கொஞ்சல் - 11

eanandhi

Well-Known Member
#9
ஊர்மிளா உடையை மாற்றிவிட்டு வந்து அறையின் விளக்கை அனைத்து விடிவிளக்கை போட்டுவிட்டு படுத்தாள்.

அதற்காகவே காத்திருந்தது போல் அவள் படுத்ததும் சித்தார்த்தன் அவளை பார்த்து திரும்பி படுக்கவும் அவளுள் சிறு படபடப்பு.

அவன், “நமக்கு கல்யாணம் ஆகி பத்து நாள் தான் ஆகுது னு என்னால் நம்ப முடியலை”

“சில நேரம் நமக்கு கல்யாணம் ஆனதையே என்னால் நம்ப முடியலை”

அவன் கிசுகிசுப்பான குரலில், “நம்புறதுக்கு ஸ்ட்ரோங்கா ஏதாவது தரவா” என்றபடி சற்று நெருங்கவும்,

அவள் அவசரமாக, “நம்புறேன் நம்புறேன்” என்றாள்.

அவன் சிரித்தபடி பழைய இடத்தில் படுத்ததும் தான் அவள் மூச்சு காற்று சீரானது.

அவன் மெல்லிய குரலில், “எதுக்கு இவ்ளோ பயம் அம்லு?”

“பயம் னு இல்லை” என்று இழுக்க,

அவன், “அப்பறமென்ன?”

“சொல்லத் தெரியலை”

“உன் முக அழகு தான் என்னை ஈர்க்கிறது என்றால் ஐந்து வருடங்களுக்கு முன்பே நான் உன்னை நெருங்கி இருப்பேனே! என்னை ஈர்ப்பது உன் அக அழகும் அன்பும் காதலும்” என்றவன் அவள் கையை மென்மையாக பற்றினான்.

அவள் மெல்லிய குரலில், “நானும் நீங்கள் என்னை நெருங்குவதை பிசிகல் அட்ராக்ஷன் னு சொல்லலை.. முன்பு காலேஜ்ஜில் என்னை பார்த்த உங்கள் கண்ணோட்டம் வேறு இப்பொழுது பார்க்கும் கண்ணோட்டம் வேறு.. அப்போ நான் யாரோ ஒரு ஜூனியர் மாணவி.. இப்போ உங்கள் மனைவி.. அந்த உரிமையில் பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் வேறு”

“அது தவறு இல்லையே!”

“நானும் தவறு னு சொல்லலையே!”

“அப்பறம் ஏன் பதறுற?”

“அது பெண்ணிற்கே உள்ள படபடப்பு”

“ஓ!” என்றவன் சற்று நகர்ந்து படுத்தான்.

அவள் அமைதியாக இருக்கவும் அவன் அவள் கையை சற்று இறுக்கமாக பற்றியபடி, “உன்னிடம் ஏதோ மஜிக் இருக்கிறது அம்லு” என்றான்.

அவள் மென்னகையுடன், “எனக்கு அப்படி எதுவும் இருப்பதா தெரியலையே!”

“உன்னுடன் இருக்கிற எனக்கு தெரியுதே”

“ஹ்ம்ஹும்”

அவன் நிமிர்ந்து படுத்தபடி இறுக்கமாக பற்றிய அவளது கையை தன் நெஞ்சின் மீது வைத்து, “உன்னுடன் இருக்கும் பொழுது என் மனம் நிம்மதியா சந்தோஷமா இருக்குது.. என் கோபம் வருத்தம் எல்லாத்தையும் உன் அருகாமை சட்டுன்னு மாற்றிவிடுது.. உன்னிடம் இருக்கும் மஜிக் உன் அன்பும் காதலும் தான்.. அது என்னை மீறி என்னை வசியம் செய்கிறது”

அவள் சொல்வதறியாது மௌனம் காக்க, அவன், “அம்லு” என்று மென்மையாக அழைத்தான்.

“ஹ்ம்ம்”

“என்ன அமைதியாகிட்ட?”

சற்று புரண்டு அவன் தோளின் மீது தலையை வைத்து படுத்தவள், “என்ன சொல்லணும்?” என்றாள்.

