கொலுசொலி மயக்குதடி - 26

Advertisement

மறுநாள் அலுவலகம் செல்ல கிளம்பி வந்த நிலாவை நோக்கிய வாசு... ஒரு நிமிஷம் நிலா.. உன் கிட்ட பேசனும் என நிறுத்தினான்..
வாசுவின் குரலில் சோபாவில் வந்து அமர்ந்த நிலா அவனையும் அருகில் அமரச் சொல்லி கண் காட்டினாள்...

அருகில் அமர்ந்த பின்பு நொடிகள் கடக்க.. வாசுவின் அமைதியை பார்த்த நிலா என்னவென யோசனையுடன் அவன் மௌனம் கலைக்கும் நொடிகளுக்காக காத்திருந்தாள்...

என்னாச்சு வாசு ஏதோ பேசனும்னு சொன்னீங்க. இப்போ அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்...

அமைதியை கலைத்த வாசு அது ஒண்ணும் இல்லை நிலா... உனக்கு நம்ம கம்பெனியை பிடிச்சிருக்கா.. அங்க வந்து வேலை செய்றது ஓ.கே தானே..

கமான் வாசு... என்ன இந்தக் கேள்வி எல்லாம்... அது நம்ம கம்பெனி வாசு... உங்க உழைப்பு நிறைய இருக்கு.. எனக்கு எப்படி பிடிக்காமல் போகும்...

அவளின் பதிலில் திருப்தியான வாசு.. உன்னைப் பத்தி சொன்னபோது உன்னோட உயரம் பார்த்து எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கு.. நான் உனக்கு ஏற்றவன் தானா நிலா...

என்ன வாசு இப்படி எல்லாம் ஏன் பேசறீங்க.. நான் ஒண்ணுமே இல்லாம வீட்டை விட்டு வந்தபோது எனக்கு ஆதரவாக இருந்தீங்க... அத்துமீறாம கண்ணியமாக இருந்தீங்க.. இது எல்லாத்துக்கும் முன்னாடி வேற எதுவும் பெருசு இல்லை...

சற்று தெளிந்த வாசு இப்போ எனக்கு எல்லாம் ஓ.கே நிலா... எதுவும் தப்பா நினைக்காதே மனசில இருந்த குழப்பத்தை தெளிய வைக்க நினைச்சேன்...

எனக்கு சந்தோசம் தான்.. நீங்க என்கி்ட்ட தயங்கவே தேவையில்லை... எதுவாக இருந்தாலும் தைரியமாக கேட்கலாம் என வாய் விட்டாள்..

உடனே வாசு அப்போ எனக்கு ஒரு உம்மா கொடு.... சட்டென்று கேட்கவும் அடப்பாவி நல்லா தேறிட்ட... பட் ஐம் சாரி வாசு. எதைப்பத்தி வேணுனாலும் கேளுங்க பதில் சொல்றேன்னு சொன்னேன்... என்ன கேட்டாலும் கொடுக்கறேன்னு சொல்லல...

அவளின் திருத்தத்தில் முகம் வாட வாசு அமைதியானான். இப்போ எதுக்கு இந்த ரியாக்சன்..

ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி மூஞ்சியை வச்சிட்டு இருங்க மூக்குலயே ஒரு குத்து விடறேன்...
என்னது மூக்குல குத்துவியா...

ஐயோ வேணாம் என வாசு கத்தினான்....

உஷ் எதுக்கு இந்த சத்தம்... நிலா அவனின் வாயை பொத்தினாள்..

ம்ம்ம் என வாசு ஏதோ சொல்ல வரவும் கையை எடுத்தாள் நிலா...

உனக்கு என்னோட குடும்பத்தை பற்றி எதுவும் தெரியாது இல்லையா...அது தெருஞ்சா வாசு ஏன் என் கூடவே இருக்கான்னு உனக்கு புரியும் என வாசு இடைவெளி விட்டான்....

ஏய் என்ன சொல்லிட்டு பாதியில் கேப் விடறீங்க... முழுசா சொல்லி முடிங்க... நிலா அவசரப்படுத்தினாள்...

சஸ்பென்ஸ்... இன்னைக்கு நாம ஆபிஸ்ல இருந்து வந்ததும் உனக்கே தெரியும் என வாசு கூறி விட்டான்..
ரொம்ப பண்றீங்க வாசு... அவள் மிரட்டி உருட்ட அதற்கு எல்லாம் வாசு அசையவே இல்லை..

என் செல்லக்கட்டி.... தங்கக்கட்டி.. அம்முக்குட்டி... நிலா வரிசையாய் அடுக்க.. வாசுவோ கதை கேட்கும் சிறு பையன் போல அப்புறம் என கேட்டான்...

ம்ம்ம் அப்புறம் உங்க தலை என அவனின் தலையில் இரு கொட்டுகளை வைத்தாள்...

அடியே இராட்சசி எதுக்குடி கொட்டு வைக்கற.. வலி தாளாமல் அவன் தலையை தடவினான்..

