்து மோதுவியா. இதுக்குனு வறீங்களா இடியட் என திட்டிக் கொண்டிருந்தாள்.

இவள் திட்டுகிறாள் என தெரிந்தாலும் தமிழ் புரியாததால் என்ன செய்வது என தெரியாமல் அந்த பெண்ணின் எதிரில் ஒரு இளைஞன் முழித்துக் கொண்டிருந்தான்.

சிவகாமி அவர்களின் அருகில் போகவும் அவளின் வார்த்தைகளை கேட்டு கோபமானார்.

ஏன்மா வயசுப் பொண்ணு பேசற பேச்சா இது. கொஞ்சம் ஆச்சும் அடக்கம் வேணாமா என தன் பாட்டிற்கு திட்டியவர் அதற்கு பின்பே அவளின் முகத்தை பார்த்தார்.

நீயா..இங்கே என்ன பண்ற. ஊர்ல உன்னைக் காணோம்னு உங்க அம்மா வருத்தப்பட்டு புலம்பறா. நீ என்னடான்னா இங்கயும் அடங்காம உன் பாட்டுக்கு ஆட்டம் போடற என தன் பாட்டிற்கு திட்டத் தொடங்கினார்.

சிவகாமியை பார்த்தவள் அத்தை நீங்க இங்க எப்படி.... பயத்தில் அவள் முகமோ வெளிறிப் போனது.

ஏண்டி லட்சுமி என்னடி நினைச்சுட்டு இருக்க. எல்லாம் உன்னைப் பெத்த அப்பனை சொல்லனும். அவன் இருக்கானே.. பாவம் உங்க அம்மா தான் உங்க இரண்டு பேருக்கும் இடையில் மாட்டிட்டு முழிக்கறா.

அத்தை முதல்ல கோபப்படாமல் நான் சொல்றதை கேளுங்க. அவர்கள் பேசிக் கொண்டிருக்க அங்கே இருந்தவனோ விட்டால் போதுமென்று ஓடி விட்டான்.

அதைப் பார்த்த சிவகாமி பார்த்தியா அந்த பையன் ஓடறதை. எல்லாம் உன்னால தான். நீ அடங்கவே மாட்டியா.

ஐயோ இவங்க வாயை மூடவே மாட்டாங்களா. இவங்க கண்ணுலயா படனும் என நினைத்தவாறு நெளிந்து கொண்டிருந்தாள்.

சரி வா வீட்டிற்கு போய் பேசலாம். நீ எங்கே தங்கியிருக்க என கேட்டார் சிவகாமி.

அதுவா அத்தை இங்க தான் இருக்கேன். ஒரு அவசர வேலை இருக்கு நான் அப்புறமா வீட்டுக்கு வரேன் என நழுவ பார்த்தாள்.

நீ இப்படியே தான் சொல்லுவ அப்புறமா வரவே மாட்ட வா போகலாம் என கையோடு அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
மறுபடியும் படிகளில் ஏறத் தொடங்கவும் ஐயோ அத்தை வாங்க லிப்ட்ல போலாம் என அழைத்தாள்.

சரி என அவரும் லிப்டை நோக்கி நடக்க கடுப்புடன் லிப்டில் ஏறினாள்.

இருவரும் ஐந்தாவது தளத்தை அடைய வீட்டின் கதவை திறந்தார். உள்ளே போன சிவகாமி முதல் வேலையாய் லட்சுமியின் அம்மா விஜயாவிற்கு தான் போன் செய்தார்.

ஐயோ அத்தை இப்போ எதுக்கு எங்க அம்மாவுக்கு கால் பண்றீங்க. நான் இங்க இருக்கறது இன்னும் சொல்லவே இல்லை. ப்ளீஸ் வேண்டாம் என தடுக்க பார்த்தாள்.

நீ சும்மா இரு பாவம் உங்க அம்மா. நீ பேசற நான் கால் பண்றேன் என்றவர் கால் செய்வதை நிறுத்தவில்லை.

சில ரிங்கில் அழைப்பு ஏற்கப்பட ஹலோ விஜயா என்ன பண்ற மா என விசாரித்தார்.

