கற்பூர முல்லை Episode 13

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 13

காலையில்‌ ரயில் கோவை வந்தடைந்தது. காயூ ரயில் நிலையத்திற்கே வண்டி‌ அனுப்பியிருந்தாள். காயூ வீட்டிற்கு‌‌ சென்று ரெப்ரஷ் செய்த பிறகு ஆபிஸ் செல்லலாம் என்பது தமிழின் எண்ணம். அதை போலவே செய்தாள். தமிழை பார்த்ததும் ஆரத்தழுவி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டினாள் காயூ. பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு தமிழ் குளித்து விட்டு வந்த பிறகு இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.இருவருக்கும் காயூவே பரிமாறினாள்.

சாப்பிட அமர்ந்த போதுதான் தமிழுக்கு நினைவு வந்தது தான் இன்னும் அகிலனுக்கு வந்து சேர்ந்த தகவலை தெரிவிக்க வில்லை என்று. சரி சாப்பிட்ட பின் போன் பேசிக்கலாம் என்று விட்டு விட்டாள். இங்கே இவள் நிலை இவ்வாறு இருக்க, அங்கே அவன் மனம் துடித்து கொண்டிருந்தது.

சாப்பிட்ட பின் முதல் வேளையாக அகிலனுக்கு கால் செய்தாள். அலைபேசி அழைக்கவே அதை பார்த்த அகிலனுக்கு தமிழ் என்ற பெயரை பார்த்ததும் முகத்தில் மகிழ்ச்சி அரும்பியது. எடுத்ததும், என்ன மேடம்..... இப்பொழுது தான் என் ஞாபகம் வந்ததா? என்றான். உங்கள் தோழியை பார்த்ததும் எல்லாம் மறந்தாகி விட்டதா....? என்றான். இல்லை இல்லை என்று சமாளித்தாள் அவள். பிறகு பாதுகாப்பாக போய் சேர்ந்தீர்களா... என்று அவன் கேட்டதற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்ததால் தானே உங்களுக்கு இப்போது போன் செய்ய முடிந்தது என்றாள். ஆமாம் ஆமாம் என்றான் சிரித்தவாறே அவன். அதற்குள் காயூ அழைக்கவே அப்புறம் பேசட்டுமா...காயூ அழைக்கிறாள் என்றாள். அவனுக்கும் அதற்கு மேல் கேட்க எதுவும் இருக்கவில்லை அதனால் சரி என்றான்.

பிறகு காயூவிடம் சொல்லிக் கொண்டு ஆபீஸ் சென்றாள். சரி முடித்து விட்டு லன்ச் க்கு என் ஆபிஸ் வந்துவிடு என்றாள். இவள் மறுத்ததற்கு அவள் விடவில்லை. சரி என்று ஒப்புக்கொண்டு ஆபீஸ் சென்றாள்.

ஆபிஸில் வாட்ச் மேன் முதல் அட்மின் டீம் ல் வேலை செய்பவர்கள் வரை அனைவரும் இவளிடம் நலம் விசாரித்தனர். இவள் சென்றவுடன் சுந்தர் இவளின் இடத்திற்கு யாரையும் நியமிக்க வில்லை மாற்றாக இவளின் வேலையை அவனும் கைலாஷும் சேர்த்து பார்த்து கொண்டனர். கைலாஷிடம் மட்டும் வருகிறேன் என்று கூறிவிட்டு சுந்தரின் அறைக்குள் நுழைந்தாள். அங்கே சுந்தர் இருக்க வில்லை பதிலாக வரதராஜன் அமர்ந்திருந்தார். அனுமதி பெற்று உள்ளே நுழைந்த இவளை கண்டதும் வாம்மா...... தமிழ் எப்படி இருக்கிறாய்.....நலமா....என அன்புடன் விசாரித்தார். அவளும் பதில் தந்து விட்டு எதிரில் அமர்ந்தாள். அவளும் நீங்கள் நலமா சார் வீட்டில் அனைவரும் நலமா என விசாரித்தாள்.

