கொலுசொலி மயக்குதடி - 29

Advertisement

சக்தி விடாமல் வாசுவை கேள்வி கேட்டுக் கொண்டிருக்க... எப்படியாவது என்னைக் காப்பாற்ற மாட்டாயா என நிலாவை பாவமாக பார்த்தான்...

சிறிது நேரம் பொறுத்த பார்த்த நிலா.. அதற்கு மேலும் பொறுக்க முடியாமல்.. வாசு ஆபிஸ் கிளம்பற ஐடியா இல்லையா போங்க ரெடியாகி வாங்க என கட்டளை இட்டாள்...

தப்பித்தால் போதுமென்று அவன் சமாளிப்பாக சிரித்துவிட்டு ஓடி விட்டான்...

என்ன இது என நிலாவை கேட்டவாறு சக்தி வந்து நிலாவின் எதிரில் அமர்ந்தான்... எதுவோ புரிந்தது போல் இருக்க சிவகாமி வந்து நிலாவின் கையை பிடித்துக் கொண்டார்...

சக்தியை புன்னகையுடன் பார்த்தவள் இதுக்கு மேல வாசு சிரிச்சுட்டு சந்தோசமாக மட்டும் தான் இருக்கனும்.. அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன் என உறுதியாக சொன்னாள்..

என்ன செய்தாச்சும் அவளோட நிம்மதியை குலைக்காமல் விட மாட்டேன் என போனில் கத்திக் கொண்டிருந்தாள் மகா.. அவள் பேசுவதை எல்லாம் கேட்டுவிட்டு பயத்துடன் நின்றிருந்தாள் மேக்னா.. ச்சே அவசப்பட்டு இவளோட கூட்டு சேர்ந்துட்டோம் போலயே என வருந்தம் கொண்டாள்...

இதை எல்லாம் கவனிக்காமல் மகா யாருடனோ காரசாரமாக பேசிக் கொண்டிருந்தாள்...

என்ன சொல்றீங்க அவ எதுக்கு இங்க வந்திருக்கானு எதாவது தெரியுமா..

மறுமுனையில் என்ன சொன்னார்களோ சரி நான் பார்த்துட்டு என்ன ஏதுன்னு சொல்றேன்.. என்ன நடந்தாலும் அவளை திரும்ப அங்க கால்வைக்க விட மாட்டேன் என ரௌத்திரமாக கத்தினாள்..

மேக்னா பயந்து போய் சற்று ஓரமாக ஒதுங்கினாள்... போனை பேசி முடித்த மகாவோ அங்குமிங்கும் நடக்கத் தொடங்கினாள்...

ஏதோ யோசித்தபடியே இருந்தவள் பின்பு கண்கள் பளிச்சிட குரூரமாக சிரித்தபடியே மேக்னாவின் பக்கம் திரும்பினாள்...

மேக்னா இன்னைக்கு உன்னோட ஸ்கூட்டி பஞ்சர்... என்ன சரியா... அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தாலும் எதற்காக என்பதைப் போல அவளைப் பார்த்தாள்...

சக்தி வந்திருக்கான் இங்க வாசுவோட வீட்டுக்கு.. கார் கீழ வந்தபோது கவனிச்சேன்.. நீ ரெடியாகிட்டு அவங்களோட ஆபிஸ் போ...

அவளின் திட்டம் புரிந்தது... அதனால் அதெல்லாம் சரி நான் பக்காவா பண்றேன்.. அதனால என்ன காரியம் ஆக வேண்டி இருக்கு.. அவளை மெச்சுதலாக பார்த்த மகாவோ சக்தியோட அம்மா வந்து இருக்காங்களானு எனக்கு தெரியனும்...

புரிந்ததாய் தலையை ஆட்டியவள் ரெடியாக உள்ளே போனாள்.. அடுத்து என்ன செய்வதென யோசனையாக மகாவின் விழிகள் இரண்டும் சுழன்றது..

நிலாவின் பேச்சில் சக்தி குழப்பம் தெளிந்து அவளை கனிவாக புன்னகைத்தான்...

