கொலுசொலி மயக்குதடி - 30

Advertisement

ஆபிசிற்கு சென்றவர்கள் அவரவர் வேலைகளில் மூழ்கினார்கள். சற்று நேரத்தில் நிலா சக்தியின் கேபினிற்கு வந்து சேர்ந்தாள்.
பேருக்கு தான் நிலாவின் சீட் வாசுவின் கேபினில் மற்றபடி எப்போதும் அவள் சக்தியின் கேபினில் தான் இருந்தாள்.
வாசுவும் இதைப்பற்றி சிறு புன்னகையுடன் எனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லை என முடித்து விட்டான்.

நிலா ஆபிசையே தன் கண்ணசைவில் கட்டுப்பாட்டில் வைத்த போதும் சக்தி மற்றும் வாசுவிடம் வால்தனம் அடங்காமல் சேட்டை செய்வாள்.

என்ன நடந்த போதும் மேக்னாவை மட்டும் கவனமாக தன்னருகில் விடாமல் வாசு ஒதுக்கியே வைத்திருந்தான்.

இன்றும் நிலா சக்தியோடு ஏதோ வேலையில் இருந்தாள். மேக்னா தான் எந்த வேலையும் இன்றி வாசு கொடுத்த ஆண்டறிக்கையை தேமே என்று படித்துக் கொண்டிருந்தாள்...

அவளைக் கவனித்த சக்தியோ என்ன மேக்னா வேலை எல்லாம் எப்படி போகுது என விசாரித்தான்.

பொதுவாக சிரித்து வைத்த மேக்னா சூப்பரா போகுது சார் என்றாள். அதைப் பார்த்து நிலாவோ வாய்க்குள்ளே சிரிப்பை அடக்கினாள்.

எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா மேக்னா...சக்தி கேட்டதும் நிலா அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

என்ன சார் சொல்லுங்க... மேக்னா அவசரமாக ஓடி வந்தாள்.

இந்த பைலில் எல்லாம் வாசு சைன் பண்ணனும் வாங்கிட்டு வர முடியுமா...

அவன் சொன்னதுதான் தாமதம் பாய்ந்து பைலை பிடுங்கியிருந்தாள்.

பொறுமை பொறுமை ஏன் இந்த அவசரம்.. சைன் வாங்கிட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சு என்னோட கேபின் வாங்க. அது வரைக்கும் கேண்டீன் போய்ட்டு வாங்க. வாசுவையும் கூட்டிட்டு போங்க...

சக்தி சொல்ல சொல்ல அவளிற்குள் சந்தோச ஊற்று பெருகியது. கண்டிப்பாக சார் என்றபடியே துள்ளிக் குதித்து ஓடினாள்.

நிலா அவனை காளியாய் மாறி முறைக்க வெயிட் வெயிட் என்றவன் போனை எடுத்தான்.

வாசுவிற்கு போன் செய்தவன் அவன் எடுத்து ஹலோ சொல்லவும் மேக்னா சைன் வாங்க இப்போ வருவா ஒழுங்கா பண்ணிட்டு கேண்டீன் போலாம்னு சொல்லுவா போ..

வாசு ஏதோ சொல்ல வரவும் காரணம் இல்லாம நான் சொல்ல மாட்டேன் பேசாம போய்ட்டு அரைமணி நேரம் அப்புறமா என்னோட கேபின்க்கு அவளை அனுப்பு என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

என்ன சக்தி பண்றீங்க. இதெல்லாம் டூ மச் என்றவாறு நிலா பொறியத் தொடங்கினாள்.

அதற்குள் யாரோ ஒருவர் உள்ளே வர அனுமதி கேட்கவும் நிலா அமைதியானாள்.

எஸ் கம் இன் என சக்தி அனுமதி கொடுக்க அந்த புதியவரும் உள்ளே வந்து எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

இவங்க என்னோட ப்ரண்ட். அதோட டிடெக்டிவ் மிஸ்டர் அஜய் என அறிமுகப் படுத்தினான்.

ஓஓ... ஹலோ சார் என நிலா சிநேகமாக புன்னகைத்தாள்.

ஹாய்... சார் எல்லாம் வேண்டாம் ஜஸ்ட் கால் மீ அஜய் என சிரிக்க நிலாவும் சரியென பதிலிற்கு புன்னகைத்தாள்.

