கற்பூர முல்லை Episode 3

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 3



அவசர கதியில் இயங்கி கொண்டிருந்தது சென்னை மாநகரம். அதைவிட காலையிலேயே அவசர அவசரமாக எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தான் அகிலன். அன்று அவனுக்கு ஸ்டேஷனில் ஒரு முக்கிய கேஸ் ஒன்றை பார்க்க வேண்டியதாக இருந்தது. தம்பியும் தங்கையும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தம்பி கார்த்திக், எம். எஸ். சி முடித்து விட்டு ஐ.டி துறையில் வேலை பார்ப்பவன். தங்கை திவ்யா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பவள். இவர்களின் சொந்த ஊர் தஞ்சாவூர். அப்பா தியாகராஜன். அம்மா பார்வதி. இருவருக்கும் விவசாயம், கோழி, ஆடு, மாடுகளை பார்த்து பண்ணையம் செய்வதே முக்கிய தொழிலாக இருந்தது. அகிலன் வேலையில் சேர்ந்ததும் முதல் போஸ்டிங்கே சென்னை என்பதால் சென்னைக்கே வந்து விட்டான். அகிலனின் பெரியப்பா அதாவது அப்பாவின் அண்ணா முருக வேல். அவருக்கு கல்யாணமும் இல்லை பிள்ளைகளும் இல்லை. அதனால் தான் ஆசைக்காக சென்னையில் வாங்கிய வீட்டை அகிலன் பெயருக்கு எழுதி வைத்து விட்டு இறந்து போனார்.


அது தற்போது அகிலனுக்கு மிகவும் உதவியாக இருந்தது. வேலையில் சேர்ந்ததும் தம்பி தங்கைகளின் படிப்பின் பொருட்டு இருவரையும் சென்னைக்கே கூட்டி வந்து விட்டான். போலீஸ் குடியிருப்பு பகுதி இருந்தும் வசதிக்காக இங்கேயே வந்து விட்டான். அவர்கள் இருக்கும் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் இரு வீடுகள். ஒரு வீடு கீழ் போர்ஷன் மேல் போர்ஷன் என இரு பகுதிகளை கொண்டது. இன்னொரு வீட்டில் கீழ் போர்ஷன் மட்டுமே. கீழ் போர்ஷனை வாடகைக்கு விட்டிருந்தான் அகிலன்.

அதில் மயில்சாமி ராசாத்தி எனும் தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களும் அகிலனின் தாய் தந்தையை போல கிராம புறத்தை சேர்ந்தவர்கள். சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள். பெரியவன் சுரேஷ். இப்பொழுது தான் மூன்று வயதாகிறது. சின்னவள் ரிதன்யா. ஒரு வயது குழந்தை. அகிலன் குடும்பத்திடம் மிகவும் அன்பு கொண்டவர்கள். அகிலன் அவர்களை அக்கா மாமா என்று அழைப்பதே வழக்கம். அகிலன் சென்னைக்கு வந்த நாளிலிருந்து இருந்து இந்த வீட்டுக்கு குடி வந்தவர்கள். அகிலன் வீட்டில் மூவரும் அலுவலகம்,கல்லூரி என செல்வதால் அவர்களுக்கும் சேர்த்து சமைக்கும் பொறுப்பை இவர்களே ஏற்றிருந்தார்கள். இந்த அதற்கான ஒரு தொகையை அகிலன் கொடுத்து கொண்டிருந்தான்.

இந்த இரு குடும்ப உறுப்பினர்களை தவிர அங்கே இருக்கும் இரு ஜீவன்கள் அகிலனின் செல்ல பிராணிகளான நாய்கள். ஒன்றின் பெயர் ஜாக்கி இன்னொன்றின் பெயர் டாபி. இவ்விரண்டும் விருந்தினர் யாராவது வந்தால் மட்டுமே சங்கிலியில் பிணைக்கப்படும். இல்லையேல் விட்டிற்குள்ளேயே சுதந்திரமாக இருக்கும். இரு குடும்பத்தை தவிர வேறு எவரேனும் விட்டிற்குள் நுழையவிடாது.இதற்கு அகிலனின் நண்பன் குமார் மட்டும் விதிவிலக்கு. அவன் அடிக்கடி வந்து செல்வதால் அவனை ஒன்றும் செய்யாது. இவ்விரண்டையும் வாக்கிங் கூட்டி செல்வது கார்த்திக் ன் வழக்கம்.

அவசரமாக கிளம்பி கொண்டிருந்த அகிலன் தூங்கி கொண்டிருந்த தம்பி தங்கையை எழுப்பி சொல்லிவிட்டு சென்றான். கீழ் இறங்கி அக்கா வீட்டிற்கு சென்று சாப்பிட சென்றான். மாமா எங்கே? என்று கேட்டவன் கடைக்கு போய் இருக்கார் என்னும் பதிலில் திருப்தி அடைந்தவாறே சாப்பிட தொடங்கினான்.

உணவு பரிமாறிக்கொண்டே கல்யாண பேச்சை எடுத்தார் ராசாத்தி அக்கா. எனக்கு எதுக்கு அக்கா இப்போ கல்யாணம் எல்லாம் தம்பி தங்கை கல்யாணத்திற்கு பிறகு பார்த்துக்கலாம் என்று தட்டிக் கழித்தான் அகிலன். அதற்கு இல்லையப்பா எல்லாம் காலாகாலத்தில் முடிக்க வேண்டும் என்று கூறினாள் ராசாத்தி.

ஊரில் இருக்கும் அம்மா அப்பாவிற்கும் இதே ஆசை தான். அகிலன் இப்போது வேண்டாம் என்று சொல்வதால் விட்டு வைத்திருக்கிறார்கள். அவன் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டார்கள். அவன் விருப்பம் அனைத்தும் கேட்காமலேயே நிறைவேறும்.

கண்டதும் காதல் கொள்ளும் நல்ல ஆஜானுபாகுவான உடல் வாகு. மாநிறம் என்றாலும் கண்போரை மறுமுறை காணச்செய்யும் அழகு. அகிலன் போன்று ஒரு பையன் கணவனாக கிடைக்க எந்த பெண்ணும் கொடுத்து வைத்து இருக்கணும். அவ்வளவு நல்ல பையன் அகிலன். அதனால் சொந்தத்தில் நீ நான் என்று போட்டிபோட்டுக் கொண்டு பெண் தர முன் வந்தார்கள். அகிலன் தான் மறுத்து விட்டான்.

ராசாத்தி அக்காவிற்கு அகிலனுக்கு நல்ல இடத்தில் பெண் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவனிடம் கூறினார். அவன் இவ்வாறு கூறவே அமைதியாக விட்டார். சாப்பிட்டு முடிந்ததும் விளையாடிக் கொண்டிருந்த ராசாத்தி அக்கா குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டு சென்றான். எவ்வளவு லேட் ஆனாலும் சொல்லிக்கொண்டு செல்வது வழக்கம்.
 

Jeevitha Ram prabhu

Active Member
அப்டேட் ரொம்ப குட்டியா இருக்கு
பெரிய அப்டேட்டா கொடுங்க, ஜீவிதா டியர்
கண்டிப்பா டியர். நன்றி தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறியதற்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top