கிளியோபார்ட்ரா...

Advertisement

Eswari kasi

Well-Known Member
கிளியோபார்ட்ரா...

பிரமிடுகளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் எகிப்தை ஆட்சி செய்த பன்னிரண்டாம்டாலமிக்கும் ராணி இஸிசுக்கும் பிறந்த பெண் பிள்ளைக்கு கிளியோ பாட்ரா என்று பெயர்.

இவளுக்கு முன் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்து உள்ளனர். எனவே தான் இவள் எட்டாவது கிளியோபாட்ரா என்று அழைக்கப் பெற்றார்.

இவள் 39 வயது வரை தான் இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் பேரழகியாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

இவளது அழகும் அறிவுக் கூர்மையும், ஜோதிடம், வானசாஸ்திரத்தைக் கல்வியாகக் கற்று பல்வேறு துறைகளில் அவளுக்கு இருந்த ஆர்வம்,ஒன்பது மொழிகளில் எழுதவும் பேசவும் படிக்கவும் அறிந்து இருந்தவள்.

அழகு சாதனப் பொருட்களை போட்டுக் கொள்வதோடு அவற்றின் மருத்துவ குணங்கள் வேதியியல் தன்மை போன்றவற்றை அறிந்து பயன்படுத்தி வந்தாள்.

தன் 39 ஆம் வயதில் ஏழுவிதமான வாசனைத்திரவியங்களைக் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்தவள்.

கிளியோபாட்ரா பன்முக ஆற்றல் கொண்ட சகலகலா வல்லி, மன்னர் டாலமிக்குவயதானதால் தன்னுடைய 18 வயது நிரம்பிய பருவமங்கை பேரழகி கிளியோபாட்ராவை பட்டத்து ராணியாக்க விரும்புகிறார்.

அக்கால கட்ட சட்ட திட்டம் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை. காரணம் பெண் ஆட்சி செய்யக்கூடாது. எனவே தனது 10 வயது பாலகனான இளைய டாலமிக்கும் மகள் கிளியோபாட்ராவுக்கும் அக்காள் தம்பி திருமணம் செய்து வைத்து கணவன் மனைவியாக்கி ஆட்சி பீடத்தில் அமர்த்திய மன்னர் டாலமி, பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டார்.

இவர்களின் ஆட்சி சுமுகமாக நடைபெற்று வந்தாலும் கிளியோபாட்ரா மீது வெறுப்புற்றிருந்த உறவினர்களும் சில அமைச்சர்களும் திடீர் புரட்சியில் ஈடுபட்டு அவள் உயிருக்கு குறி வைத்தனர்.

சாதுர்யமாக உயிர் தப்பி அண்டை நாடான சிரியாவிற்கு தப்பிச்செல்கிறாள். சீசர் மாவீரன் அலெக்சாண்டருக்கு நிகராக வரலாற்றில் பேசப்படும் ரோமானியப்பேரரசின் வீரன் சீசர்.

தன்னுடைய எதிரி ஒருவன் எகிப்தில் தலைமறைவாக இருப்பதை அறிந்து, அவனை பழி தீர்ப்பதற்காக கி.மு. 48 இல் எகிப்திற்கு வந்திருந்தான்.

இதை அறிந்த கிளியோபாட்ரா சீசரை சந்திப்பதற்கு முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள்.
சிரியாவில் இருந்து அழகிய கம்பளத்தில் தன்னை வைத்து சுருட்டி எடுத்து கொண்டு எகிப்திற்கு மறைவாகக் கொண்டு வந்து இதுதங்களுக்கான கிளியோபாட்ராவின் பரிசு என்று சொல்லி அந்தக் கம்பளத்தை சீசரின் முன் விரித்து விட்டார்கள்.

புதுமையான முறையில் தன்னை ஆட்கொண்ட கிளியோபாட்ராவின் பேரழகில் தன்னை இழந்து விடுகிறான். அவள் மீது காதல் வயப்படுகிறான்.

எகிப்தின் ஆட்சி பீடத்தைப் பற்றிய வரலாற்றை எடுத்துச் சொல்லி தன் நாட்டின் ஆளும்உரிமையை மீட்டுக்கொடுத்தால் சீசரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தாள் பேரழகியை அடைவதற்கு சீசரின் வாள் எகிப்தின் மீது சுழன்றது முடிவு.

டாலமியின் தலையை வெட்டி வீழ்த்தி மலையிலிருந்து உருட்டி நைல் நதியில் தள்ளிவிட்டார். கிளியோபாட்ராவை மீண்டும் எகிப்தின் பட்டத்து ராணியாக முடிசூட்டினான்.
சீசரை தன் மணவாளனாக ஆக்கிக்கொண்டு சிசருடன் எகிப்திற்கும் ரோமிற்கும் மகிழ்ச்சிப் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் கிளியோபாட்ரா கர்ப்பமுறுகிறாள்.

ஒரு நாள் பிரசவ வலி ஏற்பட்டு சுகப்பிரசவமாக அல்லாமல் துடிக்கின்றாள்.இதைப் பார்த்து தாங்கிக் கொள்ள முடியாத சீசர் தன் காதல் மனைவி கிளியோபாட்ராவைக் காப்பாற்ற அவளின் வயிற்றில் வாள் கொண்டு கீறி குழந்தையை வெளியே எடுத்து தாயும் சேயும் காப்பாற்றப்பட்டனர்.

