கானலாகி போனாயோ காதலே?!!6(b)

#1

அத்தியாயம்-6(b)மிரு கிளம்பியவுடன் வீட்டிற்குள் வந்த ஹாசி தந்தை தனியாக தோட்டத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்து அவர் அருகில் சென்றாள். “என்னப்பா, இங்க தனியா உட்கார்ந்து இருக்கீங்க, அம்மா எங்க?, என்று கேட்க. அவரோ, சிறு முறுவலுடன் மகளை பார்த்தவர் “கோவிலுக்கு போய் இருக்காமா, போ நீ போய் பிரெஸ் ஆகிட்டுவா, ‘அப்பா’ உனக்கு ‘டீ’ போட்டு எடுத்து வறேன்” என்று சொல்ல,தந்தை ‘டீ’ போட்டு தருவது அடிகடி நடக்கும் விஷயம் என்பதால், அவளும் தந்தையிடம் சம்மதமாக தலையாட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.தன் அறைக்கு சென்றவளுக்கு அப்போதுதான் ‘நினைவு வந்தது தந்தையிடம் தான் பேச நினைத்த விஷயம் “தந்தையிடம் இன்று இந்த விஷயத்தைப்பற்றி பேசயே ஆக வேண்டும்” என்று முடிவெடுத்து கொண்டு வேகமாக தன்னை ‘ரெப்ரஷ்’ செய்து கொண்டு தந்தையை தேடி சென்றாள்.

“என் ஹாசிகுட்டிக்கான சூடன டீ ” என்ற தந்தையின் குரலில், அவரை பார்த்து சிரித்தவள் தந்தையிடம் பேச வந்த விஷயத்தை, எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்தாள்.

மகளின் யோசனையான முகத்தை பார்த்த சேகர், “என்னடா அம்மு, பலத்த யோசனை” என்று கேட்டார்.தந்தையிடம் எப்படியும் கேட்டுதான் ஆகவேண்டும்.கேட்போம், என்ற முடிவிற்கு வந்தவள்.தந்தையை பார்த்து கொண்டே “அப்பா நான் யாரையாவது காதலித்தால் என்ன செய்வீங்க” என்றாள் .மகளின் கேள்வியில் திகைத்தவர், அவளை ஒரு நொடி மவுனமாக பார்த்துவிட்டு “நீ விரும்பும் பையன், நல்ல பையன் என்றால், நானே இருவருக்கும் திருமணம் முடித்து வைப்பேன்” என்றார்.’இல்லப்பா அது......... வந்து....... என்று தடுமாறி பின் ஒரு வாறு தன்னை சமாளித்து கொண்டு “உங்களையும் என்னையும் அவன் பிரிச்சிட்டா என்ன செய்வீங்க” என்று புதிர் போல் கேட்டாள் .மகளின் கேள்வியில் ஏதோ உள் குத்து, இருக்கிறது,என்பதை உணர்ந்த சேகர் “என்ன சொல்ல வேண்டும் என்றாலும் நேராக சொல்லுமா,எதுக்கு சுத்தி வளைச்சு பேசற” என்று கேட்டார்.

தந்தை தன்னை கண்டு கொண்டார் என்று உணர்ந்த, ஹாசியும் “அப்பா அம்மா பாவம்ப்பா, அவங்க நம்மக்கூட சந்தோஷமா இருந்தாலும், அவங்களோட அம்மா,அப்பாவ ரொம்ப மிஸ் செய்றாங்கப்பா.அவங்கள பார்க்கும் போதே தெரியுது அவங்க ஏக்கம்.அவங்க கண்ணில் அவங்க குடம்பத்திர்கான ஏக்கம் தெரியுதுப்பா.நீங்க உங்க பிடிவாதத்தவிட்டு அம்மாவ பாட்டி,தாத்தாவை பார்க்க கூட்டிட்டு போகலாமே” என்று ஒரு வழியாக சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள்.

சேகர் மகளை வாஞ்சையாக பார்த்தவர், “நீ இப்போ பிரீயாமா,” என்று கேட்டார்.அவளும் தந்தையின் கேள்வி ‘ஏன்’ என்று புரியாவிட்டாலும் ‘ஆமாம்’ என்று தலையாட்டி இருந்தாள். அவள் அருகில் சேரை தள்ளி போட்டு அமர்ந்தவர்.நான் ஒரு கதை சொல்றேன் அதுல உனக்கு என்ன புரியுதுனு சொல்லு சரியா என்று கேட்க இவளும் கிளிப்பிள்ளையாய் தலையசைத்தாள்.

