கிரிஸ்பி பொட்டேடோ பன்

Advertisement

Bhuvana

Well-Known Member
#கிரிஸ்பி_பொட்டேடோ_பன்

#தேவையான_பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
அரிசி மாவு - 1/4 கப்
குடமிளகாய் - 1
வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
மொசரெல்லா சீஸ் - 100 கி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

#செய்முறை:

உருளைக்கிழங்கை குழைய வேகவைத்து துண்டு விடாமல் மசித்து கொள்ளவும்.

இதனுடன் ஒரு கைப்பிடி துருவிய சீஸ், பொடியாக நறுக்கிய குடமிளகாய், வெங்காயம், மிளகாய் தூள், அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இந்த மாவை உருண்டைகளாக எடுத்து தட்டி நடுவில் கொஞ்சம் சீஸ் வைத்து திரும்ப உருட்டி வட்டமாக தட்டி சூடான கடாயில் தாராளமாக எண்ணெய் விட்டு ஒரு பக்கம் முருக வேகவிட்டு திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

தக்காளி சாஸ் அல்லது மையோனீஸ் உடன் சேர்த்து சாப்பிட சுவையான கிரிஸ்பி பொட்டேடோ பன் ரெடி.

#குறிப்பு : மொசரெல்லா சீஸ் இல்லை என்றால் கிடைக்கும் ஏதாவது சீஸ் உபயோகிக்கலாம்.
 

Attachments

  • 20210524_214534.jpg
    20210524_214534.jpg
    1.6 MB · Views: 7

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top