கொஞ்சல் - 18

laksh

Well-Known Member
#11
அவள் சிரிப்புடன், “உண்மையான கோபம் னா கொஞ்சி இருப்பேன்”

“அப்போ நான் உண்மையாவே கோபத்தில் இருக்கிறேன்”

“சரி நான் வைக்கிறேன்”

“ஹே!” என்று அவன் சிறிது அலற, அவள் வாய்விட்டு சிரித்தாள்.

“உன்னை கொஞ்ச வைக்க பார்த்தா நான் தான் கெஞ்ச வேண்டி இருக்குது”

“ஏன் நான் உங்களை கொஞ்சுறதே இல்லையா?”

“கொஞ்சினியா! எப்போ! சொல்லவே இல்லை!”

“ஏய்!”

“ஹே! நிஜமாவே இதுவரை நீ என்னை கொஞ்சி பேசினது இல்லை..”

“ஓ! நீங்க எப்போ என்னை கொஞ்சி பேசுனீங்கலாம்?”

“நான் உனக்கு வச்சிருக்கிற பெயர் கூட கொஞ்சுறது போல் தான் இருக்கும்”

“இதெல்லாம் செல்லாது”

“சரி இப்போ கொஞ்சிட்டா போச்சு.. என் செல்ல அம்லு.. செல்ல குட்டி.. குட்டிமா.. என் ஸ்வீட் டாலி..” என்று கொஞ்சியவன் ஒவ்வொரு கொஞ்சலுக்கும் முத்தம் கொடுத்தான்.

அவள் வெட்கத்துடன், “ஆபீஸ்ஸில் வேலை இல்லையா?” என்றாள்.

அவளது குரலே அவனுள் கிறக்கத்தை ஏற்படுத்த, “அம்லு” என்றான் கிறக்கமான குரலில்.

“ஹ்ம்ம்”

“நீ இப்போ கொஞ்சி பேசு”

அவள் நாணத்துடன் மௌனம் காக்க, அவன், “ஏய் அம்லு” என்றான்.

அவள், “எல்லாம் டிஸ்டிங்கஷன் வாங்கின பிறகு தான்.. இப்போ சமத்தா வேலையை பாருங்க” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

அவன் புன்னகையுடன் வேலையை தொடர்ந்தான்.


ரண்டு நாட்கள் கழித்து சென்னையில் ஊர்மிளாவின் அன்னை வீட்டில் வைத்து அவளது அறையில் சித்தார்த்தன் மெத்தையில் அமர்ந்து இருக்க, ஊர்மிளா அவன் தோளில் சாய்ந்து அவன் கையை பற்றியபடி அமைதியாக இருந்தாள்.

அவர்கள் இங்கே வந்து ஒரு மணி நேரம் தான் ஆகிறது. பதினொன்றை மணிக்கு மலேசியா செல்ல விமானம் என்பதால் இன்னும் அரை மணி நேரத்தில் அவன் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும்.

இன்று முழுவதுமே அவள் அமைதியாக தான் இருக்கிறாள். மற்றவர்களை பொறுத்தவரை அவள் அமைதி தான் என்பதால் அவர்களுக்கு வித்யாசம் தெரியவில்லை ஆனால் அவளது நாயகனுக்கு அவளது மௌனம் தெளிவாக புரிந்தது. காலையில் இருந்து அவன் ஏதேதோ பேசி பார்க்கிறான் தான். அவளது பதில்கள் சில வார்த்தைகளில் மட்டுமே இருந்தது. இப்பொழுது அந்த வார்த்தைகளுக்கும் பஞ்சமானது.

அவன் மெல்லிய குரலில், “அம்லு” என்று அழைத்தான்.

அவளிடம் பதில் இல்லை ஆனால் ‘நீ பேசுவதை நான் கவனிக்கிறேன்’ என்பதை உணர்த்துவது போல் அவளது பிடியில் சிறு அழுத்தம் கொடுத்தாள்.

அவன், “ஏன் டா இப்படி அமைதியா இருக்கிற?”

