குழந்தைகளின் சேட்டை விபரீதமானது

Advertisement

I R Caroline

Well-Known Member
மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது...

நாங்க கார் வாங்கி ஒரு மாசமாகியிருந்தது, முதல் மாசம் முடிந்ததும், சர்வீஸ்க்கு விட்டு எடுத்துட்டு வந்து, வெளியில் விட்டிருந்தோம், நாங்களும் வெளியில் சென்ற அசதியில் தூங்கிட்டோம்,

திடீர்னு என் அண்ணன் மகள் எனக்கு கால் பண்ணி, அத்த கார் தீ பிடிச்சு எரியுதாம்னு கத்தினாள், நாங்க அடிச்சு பிடிச்சு வெளியில் ஓடி வந்து பார்த்தா, கார் ஃப்ரெண்ட் டயர் தீ பிடிச்சு எரியுது.

பக்கத்திலிருந்தவங்க எல்லாம் சேர்ந்து தீயை அணைச்சாச்சு, நல்ல வேளை டயர், காரில் போட்டிருந்த படுதா எரிந்ததோடு போச்சு, டயர் எரிந்து வெடிச்சதில், கார் முழுசும் தெரிச்சு, காய்லாங் கடைக்கு போடும் கார் போல ஆயிட்டு,

தீ பிடிச்சா இன்ஜின்ல பிடிக்கனும், இல்லை பெட்ரோல் டாங்க்ல பிடிக்கனும் இதென்ன டயர்ல பிடிச்சிருக்குனு குழப்பம், கார் வாங்கி ஒரு மாசம்தான் ஆச்சு என்பதால், கம்பெனிக்கு கால் பண்ணோம், அவங்க உடனே ஸ்பார்ட்டுக்கு வந்துட்டாங்க,

அவங்க வந்து கார் எப்படி தீப் பிடிச்சதுன்னு சுத்தி சுத்திப் பார்த்தாங்க, கார் தானா தீப் பிடிக்கலை, யாரோ பத்த வச்சிருக்காங்கனு சொன்னாங்க, எங்களுக்கு ஷாக் என்னடா இது, அந்த அளவுக்கு நமக்கு விரோதி யாருனு யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்.

எங்க ரிலேட்டிவ் போலீஸ் டிபார்ட்மெண்ட் அவரை கூப்பிட்டோம், அவரும் உடனே வந்துட்டார், கம்பெனி கிட்ட, "எப்படி சொல்றீங்க பத்த வச்சதுனு" கேட்டாங்க, அவங்க சிலதை காரை சுற்றிக் கிடந்ததை காட்டினாங்க, அது தீக்குச்சி நிறைய கிடந்தது, கார் பக்கத்தில் பேப்பர் சருகெல்லாம் தீப் பிடிச்சிருக்கு, அதையெல்லாம் காட்டினாங்க...

போலீஸ் & கம்பெனி மூளையும் சேர்ந்து, ஆராய்ச்சி
வேலை செய்யத் தொடங்கி, நேராக எதிர் வீட்டில் உள்ளவர்கள் மேல் சந்தேகத்தை கிளப்பியது, எல்லோரும் அவர்கள் பக்கம் பார்க்க, பக்கத்து வீட்டில் வெளியில் சென்றவர்கள் அதே நேரம் வந்தார்கள், அவர்கள் எங்களிடம் என்னவென்று கேட்க, நாங்களும் சொன்னோம்.

எதிர்வீட்டு பிள்ளைகள், அவங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க பிள்ளைகள், எல்லாம் ஒன்றாக சேர்ந்து விளையாடிட்டு இருந்தாங்க, என்ன விளையாட்டுன்னா பேப்பர் குப்பைகள், எல்லாத்தையும் காருக்கு அடியில் போட்டு, தீ வச்சு விளையாடி இருக்காங்க, அதை இவங்க வெளியில் போகும் போது பார்த்துட்டு,

அவ கார் வாங்கி ஒரு மாசம்தான் ஆகுது, கார் கிட்ட தீ வச்சு விளையாடாதீங்க, காருக்கும் பிரச்சினை, உங்களுக்கும் பிரச்சினைன்னு, பிள்ளைகளை திட்டிட்டு அவங்க வீட்டு பெரியவங்களையும் கூப்பிட்டு சொல்லிட்டு போயிருக்காங்க, ஆனா யாரும் கேட்கலை, பெரியவங்களும் கண்டிக்கலை,

கார் நிப்பாட்டும் போது விளைடிட்டு இருந்த பிள்ளைகளை காணுமே, இவ்வளவு களேபரம் நடந்தும் இந்த பிள்ளைங்க ஏன் வெளியில் வரலைனு அப்பதான் யோசிச்சோம், எல்லோரும் எதிர்வீட்டுப் பக்கம் பார்த்தோம், யாரும் எதுவும் கேட்கலை, ஆனா அவங்க, "நாங்கதான் முதல்ல பார்த்தோம், கார் தானா தீப் பிடிச்சு எரிந்தது, உடனே சத்தம் போட்டு ஓடி வந்து அணைச்சோம்னு" அவங்களா என்ட்ரி கொடுத்தாங்க,

அவங்க யாரும் அணைக்க வரலை, மற்ற வீட்டு காரங்கதான் வந்தாங்க, இவங்க வேடிக்கைதான் பார்த்துட்டு இருந்தாங்க, பிள்ளைங்க உளறிடுவாங்கன்னு உள்ளே போட்டு அடைச்சிட்டாங்க,

