கொலுசொலி மயக்குதடி - 28

Advertisement

வாசு படுத்துக் கொண்டிருந்தானே தவிர உறக்கம் என்பது சிறிதும் வராமல் உருண்டான்..

சிவகாமி அம்மா வருவதாக சொல்லி சக்தி சொன்னான்... சர்ப்ரைஸ் என நிலாவிடம் சொல்லவும் இல்லை. சொன்னபடியே வந்துட்டாங்க... ஒரு வேளை போகும் போது அவளையும் கூட்டிட்டு போவாங்களோ.. மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது..
இனியும் உறக்கம் வரும் எனத் தோன்றாததால் எழுந்து ரூமை விட்டு வெளியே வந்தான்...

இருளாக இருந்தாலும் லைட்டை போடத் தோன்றாமல் ஹாலில் வந்து அமர்ந்து விட்டான்...

தண்ணீர் அருந்தலாம் என வெளியில் வந்த சிவகாமி வாசு மட்டும் இருட்டில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் வந்தார்....

வாசு தூங்கலியா பா.. இப்படி எதுக்கு இந்த நேரத்தில் உட்கார்ந்துட்டு இருக்க.. என்னவோ ஏதோவென அவனின் தோளில் கை வைத்தார்...

உட்காருங்க அம்மா ஏன் நிக்கறீங்க... வாசு சொல்லவும் அவரும் அவனின் அருகிலேயே அமர்ந்தார்....

ஏன்மா நீங்க போகும் போது நிலாவை கூட்டிட்டு போயிருவீங்களா... நான் பாவம் தானே எனக்கு யாருமே இல்லை.. இவ்ளோ நாளா சாப்டியானு கூட கேட்க யாரும் இல்லாம நிறைய நாள் பட்டினியா இருந்திருகேன்.. பணம் நியை இருக்கு ஆனால் பாசம்....
அவனால் மேலும் பேச முடியாமல் வார்த்தைகள் சிக்கிக் கொள்ள நா தழுதழுத்தது...

வாசு என்னப்பா இது... நான் எப்போ அவளை பிரிச்சு கூட்டிட்டு போரேன்னு சொன்னேன்.. நீ இப்படி கலங்கி நிற்கறதை பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தேன்...

அவரும் கண் கலங்கவும் வாசு அவசமாக தன்னை நிதானப் படுத்தினான்.. என்ன மா இது இப்படி உணர்ச்சி வசப்படாதீங்க.. ஏதோ ஒரு குழப்பம் அவ்ளோ தான்..

நீ ஏன் வாசு யாரும் இல்லனு சொல்ற.. உனக்கு நிறைய சொந்தம் இருக்கு. சிவகாமி அவசரத்தில் வாயை விட்டார்..

எனக்கு எல்லா உண்மையும் எப்பவோ தெரியும் மா.. என்னோட அப்பாவும் அம்மாவும் எதுவும் சொல்லல.. ஆனால் அவங்க பேசியதை கேட்டு எல்லாமே தெருஞ்சுட்டேன்...

சக்தி இங்க என்னை தேடி வந்தபோது நான் டிடெக்டிவ் வச்சு விசாரிச்சு அது உங்க குடும்பம் தான்னு எல்லாமே புருஞ்சுது...

வாசு சொன்னதை கேட்டு அவரிற்கு திக்கென்றது.. என்ன பா சொல்ற எல்லாம் தெருஞ்சும் ஏன் எதுவும் காட்டிக்கல..

எப்படிமா சொல்ல சொல்றீங்க.. எங்க அம்மாவுக்கு அவங்க காதல் பெருசா தெருஞ்சாலும் குடும்பத்துக்கு பெரிய தவறை பண்ணிட்டாங்க. நான் எந்த முகத்தை வச்சிட்டு உங்களை எல்லாம் தேடி வரமுடியும்..

சிவகாமிக்கும் அவனது நிலைபுரிய என்ன சொல்வது எனத் தெரியாமல் வருந்தினார்..

அதெல்லாம் கூட பரவாயில்லை மா.. நிலா என்னோட மாமா பொண்ணுனு தெருஞ்ச அன்னைக்கு அவகிட்ட உண்மை சொல்ல முடியாம நான் தவிச்ச தவிப்பு இருக்கே.. அவன் சொல்லும் போதே கண்களில் கண்ணீர் வழிந்தது...

கண்ணா.. என்ன இது இப்படி சின்ன பிள்ளையாட்டம் அழுதுட்டு.. நடந்தது நடந்து போயிருச்சு... இனிமேல் நாங்க இருக்கோம் பா.. இப்படி கலங்கிப் போகக்கூடாது சாமி. வா வந்து தூங்கு எந்திரி என அவனை எழுப்பினார்....

