காதல் படகை கரையேற்ற வா - 8

Advertisement

Padmarahavi

Active Member
இரண்டு மணி நேரம் கழித்து தர்னிகாவின் அறைக் கதவு திறந்தது. அவ்வளவு நேரம் தவிப்புடன் அமர்ந்திருந்த உதயன் டக்கென எழுந்து நின்றான். உள்ளே இருந்து வெளியில் வந்த தர்னிகாவின் கண்கள் சிவந்திருந்தது. அவளை அணைக்க வேண்டும் என்ற ஆவலை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான். (என்ன மூடுல இருக்காளோ தெரியலை. அடி எங்க விழப்போகுதோ என்ற பயமே காரணம்)


அடுத்த நொடி தர்னிகா உதயனை இறுக்கி அணைத்திருந்தாள். அந்த இறுக்கம் இனி இமைப்பொழுது கூட என்னை விட்டு நீங்காதே எனக் கூறுவதைப் போல இருந்தது.


அடிப்பாள் என நினைத்தவன், அவள் அணைத்ததும் குழம்பிப் போனான். ஆனால் இந்த நிமிடத்தை கடக்கவும் மனதில்லை. அவள் தலையை வருடிக் கொடுத்தான்.


சில நிமிடங்களுக்குப் பிறகு விலகிய தர்னிகா அவனை ஊடுருவிப் பார்த்தாள் . அதை தாங்க முடியாமல் அவன் கண்களை வேறு புறம் திருப்பி,


தரு! நான் சொல்றதை.. என்று தொடங்கியவனின் வாயை தன் கைகளால் நிறுத்திய தர்னிகா அவனை சோபாவில் அமர வைத்து தானும் அமர்ந்தாள்.


நான் பேசுறேன் உதய். நீ ஏன்டா என் வாழ்க்கையில லேட்டா வந்த. உன் லெட்டர்லா படிச்சதுக்குப் பிறகு எனக்கு இன்னும் கோபம் வந்தது. ஏன் தெரியுமா? எனக்கு கிடைக்க வேண்டிய காதலை முதல்ல மஹதி கிட்ட குடுத்திருக்கியே! எனக்கு அது வேணும் உதய். ஒரு இம்மியளவும் குறையாம அந்த காதல் முழுசா எனக்கு வேணும். இனி உன் இதயத்துல நான் மட்டும் தான் இருக்கனும். அத்தனை காதலும் எனக்கு வேணும் என அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.


கலங்கிய கண்களுடன் அவளை நிமிர்த்திய உதயன், அவள் கண்களை நேராகப் பார்த்து


நானும் அதுக்கு தாண்டி காத்திருக்கேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நினைச்சா இப்பவே உன் கூட வாழ்க்கையை தொடங்கலாம். ஆனா அது எனக்கு வேணாம். உன்னை அணு அணுவா ரசிக்கணும். என் இதயத்துல ஒரு இடம் கூட விடாம நீ நிறையனும். நீ கேட்ட காதலை விட நூறு மடங்கு நான் கூட தரனும். அது வரை நீ காத்திருக்கனும் எனக் கூறி அவள் நெற்றியில் முதன் முதலாக இதழ் பதித்தான்.


அந்த முத்தத்தில் காமம் இல்லை. சுத்தமான அன்பும், அக்கறையும் காதலும் இருந்தது. அவனின் முத்தத்தில் குழந்தையாகிப் போன தர்னிகா அவன் மடியில் தலை வைத்து உறங்கிப் போனாள். வெகு நாட்களுக்குப் பிறகு நிம்மதியான உறக்கம் இருவரையும் ஆட்கொண்டது.


மறுநாள் அழகாய் புலர்ந்தது. கடைக்குச் செல்ல தயாராகிய உதயன் இரண்டு கேரியர்களில் சாப்பாடு கட்டியிருப்பதைப் பார்த்தான்.