‘ஏன்னு உங்களுக்கு தெரியாதா?’ என்று அவள் மனம் வினவியது.

அவள் பதில் கூறவில்லை என்றாலும் அவளது மனதை படித்தவன் போல், “ஒரு வாரம் தானே டா! ஓடி போய்டும்”

“..”

“என்னை பார்க்காமல் நாலு வருஷம் இருக்கலையா?”

சட்டென்று அவனை பார்த்தவளின் விழிகள், ‘அதுவும் இதுவும் ஒன்றா?’ என்ற கேள்வியை கேட்டது.

அவளது தவிப்பை பார்க்க முடியாமல் அவன் சிறு கோப குரலில், “இத்தனை நாள் நான் புலம்பும் போதெல்லாம் சிரிச்சு பேசி என்னை சமாதானம் செஞ்சிட்டு இப்போ இபப்டி இருக்கிற! இதுக்கு தான் என் கூட வா னு சொன்னேன்.. அதுவும் மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி இருந்தா என்னடி அர்த்தம்! கதையில் படத்தில் வரது போல் பிஸ்னெஸ் முக்கியமில்லை நீ தான் முக்கியம் னு உன் தவிப்பை போக்க நான் இந்த ட்ரிப்பை கேன்சல் பண்ணனுமா?” என்று முடித்த போது அவனது கோபம் கூடியிருந்தது.

அவள் அடிபட்ட பார்வை பார்க்க, அவன் சட்டென்று கோபம் வந்டிந்தவனாக, “ச்ச்.. நான் இப்போ என்ன தான்டி பண்றது?” என்றவனது குரல் இறங்கியிருந்தது.

அவள் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை மறுப்பாக ஆட்டினாள்.

அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன், “நீ இப்படி இருந்தா நான் எப்படிடி அங்கே போய் நிம்மதியா இருப்பேன்?” என்று வருந்தும் குரலில் கூற,

சட்டென்று தனது தவிப்பையும் பிரிவு துயரையும் மனதினுள் புதைத்து மெல்லிய புன்னகையை உதட்டில் பரவ செய்தவள், “நல்லபடியா டீலர்ஷிப் முடிச்சிட்டு வாங்க” என்றாள்.

எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவளது காதலின் ஆழத்தை கண்டு பிரம்மித்தவன் தனது காதலை வெளிபடுத்தும் விதமாக அவளது இதழில் கவி பாடினான்.

முதல் முறையாக அவனுடன் சேர்ந்து அவளும் அவன் இதழில் கவி பாடினாள். அவன் இன்ப அதிர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கவி பாடுவதை தொடர்ந்தான்.

அவளது ஒத்துழைப்பில் அவன் விலக மனமின்றி மீண்டும் மீண்டும் முத்தக் கவிதையை எழுதினான். அவனது கைகள் சிறிது எல்லை மீறத் தொடங்கியது. அந்த நேரத்தில் அவனது அருகாமையை வெகுவாக நாடியவள் அவன் கைகளை தடுக்கவில்லை.

அவனது கைபேசியின் சத்தத்தில் தான் மனமின்றி முத்தக் கவிதையை நிறுத்தினான். அழைத்தது அசோக்.

இவன் அழைப்பை எடுத்ததும் அவன் சிறு தயக்க குரலில், “நேரம் ஆகிருச்சு.. இன்னும் நீங்க சாப்பிடலை.. அதான் போன் பண்ணேன்” என்று இழுத்தான்.

“பைவ் மினிட்ஸ்ஸில் வரோம்” என்று கூறி வைத்தான்.

அதற்குள் ஆடையை சரி செய்திருந்தவள் நாணத்துடன் தலை குனித்து அமர்ந்திருந்தாள்.

அவளது நாணத்தை ரசித்தபடி அவள் தோளை சுற்றி கை போட்டவன் அவளை தன்னுடன் இறுக்கியபடி, “உன் அண்ணா சாப்பிட கூப்பிடுறார்.. நான் இங்கே புல் மீல்ஸ்ஸே சாப்டுட்டேன் னு அவருக்கு தெரியாதே!” என்று அவளது காதில் கிசுகிசுத்தான்.