சுந்தர் ஆபிஸ் வேலையாக வெளியே சென்றிருக்கிறான். நமக்கு வீட்டில் பொழுது போக மாட்டேன் என்கிறது அதனால் கொஞ்சம் இங்கு வந்து விட்டு போகலாம் என்று வந்தேன் மா என்று கூறினார். பின் சென்னை பிரான்ட்ச் அலுவலக நிர்வாகங்களை கேட்டறிந்தார். அது உன் பொறுப்பில் இருப்பதால் தான் இங்கு நானும் சுந்தரும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம் என்றார். தமிழ் அதற்கு சிரிப்பையே பதிலாக தந்தாள். இதற்குள் சுந்தரும் வந்து விட்டான்.

வாங்க மேடம்...... எப்பொழுது வந்தீர்கள்...? திடீரென்று என்ன இந்த பக்கம்...?என்று கேள்விகளை அடுக்கினான். காயூவின் பிறந்த நாள்காக இங்கே வர வேண்டியதாயிற்று என்றாள்.
பின் வரதராஜன் இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.அவர் சென்ற பின் அவனும் நிர்வாக பொறுப்புகளை கேட்டறிந்தான்.

பின்னர் வெளியே வந்து கைலாஷிடம் பேசிக் கொண்டு இருந்தாள். என்ன மேடம்... அங்கே எல்லாம் செட் ஆகிவிட்டதா....போகிற போக்கை பார்த்தால் இங்கே வரவே மாட்டீர்கள் போல் இருக்கிறது என்று கேலி செய்தான். ஓ.... அப்படி இங்கு வராமல் இருந்தால் உனக்கு ஓ.கே வா.... அப்படி இருந்தால் சொல்லு அங்கேயே தங்கி விடுகிறேன் என்று தமிழ் கூற வேண்டாம் வேண்டாம் என்று சிரித்த பாவனையில் அவன் சொன்னான்.

அதற்குள் சுந்தர் அழைக்கவே அவன் ரூமிற்கு சென்றாள். ஒரு சின்ன வேலை தமிழ், செய்ய முடியுமா..? அல்லது வெளியே எங்காவது செல்ல வேண்டுமா... என்றான். இல்லை சார்... நான் முடித்து கொடுக்கிறேன் என்று வேலையை கவனிக்கலானாள்.

இங்கே குமார் அகிலனை கேலி செய்து கொண்டு இருந்தான். என்னடா.... இரண்டு நாட்களாக வண்டி தமிழின் ஆபிஸிற்கு செல்ல வில்லை போல் தெரிகிறது என்றான். ஏனென்றால் அவனுக்கு தமிழ் ஊருக்கு சென்றது தெரியாது. ஆமாம்... அவள் ஊருக்கு சென்று விட்டாள் என்றான். ஓ.... அதான் சார் கொஞ்சம் டல்லாக இருக்கிறீர்களா.... என்றான்.
பின், விளையாட்டல்லாம் போகட்டும் உண்மையாகவே தமிழை விரும்புகிறாயா? என்றான். அதற்கு அகிலனோ, ஆமாம் டா என்னால் அவளை மறக்க முடியாது.... இந்த முறை வரும் போது என் காதலை அவளிடம் தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன் என்றான். எது எப்படியோ உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைந்தால் சரி தான். அதுவும் தமிழ் உனக்கு ஏற்றவள் தான் என்றான். கண்டிப்பாக இதில் என்னால் என்ன உதவ முடியுமோ அதை செய்கிறேன் என்றான். இது போதும் டா என்று அவனை தழுவி கொண்டான் அகிலன்.

ஒரு வாரம் ஆகியும் தமிழ் வரவில்லை. அவனும் கால் செய்ய வில்லை, அவளும் கால் பண்ண வில்லை. ஆனாலும் அகிலனின் மனம் அவளை எதிர்பார்த்தது. எப்படியோ ஒரு வழியாக ஒரு வாரம் கழித்து வந்து சேர்ந்தாள் தமிழ்.

ஆபிஸ் வந்ததும் அலுவல்களை எல்லாம் பார்த்து விட்டு அகிலனுக்கு கால் செய்தாள். தான் வந்து சேர்ந்த தகவலை தெரிவித்தாள். அப்பாடா..... வந்து விட்டீர்களா....எங்கே... அங்கேயே இருந்து விடுவீர்களோ என நினைத்தேன்...என்று கேலி கூறினான்.... பின் மாலையில் வருவதாக கூறி இணைப்பை துண்டித்தான்.

