காதல் அணுக்கள் -20

Advertisement

Kalki

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Next episode is the final episode guys. please let me know your valuable comments.



காதல் அணுக்கள் -20

வாழ்க்கையில் சுபி மிகவும் ஆசைப்பட்ட ஒரு விஷயம் லவ் மேரேஜ் . தன் தோழிகளின் காதல் கதைகள் எல்லாம் கேட்கும்போது தன்னையும் ஒருவன் இது போல மிகவும் காதலித்து மணம்புரிய வேண்டும் மேலும் அவனின் அன் கண்டிஷனல் லவ் வை அனுபவிக்க வேண்டும். இப்படி பல எண்ணம் இருந்தது . ஆனால் எப்பொழுது தனக்கு கல்யாணம் முடிந்ததோ தன் விதியில் காதல் கல்யாணம் எழுத படவில்லை என்று தன்னையே சமாதானம் படுத்திக்கொண்டாள் . ஆனால் இன்று சந்தீப் குடுத்த டைரியை படித்ததும் அதில் இருந்த அவளுடைய பல்வேறு காலகட்ட புகைப்படங்களை பார்த்ததும் அவளை அவன் எந்த அளவிற்கு பொக்கிஷமாக நினைத்திருக்கிறேன் என்று நன்கு விளங்கியது . அவள் கண்களில் இருந்து தன்னவன் தன்மேல் கொண்ட காதலை நினைத்து ஆனந்தத்தில் இரு மணி துளிகள் சிந்தியது . அவனின் முதலும் இறுதி காதலும் அவள் தான் என்று தெரிந்த போது சிறகில்லாமல் பார்ப்பது போல் தோன்றியது .

அவள் கண்களில் இருந்த நீரை கண்டு ஏன் பேபி மாமா கவிதை அவளோ மொக்கையாவா இருக்கு என்றான். பதில் கூற முடியாமல் அவனை இறுக்கி அணைத்திருந்தாள் . ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலே என்று சின்ன குழந்தை போல் கேட்டவளை பார்த்து சிரித்து கொண்டே தன் தந்தையின் மனக்கவலையை கூறினான். அப்புறம் நீ வேற என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா என்ன பண்றது . அது தான் கொஞ்சம் சேபா பிலே பண்ணேன் என்று கண்ணாடிதான்.

அவளை மெல்ல விலக்கி ஒரு ஒற்றை ரோஜாவை அவள் முன் நீட்டி ஐ லவ் யு டு தி மூன் அண்ட் பேக் என்று அவள் கைகளில் மெல்ல தன் இதழ் பதித்தான் . அவன் கன்னங்களை கையில் ஏந்தி அவன் கண்களில் தன் பார்வையை கலக்கி மெல்ல அவன் இதழ்களில் இதழ் சேர்த்தாள் . நீண்ட நேரம் தங்களை மறந்து இருந்தவர்கள் பின் தன்னிலைக்கு திரும்பி ஒருவரை ஒருவர் பார்க்க சுபி வெட்கத்தினால் விழிகளை தாழ்த்திக்கொண்டாள் . சந்தீப்புக்கோ தன் நீண்ட வருட காதலை தன்னவளிடம் பகிர்ந்ததிலில் உள்ளம் மிகவும் லேசாக இருந்தது . அதே மகிழ்வுடன் அவளை கைகளில் ஏந்தி அறைக்குள் சென்றான் . அந்த இரவு இருவருக்கும் இன்றியமையாத இரவாகி போனது .

மேலும் இரு தினங்கள் தங்கி தங்களை அகமும் புறமும் தெரிந்து கொண்டு கூடவே ட்ரெக்கிங்,ராஃபிட்டிங், ட்ரீ ஹவுஸ் என்று நன்றாக என்ஜோய் செய்துவிட்டு புத்துணர்ச்சியோடு நண்பனின் ரெசிபிஷனிற்கு சென்றார்கள் . அங்கே சந்தீப்பின் அமெரிக்கா நண்பர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள் . அவர்களை சுபிக்கு அறிமுகம் செய்தான் . சிலர் மனநிறைவோடு வாழ்த்துக்கள் கூற சில பொறாமை உள்ளம் கொண்டவர்கள் வேண்டும் என்றே சந்தீப்பின் அமெரிக்கா காதல் கதைகளை கூறி அவளை வெறுப்பேற்ற நினைத்தார்கள். ஆனால் சுபி அதை அனைத்தையும் ஒரு புன்சிரிப்போடு கடந்து சென்றாள். அவளிற்கு தான் நன்றாக தெரியுமே தன்னவனின் இதயத்தில் அவள் எப்பொழுதோ சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டாள் என்று . இருவரும் எதையும் பொருட்படுத்தாது காதல் பார்வையை அள்ளி வீசிக்கொண்டிருந்தனர் . ஹே நாங்களும் இங்க தான் இருக்கோம் ரெண்டு பெரும் கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்கோங்க என்று ஓட்டிக்கொண்டிருந்தனர் .