ஹேய் யாருக்குடி இன்னொரு சாப்பாடு? அதோட நீ இவ்வளவு சீக்கிரமா சமைக்க மாட்டியே? யூடியூப் பார்த்து பார்த்து சமைக்க ஒன்னு ஆகுமே. கடையில இருக்கிற பையன் தானே சாப்பாடு வாங்க வருவான் வீட்டுக்கு.


பேசி முடிச்சிட்டியா? இன்னொரு சாப்பாடு எனக்கு தான்.


ஏன்? வீட்டுல இருந்துட்டே டிபன் பாக்ஸ்ல சாப்பிட போறியா? புருஷன் எவ்வளவு சாப்பிடுறானோ அவ்வளவு தான் சாப்பிடனும்னு முடிவு பண்ணிட்டியா? மாமன் மேல அவ்வளோ லவ்வா என அவள் அருகில் செல்ல,


அவனை கையால் தள்ளி விட்ட தர்னிகா, ரொம்ப ஆசை தான். இனி நானும் உன் கூட கடைக்கு வரப்போறேன். என்றாள்


நீயா? ஏன்?


ஏன்னா என்ன அர்த்தம். உனக்கு சமைச்சு போடவா நான் M.B.A முடிச்சேன். நிர்வாகத்துல ஒரு கண்ணு வைக்க சொல்லி மாமா சொல்லி விட்டிருக்காரு.


ஒன்னு என்ன இரண்டு கண்ணு மூக்கு காது எல்லாத்தையும் வச்சிக்கோ. எனக்கும் கடையில பொம்மைகளை பாத்து போர் அடிக்குது. கண்ணுக்கு குளிர்ச்சியா உன்னை பாக்குறேன் இனி.


தர்னிகாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. சிரித்து கொண்டே அவள் கையைப் பற்றி புறங்கையில் முத்தமிட்டவன் போகலாமா மேடம் என்று அவளை அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்.


கார் ஒரு சிக்னலில் நிற்க, இடது புறம் இருந்த லேடீஸ் ஹாஸ்டலை பார்த்ததும் அவன் முகம் மாறியது. கவனமாக அதை தவிர்த்து வேறு புறம் பார்த்தான். அதனால் அங்கு நின்று வரவேற்பாளருடன் பேசிக் கொண்டிருந்த அரவிந்த்தை அவன் கவனிக்கவில்லை. தர்னிகாவும் கிர் புறப்படுபோதே அவனை கவனித்தாள். உடனே உதயனிடம் திரும்பி ," உதய் அந்த லேடீஸ் ஹாஸ்டலை பாத்தியா?" எனக் கேட்டாள்.


இவ எதுக்கு இதைப் பத்தி கேக்குறா? என்று நினைத்தவன் பட்டும் படாமல், "இல்லை. நான் பாக்கலை. லேடீஸ் ஹாஸ்டலை பாக்குறது தான் என் வேலையா "என படபடத்தான்.


என்னாயிற்று இவனுக்கு என எண்ணியவாறே," இல்ல உதய்.நாம வெனீஸ்ல ஒருத்தரை பாத்தோமே. பேரு கூட அரவிந்த்" என்றாள்.


ஆமா. அவருக்கென்ன?


அந்த ஹாஸ்டல் வாசல்ல அவர் நின்ன மாதிரி இருந்தது.


அவரு எதுக்கு இங்க இருக்க போறாரு? அவரு ஊரு .... சற்று யோசித்தவனுக்கு தெரிந்தது அவனைப் பற்றி ஒன்றையும் தாங்கள் கேட்கவில்லை என.


சரி விடு. சென்னையா கூட இருக்கலாம். ஏதாவது வேலையா இருக்கும் எனக் கூறிவிட்டு அந்தப் பேச்சை இத்துடன் முடித்துக் கொண்டான்.


இவர்கள் தான் அவனை சரியாக பார்க்கவில்லையே தவிர கார் கிளம்பும் போது அரவிந்த் இவர்கள் இருவரையும் பார்த்து விட்டான்.


