கைதி - அத்தியாயம் 21

Advertisement

Nuha Maryam

Active Member
ஆர்யானுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என ரூஃப் கார்டனை முன் பதிவு செய்தவள் ஆர்யானுக்கு ரூஃப் கார்டனுக்கு வருமாறு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.

வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து என்றும் போல யாரோ தன்னை பின் தொடர்வது போல் சிதாராவுக்கு தோன்றியது.

ஏதோ தன் பிரம்மை என அதனைப் புறக்கணித்து விட்டு டாக்சி பிடிக்கப் பார்க்க,

அதற்குள் அவளுக்கு அருகில் வந்து நின்ற வேனிலிருந்து இறங்கிய சிலர் மயக்க மருந்து அடித்து கர்சீப் மூலம் சிதாராவை மயக்கமடையச் செய்து வேனில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றனர்.

மருந்தின் வீரியத்தால் சிதாரா உடனடியாக மயக்கமடையவும் அவர்களுக்கு அவளை கடத்த இலகுவானது.

ஆனால் சிதாராவை உள்ளே தூக்கிப் போடும் போது வேன் கதவைத் திறந்தவனின் கையிலிருந்து விழுந்த பிரேஸ்லட்டை யாரும் கவனிக்கவில்லை.

_______________________________________________

சிதாராவின் நிலையை அறிந்த ஆர்யான் மடிந்து அமர்ந்திட அவனுக்கு என்ன செய்ய என்றே விளங்கவில்லை.

"மினி... ஏன்டி சொல்லாம போன..." என தலையில் அடித்துக் கொண்டு அழுதவன் சில நொடிகளில் தன்னை சமன் செய்து கொண்டு மொபைலில் யாருக்கோ அழைத்தான்.

மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் ஆர்யான், "டே... டேய்... அவங்க மினிய கடத்திட்டாங்கடா... " என நடந்ததைக் கூற,

மறுபக்கம், "என்னடா சொல்ற... சரி சரி.. தங்கச்சோட மொபைல்ல தானே அவன் பேசினதா சொன்னான்... நான் அந்த லொக்கேஷன ட்ரேஸ் பண்ண ட்ரை பண்றேன்... நீ ஒரு வேலை பண்ணு... அன்னைக்கு ஒரு நம்பரால உனக்கு கால் வந்திச்சுல்ல... அதுக்கப்புறம் நாம ட்ரை பண்ணப்போ அந்த நம்பர் ஸ்விச் ஆஃப் பண்ணி இருந்ததே.. நீ திரும்ப அந்த நம்பருக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இரு.. நான் உன்ன கூப்பிட்றேன்..." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆர்யான் உடனே அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்க்க அழைப்பு செல்லவில்லை.

பலமுறை முயன்று விட்டு சிதாராவைக் கடத்தியவர்கள் பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா எனப் பார்க்க வீட்டை நோக்கி சென்றான்.

வீட்டை சற்று நெருங்குகையிலே அவன் கண்ணில் பட்டது கீழே விழுந்து கிடந்த ஒரு ப்ரேஸ்லட்.

அதை கையில் எடுத்துப் பார்த்த ஆர்யான் அதிலிருந்த D என்ற ஆங்கில எழுத்தைக் கண்டு யோசனை வயப்பட்டான்.

_______________________________________________

மயக்கத்திலிருந்த சிதாரா மெது மெதுவாகக் கண் விழிக்க அவள் நாசியை அடைந்த சிகரெட் புகையில் மூக்கை கையால் மூடிக் கொண்டு இருமினாள்.

"எழுந்துட்டியா பேபி... நீ மயக்கம் தெளியும் வரை தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..." என்ற குரலில் பதறி மறுபக்கம் திரும்பிப் பார்க்க அப்போது தான் அவளுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து சிகரெட் பிடித்தபடி பார்வையாலே சிதாராவைத் துகிலுரிந்து கொண்டிருந்தவனைக் கண்டாள்.

