காதல் படகை கரையேற்ற வா - 13

Advertisement

Padmarahavi

Active Member
(முன்கதை சுருக்கம்: ஏன்னா கண்டிப்பா கதையை மறந்திருப்பீங்க.

மஹதியைப் பற்றி கூறும் முடிவில் உதயன் ராஜேஷை வரவழைக்க, ராஜேஷ் வந்த இடத்தில் அரவிந்த் இருப்பதைக் கண்டு திகைக்கிறான். அப்போது அங்கு வந்த உதயனின் தந்தை அரவிந்த் கல்வி அமைச்சர் ஈஸ்வரமூர்த்தியின் மகன் எனத் தெரிகிறது)

அனைவரின் சந்தேகப் பார்வையை கண்டுகொண்ட அரவிந்த் வேறு வழியின்றி உண்மையைக் கூற முடிவெடுத்தான்.

உதயனின் தந்தையைப் பார்த்த அரவிந்த்,

வணக்கம் அங்கிள். நீங்க சொன்னது சரி தான். அவர் தான் என் அப்பா என்றான்.

ஏம்பா உங்க அப்பா கிட்ட இல்லாத பணமா சொத்தா? இங்க ஏன் வேலை பார்க்கிற அதுவும் பொய் சொல்லி.

அது சரி தான் அங்கிள். ஆனா எங்கப்பா பேரை சொன்னதும் உங்களுக்கு என்ன அபிப்ராயம் வருது சொல்லுங்க என்று அவரையே பதில் கேள்வி கேட்டான் அரவிந்த்.

அந்தக் கேள்வியில் சற்று திகைத்தார் சிவகுருநாதன். எப்படி அவன் அப்பாவைப் பற்றி அவனிடமே கூறுவது?. இன்றைய தேதியில் மக்கள் யாருக்குமே அரவிந்த்தின் தந்தை ஈஸ்வரமூர்த்தியின் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை.

இல்லப்பா... வந்து... உங்க அப்பா பெரிய ஆள். அமைச்சர். செல்வாக்கு மிக்கவர் என்றார்.


அங்கிள். அது அவரோட பதவி. நான் கேட்டது அவரைப் பற்றிய உங்களோட எண்ணம் என்றான் அரவிந்த்.

கொஞ்சம் திகைத்தவர், அப்படி ஒன்னும் நல்ல அபிப்ராயம் இல்லப்பா. ஏதாவது நல்லது செஞ்சிருந்தா தானே! குடிப் பழக்கம் கூட இன்னும் என்னென்னமோ தப்புகள்கூட பண்றார்ன்னு கேள்வி. எப்படியோ ஏமாத்தி அமைச்சர் ஆகிட்டார்.

ஒரு உணர்ச்சி வேகத்தில் அவர் பேசிக் கொண்டேப் போக, உதயனே அவரை நிறுத்தினான். என்ன இருந்தாலும் பலர் முன்னிலையில் தந்தையைப் பற்றி தவறாகப் பேசுவது அரவிந்த்தை எப்படி பாதிக்கும் என அவனை நினைத்து வருந்தினான்.

அப்பா. ப்ளீஸ் போதும் என்றான் உதயன்.

திரும்பி அரவிந்த்தின் முகத்தைப் பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. வெற்றுப் புன்னகையை சிந்திய போதும் கண்கள் கலங்கியிருந்தது தெரிந்தது.

அரவிந்த்.. என்று உதய் தொடங்க, அவனை இடைமறித்த அரவிந்த்


பரவாயில்லை உதய். இது ஒன்னும் புதுசு இல்லை. உங்கப்பா சொல்லலைன்னா என்ன! தினமும் ஃபேஸ்புக்கை தொறந்தா எங்கப்பா பேரு தான் கிழியுதே என்றவன் பெருமூச்சுடன் தொடர்ந்தான்.

ஆரம்பத்துல பகட்டான கார், ஆடம்பர வாழ்க்கை . அதுனாலையே யாரும் என்னோட சேர மாட்டாங்க. அவங்களுக்கு தாழ்வு மனப்பான்மை போலன்னு நினைச்சிக்குவேன்.ஆனா கல்லூரி வந்ததும் தான் தெரியும் ,என்னை பார்த்து ஒதுங்குறதுக்குக் காரணம் எங்கப்பா தான்னு.

அவரா கட்டாயப்படுத்துனதுனால சில மேடைகள் அவரோட ஏறியிருக்கேன். மற்றபடி அவரோட பையன் நான் னு வெளிக்காட்டுறதையே நான் விரும்பலை. வெளியூர்ல படிச்சேன். படிச்சதும் நல்ல வேலையில சேர்ந்தேன். இஷ்டம் போல சுத்துவேன்.

அப்புறம் ஏன் இங்க வந்து சேர்ந்தீங்க? ராஜேஷ் கேட்டான்.