என்ன இவர்கள் ! சண்டை போடுவார்கள் எனப் பார்த்தால் ஒன்றாக போகிறார்கள்? ஒரு வேளை டைவர்ஸ் அப்ளை செய்ய போகிறார்களோ? (ஏன்டா இந்த நல்ல எண்ணம்) என நினைத்தவன் அவர்களை ஒரு ஆட்டோவில் பின்தொடர்ந்தான்.


உதய் டெக்ஸ்டைல்ஸ் எனப் பெயரிடப்பட்ட அந்த பிரம்மாண்ட கடையின் முன் கார் நிற்க, கடையின் உள்ளே சென்றாள் தர்னிகா.


அவள் தந்தையும் டெக்ஸ்டைல்ஸ் தான் வைத்திருக்கிறார் என்பதால் அவளுக்கு இது புதிதாக இல்லை. ஆனால் அனைவரும் அவளை முதலாளியம்மா என்றது அவளுக்கு சிரிப்பாக இருந்தது. கடையை முழுமையாக சுற்றிப் பார்த்த தர்னிகா உதயன் அறைக்கு வந்தாள்.


கடை சூப்பரா இருக்கு உதய்.


சிரித்தவன், இவர் பேர் விஜய். என் பி.ஏ என ஒரு இளைஞனை அறிமுகப்படுத்தி வைத்தான்.


கடை விளம்பரத்தை பத்தி தான் பேசிட்டு இருக்கோம். ஏதாவது உன் யோசனை கூட சொல்லலாம் கடையை விளம்பரப்படுத்த என்று கூறினான்.


உன் கல்லூரிக்கு ஏன் நீ ஒரு ப்ரோக்ராம் பண்ணக் கூடாது? நீ ஏற்கெனவே படிச்ச கல்லூரி. அங்க படிச்ச ஒரு பையன் ஒரு தொழிலதிபர்னா அவங்களுக்கும் பெருமை தானே. அப்படியே நமக்கும் விளம்பரம் கிடைக்கும்.


மேடம் சூப்பர். முதல் பாலே சிக்ஸர் போங்க என்றான் விஜய்.


ஹேய் செமடி என்றான் சற்று நிதானித்து நிறுத்தினான்.


என்னாச்சு? நீ சென்னைல தானே இன்ஜினியரிங் படிச்ச. நல்ல காலேஜ். நல்ல பேரு கிடைக்கும் நமக்கும். ஏன் யோசிக்கிற?


அது இல்லை. என்னை நியாபகம் இருக்குமான்னு தெரியலை அங்க உள்ள எல்லாருக்கும்.


ஹேய். நீ என்ன இருபது வருஷத்துக்கு முன்னாடியா படிச்ச? இப்ப தானே ஒரு 5,6 வருஷம் இருக்கும்?


இல்லை மேடம்.. பி.இ 4 வருஷம், எம்.இ 2 வருஷம், ரிசர்ச் மாணவனா ஒரு 3 வருஷம்ன்னு மொத்தமா 9 வருஷம் அதே காலேஜ் தான். இப்ப தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி முடிச்சாரு சார் எனக் கூறிய விஜய், நானும் அதே காலேஜ் தான். ஜூனியர். இப்ப முடிச்சிட்டேன் என்றான்.


உதயன் முறைப்பதை பார்த்த விஜய், வெளில ஏதோ சத்தம் எனக் கூறி நழுவினான். அவன் போனதும் உதயனிடம் திரும்பிய தர்னிகா


அடப்பாவி. பின்ன என்ன பிரச்சனை உனக்கு? எனக் கேட்டாள்.


தரு. அது நான் படிச்ச காலேஜ். அங்க போனா எல்லாரையும் பாக்கணும், எல்லா இடத்தையும் பாக்கணும் என சொல்ல வந்ததை கூற முடியாமல் தவித்தான்.


தர்னிகாவிற்கு சட்டென பல்பு எரிந்தது என்ன பிரச்சனை என.


அங்க போனா மஹதி நியாபகம் வரும் அதானே!


அவன் தலைகவிழ்ந்து இருந்த நிலையை பார்க்கவே பாவமாக இருந்தது அவளுக்கு.