அவனைக் கண்டு பயந்தவள் கட்டிலின் பின்னே சாய்ந்து, "நீ... நீ... எதுக்கு என்ன கடத்தியிருக்க..." என நடுங்கியபடி கேட்க,

சிதாராவைப் பார்த்து சிரித்தவன் அவளை இன்னும் நெருங்கி,

"என்ன பேபி இப்படி கேட்டுட்ட... உனக்கு வேணா என்னை தெரியாம இருக்கலாம்... ஆனா உன் புருஷன் இருக்கானே... தி க்ரேட் ஆர்யான்... அவனுக்கு என்னை ரொம்ப நல்லாவே தெரியும்... சரி அதெல்லாம் விடு பேபி... " என்றவன் தன் விரல் கொண்டு சிதாராவின் கன்னத்தை வருட அவளுக்கு உடல் கூசிப் போனது.

பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டவள் கண்கள் கலங்கி விட மனமோ, "ரயன்...‌ ரயன்... " என ஆர்யானின் பெயரையே உச்சரித்தது.

சிதாரா கையைத் தட்டி விட்டதும் ஆத்திரம் கொண்டவன் அவள் தாடையை இறுக்கப் பற்ற சிதாரா அவனின் கையை விலக்கப் போராடினாள்.

சிதாராவின் முயற்சியைப் பார்த்தவன், "இன்னைக்கு நீ என்ன பண்ணாலும் உன்னால இங்க இருந்து போக முடியாது பேபி... அன்னைக்கு மாதிரி அந்த ஆர்யானால கூட உன்ன காப்பாத்த வர முடியாது... இன்னைக்கு உன்ன நான் முழுசா அனுபவிக்க போறேன்..." என்றான் வக்கிரப் புன்னகையுடன்.

எவ்வளவு முயன்றும் அவன் கையை விலக்காததாலும் அவனின் பேச்சு தந்த பயத்தினாலும் தன்னைக் காத்துக் கொள்ள அவன் கன்னத்தில் அறைந்தாள் சிதாரா.

அவனைத் தள்ளி விட்டு அவசரமாக கட்டிலை விட்டு இறங்கியவள் ஓடிச் சென்று கதவைத் திறக்கப் பார்க்க அது திறந்து கொள்ளவில்லை.

சிதாராவின் செயலில் பலமாகச் சிரித்தவன், "நான் டோர ஓப்பன் பண்ணாம உன்னால வெளிய போக முடியாது பேபி..." என்றவன் மதுக் கிண்ணத்தை வாயில் சரித்தான்.

சிதாரா அவன் கூறியதைக் கண்டு கொள்ளாமல், "ஹெல்ப்.... ஹெல்ப்..." எனக் கத்திக் கொண்டே கதவைத் திறக்க முயற்சி செய்ய,

சிதாராவை நெருங்கியவன் பின்னாலிருந்து அவளை அணைக்க முயன்றான்.

அவனைத் தள்ளி விட்டு ஓடியவள் மேசையில் அழகுக்காக வைத்திருந்த பூச்சாடியை கையில் எடுத்து,

"கிட்ட வராதே... அடிச்சிடுவேன்..." என்க,

ஏதோ நகைச்சுவை கூறியது போல் சிரித்தவன் அவளை மேலும் நெருங்கினான்.

சிதாரா பயத்தில் பூச்சாடியை அவனை நோக்கி வீச அதிலிருந்து லாவகமாக தப்பியவன், "நீ இப்படி பண்ண பண்ண எனக்கு உன்னை அடையனும்னு வெறி ஏறிட்டே போகுது பேபி..." என்றவன் வலுக்கட்டாயமாக அவளை அணைத்தான்.

அவன் சிதாராவின் கழுத்தில் முகம் புதைக்க,

"ப்ளீஸ்... என்னை எதுவும் பண்ணாதே விட்டுரு..." என அவனிடமிருந்து விடுபடப் போராடியவாறு கெஞ்சினாள் சிதாரா.

ஆனால் போதையின் உச்சத்தில் இருந்த காமுகனின் செவிகளை சிதாராவின் கதறல்கள் எதுவும் எட்டவில்லை.