சக்தி நிலாவை பார்க்க அவளும் மேக்னாவை அனுப்பியதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டாள்.

வாசுவைத் தவிர வேறு என்ன காரணம் சொல்லி இங்கிருந்து அனுப்பினாலும் அவள் ஏன் என்று யோசிப்பாள் என நிலாவும் உணர சக்தியை அர்த்தப் பார்வை பார்த்தாள்.

நான் அனுப்புன இரண்டு பேரை பத்தியும் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிட்டியா அஜய் என சக்தி கேட்டான்....

எஸ் சக்தி. பயோ டேட்டாவே இப்போ என் கையில் இருக்கு என பைலை அவனிடம் கொடுத்தான்.

இரண்டு பேரா என நிலா குழப்பமாக சக்தியை பார்த்துக் கேட்டாள்.
பைலை திறக்கப் போன சக்தி நிலாவின் கேள்வியில் அவளைப் பார்த்தான்.

ஒண்ணு மேக்னா இன்னொருத்தர் மகா...

என்ன மகாவா என்ன சொல்ற சக்தி அவளைப் பத்தி எதுக்கு விசாரிக்கனும். அவளிற்கு பயத்தில் கைகால்கள் உதற ஆரம்பித்தது.

அவளின் பயத்தை பார்த்து பதறிய சக்தி ஆர் யூ ஓ.கே நிலா என கேட்டவாறு தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.

மறுக்காமல் பெற்றுக் கொண்டவள் வாயில் சரித்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

சக்தியை பார்க்க அவனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அஜய் தான் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தான்.

சக்தி அந்த மகாவை பத்தி எதுக்கு இப்போ. நம்ம பிரச்சனை மேக்னா தானே. அவளின் கவனம் முழுதும் சக்தியிடம் இருந்த பைலில் தான் இருந்தது.

உனக்கு என்னாச்சு நிலா. நான் பார்த்ததில் இருந்தே மகா மேல்தான் சந்தேகம். மேக்னா வெறும் அம்பு தான். என்ன காரணமோ அவள் மகா கூட இருக்கா. ஏதோ நேரில் பார்த்தது போல தனது அனுமானத்தை கூறினான்.

வேறு வழியின்றி அஜயை பார்த்த நிலா தேங்யூ சோ மச் அஜய் நாங்க கொஞ்சம் பேசணும். இன்னொரு நாள் ப்ரீயா பேசலாமா...

ஏதோ பிரச்சனை என புரிந்து கொண்ட அஜயும் நோ ப்ராப்ளம் நீங்க பாருங்க என சக்தியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

இப்போ சொல்லு நிலா. உனக்கு ஏற்கனவே இவங்களை பத்தி தெருஞ்சிருக்கு கரெக்டா. சக்தி நேராக விசயத்திற்கு வந்தான்.

ஆமா தெரியும் ஆனால் முன்னாடியே இல்லை இங்க வந்த பின்னாடி தான்.

பொய் சொல்லாதே நிலா இதுக்கு மேலயும் நான் நம்ப தயாராக இல்லை...

சக்தியின் கோபத்தில் மனம் வலிக்க தலையை குனிந்து கொண்டாள்.

இப்போ நீயே சொல்லு இல்லைனா நானே இதைப் படிச்சு தெருஞ்சுக்கறேன் என பைலை திறக்க போனான்.

ப்ளீஸ் சக்தி வேண்டாம். நிலாவின் கண்களில் கண்ணீரை பார்த்தவன் என்னவோ ஏதோவென பதறிப் போனான்.

ம்ப்ச் என்ன மா இது முதல்ல கண்ணைத் தொட எதுக்கு இப்போ அழற. எதுவாக இருந்தாலும் சொன்னாத் தானே தெரியும். நீயே மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு எத்தனை நாளைக்கு வருத்தப்பட போற.

சக்தி இவ்வளவு தூரம் கேட்டும் நிலாவோ வாயை திறக்காமல் கண்ணீர் விட்டபடியே இருந்தாள்.

நான் வாசுவை கூப்பிடறேன் அவனே கேட்பான் என போனை எடுக்கவும் நிலா வேண்டாம் என பலவீனமாக தலையை அசைத்தாள்.

தன் கையில் இருந்த பைலை சலிப்புடன் டேபிளின் மீது போட்டவன் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.

