கை சேர்ந்த கனவே...2

Advertisement

Yazh Mozhi

Active Member
2.....கை சேர்ந்த கனவே.....


எழுந்தவள் அந்த நாளை எதிர்கொள்ள இயத்தமான மனதோடு குளித்து கிளம்பி கீழே வந்திருந்தாள்…

பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் பிள்ளைகள் அவசரக் கதியில் அங்கும் இங்கும் திரிந்த படி பள்ளிக்கு காட்டடிக்க ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தனர்…

சித்தியும் பெரியம்மாவும் மணக்க மணக்க சமைத்த பூரியும் அதற்கான மசாலாவும் இரண்டு ரவுண்டு ஓடியிருக்க … கோதுமை உப்மாவிற்கு ஆதவின்றி தனியேத் தவித்துக் கொண்டிருக்க ஒரு புறம் பொங்கலும் சாம்பாரும் பெரிவர்களின் தோந்தியை நிறைத்துக் கொண்டு இருந்தது..

மெதுவடையோடு கோமதி வேளியே வரவும் மது கீழை வரவும் சரியாக இருந்தது…

வீட்டின் சமையல் மணம் மதுவை எதையும் யோசிக்கவே விடவில்லை…

அத்தனை பசியை ககளப்பிவிட்டிருந்தது..

பந்திக்கு முந்தாமல் ஆற அமர கனவுகணாடு விட்டு வந்த கேப்பில் இங்கே ஹவுஸ் ஃபுல் என்று போர்டு போடும் அளவிற்கு எல்லாம் தீர்த்துக் கட்டிக் கொண்டிருக்க மதுவுக்கோ பசி வயிற்றை பதம் பார்த்தது…

வேகமாக சென்று கோதுமை உப்புமாவில் கொஞ்சம் பொங்கலில் கொஞ்சம் பூரியில் இரண்டு மெதுவடை இரண்டு என்று அடுக்கிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்..

என்ன மதுக்கா எல்லாத்தையும் சாப்டு க்ளாஸ்ல போய் தூங்க போறியா.. இல்லை ததர் வார போறியா…

ஏய் கண்ணு வைக்காதீங்க டா… மதுகுட்டி பாவம்.. நானே டயட் ல இருக்கேன் தெரியுமா அதான் இன்னைக்கு கொஞ்சமா சாபுட்றேன்…

இது கொஞ்சமா… ஏய் மது மூனு வேளைக்கும் சேர்த்து இப்பவே தட்ல ஆடுக்கிட்டு டயட் ஆமே.. டயட்…

போ போ… பொருமையா சாப்டு நீ போறதுக்குள்ள பொழுது விடிஞ்சிடும்..

எனக்கு நீ கதை சொல்லிட்டே இரு உனக்கு ஸ்கூல் வேன் போயிடும்..
இங்க பாரு மதுக்கா நீ சொன்னது மட்டும் நடந்து என் வேன் போசாசு நான் உன் ஸ்கூட்டி டயர் ல காத்த புடுங்கி விட்டுடுவேன் ஜாக்கிரத…

டேய் போங்கடா நானா உங்க கூட சண்டைக்கு வந்தேன்.. சும்மா சும்மா என்னையே கண்ணு போடுறீங்க.. பாரு கோம்ஸ் இவனுங்கள…

பசங்களா சீக்கிரம் கிளம்புங்க.. அக்கா சாப்டட்டும்…
அவ கூட வம்பு பன்னாம எல்லாரும் சாப்டு வேகமா கிளம்புங்க.. அப்புறம் டைம் ஆனா சின்ன வேன் போயிடும் டா…

மதுக்கா பாய் .. ஒரு கோரஸ் பாடிவிட்டு கூட்டம் கிளம்ப மது வேகமாக உணவை உள்ளேத் தள்ளிவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தாள் பள்ளிக்கு…
எப்போதும் தோன்றும் எண்ணம் தான்… இன்றும் தோன்றியது…

சித்தியும் பெரியம்மாவும் பாசத்தோடு தான் பரிமாறினர்... ஏனோ இவளுக்கு அதில் கொஞ்சம் அனுதாபமும் கலந்தே இருந்தது போல் தொண்டைக்குள் இறங்கியது....

