காற்றோடு பேசவா கொடியே-1

Advertisement

Ritika

New Member
ஹாய் பிரெண்ட்ஸ்

இது என் முதல் கதை.படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் அதுதான் எனக்கு மேலும் எழுத ஊக்கமளிக்கும்

"கதிரு!...கதிரு..!"என்று மகனை அழைத்த சிவகாமி பதிலில்லாமல் போகவும்,

"அடேய்...கதிரு!இப்ப எந்திரிச்சு வரியா இல்ல விறகு கட்டையோட வரட்டுமா"என்று சத்தத்திற்கும் அவன் அசைந்தான் இல்லை.பொறுமை காற்றில் பறக்க வெளியே வந்தவர் கயிற்றுக் கட்டிலில் தலையணையை கட்டிப் பிடித்தபடி படுத்திருந்தவனின் முதுகில் ஒன்று பட்டென போட்டு,

"டேய் வெளங்காதவனே! இன்னிக்கி ப்ரிசிடெண்ட் ஐயா வீட்ல கரெண்ட் சரி பண்ணனும்னு சொன்னியே மணி இப்பவே எட்டாச்சு எந்திரிச்சு கிளம்பாம இன்னும் என்ன தூக்கம்?"என்று மேலும் அவன் முதுகில் இரண்டு போட,

"ம்ப்ச் அல்வா! இன்னும் கொஞ்ச நேரம் மாமனை தூங்க விடுடி!"என்று சிணுங்க (பொண்ணுங்க மட்டும் தான் சிணுங்கனுமா என்ன)அவன் பேச்சில் தலையில் அடித்துக் கொண்டவர்,

"டேய் நா உன் அம்மடா!அல்வாவும் இல்ல மைசூருபாக்கும் இல்ல...ஐயோ இவன் அங்கபோருக்கு அளவில்லாம போகுதே...அடேய் மணியாச்சி எந்திரிடா நா தவமிருந்து பெத்த மகனே!"என்று அங்கே காலுக்கு என்று இரவில் வைத்து பாதி இரவில் எங்கோ சென்று விழுந்திருந்த தலையணையை எடுத்து வந்து அவனை அடிக்க,

"ஷ் அல்வா!புருஷனை இப்படியெல்லாம் அடிக்கக் கூடாது செல்லம்!ஆசையா ஒரு இச் கொடுத்து பதமா எழுப்பனும் தெரியுதா...ம் எங்க குடு...ம் குடு"என்று மேலும் உளற தாங்க மாட்டாமல் ஒரு வாளி நீரை எடுத்து வந்து அவன் மேல் அவர் கொட்ட,

"ஆ.....ஏய் அல்வா எதுக்குடி என் மேல தண்ணிய ஊத்தின?"என்றவாறு முகத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவன் அங்கே இடுப்பில் கை வைத்தபடி காளி போல நின்ற தன் தாயைக் கண்டு,

"ஹி ஹி எம்மா நானே போய் கிணத்துல சேந்து குளிச்சிருப்பேனே நீ ஏன் இந்த வயசுல கஷ்டப்பட்டு என்னை குளிப்பாட்டுற?"என்று அசடு வழிந்தவன் அவர் முறைப்பு அதிகமாகவும் நில்லாமல் ஓடிவிட்டான்.

கதிர் என்ற கதிர்வேலன் சிவகாமியின் ஒற்றை மகன்.சிறிதளவு நிலம் தோட்டம் என்று இருந்த விவசாயி மாணிக்கத்தை மணந்து கதிர் பிறந்து அவனுக்கு இரண்டு வயதானப் போது விஷ காய்ச்சலில் மாணிக்கம் இறக்க தனித்து நின்று கணவர் விட்டுப் போன நிலத்தில் பாடுப்பட்டு மகனை வளர்த்து ஆளாக்கினார் அவர்.மகன் படித்து பெரிய ஆபிஸராக வேண்டும் என்று அவர் கனவு காண கதிருக்கு படிப்பு தலையில் ஏறாமல் தத்திக்குத்தி பத்தாம் வகுப்போடு படிப்பிற்கு மங்களம் பாடிவிட்டான்.

படிப்பு வராவிட்டாலும் மின்சார வேலைகளை அனாயாசமாக செய்வான் கதிர்.பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் எலக்ட்ரீஷியனை அழைப்பதை விட அதை காட்டிலும் நன்றாக செய்யும் கதிரின் நேர்த்தியான வேலை பிடித்துவிட அவனின் கிராமமான சோலையூர் மட்டுமல்லாது சுத்துபட்டு ஐந்தாறு கிராமங்களுக்கும் கதிர் தான் கரெண்ட் மேன்.

அன்றும் ப்ரசிடெண்ட் வீட்டில் கரெண்ட் வேலை இருந்ததால் அவனே தான் முன்தினம் தாயிடம் மறுநாள் தன்னை சீக்கிரம் எழுப்புமாறு கூறியது.ஆனால் பாதி இரவு வரை தன் அல்வாவை பற்றி கற்பனையிலும் மீதி உறக்கத்தில் கனவிலும் திளைக்க அவன் உறக்கம் நீங்க வெகுநேரம் ஆகிவிட்டது.