உதய் என்ன பாரு! எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. நாம போகலாம். எனக்கும் உன் பழைய கதையெல்லாப் தெரிஞ்சிக்கனும். போகலாம் எனக் கூறி அவனை சம்மதிக்க வைத்தாள்.


இது நல்ல முடிவா இல்லை அவளுக்கு அவளே தேடிக் கொண்ட பிரச்சனையா என அடுத்த யூ.டி யில் சந்திப்போம். (ஃபாலோ பண்ண அரவிந்த் கொஞ்ச நேரம் சிக்னல்ல நிக்கட்டும். அவனையும் அடுத்த பார்ட்ல பாப்போம்).
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்

அடடா
உதய்க்கு செமத்தியா கிடைக்கும்ன்னு பார்த்தால் இந்த தர்னி பொண்ணு இப்பிடி சொல்லிடுச்சே
ஸோ சேடு ஸோ சேடு
ஹா ஹா ஹா

ஏன்மா இந்த அரவிந்துக்கு வேலை வெட்டி எதுவும் இல்லையா?
இவங்களை பாலோவ் பண்ணிக்கிட்டு இருக்கானே
இவனுக்கு என்ன ஒரு கெட்ட எண்ணம்?
உதய்யும் தர்னிகாவும் டைவர்ஸ் பண்ணி பிரியணுமாமே

ஆமாம்
அரவிந்தன் லூசுக்கு அந்த லேடிஸ் ஹாஸ்டலில் என்ன வேலை?

தான் படிச்ச காலேஜ்ஜூக்கு உதய் போகப் போறானா?
அங்கே என்ன வில்லங்கம் வரப் போகுதோ?

ஆனால் ஒன் ஸ்மால் டவுட்டு
நாலும் இரண்டும் மூணும் சேர்ந்தால் ஒன்பதுதானே வரணும்
எட்டு வருஷங்கள் உதய் படித்ததாக நீங்க சொல்லுறீங்களே
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
தர்னி அமைதியா பேசறா
அரவிந்தன் அடுத்த பிளான்
என்ன செய்ய போறானோ
லூசு பயலே கல்யாணம் ஆன
புள்ளய தொந்தரவு பண்ணி
வெட்டியா சாக போறான்
 

Padmarahavi

Active Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்

அடடா
உதய்க்கு செமத்தியா கிடைக்கும்ன்னு பார்த்தால் இந்த தர்னி பொண்ணு இப்பிடி சொல்லிடுச்சே
ஸோ சேடு ஸோ சேடு
ஹா ஹா ஹா

ஏன்மா இந்த அரவிந்துக்கு வேலை வெட்டி எதுவும் இல்லையா?
இவங்களை பாலோவ் பண்ணிக்கிட்டு இருக்கானே
இவனுக்கு என்ன ஒரு கெட்ட எண்ணம்?
உதய்யும் தர்னிகாவும் டைவர்ஸ் பண்ணி பிரியணுமாமே

ஆமாம்
அரவிந்தன் லூசுக்கு அந்த லேடிஸ் ஹாஸ்டலில் என்ன வேலை?

தான் படிச்ச காலேஜ்ஜூக்கு உதய் போகப் போறானா?
அங்கே என்ன வில்லங்கம் வரப் போகுதோ?

ஆனால் ஒன் ஸ்மால் டவுட்டு
நாலும் இரண்டும் மூணும் சேர்ந்தால் ஒன்பதுதானே வரணும்
எட்டு வருஷங்கள் உதய் படித்ததாக நீங்க சொல்லுறீங்களே
Correct sis. Na thappa calculate paniten. Mathiren
 

Padmarahavi

Active Member
ரொம்ப நல்லா இருக்கு
தர்னி அமைதியா பேசறா
அரவிந்தன் அடுத்த பிளான்
என்ன செய்ய போறானோ
லூசு பயலே கல்யாணம் ஆன
புள்ளய தொந்தரவு பண்ணி
வெட்டியா சாக போறான்
Thanks sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top