மாலை அவன் வரும் போது ஆபிஸில் ஒருவரும் இருக்க வில்லை. இருந்தும் அனுமதி கேட்டுக் கொண்டு அவள் அறைக்குள் சென்றான். என்ன தமிழ்..... ஆபிஸில் யாரும் இல்லை போல் தெரிகிறது.... என்றான். அதற்கு அவள் ஆமாம் மணி ஆகிவிட்டது அல்லவா அதான் கிளம்பி விட்டார்கள்.... எனக்கு கொஞ்சம் அக்கவுண்ட்ஸ் பார்க்க வேண்டி இருந்தது அதனால் இருக்கிறேன். வாருங்கள்....உட்காருங்கள்.... என்றாள்.
அவன் உட்கார்ந்தவாறே....என்ன மேடம்....நலமா.... என்றான். அதற்கு பதில் அளித்து விட்டு அவளும் விசாரித்தாள்.

பின் கேண்டீன் மூடி இருப்பார்கள் உங்களுக்கு சாப்பிட தர எதுவும் இல்லை.சாரி என்றாள். பரவாயில்லை நீங்கள் ஒர்க் முடிந்தால் சொல்லுங்கள் நாம் வெளியே சென்றே சாப்பிடலாம். ஒரு காபியை எங்கு குடித்தால் என்ன... என்றான்.ஒரு டுவென்டி மினிட்ஸ் வெயிட் பண்ண முடியுமா என்றாள் அவன் ஓகே சொல்லவும் வேலையை கவனித்தாள்.

பின் இருவரும் கிளம்பினர். பக்கத்தில் தான் கடை இருக்கிறது நடந்தே போய்விடலாமா? என்றாள். அவளுடன் பேசிக் கொண்டு நடப்பது அவனுக்கும் பிடித்து இருந்தது அதனால் சரி என்றான். இருவரும் நடந்தனர். வழியில் பார்க் தென்படவும் சிறிது உட்காரலாமா... என்றான். பிடித்த பெண்ணுடன் பார்க்கில் அமர மறுக்குமா அகிலன் மனது அதனால் அதற்கும் ஓகே என்றான்.

இருவரும் அருகருகே அமர்ந்தனர். ஆனாலும் அகிலன் சுண்டு விரல் கூட அவள் மேல் படாதவாறு பார்த்து கொண்டான். அந்த கண்ணியம் அவளுக்கு பிடித்து இருந்தது.

சிறிது நேரம் அமர்ந்து விட்டு இருவரும் ஹோட்டலுக்கு சென்றனர். தமிழ்.... கொஞ்சம் பசியாக இருக்கிறது இருவருக்கும் டின்னரே ஆர்டர் செய்யவா.....என கேட்டான். அவள் சரியென்று சொல்ல அவரவர்க்கு தேவையானதை அவரவர் ஆர்டர் செய்தனர்.

பில் வந்ததும் தமிழ் எவ்வளவோ வேண்டாம் என்று தடுத்தும் அவனே இருவருக்கும் செட்டில் செய்தான். பின் இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். பேசிக்கொண்டே நடந்ததில் வீடு வந்ததே தெரியவில்லை......

ம்ம்ம்.... வீடு வந்தாச்சு..... பிறகு.... என்றவாறே தமிழை பார்த்தான் அகிலன். ம்ம்ம் நீங்கள் உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் நான் என் வீட்டிற்கு செல்கிறேன் என்றாள் அவள்.... அவனுக்கு சிரிப்பு வந்தது... அவன் சிரித்ததில் அவளுக்கும் சிரிப்பு வந்து விட்டது..... மேடம் சொல்லிட்டீங்கல்லவா...இனி கிளம்பி விட வேண்டியதுதான்.... என்றவாறே கிளம்பினான் அகிலன்.... அவளும் வீட்டிற்குள் சென்றாள்.

வீட்டிற்குள் சென்று உடைகளை கலைந்து படுத்ததில் அகிலன் விஷயத்தில் தான் நெருங்கி பழகுகிறோமோ... என்று தோன்றியது. இருந்தாலும் நட்பு தானே என நினைத்தவாறு கண் அயர்ந்தாள்.



மலரும்.....
 
Last edited by a moderator:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top