காயத்திரி மந்திரம்

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் (3.62.10) உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிரார்த்தனையாக உள்ளது. காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் - "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: - பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். - உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. - ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. - காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: - யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் - நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர். - பகவத் கீதையில் கிருஷ்ணனும் வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்று பெருமைப்படுத்தியுள்ளார். - இதை ஜெபிப்பவர்கள் அதிகமான பிராணசக்தியைப் பெற்று ஆயுள் விருத்தி அடைவர் என்கிறது வேதம். இதைச் சொல்வது மட்டுமல்ல, கேட்பதும் அநேக பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். - தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும் .மனதுக்குள் சக்திகள் பெருகவும், வைராக்கியம் அதிகரிக்கவும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் உரிய பலன் கிடைக்கும்.ஆபத் து காலங்களிலும் வரவிருக்கும் ஆபத்துகளையும் தடுக்கும் வல்லமை காயத்ரி மந்திரத்துக்கு உண்டு. -
 

Sumathi Thirumurugan

Active Member
அருமையான பதிவு
விளக்கம் இப்போது தான் கேள்வி படுகிறேன் இதுபோல் நிறைய பதிவுவிடுங்கள் தெரிந்து கொள்கிறோம்
 

Srd. Rathi

Well-Known Member
மந்திரத்தை பற்றிய விளக்கம் ரொம்ப அருமையா, தெளிவா புரிந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top