காற்றோடு பேசவா கொடியே-டீசர்

Advertisement

Ritika

New Member
'காற்றோடு பேசவா கொடியே'சின்ன டீசர் பிரண்ட்ஸ் படிச்சிட்டு சொல்லுங்க ♥️

தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து தன் சின்னஞ்சிறிய கைபேசியை அழுத்தியவள் அது உயிரில்லாமல் இருப்பதை அறிந்து சே என்று தவிப்போடு சுற்றும்முற்றும் பார்க்க அங்கே அவளுக்கு உதவி செய்ய கடவுளே அனுப்பியதுப் போல பொது தொலைபேசியை காண அங்கே விரைந்தாள்.

கார்ட்டில் இருந்த நம்பரை அழுத்தப் போனவள் தயங்கியது ஒரிரு கணம் தான் பின் மனதை திடப்படுத்திக் கொண்டு நம்பரை அழுத்தி மறுபுறம் எடுக்கப்பட வேண்டுமே என்று படபடத்த மனதோடு காத்திருந்தாள்.

எப்போதுமே இரவு படுத்து சில நிமிடங்களிலேயே உறங்கி விடுபவனுக்கு அன்று ஏனோ உறக்கம் அருகிலும் நெருங்கவில்லை.அவனின் கடின உழைப்பு ஆழ்நித்திரை ஃபார்முலா கூட அன்று வேலை செய்யாமல் போக சலித்தபடி எழுந்து சென்று பால்கனியில் நின்றான்.இரவு மணி பதினொன்றை ஆகியும் கூட அவன் குடியிருப்பு இருந்த அந்த வீதி மக்கள் நடமாட்டத்துடனே இருந்தது.இலக்கற்று வெறுத்திருந்தவன் காதுகளில் அவன் தொலைபேசி அழைப்பு கிணற்றிலிருந்து ஒலிப்பதுப் போல் கேட்க அது எடுக்க வேண்டும் என்று அறிவுக் கூறினாலும் மந்தமான உடல் நகர விடாமல் செய்தது.

மணி அடிப்பது நிற்க மீண்டும் தன்னிலேயே அவன் மூழ்கிய போது மீண்டும் அவனுக்கு தொல்லைக் கொடுத்தது தொலைபேசி.

"யார் இந்த நேரத்துல?...திவாவா இருக்குமோ?"என்று முணுமுணுத்தபடி சென்று அழைப்பை ஏற்று,

"ஹலோ!"என்றான்.

முதல் முறை அழைப்பு எடுக்கப்படாமல் போக பயந்துப் போனாள் அவள்.ஒருவேளை அவனுக்கு உடல்நலம் சரியில்லையோ இல்லை அவன் ஊரிலேயே இல்லையோ? என்று ஏதேதோ எண்ணி கலங்கியது அவள் உள்ளம்.அவனுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று முதலில் நினைத்தவளுக்கு இப்போது அவன் தனக்காக வர வேண்டுமே என்று எதிர்பார்க்க தன் மனமே தனக்கு புரியாமல் விழித்தாள் அவள்.

இரண்டாம் முறை போன் எடுக்கப்பட்டு அவனின் ஹலோ என்ற கம்பீரமான குரல் கேட்க அளப்பறிய நிம்மதி உணர்வில் கண்ணீர் வழிய,

"க..கதிர்...நான்..."என்று அவள் கேவலில்,

"அல்...எழில்...என்ன விஷயம்?ஏன் அழற?ப்ளீஸ் சொல்லு எழில்? அதெல்லாம் வேண்டாம் நான் இப்பவே கிளம்பி வரேன்"என்று அவன் படபடக்க,

"இல்ல...அங்க இல்ல.. நான்...அந்த பார்க்...பக்கத்துல டெலிபோன் பூத்...கிட்ட இருக்கேன்... கொஞ்சம்...வர..முடியு"என்று அவள் முடிக்கும் முன்பு,

"நான் பதினைந்து நிமிஷத்துல அங்கே இருப்பேன்...நீ பயப்படாதே எழில் அங்கேயே இரு...இதோ வரேன்"என்று பேசியபடியே கார் சாவியை எடுத்தவன் பத்தே நிமிடத்தில் அந்த இடத்தை அடைந்துவிட்டான்.அவன் அருகே நெருங்கி,

"எழில்..!"எனவும்,

"க..திர்..."என்றவள் அவன் மேலேயே மயங்கி சரிந்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top