நேராக உணவு முடிந்து கைப்பையோடு பள்ளிக்கு கிளம்பினாள்... நடந்து சென்று இரயில் மூலம் இரண்டு ஸ்டேஷன் கடந்து சிறிய நடைத் தொலைவில் உள்ளது அவள் வேலை பார்க்கும் மெட்ரிகுலேஷன் பள்ளி...

காலை நேரத்து பரபரப்பு பள்ளிகளுக்கு என்றுமே தனிதான்...

முந்தைய நாளின் வீட்டுப் பாடங்களை செய்ய மறந்தவர் ....செய்யாமலே மறந்தவர் ... வீட்டுப்பாடம் செய்தும் வீட்டில் நோட்டை மறந்தவர் .....என்று தனி லிஸ்ட் எப்போதும் இருக்கும்...

அது போக சீருடை அணியாமல்.... ஷூ அணியாமல்... ரிப்பன் கலர்... மாற்றி பின்னல் போட்டவர்..... சீருடையே மாற்றி அணிந்தவர் .... விடுப்பு எடுத்து பத்தாவது முறையாக பாட்டி தாத்தா வை போட்டுத்தள்ளி கடிதம் எழுதியவர் ...என சில சிறப்பு விருந்தினர்கள் ஒரு சிலராவது தாராளமாக வருவர் .... தினமும்...

வழி நெடுக காலை நேர வாழ்த்துக்கள் கிடைக்கும்... ஒரு உற்சாகம் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்...முகத்திலும் மனதிலும்....

காரணம் எனக்கு கீழே என் வார்த்தைகளை அப்படியே ஏற்று மதித்து பயந்து பின் பற்றிட இத்தனைப் பேர்....

நான் முதலாளி அல்ல ஆனால் எனக்கு இவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது... நாளை வாழ்கையில் முன்னேறப் போகும் இவர்கள் என் வகுப்பு என் பிள்ளைகள் ...பெற்றால் தான் பிள்ளையா ஒரு ஆசிரியருக்கு அனைத்து மாணவர்களும் பிள்ளைகள் தான்.... இவர்கள் இனி என் பொறுப்பு என்று பல உணர்வுகள் பொங்கும் ....மதுவினுள்....

இன்றைய காலைத் தொழுகை முடிந்து வெற்றிகரமாக வகுப்பறை தொடங்கியது....

காலை வருகைப் பதிவேட்டில் வருகை கணக்கெடுப்பு எடுத்து எழுதி விட்டு நேற்றைய வீட்டுப் பாடங்களை சரிபார்க்கையில் சில மாணவர்கள் மேற்கண்ட உதாரணங்களகல் சிலவற்றை காரணம் காட்டி தப்பித்துக் கொண்டனர்....

சிலருக்கு அடி... சிலருக்கு அட்வைஸ்... சிலரை பெற்றோர்களை வந்து தன்னை சந்திக்குமாறு கூறிவிட்டு காலை பாடங்களை தொடர்ந்தாள்...

அப்படி இப்படி என மாணவர்கள் ஒருவழியாக மாலை மூன்று வரை ஓட்டிவிட்டனர்... பாவம் ஒரு வகுப்பு 40 நிமிடம் என அவர்களும் காலை நான்கு வகுப்பு மாலை நான்கு வகுப்பு என்று சுற்றி சுற்றி அடித்தால் என்ன தான் செய்வார்கள்....

மது காலை இரண்டு வகுப்புகள் மட்டுமே தன் வகுப்பு மணவர்களுக்கு எடுப்பாள்... பிற நேரம் மற்ற வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் .வேறு பாட பிரிவு ஆசிரியர் இந்த வகுப்புகளை வந்து வழிநடத்துவர்...