வரலாற்றில் முதன் முதலாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டதால் இன்று வரை மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெறுவதை சீசரின் நினைவாகவே சிசேரியன் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு வரலாற்றுப் பதிவு.
எகிப்திற்கும் ரோமுக்கும் மாறி மாறிச்சென்று கொண்டு வருவதால் சீசரின் நடவடிக்கையில் வெறுப்புற்றவர்கள் ரோமப் பேரரசுக்கு எதிராக கலகத்தை உருவாக்கி செனட் சபையில் கொல்லப்படுகிறான். ரோமப் பேரரசு இரண்டாக உடைகிறது.

கிழக்குப்பகுதியின் ஆட்சியை மாவீரன் மார்க் ஆண்டனி பிடித்து ஆட்சி செய்தான். ஆண்டனி ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக ரோமப் பேரரசின் இந்நிலைக்கு காரணமான எகிப்து ராணி கிளியோபாட்ராவை குறி வைக்கிறான்.

ரோமப் பேரரசுக்கு எதிராக கலகம் விளைவிப்பவர்களுக்கு எகிப்தில் அடைக்கலம் கொடுப்பதாக குற்றம் சாட்டி அதைப் பற்றிய விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்று ஓலை அனுப்புகிறான்.
தகவல் அறிந்த கிளியோபாட்ரா மதிநுட்பத்துடன் ஒரு முடிவிற்கு வருகிறாள்.

வலிமை மிகுந்த ரோமப் பேரரசை எதிர்த்து வெற்றி பெற முடியாமல் போனால் எகிப்தின் ஆளும் உரிமையை இழக்க நேரிடும்.எனவே யுத்தத்தைத் தவிர்த்து தன் பேரழகால் ஆண்டனியை வழிக்கொணர திட்டமிட்டு அதற்கான ஆயத்தத்தோடு ஒரு நதிக்கரையில் ஆண்டனியை சந்தித்து ஒரு மோகனப்புன்னகையைப் பரிசாகத் தந்தாள்.

மாவீரன் சீசரையே வீழ்த்திய அந்த மந்திரப் புன்ன்னகை ஆண்டனியையும் கிளியோபாட்ராவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இருவரின் காதல் பரிசாக இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைகளின் தந்தை தான் தான் என்று பிரகடனப் படுத்தினான். ஆண்டனிக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடைபெற்று இருந்தாலும் கிளியோபாட்ராவே தன்னுடைய உண்மையான மனைவி என்றதால் இது சீசரின் உறவினன் முதல் மனைவியின் உறவினனுமான ஆக்டோவியான் இதில் கோபமுற்று இதற்கு காரணமான கிளியோபாட்ராவை ஒழித்துக் கட்ட எகிப்து மீது படையெடுத்தான்.

கிளியோபாட்ராவிற்கு துணையாக ஆண்டனியும் யுத்தத்தில் பங்கேற்றான்.
ஓர் ஆண்டு நீடித்த போரின் முடிவில் ஆக்டோவியான் கை ஓங்கியது. மாவீரன் ஆண்டனி சரணடைந்தான். கிளியோபாட்ரா தப்பித்து ஒரு ரகசிய குகையில் தஞ்சம் அடைந்தாள்.

இந்நிலையில் போரின் யுக்தி சந்தடி இன்றி வதந்திகளை ஆக்டோவியான் பரப்பினான். கிளியோபாட்ரா இறந்து விட்டாள் என்று. இதை உண்மை என்று நம்பி கிளியோபாட்ராவின் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக ஆண்டனி தன் உடைவாளை எடுத்து தன்னைத் தானே மாய்த்துக்கொண்டான். காத்திருந்த கிளியோபாட்ராவும் இனி உயிர் வாழ வேண்டிய அவசியம் இல்லை என்று விஷம் கொண்ட பாம்பைக் கொண்டு வந்து தீண்டச் செய்து அந்த அழகு பதுமையும் உயிர் நீத்தாள்.

உலகப் பேரழகியான கிளியோபாட்ரா தன் உயிரினும் மேலாக தன் தாய்நாடான எகிப்தை மிக மிக நேசித்தாள்.

அவள் தனது பேரழகை ஆயுதமாக ஆக்கி தன் நாட்டுரிமையை நிலை நிறுத்துவதற்கு கேடயமாக பயன்படுத்தினாள். பருவ மாற்றங்களால் உருவ மாற்றம் அடையாத சாகசங்கள் நிறைந்த கிளியோபாட்ராவின் வாழ்க்கை, அவளின் 39ஆவது வயதில் முடிந்தது.

படித்ததைப் பகிர்ந்தேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமை டியர்... இவ்வளவு நிகழ்வுகளா அவளுக்கு பின்னால்
 

sindu

Well-Known Member
One correction
Julius Caesar was the first kid to deliver through Caesarian method.... so that name

It’s not cleopatra caesar’s mother is the first woman to deliver through this method
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top