அவள் அதிகரித்த நாணத்துடன் அவனது கையை கிள்ளினாள்.

அவன் வாய்விட்டு சிரித்தபடி, “மீல்ஸ் செம்ம டேஸ்ட்”

“சித்” என்று சிணுங்கியவள் அவன் நெஞ்சில் முகத்தை மறைத்தாள்.

“இருந்தாலும் ஒரு வாரத்திற்கு இது பத்தாதே!” என்று மீண்டும் அவள் காதில் கிசுகிசுத்தான்.

“அதெல்லாம் பத்தும்” என்றபடி அவள் எழுந்து ஓட பார்க்க, விடாமல் அவளது இடையை வளைத்து இறுக்கமாக அணைத்தவன், “ப்ளீஸ் டி ஒன்னே ஒன்னு கொடு” என்று கெஞ்சலும் கொஞ்சலுமாக கேட்டான்.

அவள் வெக்கத்துடன் மறுப்பாக தலையை ஆட்ட, அவன், “உன் சித்காக.. ப்ளீஸ்” என்று காதலும் தாபமுகாக கெஞ்ச, அவள் மெல்ல பார்வையை உயர்த்தி அவன் முகம் நோக்கினாள்.

அவன் கண்ணில் தெரிந்த காதலில் அவளையும் அறியாமல் அவள் கைகள் உயர்ந்து அவன் கழுத்தை தழுவியது.

அவனது பார்வையில் தாக்குபிடிக்க முடியாமல் அவள், “நீ..ங்..க” என்று தந்தியடித்தாள்.

“நான்...” என்று அவன் எடுத்துக் கொடுக்க,

அவள், “ப்ளீஸ் சித்” என்று கெஞ்சலுடன் சிணுங்கினாள்.

அவன் கிறக்கத்துடன் அவள் நெற்றியில் முட்டியபடி, “நீயே தர மாட்டியா?” என்றபடி பிடியை இன்னும் இறுக்கவும் இருவரின் உடலும் மொத்தமாக உரசியபடி இருக்க இதழ்களிடையே நூலளவு இடைவெளி மட்டுமே இருந்தது.

முதல் முறையான இந்த நெருக்கம் அவளை என்னவோ செய்ய கண்களை மூடியபடி மெல்ல அவன் இதழை தீண்டினாள். ஆரம்பித்தது மட்டும் தான் அவள் அதை ரசித்து அனுபவித்து அவளையும் அனுபவிக்க செய்து முடித்தது அவன்.

சில நொடிகள் கழித்து இதழ்களை பிரித்தவன், “தேங்க்ஸ் டி அம்லு” என்று கூறி நிறைவான முத்தம் ஒன்றை அழுத்தமாக அவள் நெற்றியில் பதித்தான்.

அதன் பிறகு உணவை முடித்துக் கொண்டு அசோக்குடன் கிளம்பினான். ஊர்மிளா விமான நிலையத்திற்கு வரவில்லை என்றிருந்தாள். அவன் தனியாக சென்றுவிடுவதாக கூறியதைப் பொருட்படுத்தாமல் அசோக் அவனை வழி அனுப்பிவிட்டு வீடு திரும்பினான்.தன்னவளின் முதல் இதழ் முத்தத்தை நினைத்தபடி இதழ்ளில் மென்னகையுடன் மலேசியா இறங்கியவன் தன்னவளை அழைத்தான். அவளது கைபேசி அணைத்து வைத்திருப்பதாக தகவல் வரவும் யோசனையுடன் தங்கும் விடுதிக்கு சென்றான்.

அங்கே சென்று அன்னை தந்தையுடன் பேசிவிட்டு மீண்டும் தன்னவளை அழைத்தான். அப்பொழுதும் அதே தகவல் கிடைக்கவும் அவனுள் சிறு பதற்றம் வர தனது செயலாளர் கிரியை அழைத்தான்.

அழைப்பை எடுத்த கிரி, “குட் மார்னிங் சார்” என்றான்.