மாலை கடைசி வகுப்பு மீண்டும் மதுவுடையது... தன் வகுப்பு மணவர்களுக்கு வர வேண்டும்... முழுநேரமும் படிப்பு படிப்பு என்றால் பிள்ளைகளும் என்ன செய்ய முடியும்...

மது அந்த கடைசி வகுப்பில் எப்போதும் பாடங்களை எடுக்க மாட்டாள்... கதைகள் ..சொல்வாள்.... மாணவர்கள் எழுதும் கவிதைகள் அல்லது ஓவியங்களை வகுப்பில் அனைவரின் முன்பும் அங்கீகரித்து பாராட்டுவாள்... வகுப்பறையில் சின்ன சின்ன விளையாட்டுகள் விளையாட சொல்லித்தருவாள்... நூலகம் அழைத்து சென்று புத்தகங்கள் வாசிக்க வைத்து அதில் வினாக்கள் கேட்டு பரிசளிப்பாள்...வகுப்பு மேசை அமைப்பை அடிக்கடி மாற்றி போட்டு மாணவர்களை இடமாற்றம் செய்வாள்... கடைசி பென்ச் என்ற வாதங்களும் பேதங்களும் உருவாகிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்... சில நேரங்களில் தியானம் .... சில நேரங்களில் அட்வைஸ்... சில நேரங்களில் வகுப்பில் பேச புதிய ஆங்கில தொடர்களைக் கூட ஸ்போகன் இங்லீஷ் என சொல்லித் தருவாள்... மொத்தத்தில்
அவர்களுக்கு பிடித்த மாதிரி அவர்கள் கேட்கும்படி அந்த நாப்பது நிமிடங்களை அவர்களுக்கு கொடுத்து புத்துணர்சகயோடு வீட்டுக்கு அனுப்பி வைப்பாள்....

காரணம் அவளுக்குமே அந்த புத்துணர்ச்சி மிகவும் தேவை... இரவு உறக்கம் வரும் வரை மனதை எந்த ஏமாற்றமும் சூழ்ந்துவிடக் கூடாதில்லையா ....

அன்றைய நாள் நிறைவாகவேக் கடந்தது மதுவிற்கு... மாலை வீடு வந்தவளுக்கு வீட்டில் இருக்கும் குட்டீசோடு கொஞ்சம் நேரம் சென்றது சிறிது ஓய்விற்கு பின் மாலையில் டியூஷன் எடுத்தாள்... தனியே ஹிந்தியும் கற்பித்தாள்... அவளும் வாரத்தில் இருமுறை இந்தி மற்றும் கம்ப்யூட்டர் வகுப்பிற்கு செல்லுவாள்...

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒரு பெயர் சொல்லும் ஓபன் யுனிவர்சிட்டியில் பி.எஸ்.சி சைகாலஜி இப்போது இரண்டாம் ஆண்டு நடக்கிறது... அதற்கு தனியே கவுன்சிலிங் சம்பந்தப்பட்ட நபர்களை சந்தித்து ஆலோசனைகள் பெறுவது அசைன்மெண்ட் எழுதுவது இப்படி யே நாட்கள் ஓடும்....

பி.எட்
படிக்கும் போது படித்த சைகாலஜி ஆழமாக அதை படிக்க ஆசை... அதோடு அவளுமே ஒருகாலத்தில் கவுன்சிலிங் தேவைப்பட்டதே.... பேசாமல் நாமும் செல்லலாமா ....தன் மன அழுத்தம் பிறரை பாதிக்குமோ என்றெல்லாம் பயந்து ......

அப்படியும் போய் ஒரு மருத்துவமனையில் கவுன்சிலிங் பெற அப்பாயின்மென்ட் வாங்கி போக பயந்து போகாமல் விட்டு வந்த கொடுமையும் உண்டு.... காரணம்

மனநல மருத்துவரை சந்தித்தாலே அவனுக்கு சமூகம் அன்றைக்கு சூட்டும் இயல்பான பெயர் பைத்தியம் தானே....தன்னையும் அப்படி யாரும் வரையறுக்க நேருமோ என்று பல நேரத்தில் பயந்து அழுதிருக்கிறாளே... மறக்குமா.....என்ன....