ஊருக்கு வந்து சேர்ந்ததும் கல்யாண வேலை அவர்களை இழுத்து கொண்டது. சுபி சந்தியாவுடன் லாஸ்ட் மினிட் ஷாப்பிங் செய்தும்,திருமணம் முடிந்ததும் மும்பைக்கு கொண்டு போக வேண்டியவைகளை லிஸ்ட் போட்டு எடுத்து வைப்பதும் என பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்தாள். பாலாஜியும் திருமணத்துக்கு 4 நாட்கள் முன்பு வந்து சேர்ந்தான் . பின் மாமா வீடு சீர் பந்தக்கால் நடுதல் என்று யாருக்கும் எதெற்கும் நேரமில்லாமல் சென்றது.சந்தீப்பின் தம்பி ஸ்ரீராம் கூட ஓடியாடி பொறுப்புள்ள அண்ணனாக வேலைசெய்துகொண்டிருந்தான். கல்யாண நாளும் அழகாய் விடிந்தது. அங்கே இரு காதல் பறவைகள் மணவாழ்க்கையில் இணைய போவதை நினைத்து உள்ளம் எல்லாம் மகிழ்ச்சி பொங்க வானில் சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தன. திருமணத்தில் ஏற்கனவே இணைந்த சந்தீப்பும் சுபியும் தங்கள் திருமண நாளை நினைத்து பார்வையாலே அடுத்தவரை கபளீகரம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் நடப்புக்கு கொண்டுவந்தது ஐயரின் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்ற சத்தம். பின் பாலாஜி தன் ஆருயிர் காதலி சந்தியாவை ஊர் வாழ்த்த தன் மனைவியாய் ஏற்றுக்கொண்டான் .

திருமணம் எல்லாம் முடிந்து வந்தவர்கள் அனைவரையும் கவனித்து அனுப்பி. நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும் வட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் . அப்போது ஸ்ரீராம் சந்தீப்பையும் சுபியையும் தேடி ஒரு பெண்ணை அழைத்து வந்து கொண்டிருந்தான். அருகில் வந்ததும் அண்ணா இவதான் சிரிஷா என்னோட காலிக். நாங்க ரெண்டு பேரும் 2 வருஷமா லவ் பண்ணுறோம். சிரிஷா வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க நீ தான் எப்படியாவது அம்மா அப்பா கிட்ட பேசி கல்யாணத்துக்கு ஓகே வாங்கணும் . ப்ளீஸ் அண்ணா என்றான் . ஸ்ரீராம் சொன்னதை கேட்ட பின் சுபியும் அந்த பெண்ணை பார்த்து ஸ்னேஹமாய் சிரித்து வைத்தாள். சந்தீப் அந்த பெண்ணை பார்த்து ஹாய் சிரிஷா உங்க வீட்ல ஒத்துக்கவாங்களா ?
சிரிஷா பதில் சொல்லாமல் திரு திரு என முழித்துக்கொண்டிருந்தாள் . ஸ்ரீராம் மெதுவாக அண்ணா அவளுக்கு தமிழ் தெரியாது அவ மதர் டாங் தெலுங்கு என்றான் . அவ சொந்த ஊரு திருப்பதி என்றதும் .சுபியும் சந்தீப்பும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பை அடக்கிகொண்டனர். எங்க நீங்க திருப்பதிக்கு பிளான் பண்ணீங்க கடைசில உங்க தம்பி அங்க செட்டில் ஆயிடுவார் போலிருக்கு என்று அவன் காதை கடித்தாள் . சிரிப்பு காட்டாம சும்மா இருடி என்றவன் தம்பியிடம் தான் பெற்றோரிடம் பேசுவதாக வாக்களித்து அனுப்பிவைத்தான்.

அனைத்தும் முடிந்து சந்தியாவும் பாலாஜியுடன் மும்பை சென்றுவிட்டாள் . சுபிக்கு தான் வீட்டில் தோழி இல்லாமல் ஏதோ போன்று இருந்தது . இருவரும் தினமும் தொலைபேசியில் தங்கள் அரட்டையை தொடர்ந்தனர் . இருபெண்களும் தங்களின் கணவன்மாரின் காதல் மழையில் அனுதினமும் நினைந்து வந்தனர் . சந்தீப் தனது பெற்றோரை மும்பைக்கு சந்தியாவை பார்க்க ஒருவாரம் அனுப்பிவைத்தான். அலுவலக வேலை கொஞ்சம் சீரானதும் சுபியை அழைத்து கொண்டு சந்தீப் முன்பே பிளான் செய்தபடி மலேஷியா சென்று வந்தான். இப்படியே அவர்களுக்கு திருமணம் முடிந்து 2 மாதங்கள் கடந்தன. பின் ஒரு நாள் அலுவலகம் சென்ற சுபி உடல் நிலை சரியில்லாமல் தாய் வீட்டுக்கு திரும்பி வந்தாள். மகளை பார்த்ததும் சித்ராவிற்கு மனதில் சந்தேகம் எழ நாட்கணக்காய் விசாரித்தார். அவர் நினைத்தது போலவே நாட்கள் தள்ளிப்போயிருந்தன . உடனே மருத்துவமனைக்கு சாரதாவிடம் கூறிவிட்டு அழைத்து சென்றார் . சந்தீப்பிற்கு ஏற்கனவே அழைத்து கூறியிருந்த படியால் அவனும் அங்கே காத்துக்கொண்டிருந்தான் . சுபியை பார்த்ததும் வாடியிருந்தவளை அருகில் வந்து கைத்தாங்களா அழைத்து சென்றான். பின் அணைத்து டெஸ்ட்களும் எடுத்ததும் டாக்டர் சொல்ல போகும் செய்திக்காக கணவனின் கையுடன் தன் கைகளை இணைத்து காத்துக்கொண்டிருந்தாள். அவள் கைகளின் மூலமே அவளின் படபடப்பை உணர்ந்தவன் கண்களை மூடி அவளிற்கு தைரியம் ஊட்டினான். பின் டாக்டர் கங்கிராட்ஸ் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சந்தீப் . யு ஆர் கோயன் டு பிகாம் பேரன்ட்ஸ் சூன் என்றார் . சுபிக்கு சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீரே வந்தது .

-தொடரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top