கற்பூர முல்லை

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 1


அதிகாலை பொழுது அழகாய் புலர்ந்தது. ஆனாலும் எழுந்திரு என்று அதட்டவோ இன்னைக்கு லீவுதானே மெதுவாய் எழுந்திரு என்று சொல்லவோ ஆளில்லாமல் படுத்திருந்தாள் தேன்தமிழ்.

சிறுவயதிலேயே தேன்தமிழின் தந்தை குடிக்கு அடிமையாகி இறந்துவிட்டார். அவளது தாயும் சீக்கிரத்திலேயே நோய் வாய்ப்பட்டு இறந்து போனார். தாய் மாமன் என்று இருந்த உறவும் இவளை தனிமைபடுத்தி விட்டு சென்றது.

ஆனாலும் இவள் படித்த பள்ளியின் ஆசிரியையின் தயவினால் ஹாஸ்டலில்
சேர்க்கப்பட்டு அதன் மூலம் படிப்பை தொடர்ந்தாள். அது அரசு பள்ளி என்பதால் செலவும் அதிகம் இல்லை. நன்றாக படித்ததில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றாள்.

பின்பு அதே ஆசிரியையின் துணை கொண்டு கல்லூரியில் சேர்ந்தாள். அங்கேயும் நன்றாகப் படித்ததால் படிப்பு செலவுகளை கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. இன்று எம். பி. ஏ முடித்து விட்டு ஒரு ஆலுவலகத்தில் ஜெனரல் மானேஜர் ஆக பொறுப்பில் இருக்கிறாள்.

ஆரம்பத்தில் சிறிய பொறுப்பில் இருந்தவள் பின்பு திறமையால் பதவி உயர்வு பெற்றாள். அலுவலக நிர்வாகம் முழுவதும் அவள் பொறுப்பில் வந்தது.

கைநிறைய சம்பளம் வாங்கினாலும் வீட்டு வேலைகளை கவனித்து கொண்டால் தான் அவளுக்கு திருப்தி. வாங்கும் சம்பளத்தில் மாத செலவு போக கையிருப்புகளை அப்படியே வங்கியில் போட்டு விடுவாள்.

உறக்கம் பிடிக்காமல் எழுந்தவள் போர்வையை உதறி மடித்து விட்டு இடுப்பு வரை இருக்கும் கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டாள். காய்கறிகள் விற்பவனின் சத்தம் கேட்டதும் கூடையை எடுத்துக் கண்டு வெளியே வந்தாள். அவள் இருக்கும் பகுதியில் வாரம் ஒருமுறை காய்கறிக்காரன் வருவது வழக்கம்.

பக்கத்து வீட்டு மாலதியின் அக்காவின் குழந்தை ரம்யா இவளை பார்த்ததும் ஓடி வந்தது. விடுமுறை தினங்களில் இவள் வீடு தான் அக்குழந்தையின் விளையாட்டு மைதானம். காய்கறி வாங்கும் கால அளவில் பேசிய அனைவரிடமும் பேசிவிட்டு உள்ளே நுழைந்தவளுடன் ஒட்டிக் கொண்டாள் ரம்யா.

ரம்யா சி.என்.எஸ் கான்வென்ட் ல் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். அவளின் சுட்டித்தனமான கேள்விகளுக்கு பதில் அளித்தவாறே வீட்டு வேலையை தொடர்ந்தாள். கடைசியாய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கலங்கி நின்றாள்.

அத்தை, நீங்க ஏன் தனியாகவே இருக்கீங்க என்ற மழலையின் கேள்வியில் வரவிருந்த கண்ணீரை ஒருவாறு சமாளித்துக் கொண்டு அத்தையின் அம்மா அப்பா எல்லாரும் ஊரில் இருக்காங்க என்று சொன்னாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top