எல்லாம் ஓ.கே நிலா...உங்க அம்மாவை பத்தி கேட்க கூட உனக்கு தோணலையா... உங்க அத்தை ரொம்ப வருத்தப்படறாங்க...

என்ன சக்தி இது.. நீங்களும் புரியாம பேசறீங்களா.. இவ்வளவு தானா என்னைப் பத்தி தெருஞ்சுது என நிலா பேசவும் சக்திக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை..

நிலாவோட நிலைமை தெரியாம பேசறியே டா சக்தி என்றவாறு வாசு வந்தான்...

என்ன சொல்ற டா... அப்படி என்ன நிலைமை அவங்க அம்மா கூட பேசாத அளவுக்கு என்ன பெரிய நிலைமை.. சக்தி கோபமானான்....

உனக்கு புரியலடா.. அவனின் அருகில் வந்து அமர்ந்தான் வாசு...

என்னதான் சொல்ல வர.. சக்தி கேட்டான்.. ஆமா வாசு நீ என்ன தான் சொல்ற எதுவாக இருந்தாலும் நேராக சொல்லு.. சிவகாமியும் பதிலுக்கு கேட்டார்..

நிலா உன்னைக் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைனு சொன்னதுக்கு பின்னாடி எதுவோ பெரிய காரணம் இருக்கு.. இல்லைனா இவ்ளோ சின்ன விசயத்துக்கு அவ வீட்டை விட்டு வரமாட்டா..

ஆனால் அவ அப்படித்தானே நம்ம கிட்ட சொன்னா என கேட்டான் சக்தி..

இருக்கலாம் ஆனால் அது முழுக்க உண்மை இல்லையே.. நிலா அதிர்ச்சியாகி வாசுவை பார்த்தாள்..

நான் சொல்றது தானே அவன் கண்களால் கேட்க அவளோ பார்வையை தழைத்துக் கொண்டாள்... அதை எதிர்பார்த்த வாசுவும் சிவகாமி அம்மாவை பார்த்தான்..

இப்போ போட்டு எதையும் குழப்ப வேண்டாம் பொறுமையாக பேசிக்கலாம் என வாசு முடித்து விட்டான்...

எல்லாரும் அதே நிலையில் இருக்கவும் மேக்னா அங்கு வந்தாள்...

என்ன மேக்னா இந்த நேரத்தில் இங்கே சக்தி தான் கேட்டான்..

சார் ஸ்கூட்டி பஞ்சர் ஆயிருச்சு... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உங்க கூட வரவா.. பொய்யை உண்மை போல சொன்னாள்...

மற்றவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விடவும் சக்தி தான் அவளை சந்தேகமாக பார்த்தான்...

அவளோ அதை கவனிக்காமல் வீட்டை நோட்டமிட்டாள்... சிவகாமியை பார்த்துவிட்டு சார் இது யாரு என வாசுவிடம் கேட்டாள்...

வாசு ஏதோ கோபமாக பேசவரவும் அவனைத் தடுத்த நிலாவோ.. உனக்கு எதுக்கு மேக்னா அதெல்லாம் நேராக அவளைப் பார்த்து கேட்டாள்...

அவசரமாக பார்வையை அப்பாவியாய் வைத்துக் கொண்டு சாரி மேம் என்றாள் குரலே வெளி வராமல்...

இட்ஸ் ஓ.கே.. தேவை இல்லாத விசயத்தில் மூக்கை நுழைக்காதே.. நாங்க கிளம்ப இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் கால் பண்றேன் அப்போ இறங்கி கீழே வா..

இப்போ கிளம்பு என சொல்லாமல் சொல்ல ஓ.கே மேம் என கிளம்பினாள்.. பின் ஏதோ தோன்ற திரும்பியவள் மேம் என்னோட நம்பர் கேட்கவே இல்லையே என கேட்டாள்..

வாசுவோட பி.ஏ நம்பர் கூடவா தெரியாது.. அதெல்லாம் என்கிட்ட இருக்கு என்றாள்..

வாசுவோ அப்படி ஒருத்தியே அங்கு இல்லை என்பதைப் போல போனை நோண்டிக் கொண்டிருந்தான்.. சக்தி தான் அங்கு நடப்பதை உன்னிப்பாக கவனித்து அமர்ந்திருந்தான்..