அவன் தயாராகி வந்தப் போது சிவகாமி எதிரே திருதிருவென விழித்தபடி நின்ற அவன் உயிர் தோழன் திவாகரனை கண்டு உள்ளுக்குள் சிரித்தவன் அதை வெளிக்காட்டாமல் சிறிது விரைப்பாகவே

"என்னடா இவ்ளோ லேட்டு!ஒன்பது மணிக்கு அங்கே இருக்கனும்னு சொன்னேனா இல்லியா!இப்பவே ஒன்பத்துவரை நட நட இன்னும் மசமசன்னு நின்னுக்கிட்டு"என்று அவனை இழுத்துச் செல்ல,

"இன்னும் எத்தனை நாளு தப்பிப்பன்னு நானும் பாக்கறேன்டா மகனே!"என்றார் சிவகாமி மகனை அறிந்த அன்னையாக.

பைக் ப்ரசிடெண்ட் வீட்டை நோக்கி பறக்க நண்பனின் தோளில் தட்டி,

"நல்லவேளை சரியான நேரத்துக்கு வந்து என்னைய காப்பாத்திட்டடா!அம்மா அது யார் அல்வான்னு உருட்டி மிரட்டி கேட்டதும் எனக்கு பயத்துல காலைல தின்ன இருபது இட்லியும் செரிச்சுப் போச்சுடா கதிரா!...ஆமா நீ எதுக்குடா இன்னுமும் வெயிட் பண்ற?உன் விருப்பத்தை தங்கச்சிக்கிட்ட சொல்லிட வேண்டியது தானே?"

"அவளை பார்க்கும் போதெல்லாம் சொல்லிடனும்தான்டா நினைக்கிறேன் ஆனா அவ அழகு படிப்பு வேலைன்னு வரிசைகட்டி நின்னு என் வாயை கட்டிப் போட்ருது! அவளுக்கு நா எந்த விதத்திலையும் தகுதியானவன் கிடையாதுடா திவா!என் ஆசை முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்பட்ட மாதிரிதான்"என்று கதிர் வருத்தத்தோடு கூற அவன் தோளில் பட்டென அடித்த திவா,

"வாயை கழுவுடா முதல்ல!உன் தகுதிக்கு என்னடா குறைச்சலு படிப்பு கொஞ்சம் மட்டு அதனால என்ன உன் வேலைல இந்த சுத்துபட்டுல உன்னை அடிச்சுக்க வேற ஆளே கிடையாதேடா!அழகுல மட்டும் என்ன மாநிறந்தான்டா ஆம்பிளைக்கு அழகு!ஒரு பொண்ணை கண்கலங்காம வச்சு காப்பாத்தற அளவு நல்ல குணமும் உனக்கு இருக்கும் போது தகுதி அது இதுன்னு வேண்டாததை எல்லாம் போட்டு குழப்பிக்கிட்டு அதுகிட்ட சொல்லாம டயத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க நீ இன்னுமும் இப்படியே பண்ணேன்னு வச்சுக்க காத்திருந்தவன் பொண்டாட்டி கதையாகிடும் உசுரா பொழக்கிற வழியை பாரு முதல்ல"என்று நண்பனாக திவா அறிவுரை கூற அதுவும் சரிதான் என்று யோசித்த கதிர் விரைவில் அவளிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

கதிர் இவ்வளவு உருகும் அந்த அல்வா யார் என்று பார்க்கலாம் வாருங்கள்!

சோலையூரின் எல்லையில் வயல் வெளியின் நடுவே சின்னஞ்சிறிய ஓட்டு வீட்டின் பின்புறத்தில் இருந்த மாட்டுக் கொட்டகையில் சேலையை வாகாக தூக்கி சொருகிக் கொண்டு கையில் வைத்திருந்த பாத்திரத்தில் நுரை ததும்பும் பாலை கறந்துக் கொண்டிருந்தாள் அல்வா மன்னிக்கவும் எழிலரசி.பெயரை போலவே எழிலின் அரசிதான் அவள்.

தான் படித்தவள் வங்கியில் வேலை என்று மிதப்பாக இராமல் ஓய்வு நேரம் முழுவதும் வீட்டு வேலை செய்வது, சொற்ப அளவில் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் உழைப்பு என்று ஒரு நிமிடம் கூட அவள் வீணாக கழிப்பதே இல்லை.அதனால் தானோ என்னவோ அவள் சிற்பி கைபடாமலே சிற்பமாக மிளிர்ந்தாள்.

கை அதன் வேலையை செய்ய அவளின் தேன்மதுர குரலில்,

"உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே"

என்று பாட எப்போதும் போல அவளின் தாய் கனகமும் தந்தை மணிவாசகம் தங்கை வடிவரசி மூவரும் அதன் இனிமையில் மெய்மறந்து நின்றனர்.