காத்திருந்து கிடைத்த இரையாக சிதாராவை எண்ணினான் அவன்.

சிதாராவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு வாங்க ஆரம்பிக்க அவளின் பிடி இளகியது.

அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டவன் சிதாராவைக் கட்டிலில் தள்ளி விட்டு அவள் மீது படர்ந்தான்.

அவன் சிதாராவின் தோளில் கை வைத்து அவளின் ஆடையைக் களைய ஆரம்பிக்க,

அவனைத் தடுக்கக் கூட திராணியற்று சிதாரா, "ரயன்.... ரயன்...." என விடாது அரற்றினாள்.

அவள் கன்னத்தில் அறைந்தவன், "ஏய் வாய மூடு... எப்பப்பாரு அவன் பேரையே சொல்லிக்கிட்டு... அப்படி என்ன அந்த ஆர்யான் கிட்ட கண்டுட்ட... சந்தோஷம்னா என்னன்னு நான் காட்டுறேன்..." என்றவன் சிதாராவை முத்தமிட நெருங்க அதற்குள் கதவு வேகமாகத் தட்டப்பட்டது.

"ஷிட்..." என்று மெத்தையில் அடித்தவன் சிதாராவை விட்டு எழுந்து போதை மயக்கத்தில் யோசிக்காது கதவைத் திறந்தான்.

உடனே அவனைத் தள்ளிக் கொண்டு அந் நாட்டு போலீஸ் உள்ளே வர அவர்களின் பின்னே வேகமாக உள் நுழைந்தான் ஆர்யான்.

ஆர்யானின் பார்வை முதலில் சென்றது சிதாராவிடம் தான்.

தன்னவள் கட்டில் நடுவில் வாடிய கொடியாய் படுத்திருக்க,

"மினி..." என அவளிடம் ஓடியவன் அவசரமாக போர்வையை எடுத்து அவள் மீது போர்த்தினான்.

வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவளால் ஆர்யானைக் கூட அடையாளம் காண முடியாமல்,

"என்ன... விட்... டுரு..‌ ப்ளீஸ்... தொடாதே.." எனக் கெஞ்சியவளின் கை, கால், தலை என ஒரு பக்கம் வேகமாக வெட்ட வாயில் நுரை‌ தள்ளியது.

சிதாராவின் நிலையைக் கண்டு அதிர்ந்த ஆர்யான் அவசரமாக அவளைக் கையில் ஏந்திக் கொண்டு வெளியேற கதவின் அருகில் செல்ல,

போலீஸ் துப்பாக்கியுடன் சுற்றி வளைக்க நடுவில் என்ன நடந்தது எனப் புரியாமல் போதையில் விளித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு ஆர்யான் அதிர்ந்தான்.

அவன் உதடுகள் தானாக, "தயா..." என அசைந்தது.

சிதாராவின் நிலை மோசமாக போலீஸின் காவலில் அவனை விட்டு விட்டு ஹாஸ்பிடல் விரைந்தான் ஆர்யான்.

_______________________________________________

கைகளில் தலையைத் தாங்கியபடி ஐ.சி.யு வாசலில் இருந்த கதிரையில் அமர்ந்திருந்தான் ஆர்யான்.

அவனின் கண்களிலிருந்து விடாது கண்ணீர் வடிந்தன.

சிதாராவை மருத்துவமனையில் சேர்த்தவன் அவள் இருந்த நிலையை எண்ணியே கலங்கினான்.

அவ்வளவு பாதுகாப்புடன் இருந்தும் தன்னவளுக்கு இந் நிலைமை வராது காக்க முடியவில்லையே என ஆர்யான் வேதனைப்பட்டான்.

சற்று நேரத்தில் டாக்டர் வர ஆர்யான், "டாக்டர்...‌ என் மினி எப்படி இருக்கா... அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லல்ல... அ...‌ அவன்... என்.. என் மினிய எதுவும் பண்ணி இல்ல தானே..." என பதட்டமாக கேட்டான்.