மாணவர்கள் தங்களது நாளை உபயோகமாக செலவழிக்கவும் அதை நினைவு கூறவும் அவர்களை தினமும் நாட்குறிப்பேடு எழுதச் சொன்னவள் தானும் உதாரணமாக இருக்க வேண்டும் என நாட்குறிப்பேடு எழுதத் துவங்கினாள் ..

அப்படி தொடங்கியப் பழக்கம் இரண்டு ஆண்டுகளாக நீள்கிறது ...

இரவு உணவு முடிந்து அறைக்கு வந்தவுடன் மேசைக்கு சென்று அமர்ந்து இன்றைய தினத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் நகைச்சுவை முக்கிய முடிவுகள் சில மனக்கசப்புகள் போன்றவற்றை மிகவும் சிறிய குறிப்பாக மட்டுமே எழுதுவாள் அதுவும் ஹந்தியில்....

அப்போது தானே வீட்டில் யாரும் பார்த்தாலும் புரியாது படித்து அவளையும் அவளுடைய மனதையும் படிக்க முடியாது....

இன்றும் எழுதுவதற்கு பேனாவைத் தேடி எடுத்தாள்....

90'ஸ் கிட்ஸ்கே உரிய கோல்ட் நிற மூடியும் பிரவுன் நிறமும் கொண்ட ஹீரோப் பென்.... அது… இப்போது அது மிக மிக மிக பழயதாகத் தோன்றலாம்.. இன்னும் எத்தனையோ மாடல் பேனாக்கள் வந்தாலும் அந்த ஹீரோ பேனாவிற்கு உள்ள மவுசே தனி தான் ...

அந்த ஹீரோ பென் படிக்கும் காலத்தில் எத்தனைப் பேருக்கு கனவு... நாம் எப்போது பேனாவில் எழுதுவோம் நமக்கு எப்போது அப்பா அதை வாங்கித்தருவார் என ஏங்கி ஏங்கி வாங்கியப் பென்....

ஆனால் இந்த ஹீரோ பென் நமது ஹுரோயின் கைக்கு வந்தது தனிக் கதை....

ஆனால் மதுவினுடைய ஹீரோப் பென்னின் மதிப்பு அவளுக்கு கோடிக்கு சமம்... காரணம்... அந்த ஹீரோப் பென் அவளுடைய ஹீரோ அவளுக்கு பரிசாக அளித்த பென் அப்போது அதன் மதிப்பு கோடி ரூபாய் தானே....


அந்த பேனாவினுள் இருப்பது வெறும் மை மட்டும் இல்லையே… அது மதுவின் உயிர்… அந்த பேனா அவளுடைய காதலின் நினைவுச் சின்னம்… பெருவதற்கு அரிய பொக்கிஷமல்லவோ… அது

அன்றைய நாள் இன்றும் பசுமையாக நினைவில் ஆடியது மதுவிற்கு இது இந்த ஹீரோ பேனா அவளுடைய கைக்கு வந்த நாள்… அதை பரிசளித்த அவளுடைய அவன்…. அவனை …????? இறந்தாலும் மறந்துவிடுமா ???? அந்நினைவுகள் தெரியாது..... ஆனால் மறந்து போனால் மது இறந்துதான் போயிருப்பாள்....


__ தொடரும்....

__காயத்ரி வினோத் குமார்....
 

Attachments

  • image_search_1590134275406.jpg
    image_search_1590134275406.jpg
    48.2 KB · Views: 1

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்
ரொம்ப நாள் கழித்து ஹீரோ பேனாவின் பெருமையைக் கேட்டு ரொம்பவே சந்தோஷமாக இருக்குப்பா
யாருப்பா அந்த ஹீரோ பேனாவை மதுவுக்கு கொடுத்த ஹீரோ, காயத்ரி டியர்?
சித்தியும் பெரியம்மாவும் மதுவிடம் ஏன் அனுதாபம் காட்ட வேண்டும்?
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
பேனா கனவு எல்லாருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top