முடிந்தவரை அன்னைக்கு உதவியவள் மதியத்திற்கு கனகம் கொடுத்த உணவை எடுத்துக் கொண்டு அவள் கிளம்பிய போது கனகம் தயங்கிக் கொண்டு நிற்பதைக் கண்டவள்,

"என்னமா ஏதாச்சும் வாங்கிட்டு வரனுமா? லிஸ்ட் எழுதி வச்சிருக்கீங்களா?"என்று கேட்க,

"இல்ல எழில்ம்மா!...அது..."என்று அவர் மேலும் தயங்க,

"என்னம்மா சீக்கிரம் சொல்லுங்க பேங்க்குக்கு லேட்டாச்சு"என்று அவள் சிறிது அழுத்திக் கேட்க,

"அது சாயங்காலம் கடம்பூர்காரங்க உன்னை பொண்ணு பாக்க வரதா சொல்லியிருக்காங்க அதனால கொஞ்சம் சீக்கிரம் வரியா"

பெண் பார்க்க என்ற சொல் அவள் முகத்தை கறுக்க வைத்தது.அவளின் இருபதாவது வயதில் ஆரம்பித்தது பெண் பார்க்கும் படலம்.சிலர் வந்து பார்த்து பின் வேண்டாம் என்று நிராகரிக்க சிலர் போனிலேயே வேண்டாம் என்று கூற எழிலின் ஜாதகத்தில் ஏதோ தோஷம் அதனால்தான் வரன் அமையவில்லை என்று ஊரில் கதை பரவி விட்டது.சில காலத்தில் திருமணம் என்பதே வெறுத்து விட்டது அவளுக்கு.ஆனால் பெற்றோர் மனம் மகள் வாழ்வை மலர செய்யாமல் நிம்மதியாக இருக்குமா? அவர்கள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்தனர்.

மனமேயில்லாமல் தாயிடம் சரியென தலையசைத்தவள் பேருந்து நிலையத்திற்கு விரைந்தாள்.டவுனில் இருக்கும் அரசு வங்கியில் தான் அவள் கணக்காளராக பணியாற்றிக் கொண்டிருந்தாள்.அவளின் வருமானத்தில் அவள் குடும்பம் ஓரளவிற்கு நிமிர்ந்தது என்றே கூற வேண்டும்.

எழில் பத்தாம் வகுப்பில் இருந்தப் போது ஒருநாள் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த மணிவாசகம் திடிரென மயங்கி விழ பதறியபடி மருத்துவமனையில் சேர்த்தனர்.ஸ்ட்ரோக் என்று கூறிய மருத்துவர்கள் மிகவும் போராடி தான் அவரை மீட்டனர்.அதில் குருவி போல அவர்கள் சேர்த்த கையிருப்பு கரைந்தேப் போனது.அதன் பின் மணிவாசகத்தால் அதிகப்படியான வேலைகளை செய்ய முடியவில்லை.முடியவில்லை என்பதை விட அவரின் குடும்பம் அவரை செய்ய விடவில்லை.

நல்லவேளையாக எழில் வடிவு இருவருக்குமே உதவித்தொகை இருந்ததால் அவர்கள் படிப்பு தடைபெறாமல் தொடர்ந்தது.படித்து முடித்து வேலையில் சேர்ந்ததும் குடும்ப பொறுப்பை தனதாக்கிக் கொண்டாள் அவள்.தான் தன் கனவு ஆசைகள் அனைத்தையும் மனதின் ஆழத்தில் புதைத்தவள் குடும்ப நலன் மட்டுமே தன் லட்சியமாக்கிக் கொண்டாள்.

வங்கியில் அவள் நுழைந்தப் போது அவளோடு வேலைப் பார்க்கும் மாலினி மட்டும் தான் வந்திருந்தாள்.எழிலை கண்டதும் நட்போடு அவள் புன்னகைக்க இவளும் அதை திருப்பிக் கொடுத்தாள்.இருவரும் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு தங்கள் வேலையைத் தொடங்க சிறிது நேரத்திலேயே மீதி ஊழியர்களும் வந்துவிட வங்கி பரபரப்பானது.பத்து மணி அளவில் உள்ளே நுழைந்த மேனேஜர் கண்ணபிரானுக்கு அனைவரும் காலை வணக்கம் கூற அதை தலையசைத்து ஏற்றவன் எழிலின் மேசையை தாண்டுமுன்பு மட்டும் இரண்டொரு நொடி அதிகமாகவே அவளை கண்ணால் விழுங்கிவிட்டே விலகினான்.

சில நாட்களாக அவன் பார்வையின் மாற்றத்தை எழிலும் அறிந்துதான் இருந்தாள்.நட்பு என்பதை தாண்டி வேறு கதை கூறியது அவன் நடத்தை.என்று உடைத்து தன் விருப்பத்தை கூறிவிடுவானோ என்று மனதுள் நடுங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

ஒவ்வொருவரும் ஒன்றை நினைக்க விதி ஒரு ஆட்டத்தை ஆட காத்திருக்க எழிலரசியின் வாழ்வு செல்லப் போகும் பாதைதான் எது?
 
Nirmala senthilkumar

Well-Known Member

Nirmala vandhachu
Best wishes for your first story ma
All the best ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top