போலீஸ், "தங்கச்சி இவங்கதான் வச்சிருக்காங்க, வேற யாருமில்லை கேஸ் போடலாம், ஆனா அலையனும் பணம் கொடுக்கனும் இழுத்துகிட்டே இருக்கும், அடுத்து இதுல குழந்தைங்க வேற இருக்காங்க"

நாங்க ரெண்டு பேரும் எதுவும் சொல்லலை, அந்த பிள்ளைங்க முகம்தான் ஞாபகம் வந்தது, எல்லாம் 12 வயசுக்குள்ள இருக்கற பிள்ளைங்க, "எதுவும் செய்ய வேண்டாம் அண்ணா, பெரியவங்களே தப்புக்கு உடந்தையா இருக்காங்க, பிள்ளைகளை என்ன சொல்ல, அவங்களோடது அவங்களுக்குனு" விட்டுட்டோம்,

கம்பெனில நாங்க எல்லாம் சரி பண்ணி தரோம், ஒரு மாசம்தான் ஆயிருக்கு, சரி பண்ண ஆகும் செலவை குறைக்கச் சொல்லி பேசுறோம்னு சொன்னாங்க, அதே போல பேசி 40, 000/- மொத்த செலவு, அதுல 10.000/- குறைத்து புது காராவே மாற்றி கொடுத்தாங்க,

இவங்க வச்ச தீ படுதால பிடிச்சு டயர்ல பிடிச்சிருக்கு, அதனால் டயரோட போச்சு, இதே தீ பெட்ரோல் டாங்க் பக்கம் பிடிச்சிருந்தா, அது வெடிச்சு கார் முழுசும் எரிந்திருக்கும், இந்த பிள்ளைங்க பக்கத்தில் இருந்திருந்தா, உயிர் சேதமும் ஆகியிருக்கும், பிள்ளைகளுடம் கவனமா இருங்க, பொருள் போனால் வாங்கிக்கலாம் ஆனா உயிர் போனால்...
 

banumathi jayaraman

Well-Known Member
அட ராமா
பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லியும் அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு அப்படி என்ன ஒரு அலட்சியம்?
அப்படி என்ன பொறாமை?
கடைசியா நீங்க சொன்ன மாதிரி குழந்தைகளுக்கு ஏதாவது விபரீதமாகியிருந்தால் அவங்களுக்குத்தானே முதல் நஷ்டம்?
அந்த அறிவு கூடவா பிள்ளைகளைப் பெற்ற பீடைகளுக்கு இல்லாமல் போச்சு?
 

Rabi

Well-Known Member
Enga relative veetla kuzhanthaigala tracter avanga veetlaye irukranala vilayada viduvanga. Oru nal key maranthu avanga appa tracterlaye vitutanga 6 vayasu ponu eri start panni kinathukula vituta.tracter ullavilunthutu papava save pantanga
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
இதென்ன பொறுப்பில்லாத பெரியவர்கள்... குழந்தைகள் தப்பு பண்ண திருத்தறதை விட்டுட்டு அவங்க தப்பை தூண்டி விடுற மாதிரி செய்வது :mad::mad::mad:
 

I R Caroline

Well-Known Member
அட ராமா
பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லியும் அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு அப்படி என்ன ஒரு அலட்சியம்?
அப்படி என்ன பொறாமை?
கடைசியா நீங்க சொன்ன மாதிரி குழந்தைகளுக்கு ஏதாவது விபரீதமாகியிருந்தால் அவங்களுக்குத்தானே முதல் நஷ்டம்?
அந்த அறிவு கூடவா பிள்ளைகளைப் பெற்ற பீடைகளுக்கு இல்லாமல் போச்சு?

யார் பொருளோ நமக்கென்ன என்ற எண்ணம்தான் மேம்... தனக்குனு வரும் போதுதான் அதன் வலி தெரியும்.
 

I R Caroline

Well-Known Member
Enga relative veetla kuzhanthaigala tracter avanga veetlaye irukranala vilayada viduvanga. Oru nal key maranthu avanga appa tracterlaye vitutanga 6 vayasu ponu eri start panni kinathukula vituta.tracter ullavilunthutu papava save pantanga

io :eek::eek: nalla velai pappa safe
 

I R Caroline

Well-Known Member
இதென்ன பொறுப்பில்லாத பெரியவர்கள்... குழந்தைகள் தப்பு பண்ண திருத்தறதை விட்டுட்டு அவங்க தப்பை தூண்டி விடுற மாதிரி செய்வது :mad::mad::mad:

ஆமா சிஸ் கண்டிப்பதைவிட பிள்ளைகளின் தவறை மறைப்பவர்கள்தான் அதிகம்.
 

banumathi jayaraman

Well-Known Member
யார் பொருளோ நமக்கென்ன என்ற எண்ணம்தான் மேம்... தனக்குனு வரும் போதுதான் அதன் வலி தெரியும்.
பொருள் போனால் கஷ்டம்தான்
ஆனாலும் போனால் போகட்டும்ப்பா
பிள்ளைகளின் உயிர் போனால் திரும்ப வருமான்னு அந்த நல்ல்ல்ல்ல்ல உள்ளங்கள் நினைத்து பார்க்க வேண்டாமா?
 

I R Caroline

Well-Known Member
பொருள் போனால் கஷ்டம்தான்
ஆனாலும் போனால் போகட்டும்ப்பா
பிள்ளைகளின் உயிர் போனால் திரும்ப வருமான்னு அந்த நல்ல்ல்ல்ல்ல உள்ளங்கள் நினைத்து பார்க்க வேண்டாமா?

ஆமா மேம்... பொருளை வாங்கிவிடலாம்... ஆனா உயிர் போன பிறகு என்ன செய்ய முடியும்... இப்படியும் இருக்காங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top