ஆர்யானுக்கு அப்படி கேட்கும் போதே குரல் நடுங்கியது.

"காம் டவுன் மிஸ்டர்... உங்க மனைவிக்கு அங்க எதுவும் நடந்து இல்ல... அவங்கள பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணி இருக்காங்க... அதனால தான் அவங்களுக்கு ஃபிட்ஸ் வந்திருக்கு... முதல்ல அவங்களுக்கு கான்ஷியஸ் வரனும்... அப்போ தான் என்னால எது வேணாலும் சொல்ல முடியும்... நீங்க போய் உங்க மனைவிய பார்க்கலாம்... பட் டிஸ்டர்ப் பண்ண வேணாம்..." என்று விட்டு சென்றார்.

அவசரமாக ஐ.சி.யுவினுள் நுழைந்தவன் சிதாராவின் அருகில் அமர்ந்தான்.

அப்போது அவள் அணிந்திருந்த உடையை அவதானித்தான்.

கண் கலங்கிய ஆர்யான் அவள் கையை எடுத்து தன் முகத்தில் வைத்துக் கொண்டான்.

"ஏன் மினி என் கிட்ட சொல்லாம போன... ஒரு கால் பண்ணி இருக்கலாம்ல... அதுவும்... இந்த ட்ரஸ்..... எதுவுமே புரியல மினி... ப்ளீஸ்... என் கிட்ட வந்துடு... உன் ஜிராஃபிக்காக..." என அழுதான் ஆர்யான்.

திடீரென சிதாராவின் மூடிய இமைக்குள் கருமணிகள் அங்குமிங்கும் அசைய,

"வேணாம்... வேணாம்... என்னை எதுவும் பண்ணாதே... விட்டுரு... நான் போகனும்... ரயன்... ரயன்... என்ன இவன் கிட்ட இருந்து காப்பாத்து ரயன்... தொடாதே என்ன..." எனக் கத்தினாள்.

சிதாராவின் கத்தலில் ஆர்யான், "மினி...‌மினி... கண்ண திற மினி... என்னை பாரு.." எனக் கன்னத்தில் தட்டியபடி பேச,

சிதாராவோ அவனிடமிருந்து தன் கையை வேகமாக இழுத்தவள்,

"தொடாதே... வேணாம்... விட்டுரு..." என அரற்றியவளுக்கு மீண்டும் வலிப்பு வந்தது.

சிதாராவின் நிலையைக் கண்டு பதறிய ஆர்யான், "டாக்டர்... டாக்டர்..." எனக் கத்திக் கொண்டு வெளியே ஓடினான்.

மருத்துவர் வரவும் ஆர்யான் அவரிடம் சிதாராவின் நிலையைக் கூற அவர் அவசரமாக ஐ.சி.யுவினுள் நுழைந்தார்.

ஆர்யானும் அவரைத் தொடர்ந்து செல்லப் பார்க்க அவனைத் தடுத்து அங்கேயே இருக்கக் கூறினார் நர்ஸ்.

மருத்துவர் சிதாராவைப் பரிசோதிக்க,

ஐ.சி.யு கதவிலிருந்த சிறிய வட்ட இடத்தினால் சிதாராவைப் பார்த்தான் ஆர்யான்.

அவள் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாவது தெரிய மருத்துவர் வெளியே வரும் வரை பொறுமையின்றித் தவித்தான் ஆர்யான்.

சில மணி நேரத்தில் மருத்துவர் வர ஆர்யான் அவரிடம் சென்று சிதாராவைப் பற்றிக் கேட்டான்.

மருத்துவர், "சாரி டு சே மிஸ்டர். ஆர்யான்... நாங்க எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணோம்..." எனக் கூறும் போதே ஆர்யானின் இதயம் வேலை நிறுத்தம் செய்வது போலிருந்தது.

❤️❤️❤️❤️❤️

சாரி மக்களே!!! இன்னைக்கு கொஞ்சம் சின்ன யூடி தான்... அடுத்த யூடிய பெரிசா தரேன்... நன்றி...

- Nuha Maryam -
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top