காதல் படகை கரையேற்ற வா - 17

Advertisement

Padmarahavi

Active Member
உதையின் போன் விடாமல் அடித்துக் கொண்டே இருக்க எடுத்து, ஹெலோ என்றான்.

என்ன ஹலோ! இவளோ நேரமா போனை எடுக்க என்றாள் தர்னி.

இல்லமா கொஞ்சம் வேலையா இருந்தேன் என்றான் பவ்யமாக உதய்.

இதைப் பார்த்த ராஜேஷிற்கு சிரிப்பாக இருந்தது.

எத்தனை பெரிய கடையின் முதலாளி. அவரை இப்படி அதட்டி உருட்டி வைத்திருக்கிறாளே ரவுடி என்று நினைத்தான்.

வேலையா இருக்கியா? நீ ராஜேஷ் கூட வெளியே போயிருக்கிறதா மாமா சொன்னாரே என்றாள் தர்னி.

அட அப்பா! அதுக்குள்ள போட்டு குடுத்துட்டீங்களா என்று நினைத்த உதய்,

ஆமா. ராஜேஷ் கூட தான் வேலை விஷயமா பேசிட்டு இருக்கேன் என்றான்.

அவன் கூட உனக்கு என்ன வேலை? போனை அவன் கிட்ட குடு என்றாள்.

மாட்டிகிட்டான் என்று மனதிற்குள் சிரித்த உதய், இந்தாங்க ராஜேஷ் உங்க ப்ரண்டு உங்க கிட்ட பேசணுமாம் என்றான்.

அது வரை சிரித்துக்கொண்டே இருந்த ராஜேஷ், அதிர்ந்து என்னை ஏன் மாட்டி விடுறீங்க பாஸ். அந்த ராட்சசி கிட்ட மனுஷன் பேசுவானா என்று போனை வாங்கினான்.

ஹலோ. சொல்லு தர்னி என்றான்.

ஏன்டா. அவர் கூட உனக்கு என்னடா பேச்சு என்றாள்.

ஏன் டி. ஆம்பளைங்க பேச ஒண்ணுமே இருக்காதா என்று கேட்டான்.

இல்லை உன்னை பார்த்தாலே அந்தாளுக்கு புடிக்காதே அதான் உன்னை கூட்டிட்டு போய் எதுவும் கும்மிட்டு இருக்கனோன்னு டவுட்.

அடப்பாவி. என்ன பாஸ் உங்களுக்கு என்னை பிடிக்காதாமே என்று கேட்டான் ராஜேஷ்.

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த உதய், புரையேற தலையை தட்டிக் கொடுத்து போனை வாங்கினான்.

ஏய் தரு! என்ன சொல்லணும்னே இல்லையா உனக்கு. இப்படி மாட்டி விடுற என்றான்.

இல்லைங்க ஒரு ப்ளோல வந்திருச்சு. சரி உண்மையாவே கேக்கறேன் என்ன பேசுறீங்க?

உன் ப்ரண்டு போலீஸ்ன்னு சொன்னில. அதான் அதை செக் பண்ணலாம்னு ஒரு வேலை கொடுக்க வந்தேன் என்றான் உதய்.

அந்த போட்டோ விஷயமாக இருக்குமோ என்று நினைத்த தர்ணிகா, சரி பேசிட்டு வாங்க என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.

சாரி ராஜேஷ் அவ ஏதோ சும்மா விளையாட்டுக்கு சொல்றா என்றான் உதய்.

இல்லை உதய். ரெஸ்டாரெண்ட்க்கு கூட்டிட்டு வந்து ஒண்ணுமே வாங்கி கொடுக்காம இருந்தப்ப கூட சந்தேகமா தான் இருந்துச்சு ஆனா அவ சொன்னதும் உறுதி ஆயிருச்சு.

சத்தமாக சிரித்த உதய், நீங்களும் உன் ப்ரண்டு மாதிரி திண்ணிப்பண்டாரம் போலயே என்றவன் இருவருக்கும் ஆர்டர் செய்தான்.

சரிங்க பாஸ் சொல்லுங்க. இவளோ லவ் பண்ணிட்டு என்ன ஆச்சு கடைசியா என்றான்.

அவ முதல் வருஷம் படிச்சதுனால அவளுக்காகவே எம். இ சேர்ந்தேன் அதே கல்லூரில. அந்த இரண்டு வருடம் முடியவும் மறுபடியும் ரிசர்ச் மாணவனா சேர்ந்தேன்.

அவ கடைசி வருஷம் படிச்சிட்டு இருந்தப்ப பரீட்சை வர கொஞ்ச நாள் தான் இருந்தது. அதுக்கு முன்னாடியே சோகமா இருப்பா. கேட்ட ஒன்னும் இல்லை நாம பிரிஞ்சிருவோம்ல அப்டின்னு சொல்லுவா. நானும் சமாதானம் பண்ணி வைப்பேன்.

அந்த சமயம் தான் அவ ஹாஸ்டல்ல எல்லாரும் கொடைக்கானல் டூர் போறதா சொன்னா. சரி அவளுக்கு ஒரு மாறுதலா இருக்கும்னு அனுப்பி வச்சேன். ஆனா

சொல்லும் போதே உதய் கண்கள் கலங்கின. கண்கள் சிவப்பாயின.

சரிங்க பாஸ். நடந்ததை யாராலும் மாத்த முடியாது. கொஞ்சம் மனசை திடப்படுத்திட்டு சொல்லுங்க என்றான்.

