குப்பைத் தொட்டி

Advertisement

Jagan P

Member
ரகு தனது
முதல் மாச சம்பளம் வந்தவுன் அம்மாவிடம் கொடுத்தேன் அந்த பணத்தை வாங்கிய அம்மா அதிலிருந்து 1000ரூபாய்யை எடுத்து இது உன்னோட முதல் சம்பாதியம் நல்ல வழியில் தான் முதல்ல செலவு பண்ணணும் அதனால சாமிக்கு பூஜை பண்ணிவிடலாம் என்றார்கள் அதற்கு ரகுவும் சரி என்று கோவிலுக்கு புறப்பட்டார்கள்
கோவிலுக்கு அருகில் இருக்கும் கடை வீதியில் அர்ச்சனைக்கு தேவையான தேங்காய் பூ பழம்
வாங்கிக் கொண்டுயிருந்தார்கள்.

அப்போது கடைக்கெதிரே ஒர் குப்பைத்தொட்டிருந்தது அதன் பக்கத்திலேயே ஒரு குட்டி பையன் எதையோ தேடிட்டிருப்பதை பார்த்தான். அந்த சிறுவனது முழு கவனமும் அந்த குப்பை தொட்டி சுற்றியே இருந்தது. ரகு கொஞ்சம் நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் ரகுவின் அம்மா டேய் கண்ணா வா கோயில் உள்ளே போகலாம்

ரகுவும் அம்மா கொஞ்சம் இங்க வாயேன் அந்த
குப்பைத் தொட்டி பக்கம் பாரேன் அந்த பையன் எதையோ ரொம்ப நேரமா தேடிட்டிருக்கான். அதற்கு அம்மாவும் அட ஆமாம் அந்த பையன் யாருனே தெரியலையே புதுமுகமால இருக்கு?

சரி வா சாமிய பாத்துட்டு அப்புறம் பேசலாம்

ரகுவிற்கு கோவில் உள்ளே போக மனமில்லை இருந்தாலும் அம்மாவின் பேச்சை தட்டாத பிள்ளை அவர்களின் பேச்சை.
கேட்டு அர்ச்சணை தட்டை வாங்கிக்கொண்டு கோவிலுக்குள்ளே சென்றார்கள்.

கோவிலில் சாமிக்கு பூஜை செய்ய அர்ச்சனை டிக்கேட் 50ரூவாய் special தரிசனம் டிக்கேட் 100ரூவாய் என்று எழுதிவைத்திருந்தது அம்மாவை காக்கவைக்கக்கூடாது என்பதற்காக ரகு 100ரூவாய் special டிக்கேட் வாங்கிக்கொண்டு சாமியை பார்த்துவிட்டு அங்கு பூஜாரின் தாம்பலத்தில் 100ரூவாய் வைக்க சொன்னாள் அம்மா சரி என்று வைத்துவிட்டு
பூஜைகள் முடிந்து வெளி வந்தார்கள்.!

அப்போதும் அந்த பையன் அங்கையே தான் நின்றுக்கொண்டியிருந்தான் அம்மா நீங்க இங்கையே கொஞ்ச நேரம் இருங்க நான் இதோ வரனு சொல்லிட்டு அந்த பையன் கிட்ட போனோன் ரகு.


ஏய் தம்பி இங்க என்ன தேடிட்டு இருக்க நானும் உன்ன பாத்துனு தான் இருக்கேன்

அதற்கு அவன் எதுவுமே சொல்லவில்லை மறுபடியும் அதட்டிக் கேட்கவோ

என்ன அண்ணா.

என்னடா தேடுற?
நீ யாரு…? யாரு வீட்டு பையன்? உன் பேர் என்னடா? என கேள்களை அடுக்கினான்

அந்த சிறுவனோ நான் என் நாய் குட்டிய தேடுறேன் நெத்து இங்கதான் விட்டுட்டு போய்டேன் இப்போ வந்து பாத்தா காணோம் அதான் தேடுறேன்!

அட கிறுக்கு பையா அந்த நாய் குட்டிய யாராச்சும் எடுத்துனு போய்யிட்டிருப்பாங்க இல்ல அது எங்கையாச்சும் ஒடி போய்யிட்டு இருக்கும். நீ அத தேடுறத நிறுத்திட்டு உங்க வீட்டுக்கு போடா


உடனே அந்த பையன் கேட்டான் அந்த நாய்குட்டிய தூக்கிட்டு போனவங்க அதுக்கு சாப்பாடு போடுவாங்களா இல்ல சாப்பிடாமா தெருத் தெருவா சுத்திட்டே இருக்குமா

ரகுவும் சிரிச்சிட்டே அதுக்கு சாப்பாடு போடுவாங்கட அது இப்போ நல்ல சாப்பிட்டு தூங்கும் டா நீ உங்க வீட்டுக்கு போ உன்னை உங்க அம்மா தேடுவாங்கள?