அவளது வார்த்தைகள் சொல்லாததை அவளது நெருக்கம் சொல்ல, அவன் வலது கரம் கொண்டு மென்மையாக அவளை அணைத்தான்.

சில நொடிகள் காமம் இல்லா அந்த மென்மையான அணைப்பில் இருவரும் கட்டுண்டு இருக்க, அவள் மெல்ல, “சித்” என்று அழைத்தாள்.

அவன், “ஹ்ம்ம்”

தலையை மட்டும் தூக்கி நாடியை அவன் தோளில் பதித்து அவனை பார்த்தாள்.

‘என்ன” என்பது போல் அவன் புருவம் உயர்த்த,

அவள், “என்ன னு புருவம் உயர்த்தி கேட்கிறீங்களா? இந்த லைட் வெளிச்சத்தில் எனக்கு சரியா தெரியலை” என்று கூற,

அவன் மென்னகையுடன் மறு கரத்தையும் சேர்த்து அவளை மென்மையாக அணைத்து, “என்ன?” என்றான்.

சற்று எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ சித்” என்று கூறி அவன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் கண்களை மூடினாள்.

அவன் பதில் கூறவில்லை என்றாலும் அவனது இறுகிய அணைப்பு அவளுக்கு அவனது மனதை எடுத்துக் கூறியது.

சில நொடிகள் கழித்து அவன் மெல்லிய குரலில், “நீ சொன்னது சரி தான்.. எனக்கு உன்னை பிடித்திருக்கிறது.. நீ என் மேல் கொண்ட காதலை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது.. ஆனாலும் என் மனம் உன் மீதான காதலை இன்னும் முழுமையாக உணரலை னு தான் எனக்கும் தோணுது.. அது ஏன்?”

“என்னை கேட்டால்?”

“நீ தானே என் டீச்சர்”

“நீங்க ஒரு பெரிய பிஸினஸ் மேக்னெட்!!” என்று அவள் கிண்டலுடன் கூற,

அவனோ மென்னகையுடன், “அதனால் என்ன! இந்த விஷயத்தில் உன்னிடம் மாணவனா இருக்க தான் எனக்கு பிடித்திருக்கிறது”

“சரியான மக்கு மாணவன்”

“அப்படியா!” என்றவன் அவளை தன் மேல் படுக்க வைத்து சற்று அணைப்பை இறுக்கினான்.

அவள் வெக்கத்துடனும் தயக்கத்துடனும், “நாம மனசை பற்றி பேசிட்டு இருக்கிறோம்”

“அதனால் என்ன?”

“சித்”

“டீச்சர் தானே மனதை பற்றி பேசும் போது இதை ஆரம்பித்து வைச்சீங்க”

“இது போங்கு.. நீங்க தானே முதலில் என் கையை பிடிச்சு நெஞ்சில் வச்சீங்க”

“ஸோ உன் விருப்பம் போல் முதல் அடி நான் எடுத்து வைச்சிட்டேன்..” என்று கூறி அவன் சிரிக்க,

அவள், “நீங்க என்னை கெட்ட பொண்ணா மாத்திருவீங்க போல” என்றபடி சரிந்து பழையபடி படுத்தாள்.

அவன் வாய்விட்டு சிரித்தபடி, “ஏன் இந்த விஷயத்தில் கணவன் தான் ஆசானா இருக்கனுமா?”

“ச்ச்.. இபப்டியே பேசாதீங்க..”

“சரி விடு.. இன்னொரு நாள் பேசிக்கலாம்”

“இன்னொரு நாளா?” என்று தலையை லேசாக சரித்து பார்வையை மட்டும் அவன் முகத்தில் பதித்தாள்.

“ஹ்ம்ம்.. உன் தயக்கம் எல்லாம் போன பிறகு”
என்று கிறக்கத்துடன் அவன் கூற, அவள் சட்டென்று பார்வையை தாழ்த்தி முகத்தை அவன் நெஞ்சில் மறைத்தாள்.