சக்தியின் கோலம் நிலாவிற்கு கவலையளிக்க எதுவும் செய்ய முடியாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கேண்டீனில் வாசுவோ முள்ளின் மேலே இருப்பதைப் போன்ற அவஸ்தையுடன் அமர்ந்து கொண்டிருந்தான்.

மேக்னாவோ இதுதான் வாய்ப்பு என ஓயாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

அடப்பாவி சக்தி கடன்காரா.. நான் என்ன பாவம் டா பண்ணுனேன்... எவ்ளோ நாளா என்ன மேல கோபம் இருந்துச்சு. இப்படி பழி வாங்கிட்டியே என மனதிற்குள் புலம்பியவாறு வாசு அமர்ந்திருந்தான்.

நிலா டார்லிங் ஆச்சும் நம்மளை காப்பாத்த வருமா. இல்லை அவளையும் விடாம இந்த சக்தி தான் பிடிச்சு வச்சிருக்கானா...?

என்ன டா நடக்குது... வாசுவின் புலம்பல் கடவுளிற்கே கேட்டதோ என்னவோ தூரத்தில் நிலா வருவது தெரிந்தது.

ஐய் நிலா வந்துட்டா... ஷப்பா கண்ணு எல்லாம் வேர்க்குதே என மேக்னா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவன் பிரகாசமானான்.

எனக்கு தெரியும் சார். யூ ஆல்சோ லைக் இட். ஏதோ தான் சொன்னதைக் கேட்டுத் தான் வாசு சிரிக்கிறான் என மேக்னா மேலும் ஏதோ பேசினாள்.

வாசு எங்கே அதையெல்லாம் காதில் வாங்கினான். நிலாவை பார்த்ததுமே மனம் அவளை நோக்கி பறந்திருந்தது.

சக்தியை பற்றிய குழப்பத்தில் நடந்து வந்த நிலாவோ வாசுவின் அருகில் வரவும் மேக்னா எதையோ சொல்லி ஹாஹாஹா என சிரித்து வைத்தாள்.

அவளின் சிரிப்பு சத்தத்தில் நினைவு வந்த நிலாவோ ஜஸ்ட் ஸ்டாப் இட் இடியட் என கத்தவும் மேக்னாவை விட வாசு தான் அதிர்ந்து போய் பார்த்தான்.

வாசு மேக்னா இருவரும் அவளின் கத்தலில் சேரை விட்டு எழுந்தே விட்டார்கள்.

அதையெல்லாம் பெரிதாக எண்ணாமல் சேரில் அமர்ந்த நிலாவோ என்ன மேக்னா சைன் வாங்கிட்டீங்களா என இறுக்கத்துடன் கேட்டாள்.

எஸ் மேம் பயத்துடனே பதில் வந்தது.

கேண்டீன் போய் பேசிட்டு இருக்க சொன்னால் உங்க காலேஜ் கதையை ஊர்க்கதையை எல்லாம் பேசிட்டு மேனசே இல்லாமல் கத்தி கத்தி சிரிச்சுட்டு இருக்கீங்க.
அவளின் உறுமலில் மேக்னாவின் சர்வமும் அடங்கி போனது.

பைலை எடுத்துட்டு போய் சக்தி கிட்ட கொடுங்க...

அவள் சொல்லி முடிக்க விட்டால் போதுமென்று ஓடியே விட்டாள்.

அதுவரையிலும் வாசு அமராமல் நின்று கொண்டிருந்தான்.

அவள் போன பிறகே வாசுவை பார்க்க அவன் நிலாவை பார்த்து பயந்து போய் நின்றிருந்தான்.

ம்ப்ச் உட்காருங்க வாசு... அவளின் குரலில் தெரிந்த சோர்வில் வாசு என்னனெ புரியாமல் அவளின் அருகில் அமர்ந்தான்.

எதுவும் பேசாமல் அவனின் கையை பிடித்துக் கொண்டவள் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள்..

மயக்குவாள்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

ஹலோ இங்கே என்னம்மா நடக்குது?
இரண்டு ஆண்களை அலற விடும் நிலா மகாவுக்கு ஏன் பயப்படுறாள்?
என்ன காரணம்?
சக்தியிடமும் ஒண்ணும் சொல்லாமல் அழுறாள்
ஒருவேளை மகா சிவானியின் இல்லீகல் சகோதரியா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top