ஒழுங்கா சொல்லுங்க இல்லைனா அடிப்பேன்... கிள்ளுவேன்... குத்துவேன் என அவனிற்கு அடிகளை தாராளமாக அள்ளி வழங்கினாள்...

சோபாவை விட்டு பதறி எழுந்த வாசுவோ சுற்றி சுற்றி ஹாலில் ஓடத் தொடங்கினான்..

விடாமல் நிலா அவன் பின்னே துரத்தவும்... ஓடியவாறே ப்ளீஸ் நிலா விட்ரு மா.. பீ பாவம்... ஈவ்னிங் சொல்றேன்.. அதுவரைக்கும் வெயிட் பண்ண மாட்டியா.. கேட்டவாறே நிற்காமல் ஓடினான்...

இப்போ நிக்க போறீங்களா இல்லையா.. என் கைல மாட்டுனா இன்னைக்கு கைமா தான்...

நில்லுங்க வாசு.. அவளும் விடாமல் துரத்தினாள்...

ஐயே இது என்ன வம்பா போயிருச்சு.. நிற்க மாட்டேன் போடி என போக்கு காட்டினான்...

ஆஆஆஆ... அம்மா... நிலா தரை வழுக்கி விழுந்து விட்டாள்... ஐயோ நிலா என்ன ஆச்சு.. பதறிப்போய் அவளின் அருகில் வந்து அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான்...

இதை சற்றும் எதிர்பார்க்காத நிலா.. எனக்கு ஒண்ணும் இல்ல வாசு விடுங்க என நெளிந்தாள்...

அவன் அதை எல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை.. நேரே அவளை சோபாவில் அமர வைத்தவன் கால்களில் ஏதாவது அடிபட்டு விட்டதா என ஆராயத் தொடங்கியிருந்தான்...

என்ன பண்றீங்க காலை விடுங்க என நிலா காலை உருவ முயன்றாள்..

அவனோ விடாமல் மென்மையாக இருந்தாலும் அழுத்தமாக அவளது காலை பிடித்திருந்தான்...

பொறுமையாக ஆராய்ந்து முடித்தவன் ஒன்றும் ஆகவில்லை என நிம்மதி ஆனான்... அதற்கு பின்பே ஒன்றை கவனித்தான்... அவளது கால்களில் கொலுசை காணவில்லை...

கொலுசு எங்க நிலா... நீ போடறதே இல்லையா...

அவன் கேட்ட பிறகே நினைவு வந்தவளாய் நாக்கை கடித்தவாறு... கழட்டி வச்சேன் அப்புறமாக போட மறந்துட்டேன்...

எப்போ நேத்தா... அவன் கூர்மையாக அவளைப் பார்த்து கேட்டான்...
அவன் கேள்வியின் அர்த்தம் புரிந்து பயத்தில் எச்சிலை விழுங்கியவள்.. அது அது வந்து...

அவளின் இழுவையை பார்த்தவன்... அதான் வந்தாச்சே மேலே சொல்லு என உசுப்பினான்...

அன்னைக்கு வீ்ட்டை விட்டு போக கிளம்பினேன்ல அப்போ என்றாள் அவன் முகத்தை பயந்தவாறு பார்த்துக் கொண்டே..

கண்களை இறுக்கி மூடித்திறந்து தன்னை கட்டுப்படுத்தியவன்... ம்ம்ம் என்று மட்டும் சொன்னவன் எங்க வச்சிருக்க என கேட்டான்...

ரூம்ல கபோர்ட்ல என அவனது ரூமை கைகாட்டினாள்...

நேரே அவனது ரூமிற்கு போனவன் வரும்போது கையில் கொலுசுடன் வந்தான்..

கையை நீட்டிய நிலாவை முறைத்தவன்... அவளது கால்களை கையில் தாங்கி கொலுசை மாட்டினான்...

அந்த நிமிடங்களை கண்களை மூடி ஆழ்ந்து அனுபவித்தவள்.... மனப்பெட்டகத்தில் சேமித்துக் கொண்டாள்...

அந்த மோன நிலையினை கலைக்கவென வாசுவின் போன் அடித்தது... வேகமாக போனை எடுத்த வாசு நிலாவை பார்த்தவாறு போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தான்...

சில நிமிடங்களில் பேசி முடித்த வாசு... கிளம்பலாமா நிலா டைம் ஆயிருச்சு என கேட்டான்...

நிலா எழவும் இருவரும் கிளம்பினார்கள்... கார் வேண்டாம் என நிலா இன்றும் நினைவுபடுத்த ஒரு குறுஞ்சிரிப்புடன் சரியென தலையை ஆட்டியவன் பைக்கை எடுத்து வந்து அவளின் அருகில் நிறுத்தினான்...

அன்றைய நாள் இனிமையுடன் கழியவும்... சக்தியும் இருவரின் மலர்ந்த முகத்தை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டான்..

வாசுவை விட்டு நிலாவை அவ்வப்போது வம்புக்கு இழுத்தபடியே இருந்தான்.. பதிலுக்கு பதில் பேசிக் கொண்டே இருப்பவள்... இன்றோ மோனநிலை கலையாமல் சிரிப்பையே சக்திக்கு பதிலாக கொடுத்தாள்...