“சின்ன வயசுல நான் என்னோட பாட்டிக்கூட கோவிலுக்கு, ஞான உபதேசம் கேட்க போவேன். அப்படி,ஒரு தடவை போகும் போது ஒரு கதை கேட்டேன். அது, என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு, அந்த கதை கூட இப்ப நான் உன்னோட பாட்டி,தாத்தாவ தேடி போகாததுக்கு, ஒரு காரணம்” என்றார்.மகளின் புரியாத பார்வையை பார்த்து சிரித்தவர் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

“கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு பட்டாபிஷேகம் முடிச்சுட்டு, தன்னோட நாட்டுக்கு போய் வாழ ஆரம்பிச்சார், அப்போ காந்தாரியோட சாபத்தால அவரோடு நாடு நீர்ல மூழ்கி போகுது.அங்கிருந்து வந்தவர் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் அவருடன் இருந்தவர்களுக்கு பிரித்து கொடுத்தார். ஆனால் அவரோட தேரோட்டிக்கு மட்டும் எதுவும் கொடுக்கலையேனு அவர தேடி போனார் கிருஷ்ணர். அவரோட தேரோட்டியோ, ஒரு ஆற்றங்கறையோரத்துல யோசனையா உட்கார்ந்து இருப்பார்.அவர்கிட்ட போன கிருஷ்ணர்,அவரை அழைத்து ‘என்னோடு இருந்த அனைவருக்கும், அவர்கள் கேட்டதை நான் கொடுத்துவிட்டேன். உனக்கு என்னிடம், என்ன வேண்டும் என்று கேள் என்னால் முடிந்தால் கண்டிப்பாக தருகிறேன்’ என்றாராம்.
தேரோட்டியே கிருஷ்ணர்கிட்ட கோவிச்சுட்டு எதுவும் பேசாம போனாராம். உண்மையான அன்புக்கு அடிமையான கிருஷ்ணரும் அவர் பின்னோடு சென்று மீண்டும் கேட்க, அவரை பார்த்த தேரோட்டி எனக்கு பொன்,பொருள் எதுவும் வேண்டாம் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க போதும்னு சொன்னாராம்.அவரோட கோரிக்கை கிருஷ்ணருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும் அதை அவரிடம் காட்டாமல் மறைத்து கொண்டு ‘என்ன கேளவி கேள்’ அப்புடினு சொல்லிட்டு அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டாராம். பரமாத்மா தன் அருகில் உட்காரவும் எழுந்து நின்று கொண்ட தேரோட்டி தனக்குள் இருக்கும் கேள்வியை கேட்க ஆரம்பிச்சாராம்.

என்னோட முதல் கேள்வி தர்மரும்,துரியோதணனும் சூதாட்டம் விளையாடினால், என்ன ஆபத்து நேரும்னு கடவுளா உங்களுக்கு தெரியும்தானே நீங்கள் நினைத்து இருந்தால் அந்த விளையாட்டை நிறுத்தி இருக்கலாம், ஆனால் நிறுத்தவில்லை ‘ஏன்’.’இல்லை’ தருமர் ஒவ்வொரு பொருளாக வைத்து தோற்கும் போதாவது வந்து அவரை ‘நீங்கள் தடுத்திருக்கலாம்’ ,அப்போதும், ‘நீங்கள் வரவில்லை’.நீங்கள் சொன்னால் நிச்சயம் தர்மர் கேட்டிருப்பார்.எல்லாவற்றையும் அவர் பணயம் வைத்து தோற்ற போது கூட வராமல் போனது பாரவாயில்லை, ஆனால் ‘ஒரு பெண்ணை’ பணயமாக வைத்து விளையாடுவது, எவ்வளவு பாவகரமான செயல் அதை தர்மர் செய்ய துணியும் போதாவது, ‘நீங்கள் தடுத்திருக்கலாம்’ அப்போதும் ‘தடுக்கவில்லை’, இறுதியாக பாஞ்சாலியின் உடையில் அந்த துட்சாதணன் கை வைக்க வரும்போதாவது, வந்து தடுத்திருக்கலாம், அப்போதும் நீங்கள் வரவில்லை, இப்படி தேவையான நேரம் எதிலும் வராமல்,பாஞ்சாலியின் உடையை அதிகமாக்க மட்டும் எதற்கு வந்தீர்கள், நீங்கள் மட்டும் ஆரம்பத்திலேயே வந்திருந்தால் இவ்வளவு இழப்புகள் இருந்திருக்காதே என்று கேட்டாராம்.

தேரோட்டியின் கேள்வியில் கிருஷ்ணர் மென் புன்னைகை உதிர்த்து, வலி நிறைந்த குரலில் ,அவருக்கான பதிலை கூற ஆரம்பித்தாராம்.மகனே, தர்மர் என்னை அழைத்த மறு நொடி அவர் அருகில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விளையாடி கொண்டு இருந்த சூதாட்ட மனையின் வாயிலில்தான் நான் காத்திருந்தேன்.ஆனால், அவர் என்னை அழைக்கவில்லை.விளையாட்டின் மீது கொண்ட மோகத்தால் என்னை மறந்துவிட்டார் தர்மர்.