அவன், “சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

சில நொடிகள் மௌனத்தில் கழிய அவன், “அம்லு” என்றான்.

“ஹ்ம்ம்”

“என்ன திடீர் மௌனம்?”

“மௌனமாகலை.. எப்படி சொல்ல னு யோசித்தேன்” என்றவள் சற்று எழுந்து, “தலையை தூக்குங்க” என்றாள்.

அவன் யோசனையுடன் தலையை மட்டும் லேசாக தூக்க, தனது இடது கையை அவனது தலைக்கு அடியில் கொடுத்தவள், “இப்போ படுங்க” என்றாள்.

படுத்த பிறகே அவள் கையை வைத்திருப்பதை உணர்ந்து மென்னகை புரிந்தான்.

அவள் அவனை சற்று நெருங்கி தனது தலையை அவன் நெஞ்சில் வைத்து இடது கையை அவள் தோளில் போட்டு அணைத்தார் போல் படுத்தாள்.

அவன் இரு கைகளை கொண்டு அவள் இடையை மென்மையாக அணைத்தான்.

அவள் மெல்லிய குரலில், “இதை நாம் முதலும் கடைசியுமா பேசி முடிச்சிரலாம்.. என் மீதான காதலை உணர முடியாமல் தடுப்பது உங்கள் மனதில் இருக்கும் குழப்பம்.. சவிதாவை காதலித்த மனம் எப்படி சட்டென்று என்னை ஏற்று காதலிக்க தொடங்கியது? இது எப்படி சாத்தியம்? என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கிறது.. சரியா?”

அவனது அமைதியே ‘ஆம்’ என்று சொல்லாமல் சொல்லியது.

அவனது பதிலை எதிர்பார்க்காமல் அவள் தொடர்ந்தாள்.
“அதற்கான பதிலை கொஞ்ச நேரத்திற்கு முன் நீங்களே சொல்லிடீங்க.. என் மீதான காதல் என் அகத்தை பார்த்து வந்தது அதாவது என் அன்பை காதலை பார்த்து வந்தது.. ஆனால் முன்பு உங்கள் மனதில் தோன்றியது ஈர்ப்பு.. சவிதாவின் முக அழகோ, அவளது எதோ ஒரு செய்கையோ உங்களை கவர்ந்து இருக்கலாம்.. காதலின் முதல் படி ஈர்ப்பு தான் என்றாலும் அது மட்டுமே இருந்தால் அது காதல் ஆகாது.. ஆனால் என் மீது உங்களுக்கு இருக்கும் உணர்வு ஈர்ப்பையும் தாண்டிய உணர்வாக வளர்ந்துள்ளது.. அதை சீக்கிரம் நீங்களே மனப்பூர்வமா உணர்வீங்க”

மீண்டும் சில நொடிகள் மௌனத்தில் கழிய அணைப்பை சற்று இறுக்கியவன் அவள் தலையில் இதழ் பதித்து, “தேங்க்ஸ் டா” என்றான்.

அவள் பதில் கூறவில்லை.

அவன், “நீ சொன்னது போல் சீக்கிரமே என் காதலை உன்னிடம் சொல்வேன்” என்றான் உணர்ச்சிவசப்பட்டு.

பின் மென்னகையுடன், “என்ன டீச்சர் இந்த மக்கு மாணவன் தேறுவேனா!” என்றான்.

“நீங்க தான் மக்கு மாணவன் நான் சூப்பர் டீச்சராக்கும்”

“அது உண்மை தான்”

“ஹ்ம்ம்.. இப்போ தூங்குங்க.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றாள்.

தலையை தூக்கி, “கையை எடுத்துக்கோ.. வலிக்கும்” என்றவன் அவsள் கையை எடுத்ததும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் மை ஸ்வீட் அம்லு” என்று கூறி மென்மையாக அவளை அணைத்தபடி கண்களை மூடினான்.

இருவரும் இதழில் உறைந்த மென்னகையுடன் கண்ணயர்ந்தார்கள்.

கொஞ்சல் அரும்பும்♥♥♥♥♥♥
superb sis
 




Advertisement

Sponsored