நிலாவிற்கு அன்று முழுவதும் ஏதோ வித்தியாசமாகவே இருந்தது.. ஏதோ ஒன்று நடக்கப் போவதாக அவளது மூளை அறிவுறுத்திக் கொண்டே இருந்தது..

வேலை முடிந்து வீட்டிற்கு போகும் போது மறுபடியும் என்ன சஸ்பென்ஸ் என பேச்சைத் தொடங்கினாள்...

பொறு நிலா.. இன்னைக்கு உனக்கே தெரியப் போகுது அப்புறமாக என்ன... அவன் நழுவு மீனாய் இருக்க ரெம்பத்தான் என கழுத்தை நொடித்தாள்...

பைக் கண்ணாடியில் அதைப் பார்த்த வாசுவோ மெல்ல சிரித்துக் கொண்டான்..

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அழைப்பு மணி ஒலித்தது.. கதவை சென்று கதவைத் திறக்கவும் சக்தி தான் நின்று இருந்தான்..

வாங்க சக்தி... என்ன வீட்டுக்கு வரப்போறதாக ஆபிஸ்ல இருக்கும்போது சொல்லவே இல்லையே...

நிலாவின் கேள்விக்கு பதிலே சொல்லாமல் தனது ட்ரேட்மார்க் புன்னகையுடன் சக்தி நிற்கவும்... என்னாச்சு சக்தி எதுவும் பேசாம எதுக்கு சிரிச்சுட்டே இருக்கீங்க... உள்ளே வாங்க....

ஏன் சக்தி மட்டும் தான் உள்ள வரணுமா.. நாங்க எல்லாம் வரக்கூடாதா... சக்தியின் முதுகுப் பக்கத்தில் கேட்ட குரலில் அவசரமாக சக்தியைக் கடந்து வெளியே பார்க்க முயன்றாள்...

நிலாவிற்கு சிரமமே கொடுக்காமல் சக்தியின் பின்புறம் இருந்து முன்னே வந்தார் சிவகாமி....

அத்தை... நிலாவின் இரண்டு கண்களும் பெரிதாக விரிய அவளின் கருமணிகள் இரண்டும் அத்தையின் பிம்பத்தை உள்வாங்கி எதிரொலித்தது...

அத்தையே தான் சிவாக் கண்ணு.. உள்ளே வா னு கூப்பிட மாட்டியா....

அவரின் குரலில் நிகழ்காலம் வந்த நிலாவோ... தடுமாற்றத்துடன் வாங்க.. உள்ளே வாங்க அத்தை என்றவாறு வரவேற்றாள்....

சக்தியும் சிவகாமியும் உள்ளே வரவும் வாசு அவர்களை வரவேற்றவாறு வந்தான்...

வாசு நல்லா இருக்கியா பா...

பாசமான அவரின் அழைப்பில் நிலா தான் குழம்பிப் போனாள்...

என்ன நிலா இன்னும் எவ்வளவு நேரம் அப்படியே இருக்கப் போற வந்தவங்களுக்கு எதாவது எடுத்துட்டு வா.. வாசுவின் விழிப்பில் ஒரு சிறு தலை அசைப்புடன் கிச்சனை நோக்கி நடந்தாள்..

இருடா நானும் வரேன் என சிவகாமியும் எழுந்து கொள்ள இருவரும் கிச்சனை வந்தடைந்தார்கள்..

ஏன் சிவா சந்தோசமாக இருக்கியா...

வாசு உன்னை நல்லா பார்த்துப்பான் எனக்கு தெரியும் என அவர் பேசவும்... என்ன அத்தை சொல்றீங்க வாசுவை உங்களுக்குத் தெரியுமா என நிலா குழப்பமாக கேட்டாள்..

எப்படிமா தெரியாம போகும் அவன் வேற யாரும் இலாலை உன்னோட அத்தை பையன் தான்....

என்னது.. கரண்ட் சாக் அடித்ததைப் போல அதிர்ந்து பார்த்தாள்...

என்ன அத்தை சொல்றீங்க... உங்க பையனா....?

சிவகாமியின் முகத்தில் வேதனையின் சாயல் பரவியது..

அவர் பேசப்போகும் வார்த்தைக்காக அவரது முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள் நிலா....

மயக்குவாள்...

எப்படி இருக்குனு மறக்காம உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பா... அடுத்த அத்தியாயத்தோட சீக்கிரமாக வரேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கோகுலப்பிரியா டியர்

சிவகாமி அம்மையார் இங்கே எதுக்கு வந்தாங்க?
சக்தி பையனை ஊருக்கு கையோடு கூட்டிட்டு போகவா?

என்னாஆஆஆஆஆஆஆது?
வாசுதேவனும் நிலாவுக்கு அத்தை பையனா?
சிவகாமி இல்லாமல் சிவானிக்கு இன்னொரு அத்தை இருக்கிறாங்களா?
இல்லை சிவகாமியின் மகனா?
இல்லை சிவகாமியின் சக்களத்தியின் மகனா?
செல்வலிங்கம் நல்லவர்ன்னு நான் நினைத்தேனே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top