சித்தார்த்தன் காலை வணக்கம் கூட சொல்லாமல் அவசரமாக, “விக்னேஷ் எங்கே இருக்கிறான்? என்ன செய்றான்னு விசாரிச்சு உடனே சொல்லு” என்றபடி அழைப்பை துண்டித்தான்.

சித்தார்த்தன் அசோக் எண்னை அழைக்க. அவனோ எடுக்கவில்லை. ஐந்து நிமிடத்திற்குள் பல முறை அழைத்துவிட்டான் ஆனால் ஒருமுறை கூட அசோக் எடுக்கவில்லை.

ஐந்து நிமிடத்தில் சித்தார்த்தனை அழைத்த கிரி, “சார் அவன் சென்னையில் இருக்கிறான்.. இன்னைக்கு காலையில் தான் ரீச் ஆகி இருக்கிறான்.. நேற்று அவன் வைஃப் அப்பா வீட்டுக்கு போயிருக்காங்க.. ஏதும் பிரச்சனையா சார்?”

“நேற்று காலையில் தான் அவன் வைஃப் கிட்ட அவனது தரம் குறைந்த தயாரிப்பு பற்றி ஆதாரத்துடன் சொல்லியிருந்தேன்”

“மலேசியா போயிட்டு வந்து சொல்லியிருக்கலாமே சார்!”

“நேற்று அவன் என் கல்யாணத்தை பற்றி துப்பறிய அம்பாசமுத்திரம் சென்றான்.. அதான் அவனை தட்டி வைக்க நினைத்து செய்தேன் ஆனா” என்று நிறுத்தியவன் கண்களை மூடினான்.

“என்னாச்சு சார்?”

“ஊர்மிளா சென்னையில் தான் இருக்கிறாள்.. அவ(ள்) செல் ஸ்விட்ச்டு ஆஃப் னு வருது”

“சுதர்சன் சார் கிட்ட பேசினீங்களா சார்?”

“என்னனு தெரியாமல் அவரையும் கலவரப்படுத்த வேணாம்”

“விக்னேஷ் இந்தளவிற்கு போக மாட்டான் சார்”

“தெரியலை.. என் மேல் உள்ள கோபத்தில்.. ச்ச்” என்று கோபத்துடனும் தவிப்புடனும் பேச முடியாமல் நிறுத்தினான்.

“கவலைப் படாதீங்க சார்.. நான் அவன் என்ன செய்றான் னு விசாரிச்சிட்டு சொல்றேன்.. விசாரிச்சிட்டு நான் சென்னை கிளம்புறேன் சார்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் பல முறை தன்னவளுக்கும் அசோக்கிற்கும் அழைத்து தோல்வியை தழுவியவன் சென்னை கிளம்பும் முதல் விமானத்தில் தனக்கு பயணசீட்டை எடுத்தான்.

பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தவன் தனது கைபேசியில் இருந்த ஊர்மிளாவின் புகைப்படத்தை பார்த்து கண்ணில் கண்ணீருடன் நெஞ்சில் வலியுடன், “அம்லு எங்க இருக்க? என்னை விட்டு போய்டாதடி.. நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது.. எனக்கு நீ வேணும் டி... ஐ லவ் யூ.. ஐ லவ் யூ ஸோ மச் டி.. இத்தனை உணராததை இந்த அரை மணி நேரத்தில் முழுமையா உணர்ந்துட்டேன்.. நீ இல்லை னா நான் இல்லை னு உணர்ந்துட்டேன் டி.. நீ தான் என் உயிர் வாழ்க்கை எல்லாம் னு முழுமையா உணருறேன் டி.. ப்ளீஸ் என்கிட்ட வந்திருடி” என்று புலம்பினான்.

கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥

குறிப்பு :- சில பெர்சனல் வேலைகள் காரணமாக வெள்ளி அன்று இந்த கொஞ்சலை பதிய முடியவில்லை.. அடுத்த கொஞ்சல்(19) நாளை இரவு எட்டு மணிக்குள் பதிவேன் பா..
-கோம்ஸ்.
(y)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement