காதல் படகை கரையேற்ற வா - 12

Advertisement

Padmarahavi

Active Member
அந்த நிகழ்ச்சி நடந்து இரு நாட்களுக்குப் பிறகு ராஜேஷ் உதயனுக்கு போன் செய்தான்.

சொல்லூங்க ராஜேஷ்

பாஸ். அந்த நம்பர் பத்தி விசாரிச்சேன்.

நம்பர் வாங்குறப்போ அடையாள அட்டை குடுத்திருப்பாங்களே. அதை வ.சி கண்டு பிடிச்சீங்களா!

அந்த பக்கம் ராஜேஷ் நகைத்தான்.

பாஸ். இந்த மாதிரி வேலை பண்றவன் தன் ஒரிஜினல் அடையாளம், பேரு, ஊரு எல்லாம் குடுத்தா சிம் வாங்குவான். கண்டிப்பா ஏதாவது வடநாட்டுக்காரன் ரிஜிஸ்டர் பண்ணதை தான் வாங்குவான்.

அப்ப லோகேஷன் ட்ராக் பண்ணலாமே!


பண்ணலாம் ஆனா அவன் போன் ஆஃப் பண்ணி தான் வச்சிருக்கான். கடைசியா உங்க வீட்டு கிட்ட நின்னு போட்டோ எடுத்து அனுப்பினதுக்குப் பிறகு அணைச்சிட்டு போய்ட்டான்.

இப்ப என்ன பண்றது?

அவன் நம்பருக்கு நீங்க மெஸேஜ் அனுப்புங்க. அவன் போன் ஆன் பண்ணா கண்டிப்பா பதில் அனுப்புவான். கொஞ்ச நேரம் ஏதாவது பேசிட்டே இருந்தீங்கன்னா அவன் இடத்தை ட்ராக் பண்ணலாம்.

சரி அப்படியே பண்றேன்.

அப்புறம் யார் கிட்டையும் இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணாதீங்க. அவன் நம்ம கூடவே இருந்தான்னா உஷாராய்டுவான்.

ரொம்ப நன்றி ராஜேஷ். அப்புறம் இன்னொரு விஷயம் பேசனும். நாளைக்கு பிஸியா?

இல்ல ப்ரோ. சாயங்காலம் மீட் பண்ணலாம்.

அவனிடம் மஹதி விசயத்தைப் பேச வேண்டும் என்று முடிவு செய்தான்.

மறுநாள் பொழுது அழகாகப் புலர்ந்தது.

இன்று நாமே சமையல் செய்யலாம் என அதிசயமாக முடிவெடுத்த உதய் அடுக்களைக்குச் சென்று நெடுநேரம் தனக்குள்ளேயே விவாதித்து இறுதியாக உப்புமா என முடிவு செய்தான்.

அதற்கான ஆயுத்த வேலைகளை முடித்துக்கொண்டு இருக்கும் போதே காலிங்பெல் சத்தம் கேட்க கதவை திறந்தவன் ஆச்சரியமடைந்தான்.

அங்கு அவன் தந்தை தாய் தங்கை ஹரிணி மூவரும் நின்றிருந்தனர்.

கையில் கரண்டி சகிதமாக பையனைப் பார்த்ததும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

உள்ளே வந்தவர்கள் , என்னடா மருமக நல்லா வேலை வாங்குறாளா என கலாய்த்தனர்.

அப்போது தான் எழுந்த தர்னிகா கதவைத் திறந்து கொண்டு வரும் போது அனைவரையும் பார்த்து அதிர்ந்தாள்.

தர்னிகா இப்போது தான் எழுந்திருக்கிறாள் என அனைவருக்கும் புரிந்தது. உதயின் கோலத்தைப் பார்த்தவள் நிலைமையை உணர்ந்து கொண்டாள்.

என்னிக்கும் சமையல்கட்டு பக்கமே போகாதவன் இன்னிக்குன்னு பாத்து நிக்கிறதைப் பாரு. என்னமோ இவன் தான் எனக்கு வடிச்சு கொட்டுற மாதிரி என நினைத்து அவனை முறைத்தவள் பின் தேவியிடம் திரும்பி,

அத்தை , வந்து கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். நான் சமைக்க சொல்லல என திணறினாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே அருகில் வந்த தேவி அவளை அணைத்துக் கொண்டார்.

பலே ஆளும்மா நீ. டம்பளரை கூட நகத்தாத என் பையனை கரண்டியைத் தூக்க வச்சிட்ட. நான் என் புருஷனுக்கு பண்ணணும்ன்னு நினைச்சதை நீ பண்ணிட்ட. இன்னும் துணி துவைக்க சொல்லு. உடம்பு வளையட்டும் என்றார்.

அவரையே இமைகொட்டாமல் பார்த்தவள் கண்களில் கண்ணீர் லேசாக எட்டிப் பார்க்க, அவரை அணைத்துக் கொண்டாள்.

ஏண்டா உதய். இப்படியெல்லாம் பண்ணா நாளைக்கு ஊருக்குப் போனதும் என்னையும் பண்ணை சொல்லுவாடா உங்கம்மா என அவனின் தந்தையும் சேர்ந்து கொள்ள வீடே களைகட்டியது.

என்னப்பா திடீர்னு வந்திருக்கீங்க.

இல்லடா. எப்பவும் நீங்க தான் ஊருக்கு வரீங்க. அதான் ஒரு மாற்றத்துக்காக.

சரி நாங்க பாத்ரூம் போய்ட்டு வரோம் என இருவரும் நகர்ந்தனர்.

அதற்குள் ப்ரிட்ஜை நோண்டிய ஹரிணி,

அண்ணா இவ்வளோ ஸ்நாக்ஸ் வச்சிருக்கீங்க என வாயைப் பிளந்தாள்.

அவ்வளவும் நான் வாங்கலைம்மா. உன் அண்ணியோட அருமை நண்பன் ராஜேஷ் தான் வாங்கிட்டு வந்தான். இரண்டு நாளைக்கு முன்னாடி வந்தான்.

அவன் பெயரைக் கேட்டதும் அவளின் முகம் மாறியது.

ஏன். அவரு வாங்கிட்டு வரணும். எங்கண்ணண் வாங்கி தர மாட்டானா எனக் கேட்டாள்.

இல்லம்மா அவன் வந்தான் அதான் என்றாள் தர்னிகா.

அதுக்குன்னு இப்படியா? கல்யாணத்துலையும் ரிசப்ஷன்லையும் பாத்தேன். என்னமோ உங்க மேல அவரு தான் உண்மையா பாசம் வச்சிருக்கிற மாதிரி சீன் என்றாள்.

அப்படி சொல்லும்மா. நான் சொன்னா இந்நேரம் என் ஃப்ரெண்டை என்ன சொன்னீங்கன்னு சண்டைக்கு வந்திருப்பா.

என்னடா இவங்க குடும்பத்துக்கே ராஜேஷை பிடிக்கலை. பாவம்டா நீ என நினைத்தாள் தர்னிகா.

அனைவரும் காலை உணவை முடித்த பின், உதயனின் தந்தை

யாரையோ புதுசா சேர்த்திருக்கேன்னு சொன்னியே, அவனைப் பாக்க நான் சாயங்காலமா கடைக்கு வரேண்டா என்றார்.

ஆமாப்பா பேரு அரவிந்த். ரொம்ப நல்ல மாதிரி.

நீயே தொழிலுக்கு புதுசு. உனக்கு எப்படி தெரியும். நான் பாத்து பேசுறேன். நான் வர விசயத்தை சொல்ல வேணாம்.

சரிப்பா. தர்னி கிளம்பலாமா?

எங்க? நான் இன்னிக்கு வரலை. அத்தை ஹரிணியை விட்டுட்டு அங்க வந்து என்ன பண்றது?

ஆமாடா. அவ எங்க கூட இருக்கட்டும். பாத்து ரொம்ப நாள் ஆச்சு. நாங்க நல்லா பேசப்போறோம் என்றார் தேவி.

அடிப்பாவி. மாமியாரைப் பாத்ததும் புருசனை விட்டுட்டாளே என்று நினைத்தவன், அதுவும் நல்லது தான். சாயங்காலம் ராஜேஷை வேற பாத்து பேசனும் என எண்ணிக் கொண்டான்.

கடையில் வேலையே ஓடவில்லை. எத்தனை நேரம் தான் அரவிந்தையும், விஜயையும் பார்ப்பது? அடிக்கடி போன் எடுத்து மணியைப் பார்த்துக் கொண்டான்.

மாலை நான்கு மணி அளவில், ராஜேஷ் கடைக்கு வந்தான்.

ஹாய் பாஸ்.

வாங்க ராஜேஷ்.

என்னமோ பேசணும்னு சொன்னீங்க.

ஆமா ஆனா இங்க வேணாம். பக்கத்துல காபி ஷாப் போய் பேசலாம்.

இருவரும் வெளியே வரவும், அரவிந்த் எதிரில் வரவும் சரியாக இருந்தது. அரவிந்த்தைப் பார்த்த ராஜேஷ் துணுக்குற்றான்.

இவரு???

இவரா. இவர் பேரு அரவிந்த். இங்க தான் நம்ம கடையில மேனேஜரா இருக்காரு.

எப்ப சேர்ந்தாரு?

இப்ப தான் மூனு, நாலு மாசமா!

அதுக்கு முன்னாடி எங்க வேலை பாத்தாரு?

என்ன ராஜேஷ் இவ்வளோ கேள்வி கேக்குறீங்க. அரவிந்த் நீங்களே பதில் சொல்லுங்க. உங்களுக்கு இவரை தெரியும் தானே!

அதுவரை வார்த்தைகளை யோசித்துக் கொண்டிருந்த அரவிந்த் இப்போது வேறு வழியின்றி வாயைத் திறந்தான்.

ஆமா. உங்களை கொடைக்கானல்ல பாத்திருக்கேன்.

இந்த மட்டும் உண்மையை சொன்னதால் சிறிது நிம்மதியடைந்தான் ராஜேஷ்.

அந்நேரம் உதயின் தந்தை உள்ளே நுழைய அவரும் அரவிந்த்தை கண்டு திடுக்கிட்டார்.

இந்த தம்பி இங்க என்ன பண்றாங்க?

அவ்வளவு ஃபேமஸ் ஆளா நீ? ஆளாளுக்கு அதிர்ச்சி ஆகுறாங்க என்று நினைத்த உதய்,

இவர் தான் பா அரவிந்த். நான் புதுசா சேர்த்திருக்கிற மேனேஜர்.

இவரா? இவர் யாருன்னு தெரியுமா?

யாருப்பா?

கொடைக்கானல்ல எம்.எல்.ஏ வா இருந்தாரே, இப்ப கூட கல்வித்துதுறை அமைச்சரா இருக்காரே ஈஸ்வரமூர்த்தி அவரு பையன். என்ன தம்பி நான் சொல்றது சரிதானே?

அவர் உள்ளே நுழையும் போதே அதிர்ந்தான் அரவிந்த். உதய்தர்னிகாவிற்கு அரசியல் அத்தனை அறிமுகம் இல்லாததால் அவல்களுக்குத் தெரியாது. ஆனால் இவர் பெரும் செல்வாக்கு மிக்கவர். எனவே இவனைத் தெரிந்ததில் ஆச்சரியமில்லை.

அமைச்சர் மகன் ஏன் யாருமில்லை எனக் கூறி மேனேஜராக வேண்டும்? அனைவரின் சந்தேகப் பார்வையும் அரவிந்த் மேல் விழ ராஜேஷின் பார்வை இன்னும் அழுத்தமாக விழுந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்

என்னாது
அரவிந்தன் மினிஸ்டர் பையனா?
ஆனால் ஏற்கனவே ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்த இவன் தர்னிகாவை எதுக்கு சுத்தி வர்றான்?

அடுத்தவன் பொண்டாட்டியைக் கல்யாணமும் பண்ண முடியாது
அப்போ தர்னியின் சந்தோஷத்தை அழிக்கணுமுன்னு அரவிந்த்தின் எண்ணமா?

ராஜேஷ் பேரைக் கேட்டதும் ஹரிணி எதுக்கு ஜெர்க் ஆகிறாள்?
வாட்டு மேட்டரு?
ஒருவேளை லவ்வோ?

ஹா ஹா ஹா
ஒரு பீத்தலாண்டி உப்புமாவை செய்ய கிளம்பி தர்னிக்கு ஹெல்ப் செய்யுற மாதிரி உதய் பய புள்ளை என்னமா ஸீனு போடுது பாருங்கப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top