மறுபேச்சு பேசாமல் அவன் எழுந்து கொள்ளவும் அவனோடு நடந்தவர் தட்டிக் கொடுத்து உறங்க வைத்தார்...

மறுநாள் நிலா வாசு இரண்டு பேரும் எழுவதற்கு தாமதமாகி விட அவசரமாக ரூமை விட்டு வெளியே வந்தார்கள்...

ஹால் முழுக்க சாம்பிராணியின் மணம் நிறைக்க... கிச்சனில் சுப்ரவாதம் கேட்டது... இருவரும் ஆச்சர்யமாக அங்கே போகவும் வாங்க டா கண்ணுகளா காபி எடுத்துக்கோங்க என நீட்டினார்...

புன்னகை முகமாக எடுத்துக் கொண்டவர்கள் அங்கேயே அவருடன் பேசியபடியே நின்று கொண்டார்கள்...

உங்க அம்மாவுக்கு இட்லியும் புதினா சட்னியும் அவ்ளோ பிடிக்கும்டா... அங்கே நம்ம வீட்ல என்ன மறந்தாலும் இட்லியாக இருந்தால் புதினா சட்னி இல்லை என்றால் உங்க தாத்தாவும் மாமாவும் வீட்டையே இரண்டாக்கி விடுவார்கள்...

சிவகாமி வாசுவிடம் சிரித்தபடியே சொல்லிக் கொண்டிருந்தார்.. வாசு திருட்டு முழிமுழிக்க சத்தம் வராததால் வேலையை விட்டுவிட்டு அவனின் முகம் பார்த்தார்...

வாசுவின் நிலையை பார்த்துவிட்டு அதற்கு பின்பே நிலா இருப்பதை கவனித்தார்...

ஏதோ சொல்லவர நிலாவோ காபி கப்பை வைத்து விட்டு கோபமாக வெளியே போய் விட்டாள்...

ஐயோ போச்சு போச்சு... இன்னைக்கு நான் தான் சட்னி ஆகப்போறேன்.. ஒரேயொரு புதினா சட்னி மேட்டரை சொல்லி எனக்கு ஆப்பு வச்சுட்டீங்களே..

வாசு புலம்பியவாறு வேகமாக ஓடினான்... அவரும் என்ன நடக்குமோ என பதற்றமாக வெளியே வந்தார்...

இருவரும் நிலாவின் ரூமிற்குள் இருக்க சிவகாமியா என்ன செய்வது என தெரியாமல் கைகளை பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தார்..

நிலா உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்திருந்தாள்... அவளைத் தேடி வந்த வாசு அப்பாடி அவசரத்துல லாக் பண்ணாம போயிட்டா என நினைத்தவாறு உள்ளே போனான்...

நிலாவின் முகத்தைப் பார்த்தவனுக்கு அவளை நெருங்கவே பயமாக இருந்தது..

காலில் இரும்புக் குண்டை கட்டியது போல அடுத்த அடி வைக்க முடியாமல் சண்டித்தனம் செய்தது..

நி..லா.... அவன் பொறுமையாக அழைத்தான்.. ம்ம்ம்... என அவனை முறைத்தவள் திரும்பி அமர்ந்து கொண்டாள்...

ப்ளீஸ் நிலா என்னைப் பாரேன்... அவளின் தோளில் கைவைக்க படக்கென தட்டி விட்டாள்....

நான் என்ன சொல்றேன்னு கேளு... வாசு கெஞ்சவும் நிதானமாக அவனை நோக்கி திரும்பியவள்... நான் யாரு வாசு எதுக்கு என்கிட்ட எல்லாம் சொல்லிக்கிட்டு.. இவ்ளோ நாளா எப்படி இருந்தீங்களோ அப்படியே இருங்க...

ம்ப்ச்... புரியாம பேசாத டா.. என்னை ஏன் இப்படி கொல்ற.. வலிச்சுது தெரியுமா.. இங்க வலிச்சுது... அவனது நெஞ்சை சுட்டிக் காட்டினான்...

பதறிப்போய் நிலா பார்க்கவும்... எனக்கு எல்லாமே நீதான் நிலா... சொந்தமும் நீதான் உயிரும் நீதான்... என்னை நீ வெறுக்கறது இல்லை கொஞ்சம் விலகிப் போக நினைச்சா கூட என்னோட உடம்புல உயிர்....

அவன் முடிக்கும் முன் கை கொண்டு வாயை பொத்தியிருந்தாள்..

என்ன வார்த்தை சொல்ல வந்தீங்க..

அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.. அவளது உடலும் உள்ளமும் நடுங்கத் தொடங்கியது...

கண்களி்ல் நீர்நிறைய அவனும் நிலாவை அணைத்துக் கொண்டான்.. சிறிது நேரத்தில் தன்னிலை உணரந்து நிலா விலக நினைக்க அவளை விடாமல் அருகில் இழுத்தான்...