துரியோதணன் எனக்கு பதிலாக, என் ‘மாமன் விளையாடுவார்’ என்று சொல்லும் போது, தர்மரும் அவருக்கு பதிலாக என்னை விளையாட அழைத்திருந்தாள் சென்றிருப்பேன்.ஆனால் என்னை யாரும் ‘நினைக்கவும் இல்லை, அழைக்கவும் இல்லை’, நேரம் ஆக ஆக விளையாட்டின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால்,தர்மர் ‘நாங்கள் விளையாடி முடிக்கும் வரை கிருஷ்ணர் இங்கு வர கூடாது கடவுளே’ என்று வேண்டுதல் வைத்தார். ‘நான் வரகூடாது என்று என்னிடமே வேண்டுதல் வைத்தார் தர்மர்’ அப்படி இருக்கும் போது நான் எப்படி அங்கு செல்வது.அவர்தான் விளையாட்டு ஆர்வத்தில் அழைக்கவில்லை, மற்றவர்களாவது அழைப்பார்கள் என்று அவர்களை பார்த்தேன், அர்ஜூனன்,பீமன்,சகாதேவன்,நகுலன் என்று யாரும் என்னை அழைக்கவில்லை இறுதியாக பாஞ்சாலியை இழுத்துவர சொன்னார்களே அப்போது அவளும் இவ்வளவு பேர் இருக்கும் போது என்ன செய்து விடுவார்கள் என்ற இறுமாப்புடனும் தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற கர்வத்துடனும் அங்குள்ளவர்களிடம் வாதாடினாள்.ஆனால் அங்கிருந்த அனைவரும் கண் இருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாகதான் இருந்தார்கள்.அவர்களுடன் போராடி தோற்று உடையில் கைவைத்த பின்தான் ‘கண்ணா’ என்று என்னை அழைத்தாள். அழைத்த மறு நொடி அவளுக்கு உதவினேன், இதில் ‘என் தவறு என்ன’? என்று கேட்டார்.

தேரோட்டியோ கிருஷ்ணரை பார்த்து அப்போது நல்லவர்களோ ,கெட்டவர்களோ யாராக இருந்தாலும் அவர்களே அழைத்தால்தான் சென்று உதவுவீர்களா, என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணரோ, ‘ஒருவர் அழைக்காமல் நாம் அவர் இடத்திற்கு சென்றால் நமக்கான மரியாதை அங்கு கிடைக்காது’ என்று முடித்துவிட்டார்.

சேகர் முழு கதையை சொன்னவர் “என்னமா, அப்பா போர் அடிச்சுட்டனா” என்று கேட்டார். தந்தை கூறிய கதையில் பிரமித்து அமர்ந்திருந்த ஹாசி ‘இல்லை’ என்னும் விதமாக தலையசைத்தாள்.”இந்த கதைல நான் எந்த கருத்தை சொல்ல வர்றேனு உனக்கு புரியுதாமா” என்று கேட்க மகள் ‘ஆமாம்’ என்று தலையசைக்கவும் சிரித்தவர்.

“நம்மை படைத்தவர்,அனைவருக்கும் ஓடி வந்து உதவுவார்னு சொல்ற ‘கடவுளே’ என்னை, கூப்பிடல நான் போகலனு சொல்லும் போது, சாதாரண மனுஷங்களான நமக்கும் இது பொருந்தும் இல்லையா,கடவுளுக்கே மரியாதை இல்லாத உலகத்தில், உன் அப்பாவுக்கு எப்படி மரியாதை கிடைக்கும். அவர்களாக எப்போது என்னை, நம்மை மதித்து அழைக்கிறார்களோ அப்போது கண்டிப்பா எல்லாரும் உன்னோட அம்மாவ அவளோட அம்மா,அப்பாவ பார்க்க கூட்டி போவோம்,சரியா” என்று கேட்க தந்தையை சரி என்னும் விதமாக தலையாட்டி அணைத்து கொண்டாள் ஹாசி.

சேகரின் வார்த்தைகள் அனைத்தையும் கேவிலில் இருந்து விரைவில் வந்த ஹாசியின் தாயும் கேட்டிருக்க மனதில் தெளிவு பெற்றவராக, ஆமாம் என் கணவனின் மரியாதையும் எனக்கு முக்கியம் என்ற எண்ணம் தோன்றியது. அதன் பலனாக தாய்,தந்தையின் அழைப்பிற்கு காத்திருக்க ஆரம்பித்தார் அந்த மனைவியான மகள்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes