கற்பூர முல்லை Episode 8

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 8

ஞாயிறு அன்றும் காலை கதிரவன் தன் கடமையை தவறாது செய்து கொண்டிருந்தான். அப்போது தான் கண் விழித்து இருந்தாள் தமிழ். இன்று குமார் பவித்ரா வீட்டிற்கு செல்ல வேண்டும். அதனால் வேலைக்கார அம்மாவை வேண்டாம் என்று சொல்லி இருந்தாள். காலைக்கு மட்டும் அவளே சமைப்பதாக தீர்மானித்து இருந்தாள். இதை மனதில் கொண்டு அன்றைக்கான வேலைகளில் ஈடுபட்டாள்.

சிம்பிளாக காலை உணவை சமைத்தாள். சாப்பிட்டு முடிந்ததும் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு கிளம்பினாள். லைட் ரோஸ் கலரில் கொஞ்சம் வேலைப்பாடு அமைந்த புடவையை தேர்ந்தெடுத்தாள். அழகாக உடுத்திக்கொண்டு அதற்கு தகுந்த அணிகலன்களை அணிந்தாள். அது அவளுக்கு மேலும் அழகை கூட்டியது.

மதியவேளையில் அகிலன் அவளது செல்லுக்கு அழைத்தான். அட்டெண்ட் செய்து பேசினாள். தானே வருவதாக கூறினாள். தீபக் அவசர தேவைக்காக வைத்திருந்த ஸ்கூட்டியை விட்டு விட்டு போயிருந்தான். அதை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அட்ரஸை தேடிப்பிடிக்க அவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இல்லாமல் சுலபமாக கண்டு பிடித்து சென்று வீட்டின் முன் நிறுத்தினாள்.

ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு சற்று தயங்கியவாறே உள்ளே சென்றாள். வீட்டில் குமார் பவித்ரா அகிலன் என அனைவரும் இருந்தனர். இவளை கண்டதும் பவித்ரா ஓடி வந்து வரவேற்றாள். வாங்க சிஸ்டர்.... என்றவாறே குமாரும் அழைத்தான். அகிலன் எதுவும் பேசவில்லை. கண்களால் அவளை அளந்து கொண்டிருந்தான். இவள் அவனை பார்த்தபோது அழகாக சிரித்தான். அவளை வரவேற்று உள் அழைத்து சென்றனர். புது இடம் என்பதால் சற்று தயங்கினாள். ஆனால் பவித்ரா அவளை உடன் பிறந்தவள் போல் நினைத்து பழகினாள்.

தமிழுக்கு என்ன பேசுவது என தெரியாமல் எப்படி இருக்கீங்க.....? என கேட்டாள். குழந்தை என்ன பண்ணுகிறாள்.....? என கேட்டாள். அவள்கேட்டதிற்கு தகுந்தவாறே அவர்கள் பதில் சொன்னார்கள். இதோ..... வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு பவித்ரா உள்ளே சென்றாள். அவளுக்கு உதவி செய்வதற்காக குமாரும் உடன் சென்றாள். அகிலன் தமிழ் மட்டும் இருந்தனர். கூப்பிட்டவுடன் வந்ததற்கு மிகவும் நன்றி என்றான் அகில். நன்றி எல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று கூறினாள். சிறிது நேரம் பொதுவாக பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அதற்குள் உள்ளே சென்ற இருவரும் வந்து தமிழை சாப்பிட அழைத்தனர். தமிழ் சிறிது நேரம் கழித்து சாப்பிடுகிறேன் என்று சொன்னாள். பவித்ராவிடம் அவர்களுடைய பெற்றோர்களை பற்றி விசாரித்தாள். எங்கள் இருவரின் பெற்றோர்களும் தென்காசியில் இருக்கிறார்கள். இவரின் வேலை காரணமாக இங்கே செட்டிலாகி இருக்கிறோம் என்றாள். இவருக்கு போலிஸ் வேலையை விட விருப்பம் இல்லை. எனக்கு இவரை விட விருப்பம் இல்லை. அதனால் இங்கே தான் வாசம் என்றாள். உங்கள் பெற்றோர்களையும் இங்கே அழைத்து வந்து அழகான கூட்டு குடும்பமாக இருக்கலாமே.... என்றாள். அவர்களுக்கு சென்னை சரிவராது என்றாள்.
இப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு கூட்டு குடும்பம் பிடிப்பது இல்லை. ஆனாலும் அதான் மிக அழகு. உங்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றாள். எங்களுக்கும் ஆசைதான் ஆனால் பெரியவர்களுக்கு அது வசதிபடவில்லையே.... என்று வருத்தப்பட்டாள் பவித்ரா.

பரவாயில்லை.... அவர்களை அழைத்து வந்து வைத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களே அதுவே போதும் என்றாள் தமிழ். மேடம் எல்லாம் வேண்டாம் பவி என்றே கூப்பிடலாம் என்றாள் பவித்ரா.
தமிழும் சிரித்துக் கொண்டே சரி என்றாள். இவ்வளவு நேரமும் தமிழ் பேசியதை ரசித்து கொண்டு இருந்தான் அகிலன். கூட்டு குடும்பம் பற்றி அவள் கூறியது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. இப்படி ஒரு பெண் தன் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று நினைத்தான். அப்போது தான் தன் தம்பி தங்கைகளை தன்னிடம் இருந்து பிரிக்காமல் இருப்பார்கள் என்று எண்ணினான். அதனால் தான் இவ்வளவு நாள் கல்யாணம் வேண்டாம் என்று கூறி கொண்டு இருந்தான். இவள் கூறியதை கேட்கவும் தமிழின் மேல் இருந்த மரியாதை காதலாக மாறியது. ஆனால் அதற்கு முன்பே அவன் மனதை தமிழ் முழுவதுமாக ஆக்ரமித்து இருந்தாள்.

இப்பொழுது சாப்பிடலாம் வாருங்கள் என்றாள் பவித்ரா. எனக்கு மட்டும் எதற்கு மரியாதை அழகாக தமிழ் என்றே கூப்பிடலாம் என்றாள். சரி பவி என்றாள்.

தமிழ் சாப்பிட அமர்ந்ததும் நீங்களும் உட்காருங்கள் அண்ணா என்று அகிலனையும் சாப்பிட சொன்னாள். முதலில் அகிலன் மறுத்தான். பின்பு குமார் பவித்ரா இருவரும் வற்புறுத்தவே தமிழின் அருகில் அமர்ந்தான்.

இருவருக்கும் உடன் இருந்து பரிமாறினாள் பவித்ரா. சாப்பாடு மிகவும் அருமையாக இருக்கிறது என்றாள் தமிழ். இருவரும் திருப்தியாக சாப்பிட்டு எழுந்தனர். அதே நேரம் தொட்டிலில் இருந்த குழந்தை அழுதது. பவி எடுத்து தாய்ப்பால் ஊட்டி சமாதானப்படுத்தினாள். கொடு பவி குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போய் சாப்பிடு என்றாள் தமிழ். குழந்தையை கொடுத்து விட்டு குமார் பவித்ரா இருவரும் சாப்பிட சென்றனர். குழந்தையை தூக்க தெரியாததால் மடியில் வைத்தவாறே கொஞ்சி கொண்டிருந்தாள் தமிழ். அதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான் அகிலன்.

பவித்ரா சாப்பிட்டு வந்ததும் தமிழின் அருகில் அமர்ந்தாள். தமிழை பற்றி விசாராத்தாள். தமிழ் தான் பிறந்து வளர்ந்தது என அனைத்தையும் கூறினாள். தாய் மாமன் இருப்பதாக கூறினாயே அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள்....? என்றாள். தெரியவில்லை பெயரளவில் வெறும் போன் நம்பர் மட்டும் இருப்பதாக கூறினாள். பரவாயில்லை தமிழ் நாங்கள் இருக்கிறோம் நீ எதற்கும் கவலைபடாதே.....அவ்வப்போது இங்கு வந்து செல் என்றாள்.

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அகிலன் மனது அவளுக்காக பரிதவித்தது. அத்தனை உறவுக்கும் ஈடாய் நான் இருக்கிறேன் என்று கூற தோன்றியது. இப்போது இன்னும் ஆழமாக அவளை நேசித்தான் அவன்.

காயத்ரியை பற்றி இவ்வளவு சொன்னதும் எனக்கும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது போட்டோ இருந்தா காட்டு என்றாள் பவி. உடனே தன் செல்லில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை காட்டினாள். நல்லா இருக்காங்க என்றாள் பவித்ரா.

இப்படியே பேசி கொண்டு இருந்ததில் மாலை ஆகி விட்டது. கிளம்புகிறேன் என்று கிளம்பியவளை பவி விடவில்லை. இரவு உணவு முடித்து கொண்டு போலாம் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள். மாலை நேரத்தில் மொட்டை மாடியில் காற்று நன்றாக இருக்கும் என்று கூறி தமிழை மாடிக்கு அனுப்பினாள். நீங்களும் போங்கள் அண்ணா நான் இருவருக்கும் டீ போட்டு எடுத்து வருகிறேன் என்றாள்.

தமிழ் முன்செல்ல அகிலன் பின்னே நடந்தான். மேலே சென்றதும் வேடிக்கை பார்த்தபடி இருவரும் நின்றார்கள். காற்று நன்றாக வீசியது. என்ன.....இன்றைக்கு எதுவுமே பேச மாட்டேன் என்கிறீர்கள்...? என்ன ஆச்சு. ...?என்று தமிழ் கேட்க இல்லை நீங்கள் லேடீஸ் பேசிக் கொண்டு இருக்கும் போது நமக்கு என்ன வேலை என்று அமைதியாக இருந்து விட்டேன் என்றான். தமிழ் எங்கோ வேடிக்கை பார்த்தபடி இருக்க அவள் மேல் வைத்த பார்வையை அகற்ற முடியாமல் தத்தளித்தான் அகிலன்.

அதற்குள் பவி டீ போட்டு எடுத்து வந்தாள். டீ யை ரசித்து குடித்தனர். குடுத்ததும் கப்பை வாங்கி கொண்டு கீழே சென்று விட்டாள் பவி. இருவரும் பேசிக்கொண்டே மாடியிலேயே நடந்தனர். பேசிக்கொண்டே நடந்ததில் புடவை தடுக்கி தமிழ் தடுமாறிய போது சட்டென்று தாங்கி கொண்டான் அகிலன். ஒற்றை கை அவள் முதுகில் இருக்க இன்னொரு கை அவள் தோளை பற்றியிருந்தது. அவள் பாரம் முழுவதையும் அகிலன் தாங்கியிருந்தான். அந்த சில நொடி சுற்றுப்புறம் மறக்க அவன் கையில் இருந்தாள்.

திடீரென்று உணர்வு வந்தவர்களாய் இருவரும் விலகினர். சாரி..... என்று ஏதோ சொல்ல முயன்றவனை லட்சியம் செய்யாமல் தமிழ் கீழே சென்று விட்டாள். கீழே சென்றவளை அதற்குள் மேலே பேர் அடித்து விட்டதா.....? என்றாள் பவி. இல்லையில்லை நான் தான் வந்துவிட்டேன் என்றாள் அவள். பின் குமார் பவியோடு பேசியதில் நேரம் போய்விட்டது. தமிழ் கீழே வந்த சிறிது நேரத்தில் அகிலனும் வந்து விட்டான். தமிழோ அகிலனோ எதுவும் பேசிக்கொள்ள வில்லை. அதை பவி கண்டுபிடித்து விட்டாள். மேலே ஏதோ நடந்து இருக்கிறது என்று யூகம் செய்து கொண்டாள்.

பவி கேட்டுக்கொண்டவாறே இரவு உணவை முடித்து விட்டே கிளம்பினான் தமிழ். அண்ணாவை கூட வர சொல்லவா.....? என்ற பவியின் கேள்விக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். அவள் சென்ற சிறிது நேரத்திலேயே அகிலனும் கிளம்பி விட்டான்.

வீட்டிற்கு சென்றதும் தமிழின் மனசு அவன் கரங்களில் இருந்ததையே நினைத்து கொண்டு இருந்தது. எப்பொழுதும் போல் நடந்தவற்றை டைரியில் பதிவு செய்தாள். காயத்ரியிடம் போன் செய்து பகிர்ந்து கொண்டாள்.... ஆனால் தான் தடுமாறி அவனிடம் விழுந்ததை மட்டும் சொல்லவில்லை. காயத்ரியிடம் மறைக்கும் முதல் விஷயம் இதுதான்.

அங்கே அகிலனும் இதைப்பற்றியே சிந்தித்து கொண்டு இருந்தான். இவ்வளவு நாட்களும் ஒரு பெண்ணிடம் இந்த அளவு தடுமாறியதில்லை மனது. ஆனால் இன்றோ அவளிடம் சிறைபட்டிருக்கிறது. இது அவனுக்கே புரியாத புதிராக இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இவள்தான் தனக்கு மனைவி என்பதை முடிவு செய்து கொண்டான். இதுபற்றி அவள் கருத்தை கேட்க வேண்டும் என்று எண்ணினான்.
இந்த நினைவோடு உறங்கியே போனான்.

மறுநாள் குளித்து முடித்து ஸ்டேஷன் செல்வதற்கு முன் அவள் ஆபிஸிற்கு சென்றான்.


மலரும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top