என்ன வாசு இது விடுங்க அத்தை வேற வெளியே இருக்காங்க.. நிலாவின் குரல் சிணுங்கலாய் வந்தது...

அதை இரசித்தவன் அவளின் காதுமடலில் மீசை உரச இவ்ளோ நேரமா என்னை கட்டிப்பிடிச்சுட்டு நின்னீங்களே மேடம் அப்போ தெரியலயா என குறும்பாக கேட்டான்..

காதுமடல் எல்லாம் குறுகுறுக்க போங்க வாசு என அவனைப் பிடித்து தள்ளினாள்.. எங்கம்மா போறது என அவளை இன்னும் நெருங்கி வந்தவன் மெதுவாக அவளின் கன்னத்தில் தனது முதல் முத்திரையை பதித்தான்...

அவனின் முதல் இதழ் தீண்டல் உயிர்வரை செல்ல அவனது மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்...

அவளின் முகம் பார்த்தே தனக்கான காதலை அறிந்து சிலிர்த்தவன் மென்மையாக அவளை அணைத்துக் கொண்டான்...

நொடிகள் நிமிடங்களாய் கடக்கவும் மோனநிலை கலையாமல் நின்றிருந்தனர்...

வெளியே சிவகாமி அம்மாவோ ஏதோ பிரச்சனையே என பயந்தவர்.. என்னோட வாய்தான் எப்பவும் வினையே. ச்சே நல்லா இருந்த பிள்ளைகளை இப்படி பண்ணிட்டேனே என உள்ளே நடப்பது தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்..

அழைப்பு மணி ஒலிக்கவும் வேகமாக ஓடி கதவைத் திறந்தார் சிவகாமி...

சக்தி தான் வந்தான்...
அம்மா என்னாச்சு ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கீங்க என கேட்டான்..

அவர் நடந்ததை சொல்லவும்.. ஷிட் ஏன்மா இப்படி பண்ணுனீங்க... என்னாச்சோ தெரியலயே என அம்மாவை கடிந்தவாறு அவர்கள் இருந்த ரூமின் கதவை வேகமாக தட்டத் தொடங்கினான்...

உள்ளே இருந்த நிலா சத்தம் கேட்டு வாசுவிடம் யாரோ கதவைத் தட்டற மாதிரி இருக்கு என்றாள்...

வேற யாரு அந்த சக்தியாக தான் இருக்கும்.. எப்படித் தான் மூக்கு வேர்க்குமோ கரெக்டா வந்திருவான்... வாசு சலித்தவாறு சொன்னான் ...

அதைக் கேட்டு சிரித்த நிலா அவனிடம் இருந்து விலகி வந்து கதவைத் திறந்தாள்..

மூஞ்சியை ஒன்றும் தெரியாத அப்பாவியை போல வைத்துக் கொண்டாள் நிலா.. பழையவாறு கோபமாக இருப்பதைப் போல அமைதியாக சோபாவில் போய் அமர்ந்தாள்...

பின்னால் வந்த வாசுவை சக்தி பிடித்து கொண்டான்.. கேள்வியாய் கேட்டு அவனை திணறடிக்க முழித்தவாறு வாசு நின்றான்...

நிலாவோ அதைக் கேட்டு சிரிப்பை அக்கியவாறு அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்....

மயக்குவாள்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

அடடா
வாசுவுக்கும் எல்லாம் தெரிந்துதானிருக்கு
ஹா ஹா ஹா
தம்பி சக்தியை கரெக்ட்டா கரடின்னு வாசு சொல்லிட்டான்
 
Last edited:

Shaloo Stephen

Well-Known Member
Tq for this nice second epi.
Ayoda Vasuku ellam theriiyuma?naanu avanai mangaan sollitanae,avan appadi illaya? ok ok hero vachey avan smart than. Nila vidam mathram than konjam loose aakiduvan pola.vidu vidu chella loosu thanae prachanai illa.
Nila yedi kalli ennama nadikira.
 
Tq for this nice second epi.
Ayoda Vasuku ellam theriiyuma?naanu avanai mangaan sollitanae,avan appadi illaya? ok ok hero vachey avan smart than. Nila vidam mathram than konjam loose aakiduvan pola.vidu vidu chella loosu thanae prachanai illa.
Nila yedi kalli ennama nadikira.
Athukula vasuva thittitengale....
Tq for this nice second epi.
Ayoda Vasuku ellam theriiyuma?naanu avanai mangaan sollitanae,avan appadi illaya? ok ok hero vachey avan smart than. Nila vidam mathram than konjam loose aakiduvan pola.vidu vidu chella loosu thanae prachanai illa.
Nila yedi kalli ennama nadikira.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top