அவள் கிளம்பியதும் நிலா கதவை லாக் செய்து விட்டு வந்தாள்...

ஏன்மா தமிழ் பொண்ணு போல.. ஏன் இப்படி பேசி அனுப்பிட்டீங்க... வாசுவோட ஆபிஸ்ல தான் வேலை பார்க்குதா என சிவகாமி கேட்டார்

ஆமா அத்தை அதை விடுங்க... அந்தப் பேச்சிற்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்தாள்....

இங்கிருந்து கிளம்பிப் போன மேக்னாவோ தலையை தொங்க போட்டபடி அவளின் வீட்டிற்குள் நுழைந்தாள்...

என்ன அதுக்குள்ள வந்துட்ட காலை ஆட்டியவாறு சோபாவில் அமர்ந்து கொண்டிருந்த மகா கேட்டாள்...

நடந்ததை அப்படியே அவளிடம் ஒப்புவித்தாள் மேக்னா... அதைக் கேட்டு கொதித்து எழுந்தவள் அளுக்கு அவ்ளோ திமிரா ச்சே.. உன்னை அங்கிருந்து துரத்த எவ்வளவு ப்ளான் பண்ணுனா சக்தி கிட்டயே வந்துட்ட... திரும்ப வரலாம்னு கனவுல கூட நினைக்க விடாம பண்றேன்டி என நினைத்தவாறு யோசித்தாள்...

அப்போ அந்த சிவகாமி இங்க தான் இருக்காளா... அவ கண்ணுல நாம படவே கூடாது... எவ்வளவு நாள் இங்க இருக்க போறானு தெரியலயே...

சிறிது நேரம் பொறுத்த மேக்னாவோ அவளின் யோசனையை பார்த்துவிட்டு தனது ரூமிற்கு கிளம்பினாள்...

சாப்பிட்டு விட்டு வாசு சக்தி நிலா மூவரும் ஆபிஸ் கிளம்பினார்கள்... அப்போது சிவகாமியோ சக்தி நைட் இங்க வந்துட்டு சாப்பிட்டு அப்புறமாக கிளம்பி போறியா என கேட்டார்..

சிறிது யோசித்தவன் அவரிடம் பதில் சொல்லும் முன் அதெல்லாம் கேட்கனுமா வருவான் என நிலா முடித்து விட்டாள்...

சக்தியின் குணம் நன்கு அறிந்த சிவகாமியோ சக்தி ஏதாவது சொல்லி விடுவானோ என பயந்து போய் பார்த்தார்..

சிரித்த சக்தியோ உன்னை கொல்லப் போறேன் பாரு.. நானே வரேன்னு சொல்லத்தான் வந்தேன் அதுக்குள்ள என அவளின் தலையில் கொட்ட வந்தான்...

வெவ்வெவ்வே என அவனுக்கு ஒழுங்கு காட்டியவள் வாசுவின் பின்னே ஔிந்தாள்..

பாருங்க மா இவ பண்றதை எல்லாம்... வாசு பின்னாடியா ஔியற.. வேலை செய்ய ஆபிஸ்ல என்னோட கேபின் தானே வரனும் அப்போ பார்த்துக்கறேன் என சக்தி பேசினான்...

சிவகாமிக்கு அங்கு நடப்பதை நம்பவே முடியவில்லை... சக்தியின் மாற்றம் அவரிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.. அதே மனநிலையுடன் அவர்களுக்கு திருஷ்டி கழித்து அனுப்பி வைத்தார்...

மேக்னாவிற்கு கால் செய்த நிலாவோ அவளை வரச்சொல்லி அழைத்துக் கொண்டு ஆபிஸ் கிளம்பினார்கள்....

மயக்குவாள்

போன அப்டேட்க்கு கமெண்ட்ஸ் கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இன்னைக்கு எபி எப்படி இருக்குனு மறக்காக சொல்லுங்க...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

மேக்னாவுக்கு காலம் கடந்த ஞானோதயம்
மகாவுக்கும் சிவானி நிலா குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்?
மகா யாருடன் போனில் பேசினாள்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top