*காமராஜர் பிறந்த நாள்*

Advertisement

Manimegalai

Well-Known Member
செம
மிகச்சிறந்த கவிதை
கண்ணில் நீர் ததும்புகிறது...
பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பச்சி :love:
 

Satvina

Well-Known Member
Thank you for sharing Kavipritha . Your thoughts are as beautiful as your stories. No one can forget perunthalaivar Kamarajar . There is only one Kamarajar and he is irreplaceable
 

Chr1991

New Member
Super...... Ipadium oru manithara???? Ippo ulla arasiyalvathikalai parthal enna sollane theriyala.... Sterday two times avar movie pathen..... Apdiye pullarikuthu...... Movie la pathe ipdina real ah avar epdi patavara irunthuruparu.......
 

jayanthi balakrishnan

Well-Known Member
oru forwarded message........

*காமராஜர் பிறந்த நாள்*

ஒரு திரு நாளை...

ஒரு மதத்தினர்...
ராம் நவமி என கொண்டாடுவர்..

ஒரு மதத்தினர்...
மீலாது நபி என கொண்டாடுவர்...

ஒரு மதத்தினர்...
கிறிஸ்துமஸ் என கொண்டாடுவர்...

ஒரு மதத்தினர்...
புத்த பூர்ணிமா என கொண்டாடுவர்...

ஆனால்..
அனைத்து மதத்தினரும்...
இணைந்து கொண்டாட. ..
ஒரு நாள் உண்டு.

*அதுதான் ஜூலை 15...*
*காமராஜர் பிறந்த நாள்..*

விருது பட்டியில் கருவானவன்...

நாட்டிற்கே குருவானவன்..

பதிமூன்று வரை வாழ்ந்தான்...
தாய்க்காக.....

இறுதி வரை வாழ்ந்தான்...
தாய் நாட்டிற்காக...

ஒன்பது வருடங்கள் முதல்வர்...

ஒன்பது வருடங்கள் சிறை...

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை...
புனிதமானது....
இந்த புனிதனால்..

ஆறு படித்தவனிடம்...
அறிவுரைகள் கேட்டிட...
அணி வகுத்து நின்றன...
ஐபிஎஸ் களும்...ஐ ஏ எஸ்களும்...

வேட்டி சட்டைக்கு முன்னால்...
கோட்டும்...சூட்டும் கூட..
குனிந்து நின்றன...

கணக்கில் இவன் புலி இல்லை..
ஆனால். ..
இவனிடம் கணக்கு போட...
புலிகள் கூட அஞ்சி நின்றன..

மக்கள் குறை கேட்பதில்...
இனிய தென்றல் இவன்...

ஆனால்...

*பிழை எவனும் செய்திடின்...*
எரிமலை இவனிடம் தோற்றுவிடும்...
சுனாமி கூட இவனுக்கு அஞ்சிடும்...

கோட்டையில் அமர்ந்திருப்பான்...
ஆனால்...
பட்டி தொட்டி நினைத்திருப்பான்..

சென்னையில் அமர்ந்திருந்தாலும்...
தமிழகத்தின்...
மூலை முடுக்கெல்லாம் அறிந்தவன்...

இலவச கல்வி...

இலவச மதிய உணவு. ..

இலவச புத்தகம்...என

ஏழைகளின் சுமைகளை...
சுமந்தவன் இவன்...

கல்வி என்ற கனி...
*ஏழைகளுக்கு எட்டாத கனி என்பதை...*
திருத்தம் செய்து....
எழுதியவன் இவன்...

வறண்ட வயிற்றையும்...
வறண்ட மூளையையும். ..
நிரப்பிய இவன்...
வறண்ட நிலங்களுக்கும்...
பச்சை ஆடை உடுத்தி...
அழகு பார்த்திட்ட...
*பச்சை தமிழன் இவன்*...

விவசாயம். .கல்வி இலா நாடு..
*ஒருபோதும் முன்னேறாது என்றவன்...*

*அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி...*
பிரதமருக்கு இணையான பதவி...

பிரதமர் இருக்கைக்கு...
விரல் காட்டிய பதவி...

ஆம்...பிரதமருக்கு மேலே...
வலம் வந்தவன்...
எமது பெருந்தலைவன்...

ஐயனே...
நீ முதல்வர் கோட்டையில்...
தொழிலதிபர் வரிசையை...
பார்த்து கொண்டிருக்க...
உனை பெற்ற தாயோ..
தண்ணீர் பிடிக்க...
தெருக்குழாயில்...
வரிசையில் நின்று கொண்டிருந்தாளாம்...

நீயோ...சென்னையில்..
ஆட்சி கட்டிலில்...
உனை பெற்ற தாயோ...
விருது பட்டி முற்றத்தில்...
நார் கட்டிலில்...
வந்த அயல் நாட்டினர்..
உன் தாயிடமே கேட்டனர்...
முதல்வர் இல்லம் எதுவென்று...
முதல்வரின் தாய் யாரென்று...

அன்றைய அரசியல்வாதியான. ..
உன்னையும் பார்க்கிறேன் ...

இன்றைய அரசியல்வாதிகளையும் பார்க்கின்றேன்...

இரண்டையும் எடை போடுகிறேன்...

கண்களில் நீர் ததும்புகிறது...

எப்படிப்பட்ட மனிதன் நீ...

எப்படிப்பட்ட புனிதன் நீ...

ஐயனே....

நீ பிறந்த நாளில்..
உனை நினைக்கிறேன்...

நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்...
மீண்டும் வருவாயா...
என துடிக்கிறேன்...

ஐயனே....
நீ தந்த இலவச உணவு...
இன்றும்...என்னில்...
இரத்தமாய் ஓடுகிறது..

நீ தந்த..
இலவச கல்விதான்...
இன்றும்...
உனை கவி பாடுகிறது...

அப்பச்சியே...

உனது புகழ் பாடிட....
ஓடிக்கொண்டே இருப்பேன்...
*எனது கால்கள் அசையும் வரை...*

எழுதி கொண்டே இருப்பேன்...

*எனது இறுதி உயிர் துடிப்பு வரை*
Whatever facilities our state has today is only bcoz of kamaraj sir.pioneer statesman who forwarded our state to first place in all aspects which other states also follow today.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top