நான் எப்படி நல்லா இருப்பேன் என வருத்தத்துடன் அவரின் குரல் தேய்ந்து ஒலித்தது.

புரியுது விஜயா உன் பொண்ணு லட்சுமி இங்க தான் இருக்கா. இப்போ என பக்கத்தில் இருக்கா இரு பேச சொல்றேன்.

நிஜமாவா சொல்றீங்க. எனக்கு இப்போ தான் உயிரே வருது போனை குடுங்களேன் நான் பேசறேன் என பதைபதைத்தார்.

அட இருஇரு விஜயா என்ன அவசரம் கொஞ்சம் பொறுமையா இருமா. நான் கொடுக்கறேன் பேசு என்றவாறு போனை அவளிடம் கொடுத்தார்.

என்ன கண்ணு நல்லா இருக்கியா. அந்த மனுசன் தான் கூறு இல்லாம இருக்காரு நீயும் ஏன் கண்ணு இப்படி பண்ற என அழுதார்.

ம்மா முதல்ல நிறுத்து இப்போ எதுக்கு புலம்பற. நான் மும்பைல தான் இருக்கேன். சும்மா அப்பாவை திட்டாதே. நான் கொஞ்ச நாள்ல வரேன். புலம்பாம அமைதியாக இரு. நான் போனை வைக்கறேன் என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

சிவகாமி அருகில் இருப்பதை அதற்கு பின்பே உணர்ந்தவள் அவரைப் பார்த்தாள்.

என்ன டி இது. அம்மாகிட்ட இப்படியா பேசுவ. ஏன்தான் இப்படி இருக்கியோ என திட்டத் தொடங்கினார்.

அத விடுங்க அத்தை. நீங்க என்னை இதுக்கு தானே வீட்டுக்கு இப்போ கூப்டீங்க. நான் இப்போ கிளம்பவா எனக்கு வேலை இருக்க என எழுந்தாள்.

எதுக்கு இப்போ சுடுதண்ணியை கால்ல ஊத்தின மாதிரி குதிக்கற. இப்போ எங்கயும் போக விட மாட்டேன். என்ன வேலையாக இருந்தாலும் அப்புறமா பாரு என்றவர் அவளை பிடித்து மறுபடியும் அமர வைத்தார்.

நேரத்தை பார்த்தவர் பாரு இன்னும் கொஞ்ச நேரத்தில் பசங்க எல்லாரும் வந்திடுவாங்க என அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் நிலா வாசு சக்தி மூவரும் வரவும் சிவகாமி போய் கதவை திறந்தார்.

உள்ளே வந்தவர்களிடம் டேய் சக்தி நம்ம இரத்னவேல் பொண்ணு லட்சுமி இங்க தான்டா இருக்கா. இன்னைக்கு அவளைப் பார்த்தேன்டா என சொன்னார்.

இரத்னவேல் என்ற பெயரைக் கேட்டதும் நிலாவின் முகம் மாறியது. சக்தியோ அவளா...? இங்க என்ன பண்றா மா எனக் கேட்டான்.

வாசுவிற்கு அது யாரென்று தெரியாததால் அமைதியாக இருந்தான்.

சிவகாமியோ அவ எதுக்கு வந்தானு தெரியலபா கேட்டாலும் சொல்ல மாட்டா. இங்க தான் இருக்கா என சோபாவை கைகாட்டினார்.

நீயா....? என்ற கத்தலில் அனைவரும் திரும்பி அவளைப் பார்த்தனர்.

மயக்குவாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

ஹா ஹா ஹா
நம்ம சண்டைக்காரி மகா தான் லட்சுமி மகாலட்சுமியா?
மகா ஏன் சிவகாமியை அத்தைன்னு கூப்பிடுறாள்?
இரத்னவேல் யாரு?
இராஜசேகரின் தம்பியா?

இரத்னவேல் பெயரைக் கேட்டதும் நிலா ஏன் ஜெர்க் ஆகிறாள்?
என்ன காரணம்?
பெற்றோர் குடும்பம்ன்னு ஊரை விட்டுட்டு நிலா ஓடி வந்ததுக்கு இரத்னவேல்தான் காரணமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top