இல்லனா அம்மா தேடாது அது வேலைக்கு போய்ச்சி

அம்மா வேலைக்கு போனாக் கூடா நீ வீட்ட ஜாக்கிரதையா பார்த்துகனும்ல

ஆமானா ஆனா எனக்கு என் நாய் குட்டிய பார்க்கனும் போல இருந்துச்சி அதான் அத தேடுறேன்னா

சரிடா நீ தானே அந்த நாய்குட்டிய வேணாணு விட்டு போன அப்புறம் ஏன் அத தேடுற?

அம்மா தான் இங்க விட சொல்லுச்சி அதான் விட்டேன்

சரி சரி உங்க வீடு எங்க இருக்கு?

நாங்க இந்த ஏரிகரையொறமா இருக்கோம்ன்னா எங்க வீட்ல சாப்பாடு இல்ல. இந்த நாய்குட்டி இருந்தா அதுக்கும் சாப்பாடு போடனும். நாமக்கே இங்க சோறு இல்லடா கண்ணு பாவம் இந்த நாய்குட்டியும் நம்மகூட சேர்ந்து சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டும் கத்தும் செல்லம்.

நாம பட்டிணியா இருந்துடுவோம் ஆனா இந்த நாய்குட்டி இருக்காது நாம இந்த நாய்குட்டிய வச்சினு இருக்கக்கூடாது நீ இத தூக்கிட்டு போய் அந்த குப்பைத்தொட்டி கிட்ட விட்று அதுக்கு எல்லோரும் சாப்பாடு போடுவாங்க பாத்திரமா பாத்துபாங்கனு எங்க அம்மா சொல்லுச்சி அதான் இங்க வந்து விட்டேன். ஆனா இப்போ அது எங்க போச்சுனே தெரியல அண்ணா.

என் நாய்குட்டியை அத ஒருமுறை பார்த்து போலானு வந்தேன்

நீ கவலப்படாம உங்க வீட்டுக்கு போ…..

அந்த நாய்குட்டி நல்லதான் இருக்கும். எல்லோரும் பதிரமா பார்த்துப்பாங்கடா தம்பி

அப்படியானா நான் போய் பசிக்குதுனு கேட்டாவே போடானு சொல்லுவாங்க அப்புறம் எப்படின்னா மத்தவங்க நாய் குட்டிக்கு போய் சாப்பாடு போடுவாங்க?

அது வந்துடா தம்பி நாய் குட்டி பார்க்க பாவமா இருக்க அதுவுமில்லாம அழக இருக்கா அதுக்கு அம்மா வேறயில்லையா அதுக்காகவே சாப்பாடு போட்டு வளர்ப்பாங்க டா

ஒ அப்படியா அப்போ தினமும் சாப்பாடு நல்லா வயிறு முட்ட திண்ணும்ல

ஆமாம் ஆமா டா

சொல்லிட்டே இருக்கும் போது அந்த குட்டி பையன் மறுபடியும் அண்ணா எனக்கு பசிக்குது சாப்பாடு வாங்கி தரியா? அம்மா எதுவும் செய்யல காலையில காஞ்சி சாப்பாடு சாப்ட்டு கொஞ்சம் மதியத்துக்கு வச்சிட்டு போய்டாங்க

சரி டா சாப்பாடு வாங்கி தரேன் உங்க அம்மா என்ன வேலை செய்றாங்க

அது அது தெரிலனா

ரகுவும் சரி வா டா சாப்பாடு வாங்கி தரேன் என அழைத்துக் கொண்டு போய் சாப்பாடு வாங்கிக் கொடுத்தான் ஆனால் அந்த சிறுவன் எனக்கு சாப்பாட்ட கட்டிக்குடுக்க சொல்லுங்கன்னா அம்மாவும் வேலை விட்டு வந்ததும் சாப்பிடும்

சிறுவன் கேட்டதைப் போன்றே பார்சல் சாப்பாடு வாங்கிக் கொடுத்தான் அடுத்த நிமிடமே

அந்த சிறுவன் சொன்னான் அய்யோ அம்மா சரியாதான் சொல்லுச்சி குப்பைத் தொட்டிக்கா நாய் குட்டிய விடு அதுக்கும் சாப்பாடு கிடைக்கும்னு இப்போதான் தெரியுதுனா


நாளைக்கே நானும் என் அம்மாவும் இந்த குப்பைத்தொட்டி கிட்ட வந்துட்டா எங்களுக்கும் எல்லோரும் சாப்பாடு போடுவாங்களன்னா நா அம்மா சரியா சாப்பிடறதே இல்லன்னா இன்னைக்கு நீங்க வாங்கி கொடுத்தா மாதிரி நாளைக்கும் வேறயாராச்சும் சாப்பாடு வாங்கி தருவாங்களன்னா???