இதற்கு காரணம் தர்னிகா என கூற முடியுமா! சற்று யோசித்தவன்,

நான் வேலை செஞ்ச இடம் எங்கப்பாக்கு தெரிஞ்சிருச்சு. பேசணும்னு வந்தாரு. அதான் அதை விட்டுட்டேன்.

அப்ப இங்க வர மாட்டாரா என உதய் தந்தை கேட்க,

அதானே! அதோட அப்பா தானே! பேசாம வீட்டு அட்ரஸ் குடுத்துட்டா வீட்டுக்கே வருவாரு. அங்க வச்சி இனி வராதீங்க னு சொல்லலாம்ல என ராஜேஷ் கேட்டான்.

ஐயோ. இவன் வேற இப்படி எல்லாம் ஐடியா குடுக்குறானே. முதன் முறையாக மதியை சென்னை அழைத்து வந்தது தவறோ எனத் தோன்றியது. தான் சுயநலத்திற்காக அவளை சிக்கலில் மாற்றி விடும்படி ஆகி விடுமோ எனப் பயந்தான் அரவிந்த்.

அதற்குள் குறுகிட்ட உதய், போதும் விடுங்கப்பா. அவரு காரணம் சொல்லிட்டாரு. அதோட விடாம அவரோட பர்சனல் விசயத்துல தலையிட நமக்கு உரிமை இல்லை என்றான் அந்த நல்லவன்.

உதயின் தந்தைக்கு முழுதாக சமாதானம் ஆகாவிட்டாலும் அரைகுறையாக ஒத்துக் கொண்டார்.

இங்கயே இருந்தால் நேரம் போய் விடும். பின் நாம் பேச நினைப்பதை எப்படி பேசுவது என்று யோசித்த உதய், ராஜேஷை வெளியில் அழைத்து வந்தான்.

இருவரும் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்த பிறகு மெதுவா பேச்சை தொடங்கினான்.

அது வந்து ராஜேஷ் நா காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ண விரும்புனேன்..

ராஜேஷின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கோவமாக மாறியது. என்னடா இவனும் இவன் பிரண்ட் மாதிரி டெரர் போலயே என நினைத்தான்.

இருங்க ராஜேஷ் நான் முழுசா சொல்லிக்குறேன்.

பாத்து வருஷத்துக்கு முன்னாடி போகனும்.

(போவோம் வாங்க. காசா பணமா)

அப்ப நா இன்ஜினியரிங் கடைசி வருஷம் படிச்சிட்டு இருந்தேன். எங்க காலேஜ் ல யாரோ ஒரு அரசியல்வாதி மகனை ஒரு ப்ரோபசர் கிளாஸ் விட்டு வெளிய அனுப்பிட்டேருன்னு அவங்க அப்பா ஆளுங்களோட வந்தாரு.

காலேஜ் கலவரம ஆகி போச்சு. எல்லாரும் கிடைச்ச இடத்துல போய் ஒளிஞ்சிக்க ஆரம்பிச்சோம். அப்ப தான் அவளை பாத்தேன்.

உதய் அவசரமாக கெமிஸ்ட்ரி லேப் உள்ளே சென்று நின்று கொண்டு ஜன்னல் வழி எட்டிப் பார்த்தான். ஆட்கள் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருக்க, கற்கள் ஏரியாபட்டு லேப் கண்ணாடி எல்லாம் சிதறி இருந்தது.

அவன் பார்த்து கொண்டிருக்கும் போதே ஒரு பெண் அவசரமாக அந்த வழியே ஓடினாள். அவள் ஓடிய புறமும் ஆட்கள் இருப்பதை பார்த்த உதய் டக்கென வெளியில் வந்து அவள் கையை பிடித்து உள்ளே இழுத்து கதவை அடைத்தான்.

டக்கென இழுக்கப்பட்டத்தில் அதிர்ந்த அவள் அவன் இழுத்தாய் வேகத்தில் அவன் மீதே மோதி கீழே விழாமல் இருக்க அவன் சட்டையை இருக்கி பற்றினாள்.

அரை நிமிடத்திற்கு பிறகு இயல்புக்கு வந்த உதய் அவளை விலக்கி நிறுத்தி அவளை பார்த்தான்.

அவளின் மருண்ட கண்கள், அதிலிருந்த பயம், அச்சத்தில் துடிக்கும் அதரங்கள் அவனை கட்டி போட்டது.

அவன் மனதில் மெல்லிய பாடல் ஒலித்தது

"உன் கண்களில் விழுந்த நாள் முதல் என் துன்பங்கள் மறந்து போனது! உன் கை விரல் சேர துடிக்குது அன்பே அன்பே ".. என அவன் தன்னை மறந்தன். உலகத்தையும் மறந்தான்.

(அது சரி இது தெரிஞ்ச உலகம் என அவன் பேரே மறந்து போகுற அளவுக்கு அடி இருக்குனு நீங்க நினைக்கிறது புரியுது )

அவன் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணட்டும். நான் அடுத்த epi ல மீட் பண்றேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top