ஆனா ரெண்டு நாள் கழிச்சு கல்லூரிக்கு போன் வந்தது. உங்க கல்லூரி மாணவிகள் ரெண்டு பேர் மலை உச்சில இருந்து விழுந்துட்டாங்கன்னு.

எல்லாரும் பதறி அடிச்சிட்டு போய் பார்த்தோம். யாரோட உடம்பும் கிடைக்கல. அவ துப்பட்டா மட்டும் தான் கிழிஞ்ச நிலையில கிடைச்சது. அவளோட ஹாஸ்டல்லுக்கு போய் அவ பொருட்கள் கேட்டா, என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லி எதுவுமே தரல.

அவ என் கிப்ட் எல்லாம் கொடுத்து வைக்கிற அவளோட ரூம்மேட் பொண்ணை கேட்கலாம்னு போனா அவ ஹாஸ்டல்லை காலி பண்ணிட்டு போய்ட்டதா சொன்னாங்க. ஒரு வருஷம் பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்தேன். எப்படியோ படிப்பை முடிச்சிட்டு வெளியே வந்துட்டேன்.அவ நினைவா ஒண்ணுமே இல்லாம இந்த துப்பட்டாவை மட்டும் தான் இன்னும் வச்சிருக்கேன் என்று அழுதான் உதய்


ராஜேஷ் கண்ணும் கலங்கி விட்டது.
சாரி பாஸ். இப்போ நடந்ததை பத்தி பேசி ஒன்னும் ஆகாது. அப்ப மஹதி விஷயம் தெரிஞ்ச ஆள் அந்த பொண்ணு மட்டும் தான். அவ பேர் என்னனு தெரியுமா

காவ்யா.

அவ பரீட்சை எழுத கூட வரலையா?

இல்லை ராஜேஷ். எப்படியும் பரிட்சை எழுத வருவான்னு தான் நானும் காத்திருந்தேன் ஆனா வரலை.

அவளோட தோழிங்க கிட்ட கேட்டப்ப அவங்களுக்கும் சரியா தெரில.

அந்த பொண்ணோட அம்மா இல்லை அப்பா நம்பர் கேட்டு முயற்சி பண்ணிருக்கலாமே பாஸ்.

இல்லை ராஜேஷ். அந்த பொண்ணுகிட்ட நான் அவ்வளவா பேசுனது இல்லை. அவ என்ன காரணத்திற்காக போனானு தெரில. ஒரு வேலை கல்யாணம் அப்படி இப்படி போனா நான் போய் நின்னு, என் கிப்ட் எல்லாம் கேட்டு எதாவது பிரச்சனை ஆச்சுன்னா என்ன பண்றது அது தான் விட்டுட்டேன். என் மஹதியே போனதுக்கு பிறகு இதெல்லாம் வச்சி நான் என்ன பண்ண போறேன்.

ஆனா அது எப்படி உங்க வீட்டுக்கு வந்தது? என்றான் ராஜேஷ்.

அது தான் தெரில ராஜேஷ்.

சரி அது கூட எதாவது லெட்டர் வந்ததா?

இல்லை.

அந்த கிப்ட் எல்லாம் வந்த கவர் இருக்கா? அதுல அட்ரஸ் எழுதி இருப்பாங்களே?

அதுல அட்ரஸ் ஒன்னும் இல்லை. எங்க போகணுமா அங்க எங்க வீட்டு அட்ரஸ் இருக்கு.ப்ரம் அட்ரஸ்ல சென்னைன்னு மட்டும் தான் இருக்கு.

எந்த போஸ்ட் ஆபீஸ்ல இருந்து வந்தது?

இல்லை நைட் நாங்க வர்ரப்ப அந்த கவர் வெளியே இருந்தது. யாரு வச்சதுனு தெரில.

பிரைவேட் கூரியர்னா கண்டிப்பா கையெழுத்து வாங்காம போக மாட்டான். போஸ்ட்னா கூட நைட் எல்லாம் வர மாட்டாங்க. இது ஏன் யாரோ கொண்டு வந்து வச்சிட்டு போயிருக்க கூடாது என்றான் ராஜேஷ்.

சிறிது யோசித்த உதய், இருக்கலாம் ராஜேஷ். தெருல இருக்கிற சி. சி. டி. வி செக் பண்ணா தெரியலாம்.

யெஸ். ஆனா இப்ப வேணாம் உங்க அப்பா அம்மா ஊருக்கு போகட்டும். இப்ப பண்ணா எதாவது கேள்வி கேப்பாங்க என்றான் ராஜேஷ்.

சரிதான். சரி இப்ப வாங்க. நான் நீங்க தரு ஹரிணி எல்லாரும் ஜாலியா எங்கயாவது போய்ட்டு வரலாம் என்றான் உதய்.

ராஜேஷ் கண்களில் மின்னல் தெறிக்க, கண்டிப்பா போகலாம். நான் இப்போ ரூமுக்கு போய் டிரஸ் மாத்திட்டு வரேன் என்றபடி துள்ளலோடு சென்றான் ராஜேஷ்.

சும்மா வெளியே போக ஏன் இவளோ ஆர்வம்னு நீங்க கேட்கிறது புரியுது. எல்லாத்தையும் இப்பவே சொன்னா என்னால 50 எபிசோட் ஓட்ட முடியாது. அதை அப்புறமா சொல்றேன் ♥️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top