அம்மாக்கு யார்க்கிட்டையும் இப்படி சாப்பாட்ட கேட்டு வாங்க பிடிக்காதுனா இராத்திரிலாம் அழும்

சரிடா அப்போ இந்த சாப்பாடு எப்படி கிடைச்சதுனு அம்மா கேட்டா என்ன சொல்லுவா?

அது தெரியலேயே என்ன சொல்லட்டும்னா?

ஒரு அண்ணாக்கு பிறந்தநாளாம் அவர் கொடுத்தார்னு சொல்லு டா

சரினா அப்படியே சொல்றேன்
என்று மீண்டும்
அம்மா சொன்னது சரிதான்னா நாய்குட்டிக்கும் இங்க சாப்பாடு கிடைக்குது இப்போ நானும் வந்தேன் எனக்கும் இப்போ சாப்பாடு கிடைக்குது!
நாளைக்கே இந்த குப்பைத்தொட்டிக்கு நா எங்க அம்மாவ கூட்டி வந்துடுறன்னா பாவம் அம்மா எங்க எங்கையோ போய் வேலை செய்து சாப்பாடு வாங்கினுவருது இதுக்கப்புறம் அம்மா எங்கையும் போகாதுல இங்கையே சாப்பாடு கிடைச்சிடும்ல ஆனா அம்மா இங்கலாம் வராதே நா வாந்லே திட்டும் என சொல்லிக் கொண்டே சென்றான் அந்த சிறுவன்


ரகுவிற்கு என்ன செய்வதென்றே தெரியமால் நின்றான் சட்டென்று டேய் தம்பி உன் பேர் சொல்லுடா

என் பேரு கண்ணன் அண்ணா

ரகு வின் மனம் சொன்னது
சிறுமனம் அறியாமல் பேசுகிறது.. ஏழைகளாக இருந்தாலும் பிறரிடம் கையெந்தாமல் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை குழந்தைகளின் மனதில் விதையாக விதைக்கிறார்கள் என்பதில் சிறு ஐய்யமுமில்லை


நாம் கோவிலுக்கும் பூசாரிக்கும் செலவு செய்ததை விட வேறும் 50ரூபாயில் இந்த பையனுக்காக செலவு பண்ணியதில் கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும் குப்பைத்தொட்டியை நம்பி வருவொர்களுக்கு சாப்பாடு தந்துவிடும் என்ற நம்பிக்கையை ஏழை மக்களின் மனதில் பதிந்துபோய் உள்ளதை நினைத்தால் அழுகை தான் வரும்.

சாப்பாடு ருசியாக இல்லையென்றாலோ அல்லது வேறு எதாவது குறையை கண்டாலே போதும் குப்பைத் தொட்டியில் போடுகிறோம் வீணாக்குகிறோம் ஆனால் இந்த சாப்பாடு இல்லாமல் எத்தனை ஏழை குடும்பங்கள் உள்ளது தெரியுமா? தெரியாது நாமதான் எதிர்த்து வீட்டுக்காரனிடமே போசமாட்டோம் பழக மாடடோமே..!! பிறகு யார் எப்படி போனா நமக்கென்ன இருக்கு ? பண வசதி இருக்கு நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்று இருப்பவர்களுக்கு என்ன தெரிய போகிறது ஒரு வேளை சாப்பாட்டின் கஷ்டம் என்ன என்று

நம் வாழ்க்கையில் வீண் செலவுகளை தவிர்த்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் குடுப்பதிற்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துவிட்டு சென்றுவிட்டான் அச்சிறுவன்.
உணர்வு இல்லாத மனிதர்கள் மத்தியில் உணர்வுமிக்க உள்ளம் இருக்கிறது. நேர்மையாக வாழ பட்டிணியாக இருந்தாலும் வயிறுப்பசி கையெந்த வைத்துவிடுகிறது
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "குப்பைத்
தொட்டி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
சிறுகதைக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
Jagan P டியர்
 

Jagan P

Member
நன்றி. தாங்களின் இக்கருத்துக்கள் எம்மை மேலும் ஊக்கமளிக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top